யார் அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள்

இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் துறையினர் உண்மையில் மென்பொருள்துறையினர் இல்லை. பலரும் மென்பொருள்துறையினர் தான் அதிகம் வாங்குவதாக நினைத்து கொண்டு இருக்கின்றனர். எல்லா துறையிலும் சம்பளம் என்பது அவர்களின் படிப்பை பொறுத்தே இருக்கிறது. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கலெக்டர் வேலை கேட்கும் மனப்பான்மை தான் இன்னும் இங்கே இருக்கிறது.
கொரியர்கள் கொண்டு போய் கொடுப்பவர்களின் சம்பளம் தான் இருப்பதிலே ரொம்ப குறைவாக உள்ளது. அவர்களுக்கு 3000 தருகிறார்கள். அடுத்தபடியாக ஓட்டுனர்கள் (4000).
எல்லா துறையிலும் படித்தவர்களுக்கு அதிகமாக சம்பளம் என்று ஆரம்பித்து பின்னர் அவர்களை வேலையில் முன் அனுபவம் உள்ளவர்கள் முந்துகிறார்கள். இவர்களிடையில் உள்ள வருடங்களின் வித்தியாசம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் உள்ள நெட்வொர்க் பொறியாளர்களின்(BE-இளங்கலை பொறியியல் படித்தவர்)  சம்பளமும் நான்கு ஆண்டுகள் முன் அனுபவம் உள்ள நெட்வொர்க் பொறியாளர்களின்(Diploma-பட்டயபடிப்பு  பொறியியல் படித்தவர்)  சம்பளமும் ஒன்று தான்.

முக்கியமான நிறுவனங்களில் வேலையில்  முதலில் சேரும்போதே ஆண்டுக்கான சம்பளம் இதுவென பேசி வாங்கினால் மட்டுமே மென்பொருள்துறையினருக்கு சம்பளம் அதிகரிக்கும். பின்னர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் எல்லாம் விரக்தியில் தான் இருக்கிறார்கள்.

மென்பொருள் துறையினரை விட பெட்ரோலியம்(ONGC), தனியார் தொழிற்சாலைகளில் வேலை புரியும் பொறியாளர்கள் (SAIPEM, Reliance energy, Vedanda etc) மற்றும் மத்திய அல்லது மாநில அரசுகளில் இருப்பவர்கள் தான் அதிகமான சம்பளம் வாங்குகின்றனர்.

மென்பொருள்துறையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு சம்பளவிகிதம் உள்ளது. ஒரு நிறுவனம் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவருக்கு நான்கரை லட்சம் கொடுப்பதாக சொல்கிறது. அதே முன் அனுபவம் உள்ளவருக்கு ஆறு லட்சம் கொடுப்பதாக மற்றொரு நிறுவனம் சொல்கிறது. இப்படி வித்தியாசங்கள் இருந்தாலும் மத்திய அரசின் பணியாளர்களை விட இவர்கள் குறைவாகவே கையில் வாங்குகிறார்கள். எப்படி என்றால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த ஆண்டு சம்பளங்களில் கூறுவது போல் கொடுப்பது இல்லை. நிறுவனங்களை பொறுத்து அவர்கள் ஒரு தொகையை பிடித்தம் செய்கிறார்கள். கேட்டால் ஆண்டு இறுதியில் கொடுப்பதாக கூறுகின்றனர்.(நீங்கள் நூற்றி பத்து சதவிதம் உழைத்தால் மட்டுமே இந்த பிடித்தம் செய்த பணத்தில் தொண்ணூறு சதம் கிடைக்கும். இல்லையென்றால் அந்த பணம் நிறுவனத்திற்கு தான் சொந்தம்) இந்த நான்கரை லட்சத்தில் ஒரு லட்சம் அதில் போகிறது என்று கொள்வோம். மிச்சம் மூன்றரை லட்சம். இதுவும் முழுமையாக உங்கள் கைகளில் வந்து சேராது. மென்பொருள்துறையில் இருப்பதால் அவர்களின் வருமானவரியையும் நிறுவனங்களே பிடித்தம் செய்கின்றன. அதை தவிர்க்கும் பொருட்டு செய்யும் செலவுகள் தான் அதிகம். கையில் ஒன்றும் நிற்காது. 

இதே நிலையில் இருக்கும் ஒரு மத்திய அல்லது மாநில அரசு பொறியாளரை எடுத்து கொண்டால் அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அவர்களுக்கு கிடைக்கும் இதர படிகள் தான் அதிகம். கழுத்தில் பட்டை அணிந்து இருப்பவர்கள் எல்லாரும் மென்பொருள்துறையினர் என்ற தவறான எண்ணமும் அங்கே அங்கே இருக்கத்தான் செய்கிறது.
பெட்ரோலியம் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருக்கும் பொறியாளர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு, இலவச தங்கும் வசதி, இலவச போக்குவரத்து வசதி மென்பொருள்துறையினருக்கு கிடையாது.2008-2009ஆண்டுகளின் சம்பளங்களின் தொகுப்பு
2010-2011ஆண்டுகளின் சம்பளங்களின் தொகுப்பு

மென்பொருள் நிறுவனங்கள் கொடுப்பது போல் கொடுத்தாலும் சேமிப்பு என்பது மற்ற துறையினருக்கு மட்டுமே சாத்தியமாகிறது.

9 Response to "யார் அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள்"

 1. நல்ல பகிர்வு!!

  Abdul says:

  could u pls post a nice article about petroleum engineering. Where we have to study this course. How much marks & money required like that

  Abdul அவர்களுக்கு நன்றி.
  அது சம்பந்தமாக நிச்சயம் ஒரு பதிவு எழுதுவேன்

  ஆமினா,
  தங்களின் வருகைக்கு நன்றி

  Anonymous says:

  Salary per annum or month ?

  ஏன்யா ஏன்..?
  ஊருக்குள்ள பந்தா பண்ணலாம்னு பாத்தா விடமாட்டேங்கிரீங்களே..!!
  இந்த ஊர் இன்னுமா நம்மள நம்பீட்டு இருக்கு...!

  Nalla padhivu,,,

  Jinnah says:

  dear friend, what about doctors? advocates? civil engineers? and most importantly real-estate agents, promotors and builders who actually drive the whole country's economy and everyone's income? also i don't think the most lowest earning group of people are courier delivery executives. We also need to talk about people working in petrol pumps, etc., Why don't the society every talk about doctors?

  Jinnah says:

  dear friend, what about doctors? advocates? civil engineers? and most importantly real-estate agents, promotors and builders who actually drive the whole country's economy and everyone's income? also i don't think the most lowest earning group of people are courier delivery executives. We also need to talk about people working in petrol pumps, etc., Why don't we ever talk about doctors?

Popular Posts