Showing posts with label சஞ்சய் காந்தி. Show all posts
Showing posts with label சஞ்சய் காந்தி. Show all posts

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-6

ஈழதமிழர்கள் படுகொலையில் ராஜிவ்காந்தியின் பங்கு என்று எழுத ஆரம்பித்தால் இந்த பதிவுகள் எண்ணிக்கை எப்படியும் நூறினை தாண்டும்.


ஜால்ரா போடுவதற்கு யாராவது இருந்தால் நல்லது என நினைக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஜால்ரா போடுபவர்கள் தான் முதல் எதிரிகள் என்பதை உணர வேண்டும். அப்படி அவருக்கு வெளிநாட்டு கொள்கை என்ற பெயரில் தங்களின் வளத்தை வளர்த்து கொண்ட அதிகாரிகள் தான் அதிகம். அத்தகைய அதிகாரிகள் தங்களுக்கு சொந்தமான அல்லது தங்களுக்கு ஆதாயம் தரும் நிறுவனங்களின் கொள்கைகளை தான் தூக்கிபிடிப்பதில் அக்கறை காட்டினர். இலங்கையை பிரித்து ஈழம் அமைப்பதென்றால் அதற்கு ஒரே ஒரு போராளி குழுவை மட்டும் வளர்த்தாலே போதும். ஆனால் அதையே பல போராளி குழுக்களாக வளர்த்து விட்டு அதன் மூலம் இலங்கையை தன கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் அப்போதைய இலங்கையின் மீதான வெளியுறவு கொள்கையாக இருந்தது.




வெளியுறவு கொள்கைக்காக அடுத்தவர்களை ஏமாற்றியது போல் நம்மை நாமே ஏமாற்றி விளையாடும் விளையாட்டு ராஜீவ் காந்தியின் காலத்திலேயே வந்தது. உதாரணம் மாலத்தீவு புரட்சி. அதில் ஆதியும் அந்தமும் இந்தியர்களே. ஆட்சியை பிடிக்க நினைக்கும் எதிர்க்கட்சி தலைவரை ஆட்சியில் உட்கார வைக்க இந்தியா எடுத்த முயற்சி தோல்வி (உளவுத்துறையின் வேலை). ஆனால் அதையே ராஜ தந்திரமாக மாற்ற இந்தியாவே படைகளை அனுப்பி புரட்சியை தடுத்தது. இதில் புரட்சி செய்ய அனுப்பப்பட்டவர்கள் தான்

பத்மநாபாவின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இவர்களை முழுவதுமாக கட்டுபடுத்தி வைத்திருந்தவர்கள் நமது உளவுத்துறையினர் தான். (புலிகள் தமிழின எதிரிகளையும் துரோகிகளையும் ஏன் கொல்லவேண்டும்? இவர்களை விட்டுவைத்தால் போராளிகளுக்கும் காசுக்காக கொலைகளை செய்பவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும்)



இவர்களையும் ஏனைய போராளி குழுக்களையும் புலிகள் அழித்தனர். அதில் சில எச்சங்களை மிச்சம் விட்டதால் வந்த விளைவு தான் இன்றைய அவர்களின் நிலை.(ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றோர் இன்னமும் உயிருடன் இருக்கின்றனர்.)


ஈழதமிழர்களை கொல்ல சொல்லி ராஜீவ் இந்திய அமைதிப்படையை அனுப்பவில்லை. ஆனால் அனுப்பிய படையை நிர்வகிக்க அனுப்பிய ஆட்கள் தங்களின் அதிகாரத்தையும் தங்களுக்கு தேவையானவற்றை இலங்கை அரசிடம் இருந்து பெற்று கொள்ள அவர்கள் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறினர்.( சண்டைக்காரர்கள் இருவருக்கும் இடையில் போட்டால் தான் அதன் பெயர் ஒப்பந்தம். சண்டைக்காரனும் சாட்சிக்காரனும் போட்டு கொண்டால் அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை? இதை கூட ஒழுங்காக அமல்படுத்த முடியாத நாடு தான் நம் நாடு. இவர்களை நம்பி ஒப்பந்தம் போட்டவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்பதே தனி தொடராக எழுத வேண்டும்.)


முதலில் ஒப்பந்தங்களை மட்டுமே மீறிய அவர்கள் ஏற்கனவே அவர்கள் வளர்த்து வைத்த போராளி குழுக்களை வைத்து தங்களின் விளையாட்டை தொடங்க முற்பட்டனர். அதற்கு பதிலடி புலிகள் கொடுத்தனர். தாக்குதல் நடத்திவிட்டு மறைந்து கொள்வதென்ற கொரில்லா தாக்குதல்களை தாங்க முடியாமல் அப்பாவி மக்களை துன்புறுத்த தொடங்கினர். இந்த துன்புறுத்தல்கள் எல்லாம் பின்னர் வன்முறை, கற்பழிப்பு, கொலைகள் என்று போனது. அதுவே பின்னர் ராஜிவின் கைமீறி சென்று கூட்டம் கூடமாக தமிழர்களை கொல்லும் நிலையை உருவாக்கியது.( மக்களை துன்புறுத்தினால் போராளிகளை காட்டி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். இப்போது போல் அப்போது யாரும் இல்லை)



இந்திய அமைதிப்படை செய்த அட்டுழியங்களை இந்த பதிவில் இணைத்து உள்ளேன்.


Download (PDF Zipped):


Volume 1 Part 1: http://www.mediafire.com/?emj0zigyjyu

Volume 1 Part 2: http://www.mediafire.com/?i5tzkzyjfny

Volume 1 Part 3: http://www.mediafire.com/?tz1mvzdgggz

தும்பை விட்டுவிட்டு அதிகாரிகளின் போக்கிலே சென்றால் அழிவது எதிரிகள் மட்டும் அல்ல தாங்களும் தான் என்பதை ராஜீவ் காந்தியின் வாழ்க்கை தந்த பாடமாக இருக்கட்டும்.

