
12:59 AM

satheshpandian
, Posted in
லஞ்சப்பணம்
,
2 Comments
இரு வாரங்களுக்கு முன்னர் நாங்கள் கட்டிக்கொண்டு இருக்கும் வீடு சம்பந்தமாக மதுரை சென்றேன். வீட்டின் வேலை முழுவதும் முடியும் நிலையில் இருப்பதால் தற்போது இருக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கான
மின் இணைப்பினை(Commercial) மாற்றி வீடுகளுக்காக வழங்கப்படும் மின் இணைப்பாகவும்(Domestic) வீட்டின் ஒரு பகுதிக்கு முத்தறுவாய் மின்திறன் (3-phase )மின் இணைப்பு பெறவும் சென்று இருந்தேன்.முதலில் ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் கட்டிடங்களுக்கான மின் இணைப்பிலிருந்து மாற்ற கோரி ஒரு விண்ணப்பம் கொடுக்க கூறினார். அதோடு மீண்டும் வீடுகளுக்கான மின் இணைப்பு கொடுக்க கூறி ஒரு விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்றனர். நான் முத்தறுவாய் மின்திறன் மின் இணைப்பு புதிதாக வாங்க வேண்டும் என்று கூறியபோது அதற்கு ஒரு விண்ணப்பமும் கொடுக்க கூறினர். இந்த விண்ணப்பங்களை வெளியில் இருக்கும் தரகரிடம் இருந்தே வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அவரிடமே அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கும்போது அவர் கேட்ட தொகை ஐநூறு ரூபாய்.
இதை எடுத்து கொண்டு உள்ளே சென்றால் முதலில் தற்போது இருக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கான மின் இணைப்பினை(Commercial) மாற்றி வீடுகளுக்காக வழங்கப்படும் மின் இணைப்பாக(Domestic) மாற்றுவதற்கு வருவார்கள் என்றார்கள். இதற்கு தமிழக மின்சார வாரியத்திற்கு ஐநூறும் (350+150) அலுவலருக்கு ஆயிரத்தி ஐநூறும் கொடுத்தோம்.
இது தவிர வீட்டிற்கு வந்து மின் இணைப்பினை மாற்றி கொடுக்கும் ஊழியருக்கு ஒரு
இரு நூறு கொடுத்தோம்.
இந்த பணத்தினை இவர்களுக்கு கொடுக்கும் முன்னர் என் அப்பாவிடம் சண்டையிட்டேன். மின்சார வாரியத்தில் கட்டவேண்டிய பணத்தை கட்டியாகிற்று அப்புறம் எதற்கு இன்னும் இவர்களுக்கு அழுகிறீர்கள் என்று. அதற்கு என் அப்பா கூறியதாவது" பக்கத்து வீட்டுக்காரன் லஞ்சம் கொடுக்கவில்லை என்று புதிதாக முத்தறுவாய் மின்திறன் (3-phase )மின் இணைப்பு கேட்டு கொடுக்கவில்லை. அவன் சண்டை போட்டு போயி ஒரு மாதம் ஆக போகிறது. இன்னும் பக்கத்து வீட்டிற்கு அந்த மின் இணைப்பு வந்தபாடில்லை. நீயும் அதே மாதிரி சண்டை போட்டால் இங்கேயும் அதுவே தான் நடக்கும்" என்றார். நான் இதற்கு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்கிறேன். இவனுங்க என்ன செய்யுரானுங்கனு பார்க்கலாம் என்றேன். ஆனால் அப்பாவிற்கு அதில் உடன்பாடும் இல்லை. நீ புகார் அளித்து விட்டு சென்னை சென்று விடுவாய். இங்கே இருக்க போவது நான் தானே என்றார். லஞ்சம் கேட்பவரும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான். லஞ்சம் கொடுக்க எத்தனிக்கும் எனது தந்தையும் அதே புகுதியில் தான் இருபது வருடங்களாக உள்ளார். பின்னர் எதற்காக லஞ்சம்?
நான் எங்கள் வீட்டிற்கு வந்த மின் இணைப்பு கொடுப்பாளரிடம்(Wire man) கேட்டபோது அவர் வாதம் வித்தியாசமாக இருக்கிறது.
- முதலில் சொல்லும் காரணம் விலைவாசி அதிகமாகிடுச்சு
- இரண்டாவதாக சொல்லுவது மேலே இருப்பவர்களுக்காக தான் வாங்குகிறோம் என்பது. அதாவது அந்த ஆயிரத்தி ஐநூறு ரூபாயில் மின்வாரியத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் எல்லாருக்கும் பங்கு உண்டாம். தெரிந்தவர் என்பதால் ரொம்ப கம்மியாம்.
