Operation Casino(ஆபரேஷன் கேசினோ)

லண்டனில் தற்போது வசித்து வருபரும் முன்னாள் நிறுவனருமான K.S.நாயரின் புத்தகம் சில விசயங்களை சொல்லியுள்ளது. அதில் கவனிக்கதக்க ஒன்று Operation Casino(ஆபரேஷன் கேசினோ). 1970ம் ஆண்டின்  மத்தியில்  இந்திரா காந்தியின் அரசாங்கமானது பல்வேறு நிதிநெருக்கடிகளில் சிக்கித்தவித்தது. அதில் இருந்து தப்புவிக்க என்ன வழி என்று யோசித்து கொண்டுவரும் வேளையில் இரான் அரசாங்கம் இந்தியாவுக்கு கடன் தருவது பற்றி பரிசிலிப்பதாக சொன்னது. அவ்வாறு தரும்தொகை $250 million dollars என்று இருந்தது. அதனை பெறுவதற்கு $6 million dollars லஞ்சம் கொடுக்க எடுத்த முயற்சி தான் இந்த ஆபரேஷன் கேசினோ.

சுவிஸ் வங்கிகளில் பணம் போடுவது இக்காலத்தில் ஒன்றும் புதிது அல்ல. ஆனால் லஞ்சப்பணம் எல்லாம் அங்கே தான் செல்லவேண்டும் என்று வழி காட்டிய பெருமை சஞ்சய் காந்திக்கே சேரும். சஞ்சய் காந்தி தான் இந்திரா காந்தியின் அப்போதைய அரசாங்கத்தில் நம்பர் 2. அவர் அனுமதி இன்றி ஒன்றும் நடவாது. பல்வேறு விசயங்களில் அவரே நம்பர் 1. இந்திரா காந்தி எல்லாம் கணக்கிலே வர மாட்டார்.

இந்த ஆபரேஷன் கேசினோ முற்றிலும் சஞ்சய் காந்தியின் நேரடி வழிகாட்டுதலில் நடைபெற்று இருக்கிறது. சஞ்சய் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கில் இந்த பணம் செலுத்தப்பட்டதாக சொல்லபடுகிறது. ஆனால் இதில் வேறு விடயங்கள் நடந்ததாக நாயர் எழுதி உள்ளார். 1974ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனைக்களுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் ஒரு சரிவிற்கு சென்று கொண்டு இருந்ததாக சொல்கின்றனர். இதில் இருந்து மீள்வதற்கு அப்போதைய இரான் அதிபர் ஷா கடன் தருவதாக கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது அந்த கடனை பெறுவதற்கு கொடுத்ததாக சொல்லப்படும் லஞ்சப்பணம் எங்கு சென்றது? ஏன் கொடுக்கப்பட்டது என்று இன்றும் தெரியவில்லை. முதலில் கொரியரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து இருக்கின்றனர். ஆனால் நாயர் இதற்கு ஒத்து கொள்ளாததால் அப்போதைய மத்திய அரசின் நிதி செயலாளர் கோபி கவுள் நூறு டாலர் நோட்டுகளாக மாற்றி சாம்சொநைட் பெட்டிகளில் கொண்டு செல்ல கூறியிருக்கிறார். அதற்கும் நாயர் ஒத்துவராத காரணத்தினால் ரிசர்வ் வங்கியின் ஜெனிவா கிளையின் மூலம் நாயருக்கு ஆறு மில்லியன் டாலர் அளவுக்கு ஒரு காசோலை தர ஏற்பாடு செய்திருக்கிறது. இதை சஞ்சய் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்துவதோடு நாயரின் பணி முடிந்து உள்ளது.




இரானின் நிதியமைச்சரை சரிகட்ட கொடுத்ததாக சொல்லப்பட்ட இந்த பணம், பலரின் கைகளில் போனதாக கூறப்பட்டது. ஆனால் இரானின் நிதியமைச்சர் இந்த கடன் வழங்குவதற்கு விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறார். ஷாவின் தங்கையான அஷ்ரபின் நெருங்கிய நண்பரான ரசிடியான் மூலம் இந்த கடன் கிடைத்துள்ளது. ரசிடியான் இந்தியாவில் பிறந்து இரானில் தொழில் செய்து கொண்டிருந்தவர். இவர் அதே நேரம் சஞ்சய் காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இவருக்கு தான் சஞ்சய் காந்தி இந்த ஆறு மில்லியன் டாலர்ஸ் பணத்தை கொடுத்தார் என்று அப்போது பாராட்டப்பட்டு உள்ளது. அதாவது நிதி நிலைமையை சமாளிக்க பெறப்படும் கடனிற்கு லஞ்சம் கொடுப்பதில் தவறு இல்லை என்று வாதிட்டனர். ஆனால் ஆறு மில்லியன் டாலர்ஸ் லஞ்சம் பெற்றதாக சொல்லப்பட்ட அந்த இந்திய தொழில் அதிபர் சஞ்சய் காந்திக்காக தான் பெற்றார் என்பது தான் உண்மை. கொடுப்பது போல் கொடுத்து பின்னர் அதனை வாங்கி உள்ளார் சஞ்சய் காந்தி.

நாட்டிலே முதல் முறையாக கடன் வாங்கி தனது அரசாங்கத்திடம் கொடுக்க லஞ்சம் பெற்ற முதல் மத்திய அமைச்சர் வேறு யாரும் இருக்க முடியாது.

1 Response to "Operation Casino(ஆபரேஷன் கேசினோ)"

  1. சஞ்சய் காந்தியை திறமைசாலி
    என்பதா?
    மோசடி மன்னன் என்பதா?
    ?

Popular Posts