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-5



இந்திரா காந்தி இறப்பிற்கு பின்னர் அடுத்து வந்த நான்கு நாட்களில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல். இந்திராகாந்தி  கொல்லப்பட்ட  விஷயம் கேள்விப்பட்டவுடன் காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்கள் கூடினர். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி விவாதம் நடந்தது. அதில் இருந்தவர்கள் சீக்கியர்களின் மேல் கோபமாக இருந்தனர். அங்கே என்ன முடிவு எடுத்தார்களோ ஆனால் இந்த கலவரங்களை இவர்கள் தான் முன்னின்று நடத்தினர்.




அதில் முக்கியமானவர்கள் கமல் நாத்தும், ஜகதீஷ் டைட்லர். இவர்களை நேரில் பார்த்து பின்னர் தப்பித்தவர்கள் அதிகம். இவர்கள் சீக்கியர்களை கண்டுபிடிக்க பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. டெல்லியில் இருந்தவர்களின் ஒட்டு மொத்தவர்களின் பட்டியல் காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்கள் வைத்திருந்தனர். அதில் உள்ள சீக்கியர்களை கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று சின்ன பிள்ளைக்கு கூட தெரியும், காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்களுக்கு தெரியாத என்ன?


நான் அங்கே சும்மா தான் நின்று கொண்டு இருந்தேன் என்று சொல்லுவதற்கு இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் அங்கே? கமிட்டி அங்கத்தவர்கள் சும்மா வேடிக்கை பார்க்க அங்கே என்ன பொருட்காட்சியா நடந்தது? இவர்களின் முதல் இலக்கு போலீசில் இருந்த சீக்கியர்கள் தான். மற்ற போலீஸ் அதிகாரிகள் இருக்கும்போது தான் அவர்கள் கொல்லப்பட்டனர். அடுத்து இந்த குண்டர்களின் படை வீடு வீடாக கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை நடத்தினர். இதில் அவர்கள் பாரபட்சம் எதுவும் பார்க்கவில்லை. எத்தனை பேர் எத்தனை கனவுகள் அத்தனையும் அங்கே எரிக்கபட்டது. ஒரு நாட்டின் தலைநகர் மட்டுமே எப்போதும் பாதுகாப்புக்கு பேர்போன இடமாக இருக்கும். அந்தளவுக்கு பாதுகாப்பு பலபடுத்தபட்டு இருக்கும். ஆனால் இங்கே தலைநகரில் தான் கற்பழிப்புகளும் கொள்ளைகளும் கொலைகளும் நடந்தது. அதை ஆட்சியில் இருந்தவர்களே முன்னின்று நடத்தியது கொடுமையிலும் கொடுமை. இந்த கொடுமைகளுக்கு பின்னர் இதை ராஜீவ் காந்தியிடம் சொன்னவர்களுக்கு ராஜீவ் சொன்னது " ஆலமரம் சாயும்போது புல் பூண்டுகள் எல்லாம் அழியத்தான் செய்யும்." எவ்வளவு திமிரான பதிலாக இருந்திருக்கும். புகாரை வாங்கி அதனை விசாரிக்கும் நிலையில் இருந்தவர்கள் மேல் எப்படி புகார் கொடுக்க முடியும். வழக்கம் போல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. பலன் ஒன்றும் இல்லை. 

சீக்கியர்கள் கொல்லப்பட்டது தான் மிச்சம். வேறு ஒன்றும் நடக்கவில்லை. தலைநகரில் நடந்த இந்த கலவரம் சாதாரண விசயமா என்ன? கேட்பதற்கு யாரும் இல்லாமல் வீடில்லாமல் தவித்த சீக்கியர்கள் முற்பதாயிரம் பேர்.
 இதில் கேட்பதற்கு எந்த கேள்விகளும் இல்லை. ஏனென்றால் எல்லாம் தெளிவாக இருந்தது .

அடுத்த பதிவில் இலங்கையில் இந்திய அமைதி படை நடத்திய கொடூரங்கள் .

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-3

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் முகலாய சாம்ராஜ்யம் மூலமாகவும் கிறிஸ்துவர்கள் ஆங்கிலேய ஆட்சி மூலமாகவும் 12ம் நூற்றாண்டு முதல் சுதந்திரம் பெறும் வரையில் இங்கே குடியேறினர். அவர்கள் இங்கே குடியேறிய வகையில் அந்நியர்களே. அப்போது இருந்த அரசாங்கங்களை கலைத்து அழித்து அவர்கள் குடியேறினர். இவ்வாறு குடியேறியவர்களில் கிருஷ்துவர்களை தவிர மற்ற அனைவரும் இந்த மண்ணிற்கு சொந்தம் கொண்டாடினர்.

சீக்கியர்கள் முகலாயர்களுக்கு எதிராக போர்களை நடத்திருந்தாலும் முகலாயர்கள் தங்க கோவில் அல்லது ஹர்மந்தர் சாஹிப்கிற்கு எதிராக எந்த ஒரு விதத்திலும் அழிவுகளை ஏற்படுத்தவில்லை. ஆங்கிலேய ஆட்சியில் கூட அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடத்தினர்.(3 போர்கள் சீக்கிய அரசுகளால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது)


ஆனால் இந்து மதத்தை சேர்ந்ததாக கூறப்படுபவர்கள் இருந்த அன்றைய காங்கிரஸ் அரசு தங்க கோவிலின் மேல் போர் தொடுத்தது. யுத்தத்தில் மட்டுமே உபயோகபடுத்தபடும் அனைத்து ஆயுதங்களும் சீக்கியர்களின் புனித கோவிலான அகால் தக்த் அழிப்பதற்கு அப்போதைய அரசால் உபயோகபடுத்தபட்டது. ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது.