- மூன்றாவதாக சொல்லும் காரணம் தான் இந்த பதிவினை நான் எழுதுவதற்கு காரணம் எல்லாரும் வாங்குறாங்க நானும் வாங்குறேன் அல்லது வாங்க வைக்கபடுகிறேன் என்பது அது.இந்த மின்வாரிய ஊழியர் மாநகராட்சியில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு அவர் கொடுத்த லஞ்சத்தினை பற்றி சொல்லுகிறார். அதாவது இது ஒரு தொடர் சங்கிலி போல் நீளுகிறது.இந்த சங்கிலி தொடர் லஞ்சம் வாங்க முடியாத அல்லது வாய்ப்பு அற்ற துறையில் உள்ளவர்களால் சில நேரம் உடைகிறது.
உதாரணத்திற்கு ஒரு காவல்துறையில் வேலை பார்க்கும் ஒரு அலுவலர் மாநகராட்சியில் தன்னுடைய வேலை எளிதாக நடைபெற லஞ்சம் கொடுக்கிறார் (சத்தியமாக காவல்துறைக்கு லஞ்சம் வாங்கி தான் பழக்கம், கொடுத்து இல்லை என்பது இப்போதைக்கு வேண்டாம்) என்று வைத்து கொள்வோம். இந்த காவல்துறை அலுவலர் இதனை ஈடுகட்ட வேறு யாரிடமாவது லஞ்சமாக வாங்குவார். அப்படி கொடுத்தவரும் ஒரு அரசு ஊழியர் என்றால் அவர் என்ன செய்வார். காவல்துறை அலுவலர்க்கு கொடுத்த பணத்தை வேறு எங்காவது லஞ்சமாக வாங்கி ஈடு செய்கிறேன் என்பார். ஆக மொத்தத்தில் இதுவரை லஞ்சம் வாங்காத யாரேனும் அரசு துறையில் இருந்தால் அவர்களை லஞ்சம் வாங்க தூண்டுகிறார்கள். அரசு ஊழியர்கள் சரி வாங்குகிறார்கள். மற்றவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்றால் இவர்களிடமிருந்தோ அல்லது தங்களிடம் யார் லஞ்சம் கொடுப்பார்கள் என்றோ தான் பார்க்கிறார்கள்.
ஒரு வேளை உங்களிடம் ஒரு வேலைக்கு லஞ்சம் பெறும் ஒருத்தர் இருக்கும் துறையில் இருந்து யாரேனும் ஒரு வேலைக்கு உங்களிடம் யாரேனும் வந்தால் நீங்கள் லஞ்சம் கேட்பீர்களா இல்லையா?
சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி: வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டிருக்கிறார்களே?
அது கொடுத்தாச்சு... அது பற்றி அறிக்கை வரும்.
இன்று கூட இ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என கூறியதாக செய்திகள் வந்துள்ளதே?
அது எனக்கு தெரியாது. இவ்வாறு, முதல்வர் கருணாநிதி சிரித்தபடியே பேட்டியளித்தார்.
மீண்டும் மீண்டும் இவர் வயதிற்க்கோ இல்லை இவர் இருக்கும் பதவிக்கோ ஏற்றபடி பேசாமல் தான் அந்த பதவிக்கு ஏற்றவன் இல்லை என்று நிருபிக்கிறார்.
இவர் தனிப்பட்ட முறையில் மற்றவர்களின் அந்தரங்கங்களை விமர்சிப்பது இவருடன் இருக்கும் அலுவலர்களுக்கு தெரிந்ததே. ஆனால் இப்படி பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதற்கு அப்படி முதல்வர் பொறுப்பில் இருந்து தான் பேச வேண்டுமா?
ஒருவேளை இவருக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல வருகிறாரோ? இல்லை வெங்காயம் பயிரிடுவதெல்லாம் அவருக்கே தெரியாது என்று சொல்ல வருகிறாரோ?
யாருடைய சாவாவது மக்களை சந்தோசப்படும் என்று மக்கள் நினைத்தால் உண்மையில் அப்படி ஒரு பிறவிக்கு அப்படி ஒரு பிறப்பிற்கு அந்த இழிபிறவி மட்டும் அல்ல அந்த குடும்பமும் வருத்தப்படும் நாள் கண்டிப்பாக வரும்.( நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மேல் சொன்ன தகவல்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.)
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை எப்படியெல்லாம் திசை திருப்பலாம் என்பதற்கு நேற்று தான் ஒரு பதிவு போட்டேன். அந்த பூச்சாண்டி எல்லாம் ஒத்து வராததால் சோனியா குடும்பம் எதற்கு பயப்படும் என்று பார்த்து கொண்டிருந்த கலைஞர் இப்போது புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று கிலி வேறு கிளப்பியுள்ளார்.
