பெரியாரிடம் வெங்காய விலையை கேட்க சொன்னால் என்ன ....கு இவர் முதல்வராக இருக்கிறார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி: வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டிருக்கிறார்களே?
அது கொடுத்தாச்சு... அது பற்றி அறிக்கை வரும்.
இன்று கூட இ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என கூறியதாக செய்திகள் வந்துள்ளதே?
அது எனக்கு தெரியாது. இவ்வாறு, முதல்வர் கருணாநிதி சிரித்தபடியே பேட்டியளித்தார்.

மீண்டும் மீண்டும் இவர் வயதிற்க்கோ இல்லை இவர் இருக்கும் பதவிக்கோ ஏற்றபடி பேசாமல் தான் அந்த பதவிக்கு ஏற்றவன் இல்லை என்று நிருபிக்கிறார். 
 
இவர் தனிப்பட்ட முறையில் மற்றவர்களின் அந்தரங்கங்களை விமர்சிப்பது இவருடன் இருக்கும் அலுவலர்களுக்கு தெரிந்ததே. ஆனால் இப்படி பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதற்கு அப்படி முதல்வர் பொறுப்பில் இருந்து தான் பேச வேண்டுமா?

ஒருவேளை இவருக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல வருகிறாரோ? இல்லை வெங்காயம் பயிரிடுவதெல்லாம் அவருக்கே தெரியாது என்று சொல்ல வருகிறாரோ?
யாருடைய சாவாவது மக்களை சந்தோசப்படும் என்று மக்கள் நினைத்தால் உண்மையில் அப்படி ஒரு பிறவிக்கு அப்படி ஒரு பிறப்பிற்கு அந்த இழிபிறவி மட்டும் அல்ல அந்த குடும்பமும் வருத்தப்படும் நாள் கண்டிப்பாக வரும்.( நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மேல் சொன்ன தகவல்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.)

6 Response to "பெரியாரிடம் வெங்காய விலையை கேட்க சொன்னால் என்ன ....கு இவர் முதல்வராக இருக்கிறார்"

 1. Anonymous says:

  பெரியாரிடம்தான் கேட்கவேண்டும் எனறால் அதன் பொருள் என்ன?

  வெங்காய விலையேற்றத்தைத் தடுக்க தமிழக அரசால் முடியாது என்று பொருள். எனவே இங்கே அக்கேள்வியை எழுப்பாதீர்கள் என்று பொருள்.

  இப்படி கருனானிதியை விமர்சனம் பண்ணுவதற்கு முன் நீங்கள் அடிப்படையாக இந்த விலையேற்றம் ஏன் என்று தெரிந்தாலே முடியும்.

  அதை நீங்கள் செய்யவில்லை.

  தமிழகத்தில் ஒரு நாட்டிற்கே ஒரு மானிலத்திற்கே அன்றாடம் வினியோகிக்குமளவில் வெங்காய விளைக்கப்படுவதில்லை. பிறமானிலங்கள், குறிப்பாக மகாராட்டியம், இங்கிருந்துதான் இந்தியா முழுவதும் வெங்காயம் வருகிறது. எனவே அதன் ஏற்றமும் இறக்கமும் தமிழகத்தால் தடுக்க முடியாது.

  வெங்காயம் இறக்குமதியில் போடப்பட்ட சுங்க வரியும், ஏற்றுமதி அளவுக்குஅதிகமாக பண்ணியதன் விளைவாகவும், விலையேறுகிறது என்று தெரிந்தவுடன், பதுக்கல்காரர்கள் அட்டூழியம் (தமிழ்நாட்டிலல்ல) பெருகியதாலும், வெங்காய விலை சர்ரென்று ஏறியது.

  இதில் பதுக்கல்காரர்களை மட்டுமே தமிழக அரசால் தடுக்கமுடியும், வேண்டும். ஆனால் அப்படி எந்த பதுக்கலும் தமிழக வியாபாரிகளால் நடந்த்தாக தெரியவில்லை. அப்படியே நடந்திருந்தால், அதைக்குறிப்பிட்டுத்தான் கேள்வி அமைந்திருக்கவேண்டும். மாறாக, நக்கலான கேட்கப்பட்ட கேள்விக்கு, பணிவோடும் மரியாதையாகவும் பதில் போடவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் சிந்திக்கும் திறனையே கேள்விக்குறிக்குள்ளாக்குகிறது.

  Anonymous says:

  மேலே பதில் போட்ட கந்தசாமி கூலிக்கு மாராடிக்கும் கழுதையாகத் தான் இருக்க வேண்டும். நீங்க என்ன வேனுமினாலும் பேசுவீங்கடா

  Ashvinji says:

  அருமையான பதிவு. உண்மை சுடும்.
  ஆனால் உறைக்கிறவர்களுக்கு உறைக்க வேண்டுமே.
  தமிழ் இன்ட்லி தளம் மூலமாக எனது பதிவுகளை படித்து வாக்களிப்பமைக்கு இதய நன்றி.

  --
  'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
  ---------------------------------------------------
  பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
  ----------------------------------------------------
  வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
  வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

  அந்த பேட்டி தினமலரில் வெளியானது, தனக்கே உரித்தான அங்கதத்துடன் அவர் பதிலளித்ததாகவே நான் கருதினேன். அவர் குறிப்பிட்ட பெரியார் அநேகமாய் மத்திய அரசாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன்.அந்த பேட்டியில் கீழே சிரித்தபடியே இதை கூறினார் என்றுதான் இருந்தது.

  முதல்வரின் மீது விமர்சனங்கள் எனக்கும் உண்டு. ஆனால் அதை வெளிப் படுத்துவதில் நிதானம் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

  அவர் சொல்லியது சிரித்து கொண்டே தான் என்றாலும் அவர் சொல்லியது சரியா? உங்கள் வீட்டில் இழவு விழுந்திருக்கும்போது உங்களால் சிரிக்க முடியுமா? விலைவாசி எல்லாம் ஏறுவதற்கு கருணாநிதி காரணம் கிடையாது என்று சொல்கிறீர்கள். சரி தான். ஆனால் இலவசங்களுக்கும் விலைவாசிக்கும் சம்பந்தம் கிடையாது என்று சொன்னால் உங்களுக்கு சற்று பொருளாதாரம் பற்றிய அறிவு குறைவு என்றே கொள்ள வேண்டும்.

  Unknown says:

  வெங்காயதை தினமும் சாப்பிட்டால் டி பி. குறையும். வெங்காயம்,பித்தம் குறைய,பெல்லாரி வெங்காயம்

Popular Posts