ஜூன் 3,1984: குரு அர்ஜனின் தியாக நாளன்று தான் தாக்குதல் நடத்த வேண்டும் இந்திரா காந்தியால் தேர்ந்தெடுக்கபட்டதுக்கு இரு வேறு காரணங்கள் இருந்தன(சீக்கியர்களின் சார்பாக சொல்லப்பட்ட காரணங்கள்).
  1. அன்று சீக்கியர்கள் கூடும் நேரம், அவர்களின் மத நம்பிக்கைகளையும் சீக்கிய பிரிவினைவாதிகளையும் ஒன்றாக கேவலபடுத்துதல்.
  2.  இரண்டாவது அங்கே கூடும் சீக்கியர்கள் எல்லாரும் பிரிவினைவாதிகள் என்று கொன்று இனபடுகொலை ஒன்றை
     நடத்துதல்.(ஈழ தமிழர்கள் கூட்டமாக கொல்லப்பட்டதை நினைவில் கொள்க)
என்ன தான் தீவிரவாதிகள் என்று கூறப்பட்ட பிரிவினைவாதிகள் புனித பொற்கோவிலின் உள்ளே இருந்தாலும் ஒரு ராணுவ நடவடிக்கை என்பது அன்றைய சூழலில் தேவை அற்றது. அப்பாவி மக்கள் பலர் உள்ளே இருப்பார்களே என்று கொஞ்சம் கூட யோசிக்காதது சந்தேகங்களை கிளப்பியது.(இந்த பிரிவினைவாதிகள் ஜூன் நான்காம் நாள் அருகில் இருந்த இந்துக்களின் மீது தாக்குதல் நடத்த இருந்தனர் என்று ஜூலையில் வெள்ளை அறிக்கை சமர்பிக்கப்பட்டது.)

ஜூன் முதலாம் நாள் 1984:


பிருந்தன்வலே(வெள்ளை உடையில்) மற்றும் அவரது பாதுகாவலர்கள்
 புனித பொற்கோவிலின் சுற்றுபகுதியில் உள்ள கட்டிடங்களில் இருந்த மக்கள் துணை ராணுவப்படையின் மூலம் அப்புறபடுத்தபட்டு அங்கு ராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினர் அங்கு நிலை நிறுத்தப்பட்டனர். அவர்களின் முதல் நோக்கம் அங்கே இருந்த பிரிவினைவாதிகளின் தலைவன் என்று சொல்லப்படும் பிருந்தல்வாலேவை கொல்லுவது அங்கே குவித்து வைத்திருந்ததாக சொல்லப்படும் ஆயுதங்களை அழிப்பது. இதில் பிருந்தன்வாலே மற்றும் அவரின் பாதுகாவலர்கள் அங்கே இருந்த குரு ராம் தாஸ் லங்கர் கட்டிடத்தில் இருந்தனர். பால்கனியில் இருந்த பிருந்தன்வாலேவை கொல்லமுயற்சித்து பின்னர் அருகே அருகே தாக்குதல் நடத்தினர். நாம் தாக்கினால் பதிலுக்கு தாக்குவார்கள் என்பதே துணை ராணுவப்படையின்

எண்ணமாக இருந்தது. ஆனால் பதில் தாக்குதல் பிருந்தன்வாலேவின் ஆதரவாளர்களால் நடத்தப்படவில்லை. மதியம் 12 .45கு ஆரம்பித்த இந்த தாக்குதல் இரவு ஏழு மணிக்கு முடிவுற்றது. பிருந்தன்வாலேவினால் எந்த ஒரு பதில் தாக்குதல்களும் இதில் நடத்தப்படவில்லை. 30 குண்டுகள் புனித பொற்கோவிலை தாக்கிருந்தன. இவர்கள் பதில் தாக்குதல் நடத்தாதால் அங்கே சீக்கியர்களின் ஆயுதங்களின் தோட்டாக்கள் அப்படியே இருந்தன.

(இந்திய ராணுவத்தின் முன்னர் அவர்களின் ஆயுதங்கள் எல்லாம் துரும்புகள் மட்டுமே என்பது என் கருத்து).

அப்பாவிகள் பலர் இதில் கொல்லப்பட்டு இருந்தனர்.


ஜூன் இரண்டாம் நாள், 1984:


இந்திய ராணுவத்தினர் சர்வதேச எல்லையுடன் (பாக்கிஸ்தானுடன்) இணைக்கும் எல்லைகளை அடைத்தனர்.(கங்கா நகர் முதல் ஜம்மு காஷ்மீர் வரை). அதே நேரத்தில் ஏழு கம்பனி படைகள் பஞ்சாபில் உள்ள அனைத்து கிராமங்களையும் தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவந்தனர். ஏதேனும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று முன் எச்சரிக்கைக்காக டாங்குகள், அர்டிலேரிகள் மற்றும் கனரக ராணுவ வாகனங்கள் அங்கே நிறுத்தப்பட்டன. மாநிலத்தை மற்ற மாநிலங்களோடு இணைக்கும் அனைத்து போக்குவரத்துகளும் அடியோடு நிறுத்தப்பட்டன. செய்திகள் தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டன.


( நமக்கு பக்கத்துல குண்டு விழுந்தாலே கண்டுக்க மாட்டோம். தணிக்கை செய்யப்பட்ட செய்திகள்னா நமக்கு வருவதற்கு அல்லது குற்றம் நடந்தது என்ன என்று சொல்வதற்கு குறைந்தது ஒரு மாதம் தேவை. அந்த ஒரு மாதத்தில் அங்கே பல அப்பாவிகள் கொல்லப்பட்டு இறந்தனர் அப்படின்னு மட்டும் தெரியும். அப்போ நாம என்ன செஞ்சிட்டு இருந்தோம்னு ஞாபகம் இருக்காது.)

 
ராணுவ நடவடிக்கைகளுக்காக அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு அங்கு ஜெனரல் கெளரி சங்கர் பஞ்சாப் கவர்னரின் பாதுகாப்புக்கான ஆலோசகராக நியமிக்கபட்டார்.அன்றைய இரவிலே துணை ராணுவபடைகள் விலக்கப்பட்டு இராணுவம் அந்த நிலைகளை ஏற்றது.

ஜூன் மூன்றாம் நாள், 1984:

பஞ்சாபில் இருக்கும் அனைத்து தெருக்களும் வெறிச்சோடி இருந்தன. அங்கு ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் மட்டுமே உலாவிக்கொண்டு இருந்தன. யாரும் அங்கே நடமாடாதபடி தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.லெப்டினன்ட் ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி(General Officer Commander-in-Chief, Western Command) என்னும் ராணுவ அதிகாரியின் தலைமையில் நடத்த முடிவு செய்து அவரிடம் ஒப்படைக்கபட்டது. அவருக்கு அடுத்த இடத்தில் ரஞ்சித் சிங் தயாள் என்பவர் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து தயாரித்த திட்டத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்யபட்டது.அதே நேரத்தில் டெல்லியில் ஒரு கட்டுப்பட்டு அறை ராஜீவ் காந்தியின் தலைமையில் இருந்தது. அவருக்கு துணையாக அர்ஜுன் சிங் ,கே.பி.சிங் டியோ(பாதுகாப்புக்கான காபினெட் அமைச்சர்) இருந்தனர்.இதில் ரஞ்சித் சிங் தயாள் ஒரு சீக்கியராக இருந்தாலும் அவருக்கு பிந்தரன்வாலேயின் அமைப்பினை பிடிக்காது.பாண்டஸி பிரியரான ராஜீவ் காந்திக்கு ராணுவ விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். உயிரின் மதிப்பு தெரியாதவர்.(தமிழர்கள் மட்டும் தான் ஒற்றுமைக்கு பேர்போனவர்கள் இல்லை, சீக்கியர்களும் தான். ஆளுக்கு ஒரு அமைப்பு, கொடி என்று இருந்தார்கள்).
 
ஐந்து கம்பனி படைகள்(the 10th. the 11th the 2nd, the 1st and 15th) புனித பொற்கோவிலின் மேல் தாக்குதல் நடத்த காத்து இருந்தனர்.இதுமட்டும் அல்லாமல் இரண்டு பட்டாலியன் வீரர்கள் தனியாக தேர்ந்தெடுத்திருந்தனர். இவர்கள் அனைவரும் கமாண்டோ பயிற்சி முடித்தவர்கள். முகங்களை ஹெல்மேட்டாலும் உடலை குண்டு துளைக்காத உடையாலும் நிரப்பிய இந்த படை தாக்குதலுக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்தது.
 
இம்முறை தாக்குதலை ராணுவம் கனரக ஆயுதங்களில் தொடங்கியது. அதற்கு பதிலடியும் எதிர்புறம் கிடைத்தது. மறு நாள் காலை வரை நீடித்த சண்டை வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. பிந்தரன்வாலேயின் ஆதரவாளர்கள்  உள்ளே  இருந்து  தாக்குதல்களை  தொடுத்திருந்தாலும் புனித பொற்கோவிலின் பக்கம் செல்லாமல் தவிர்த்தனர். ஒரு சிலர் தங்கள் உயிரை கொடுத்து அங்கு நடக்கும் தாக்குதல்களை வேறு பக்கம் திருப்பினர்.( தானாக முன்வந்து சாதல்).
(பின்னாளில் இவர்களுக்கும் சேர்த்து சீக்கியர்கள் நினைவு அனுசரிக்கின்றனர். இன்னும் அவர்களிடம் அதே பிரிவினைவாதம் இருக்கிறது. ஒரு சிலர் இந்த விசயங்களை மறந்தும் இறந்தவர்களை பழித்தும் வருகின்றனர்.(கல்சா அமைப்பு). நம்மை போலவே இவர்களுக்குள்ளும் துரோகிகளும் இருக்கின்றனர்.)



ஜூன் நான்காம் நாள், 1984:

வெளியே இருந்த ராணுவம் இம்முறை தன் நிலைகளை மாற்றி அமைத்தது. முன்பு போல் இல்லாமல் யுத்தத்தில் ஈடுபடும் டாங்கிகளை பயன்படுத்த முடிவு செய்தது. மறுபக்கம் சோறு தண்ணி இல்லாமல் கிடந்த சீக்கியர்களின் கையில் கார்பைன், செமி ஆட்டோமாடிக்  மற்றும் இலகுரக  துப்பாக்கிகள் இருந்தன.( தாக்குதல் நடத்தாமல் சும்மா சோறு தண்ணி அனுப்பாமல் இருந்தாலே பாதி பேர் அங்கே செத்திருப்பாங்க. அப்புறம் எதுக்கு தாக்குதல்?)ராணுவம் அங்கே இருந்த தண்ணீர் தொட்டியை நோக்கி தாக்குதல் நடத்தியது. அதன் அருகில் விழுந்த குண்டுகள் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த கட்டிடத்தையும் சேர்த்து தாக்கின. ஷெல்களும் அடிக்கப்பட்டன.( கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சொல்லும் அதே ஷெல் தான் இது. ஒவ்வொன்றும் உள்ளங்கை அகலமும் முழங்கை நீளமும் கொண்டவை. உள்ளே இருக்கும் மருந்து வெடிக்கும்போது ஏற்படும் வீரிய தாக்குதலில் உடல்கள் கிழிந்து தொங்கும்.)


இப்படி விழுந்த ஷேல்களினால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் அங்கே குழுமிருந்த பக்தர்களே. மற்றவர்களுக்கு அது வீர மரணம். அப்பாவிகளுக்கு?

இப்போது பிந்திரன்வலேவின் ஆட்கள் சிலர் அங்கே இருந்து அமிர்தசரசினுள் நுழையமுற்பட்டனர். அவ்வாறு முயற்சித்தவர்கள் அனைவரும் கனரக ஆயுதங்களால் கொல்லப்பட்டனர். மற்றவர்களையும் அங்கே இருந்து பிரிக்க உள்ளே டாங்கிகள் அனுப்பப்பட்டது. உள்ளே இருந்த பிந்திரன்வலேவின் நெருங்கிய சகாக்களில் சிலர் கனரக ஆயுதங்களுக்கு எதிராக போர் செய்வது அபத்தம் என்று கூறி சரணடைய முற்பட்டனர். அதே நேரத்தில் பக்கத்து கிராமங்களில் இருந்து வாள்களோடு மக்கள்( ஐம்பதாயிரம் பேர்) அமிர்தசரசினுள் வர முயற்சி செய்தனர். உள்ளே இருந்தவர்களில் ஒரு சிலர் போர் செய்தனர் வேறு சிலர் சரணடைய முற்பட்டனர். வேறு சிலரோ அங்கேயே ஒளிந்து கொண்டனர். என்ன தான் டாங்கிகள் உள்ளே நுழைந்தாலும் பிந்திரன்வலேவின் ஆட்கள் மேற்கொண்டு உள்ளே ராணுவம் நுழைவதை தடுத்து அனுப்பினர்.

ஜூன் ஐந்தாம் நாள், 1984:
பிந்திரன்வலேவின் ஆட்கள் மீது தாக்குதல் நடத்த அனுப்பப்பட்ட படையில் தமிழர்கள், பீகாரிகள், டோக்ராக்கள் மற்றும் ராஜபுத்திரர்கள் அதிகம் இருந்தனர். இதில் தமிழர்கள் அதிகம். (இங்கு ஒரு விஷயம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிபடையில் சீக்கியர்கள் அதிகம், தமிழர்கள் குறைவு. பொற்கோவிலுக்கு விழுந்த அடிக்கு பதிலடி கொடுக்க கிடைத்த சந்தர்ப்பமாகவே அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரினை நடத்திருக்க கூடும்.)

உள்ளே இருந்தவர்களின் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்த நமது ராணுவம் கீழ்க்கண்டவற்றை பயன்படுத்தியது.
  1. விஜயாந்த டாங்கிகள் (அர்ஜுன் டாங்கிகளின் தாத்தா அல்லது பாட்டி). எடை 38 டன்
  2. கனரக ஆயுதங்கள்.
       

 
<><><><><><><><><> 
25 பவுண்டர் பீரங்கிகள் 

ஹோடிசர்ஸ்




இவ்வளவு இருந்தும் உள்ளே இருந்தவர்களின் தீரமான எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் ராணுவம் திணறியது.முடிவில் ரசாயன குண்டுகள் பிரயோகிக்கப்பட்டுள்ளது( ஒருவேளை கண்ணீர் புகைக்குண்டுகளை அவர்கள் அவ்வாறு சொல்லிருக்கலாம். டெல்லி மேலிடம் கூறியதை அடுத்தே ரசாயன குண்டுகள் உபயோகபடுதபட்டுள்ளன. உறுதி செய்ய உள்ளே இருந்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை ). அதில் மயங்கிய சீக்கியர்களை தலையில் சுட்டு கொன்றுள்ளனர். இவ்வாறு நுழைவதற்கு வழி செய்த ராணுவம் தொடர்ந்து முன்னேறுவதற்கு என்னவேண்டுமானாலும் செய்து கொள்ள டெல்லி மேலிடம் அதிகாரம் அளித்தது. (சும்மா விட்டாலே சித்ரவதை தான். முழு சுதந்திரம்னா எப்படி இருக்கும்? உள்ளே புகுந்த ராணுவம் தன் மனம் போல் விளையாடியது). பொற்கோவிலின் உள்ளே டெல்லி மேலிடத்தின் அனுமதி கிடைக்கும் முன்னரே ஏழு விசயந்தா டாங்கிகள் இருந்தன. ஆனால் இப்போது முழு அனுமதிக்கு பின்னர் அவற்றின் உபயோகம் அதிகரித்தது. கன்னாபின்னாவென்று பொற்கோவிலின் மேல் தாக்குதல் செய்தனர். அங்கே ஒளிந்து கொண்டு இருந்தவர்களில் லோங்கோவலே,ரஞ்சித் சிங் தயாள் இருக்கும் அதே பிரிவினை சேர்ந்தவர். அதனால் லோங்கோவலேவை பத்திரமாக மீட்க உள்ளே ராணுவம் நுழைந்து அழைத்து வந்தது. அதுவரை அவரை பின்பற்றியவர்கள் நொந்து போயினர். மற்றரோருவரான தோக்ரா சரணடைந்தார். இவ்விருவரும் அங்கே இருந்து வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.எங்கெங்கு காணினும் ரத்தமும் சதையும் தான் காணகிடைத்துள்ளது.

ஜூன் ஆறாம் மற்றும் ஏழாம் நாட்கள் , 1984:
சரணடைந்தவர்களை துரோகிகள் என்று சீக்கியர்கள் இன்றும் கூறுகின்றனர். அவர்கள் சரணடைந்தவுடன் எதுவும் முடிவுக்கு வரவில்லை. பிந்திரன்வலேவின் ஆட்கள் கடைசி முறை தொழுது பின்னர் அவர்கள் மத்தியில் பிந்திரன்வலே பேசுகிறார். அவர்களில் யாரெல்லாம் புனித மரணத்தை விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் தன்னுடன் வரலாம் என்று கூறுகிறார். அதன் பின்னரும் வந்த நாற்பது வீரர்கள் மீண்டும் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். இதில் கோபம் அடைந்த ராணுவம் அந்த இடங்களில் கனரக ஆயுதங்களை உபயோகபடுத்தி கட்டிடங்களை நொறுக்கியது.அதில் அந்த நாற்பது பேரும் கொல்லபடுகின்றனர். உள்ளே நுழைந்த ராணுவம் இதை முதலில் உறுதி படுத்தியது. பின்னர் பிந்திரன்வலேவை தேடியது, அவரை கண்டுபிடிக்க முடியாமல் அங்கே பக்கத்து கட்டிடங்களில் இருந்த மக்களை கொன்றது. பெண்களின் கற்பினை சூறையாடி உள்ளது. முதலில்  ஜூன் ஆறாம் நாள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட பிந்திரன்வலே  பின்னர் ஜூன் ஏழாம் நாள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. இதில் எது  உண்மை  என்பது  யாருக்கு  தெரியுமோ?

 எப்போதும் ராணுவம் கடமையை செய்யும் பின்னர் அவர்களின் வேலையை காட்டி விடுவார்கள். சண்டை முடிந்தஉடனே அங்கே இருந்த பொற்கோவிலில் இருந்த தங்கத்திலான பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர்.( இன்றும் ராணுவத்தில் இருந்த தமிழர்கள் செய்தது தான் அது என்று சீக்கியர்கள் கூறுகிறார்கள்). அங்கே சிக்கியவர்களை சித்திரவதை செய்து கொன்று இருக்கின்றனர்.  பெண்கள் யாரும் இதில் தப்பவில்லை.

ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாயிரம் பேர். கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை 84. கொல்லப்பட்ட சீக்கிய போராளிகளின் எண்ணிக்கை 492. மற்றவர்கள்?



சீக்கியர்கள் பின்னர்  கோபப்பட்டு  ரஞ்சித் சிங் தயாள்ளை சுட்டு கொன்றனர். ஒரு சிலரை தேடி அழித்தனர். இந்திரா காந்தியை சுட்டு கொன்றனர். ஆனால் இதற்க்கெல்லாம் சூத்திரதாரியான ராஜீவ் காந்தியை விட்டுவிட்டனர்.விட்டுவிட்டதன் பிரதிபலனை இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று அனுபவித்தனர்.


அடுத்த பதிவில் இந்திரா காந்தி படுகொலை

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-2

 சஞ்சய் காந்தியின் இயற்பெயர் சஞ்சீவ். ஒரு திருடப்பட்ட காரினை வைத்திருந்த குற்றத்திற்காக சஞ்சய்யை பிடிக்கும்போது அவர் பெயர் சஞ்சீவ். அங்கே இருந்து தப்பிபதற்காக லண்டனில் இருந்த அப்போதைய இந்திய ஹை கமிஷனர் கிருஷ்ணா மேனன் சஞ்சீவிற்கு சஞ்சய் என்ற பெயரில் பாஸ்போர்ட் கொடுத்துள்ளார். சஞ்சீவ் என்கிற சஞ்சய் சீக்கிய பெண்ணான மேனகாவை கற்பமுற செய்துள்ளார். மேனகாவை சஞ்சீவிற்கு மணமுடிக்க முஹம்மத் யுனுசிர்க்கு விருப்பம் இல்லை. மேனகா காந்தி அப்போது பாம்பே டையீங் விளம்பர படத்தில் துண்டு மட்டும் கட்டி நடித்த புகழில் இருந்தவர். முஹம்மத் யூனுஸ் ஒரு தீவிர முஸ்லிம். அப்படியிருக்க எப்படி மணம் செய்துவைக்க மனம் வரும்? ஆனால் மேனகாவின் தந்தை கலோனல் ஆனந்த் விடவில்லை. அதனால் ஒரு வழியாக இந்த விஷயம் மீடியாவுக்கு வராமல் கல்யாணத்தில் முடிந்தது.இப்போது மேனகா காந்தி வீட்டை விட்டு துரத்திய சம்பவத்திற்கு வருவோம்.



கீழிருந்து மேலாக ராகுல், இந்திரா, சஞ்சய்,மேனகா, ராஜீவ், பிரியங்கா. நடுவில் சோனியா





சஞ்சய் காந்தி இறந்த உடன் இந்திரா காந்தி கேட்ட முதல் கேள்வி "சஞ்சய் காந்தி வைத்து இருந்த சாவி கொத்து பற்றியது".இந்திரா காந்திக்கு சஞ்சயின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே இருந்தது. இதற்காகவே காத்து இருந்தார் போல் ராஜீவ் காந்தி சஞ்சய் காந்தியின் நம்பர் 2 இடத்தை பிடித்தார்.



வருண் காந்தி அப்போது 1௦௦ நாட்கள் ஆன ஒரு கைக்குழந்தை மட்டுமே. மாமியார் இந்திரா காந்தியோ மகன் இறந்த சூழ்நிலையில் பேசும் நிலையில் இல்லை. மகன் வருண் காந்தியை கவனிக்க கூட ஆட்கள் இல்லாத நிலையில் அந்த வீட்டில் இந்திரா காந்தியின் குடும்பத்தோடு இருந்துள்ளார் ஆனால் இந்திரா காந்தியும் மேனகா காந்தியும் அப்போது அங்கு இருந்த மூன்றாவது பெண்ணை பற்றி பயந்தனர் என்று மேனகா காந்தி இப்போது கூறியுள்ளார். முதலில் ராஜீவ் காந்தியின் வலியுறுத்தலின் பேரில் மேனகா புறக்கணிக்கபட்டார். வழக்கமாக கணவர் இறந்தவுடன் மனைவி அந்த பதவியை பெறுவது தான் தற்போது நடைமுறை. அதனை அங்கே யாரேனும் வலியுறுத்தினால் என்ன செய்வது என்பதால் மேனகா காந்தி அங்கே இருப்பது சோனியா காந்திக்கு பெரும் உறுத்தலாக இருந்தது.பின்னர் இந்திரா காந்தியும் சோனியா காந்தியும் ஒன்றாக சேர்ந்து மேனகாவிற்கு தொல்லை கொடுத்துள்ளனர்.மகனை கல்யாணம் செய்ததால் ஒருத்தர் நமக்கு சொந்தகாராகி விட்டார் என்பதை இந்திராவினால் ஏற்று கொள்ள முடியவில்லை. மேனகா மனதளவிலும் உடல் அளவிலும் இந்திராவின் வீட்டில் துன்புருத்தபட்டதாக பின்னர் பேட்டி அளித்துள்ளார்.

மேனகாவை வெளியே அனுப்ப இந்திராவின் வீட்டில் இருந்த எல்லாரும் தயாராக இருந்தனர். அந்த சந்தர்ப்பமும் வந்தது. மேனகா காந்திக்கு சஞ்சய்யின் கனவுகள் மெய்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். ஆனால் எல்லாரும் மேனகாவை வெளியே அனுப்பும் கனவினை மெய்பட வைத்தனர். இந்திரா லண்டன் சென்று இருந்த நேரம் மேனகா தொடங்கிய சஞ்சய் விசார் மனச்(Sanjay Vichar Manch)அதற்கு வழிவகுத்தது.


இதில் பேசுவதற்காக மேனகா எழுதியிருந்த உரை இந்திரா காந்தியின் பார்வைக்கு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனுப்பியவர் ராஜீவ். அங்கே இந்திராவின் உடன் இருப்பவர் சோனியா. வேறு என்ன வேண்டும்? விஷயம் பற்றிக்கொள்ள. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இந்த உரை இந்திராவின் பார்வைக்கு மேனகா கொண்டு சென்று ஒப்புதல் பெறப்பட்டு தான் அவர் பேசினார் என்பதே.
 
மார்ச் மாதம் 28, 1984: லண்டனில் இருந்து காலையில் திரும்பிய இந்திராவை பார்க்க சென்ற மேனகாவை இந்திரா திருப்பி அனுப்பினார்.இந்திராவை மேனகா சந்திக்க சென்ற பொழுது அங்கே இந்திராவின் மொத்த குடும்பமும் விவாதத்தில் இருந்துள்ளனர். திரும்பவும் மதியம் சென்று சந்திப்பதாக இருந்தார் ஆனால் அதற்கு முன்னரே இந்திரா கூப்பிட்டு அனுப்பிருந்தார்.வரவேற்பறையில் இருந்த மேனகாவை வீட்டை விட்டு வெளியேற வேலையாட்கள் முன்னியிலையில் உத்தரவிட்டார்.
 
ஏன் நான் என்ன தவறு செய்தேன்?என்று கேட்டதற்கு இந்திரா லண்டனில் இருக்கும்போது இங்கே மேனகா பேசியது தெரியும் என்று சொன்னார். பொருட்களை எடுத்து செல்ல அவகாசம் கேட்டதற்கு மறுக்கப்பட்டு வெளியே மேனகாவின் தாயார் வீட்டிற்க்கு அனுப்பப்பட இருந்தார். அதற்குள் மேனகாவின் அக்கா அம்பிகாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 1௦ நிமிடங்களில் அங்கு இருந்தார்.அம்பிகா தன் தங்கைக்கு பரிந்து பேசுவதற்கு முற்பட்டார். ஆனால் ஒரே வார்த்தையில் இது உனது தங்கையின் கணவர் வீடு அல்ல. இது இன்றைய பிரதமரின் வீடு என்று கூறி இந்திரா ஆவேசபட்டார். இருந்தாலும் அம்பிகாவிடம் இது எடுபடவில்லை. இருந்தாலும் மெதுவாக கிளம்பலாம் என்று முடிவு எடுத்து அன்றைய மதிய உணவினை மேனகாவின் அறையிலேயே மேனகாவும் அம்பிகாவும் முடித்தனர். பின்னர் அமிதாப் பச்சன் நடித்த படத்தையும் பார்த்து கொண்டு இருந்தனர். இந்த அறையின் மறுபக்கம் இருந்த அறையில் இந்திராவின் அறை இருந்தது. அவர்கள் இந்திராவிடம் விட்டுகொடுத்து போவதற்கு தயாராக இல்லை. இரவு பதினோரு மணியளவில் கண்ணீரும் கம்பலையுமாக இந்திராவின் வீட்டைவிட்டு மேனகாவும் அம்பிகாவும் வருனுடன் வெளியேறினர். அரசியலில் வாரிசு போட்டி வரும் என்று தெரிந்தால் அப்போதே கொன்று விடும் வழக்கம் வடஇந்திய அரசுகளில் இருந்தது.அதற்கு வீட்டைவிட்டு அனுப்புதல் எவ்வளவோ மேல் என்று ராஜீவ் நினைத்து இருக்கலாம்.


இதுவே முதலில் இறந்தது ராஜீவ் காந்தியாக இருந்தால் சோனியா காந்தி நிச்சயம் அனுதாபம் பெற்று அப்போதே பெரிய அளவில் வந்திருப்பார். என்ன இருந்தாலும் இந்தியர்கள் அடுத்த நாட்டினர் மேல் கொஞ்சமாவது இரக்கம் காட்டுவர்.

அடுத்த பதிவில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.

Operation Casino(ஆபரேஷன் கேசினோ)

லண்டனில் தற்போது வசித்து வருபரும் முன்னாள் நிறுவனருமான K.S.நாயரின் புத்தகம் சில விசயங்களை சொல்லியுள்ளது. அதில் கவனிக்கதக்க ஒன்று Operation Casino(ஆபரேஷன் கேசினோ). 1970ம் ஆண்டின்  மத்தியில்  இந்திரா காந்தியின் அரசாங்கமானது பல்வேறு நிதிநெருக்கடிகளில் சிக்கித்தவித்தது. அதில் இருந்து தப்புவிக்க என்ன வழி என்று யோசித்து கொண்டுவரும் வேளையில் இரான் அரசாங்கம் இந்தியாவுக்கு கடன் தருவது பற்றி பரிசிலிப்பதாக சொன்னது. அவ்வாறு தரும்தொகை $250 million dollars என்று இருந்தது. அதனை பெறுவதற்கு $6 million dollars லஞ்சம் கொடுக்க எடுத்த முயற்சி தான் இந்த ஆபரேஷன் கேசினோ.

சுவிஸ் வங்கிகளில் பணம் போடுவது இக்காலத்தில் ஒன்றும் புதிது அல்ல. ஆனால் லஞ்சப்பணம் எல்லாம் அங்கே தான் செல்லவேண்டும் என்று வழி காட்டிய பெருமை சஞ்சய் காந்திக்கே சேரும். சஞ்சய் காந்தி தான் இந்திரா காந்தியின் அப்போதைய அரசாங்கத்தில் நம்பர் 2. அவர் அனுமதி இன்றி ஒன்றும் நடவாது. பல்வேறு விசயங்களில் அவரே நம்பர் 1. இந்திரா காந்தி எல்லாம் கணக்கிலே வர மாட்டார்.

இந்த ஆபரேஷன் கேசினோ முற்றிலும் சஞ்சய் காந்தியின் நேரடி வழிகாட்டுதலில் நடைபெற்று இருக்கிறது. சஞ்சய் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கில் இந்த பணம் செலுத்தப்பட்டதாக சொல்லபடுகிறது. ஆனால் இதில் வேறு விடயங்கள் நடந்ததாக நாயர் எழுதி உள்ளார். 1974ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனைக்களுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் ஒரு சரிவிற்கு சென்று கொண்டு இருந்ததாக சொல்கின்றனர். இதில் இருந்து மீள்வதற்கு அப்போதைய இரான் அதிபர் ஷா கடன் தருவதாக கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது அந்த கடனை பெறுவதற்கு கொடுத்ததாக சொல்லப்படும் லஞ்சப்பணம் எங்கு சென்றது? ஏன் கொடுக்கப்பட்டது என்று இன்றும் தெரியவில்லை. முதலில் கொரியரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து இருக்கின்றனர். ஆனால் நாயர் இதற்கு ஒத்து கொள்ளாததால் அப்போதைய மத்திய அரசின் நிதி செயலாளர் கோபி கவுள் நூறு டாலர் நோட்டுகளாக மாற்றி சாம்சொநைட் பெட்டிகளில் கொண்டு செல்ல கூறியிருக்கிறார். அதற்கும் நாயர் ஒத்துவராத காரணத்தினால் ரிசர்வ் வங்கியின் ஜெனிவா கிளையின் மூலம் நாயருக்கு ஆறு மில்லியன் டாலர் அளவுக்கு ஒரு காசோலை தர ஏற்பாடு செய்திருக்கிறது. இதை சஞ்சய் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்துவதோடு நாயரின் பணி முடிந்து உள்ளது.




இரானின் நிதியமைச்சரை சரிகட்ட கொடுத்ததாக சொல்லப்பட்ட இந்த பணம், பலரின் கைகளில் போனதாக கூறப்பட்டது. ஆனால் இரானின் நிதியமைச்சர் இந்த கடன் வழங்குவதற்கு விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறார். ஷாவின் தங்கையான அஷ்ரபின் நெருங்கிய நண்பரான ரசிடியான் மூலம் இந்த கடன் கிடைத்துள்ளது. ரசிடியான் இந்தியாவில் பிறந்து இரானில் தொழில் செய்து கொண்டிருந்தவர். இவர் அதே நேரம் சஞ்சய் காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இவருக்கு தான் சஞ்சய் காந்தி இந்த ஆறு மில்லியன் டாலர்ஸ் பணத்தை கொடுத்தார் என்று அப்போது பாராட்டப்பட்டு உள்ளது. அதாவது நிதி நிலைமையை சமாளிக்க பெறப்படும் கடனிற்கு லஞ்சம் கொடுப்பதில் தவறு இல்லை என்று வாதிட்டனர். ஆனால் ஆறு மில்லியன் டாலர்ஸ் லஞ்சம் பெற்றதாக சொல்லப்பட்ட அந்த இந்திய தொழில் அதிபர் சஞ்சய் காந்திக்காக தான் பெற்றார் என்பது தான் உண்மை. கொடுப்பது போல் கொடுத்து பின்னர் அதனை வாங்கி உள்ளார் சஞ்சய் காந்தி.

நாட்டிலே முதல் முறையாக கடன் வாங்கி தனது அரசாங்கத்திடம் கொடுக்க லஞ்சம் பெற்ற முதல் மத்திய அமைச்சர் வேறு யாரும் இருக்க முடியாது.

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-1

ராஜீவ் காந்தி என்னும் சைக்கோவின் வாழ்க்கை இந்திரா காந்தியின் வாழ்க்கைக்கு பின்னரே முக்கியத்துவம் பெறுகிறது. அதுவரை இந்திரா காந்தியை ஆட்டி வைத்தது சஞ்சய் காந்தி. இவர் இந்திரா காந்திக்கும் முஹம்மத் யூனுஸ் என்னும் முஸ்லிமுக்கும் பிறந்தவர். அப்படியென்றால் ராஜீவ் காந்தி? அவர் இந்திரா காந்திக்கும் பெரோஸ் கான் அல்லது பெரோஸ் காந்திக்கும் பிறந்தவர். இதில் ஒன்றும் விசேஷம் என்று இல்லை. ஆனால் சஞ்சய் காந்தி எதற்க்காக இந்திரா காந்தியை மிரட்டினார்,ஏன் கொல்லபட்டார்? என்பதெல்லாம் ராஜீவ் காந்திக்கு தெரியாததல்ல. இவர்களின் கூட்டணியில் உருவானது தான் மாருதி உத்யோக் என்னும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வருகைக்கு முன்னர் ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் தான் பெரிய நிறுவனம். அதில் சஞ்சய் காந்திக்கும் பெரும்பான்மை பங்குகள் இருந்தது. இந்த பங்குகள் எல்லாம் எப்படி வாங்கினார்கள் என்பதெல்லாம் சிதம்பர ரகசியம்.

மாருதி உத்யோக் நிறுவனம் சஞ்சய் காந்தியின் கனவாக இருந்தது.ஆனால் அந்த நிறுவனம் உருவாவதில் இந்திரா காந்தியின் குடும்ப உறுப்பினர்களுக்கு விருப்பம் இல்லை.என்ன தான் கொடுமைகள் செய்தாலும் எந்த அம்மாவுக்கும் பிள்ளையை கொல்ல மனம் வராது. அப்ப யார் சஞ்சய் காந்தியை கொல்ல சொன்னது? இதற்கு விடை குடும்ப உறுப்பினர்கள். இங்கே இருக்கும் ஆட்சியில் எப்படி பணத்திற்காக எல்லாவற்றையும் செய்தார்களோ அதே மனநிலை இந்திரா காந்தியின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தது. ஆட்சியில் இருப்பது நாம் தான் அப்புறம் எதுக்கு ஒரு நிறுவனம் ஆரம்பித்து அதனை அரசுடமை ஆக்க வேண்டும்? இது தான் அவர்களின் கேள்வி?

இது ராஜீவ் காந்தியை பற்றிய பதிவுகளின் தொடக்கம்.
மேலும் விவரங்களுடன் விரைவில் அடுத்த பதிவு.
(மேனகா காந்தியின் வெளியேற்றம்)

Popular Posts