லத்திகா சரண் ஒரு தேர்ந்த போலிஸ் அதிகாரி என்ற தரத்தினை எப்போதோ இழந்து விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழீழ ஆதரவாளர்களை நோக்கி இவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்ச்சைகளில் கொண்டு போய் தான் முடிந்துள்ளன.
ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து அந்த வழியாக செல்லும் ரயில்களை தகர்க்க முயற்சி செய்ததாக காவல்துறை அந்த ஒரு வாரத்திலே பல கதைகள் சொன்னது. அதை சொன்னதும் நமது லத்திகா சரண் தான்.
அதே போல் சென்னையிலும் தண்டவாளத்தில் கற்களை வைத்து சமூக விரோதிகள் முயற்சி செய்தனர் என்றனர். ஒரே நேரத்தில் ஒரு மனிதர் இரு இடங்களில் இருந்து இரு வேறு செயல்களை செய்ய முடியாது என்பதால் அதற்கு காரணம் என்று இவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டனர்.
இதில் நமது உளவுத்துறை எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு தமீழத்தில் இருந்து இங்கே தங்கிருக்கும் பெண்களிடம் தங்களது காம லீலைகளை அரங்கேற்றி உள்ளனர் தமிழக உளவுத்துறையினர்.
இவர்கள் எப்போதுமே புது கதைகளை சோடிக்கவும் ஒரு பிரச்சினையை திசை திருப்ப மற்றொரு பிரச்சினையை செய்வதற்குமே பயன்பட்டு இருக்கின்றனர்.
இவரே தான் சொல்வதாக ஒரு செய்தியும், மத்திய உளவுத்துறையும் ராவும் சொல்வதாகவும் ஒரு செய்தியும் பரப்பபட்டது. எது எப்படி இருந்தாலும் ஊழல்களில் இருந்து தப்பிக்க இப்படியெல்லாமா சொல்லுவது.
அப்படி ஒருவேளை உளவுத்துறை என்று ஒன்று இருந்தால் இங்கே நடக்கும் அசம்பாவிதங்களை முன்னரே தடுத்திருக்க முடியாதா என்ன?
சஞ்சய் காந்தியின் இயற்பெயர் சஞ்சீவ். ஒரு திருடப்பட்ட காரினை வைத்திருந்த குற்றத்திற்காக சஞ்சய்யை பிடிக்கும்போது அவர் பெயர் சஞ்சீவ். அங்கே இருந்து தப்பிபதற்காக லண்டனில் இருந்த அப்போதைய இந்திய ஹை கமிஷனர் கிருஷ்ணா மேனன் சஞ்சீவிற்கு சஞ்சய் என்ற பெயரில் பாஸ்போர்ட் கொடுத்துள்ளார். சஞ்சீவ் என்கிற சஞ்சய் சீக்கிய பெண்ணான மேனகாவை கற்பமுற செய்துள்ளார். மேனகாவை சஞ்சீவிற்கு மணமுடிக்க முஹம்மத் யுனுசிர்க்கு விருப்பம் இல்லை. மேனகா காந்தி அப்போது பாம்பே டையீங் விளம்பர படத்தில் துண்டு மட்டும் கட்டி நடித்த புகழில் இருந்தவர். முஹம்மத் யூனுஸ் ஒரு தீவிர முஸ்லிம். அப்படியிருக்க எப்படி மணம் செய்துவைக்க மனம் வரும்? ஆனால் மேனகாவின் தந்தை கலோனல் ஆனந்த் விடவில்லை. அதனால் ஒரு வழியாக இந்த விஷயம் மீடியாவுக்கு வராமல் கல்யாணத்தில் முடிந்தது.இப்போது மேனகா காந்தி வீட்டை விட்டு துரத்திய சம்பவத்திற்கு வருவோம்.
 |
கீழிருந்து மேலாக ராகுல், இந்திரா, சஞ்சய்,மேனகா, ராஜீவ், பிரியங்கா. நடுவில் சோனியா
|
சஞ்சய் காந்தி இறந்த உடன் இந்திரா காந்தி கேட்ட முதல் கேள்வி "சஞ்சய் காந்தி வைத்து இருந்த சாவி கொத்து பற்றியது".இந்திரா காந்திக்கு சஞ்சயின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே இருந்தது. இதற்காகவே காத்து இருந்தார் போல் ராஜீவ் காந்தி சஞ்சய் காந்தியின் நம்பர் 2 இடத்தை பிடித்தார்.
வருண் காந்தி அப்போது 1௦௦ நாட்கள் ஆன ஒரு கைக்குழந்தை மட்டுமே. மாமியார் இந்திரா காந்தியோ மகன் இறந்த சூழ்நிலையில் பேசும் நிலையில் இல்லை. மகன் வருண் காந்தியை கவனிக்க கூட ஆட்கள் இல்லாத நிலையில் அந்த வீட்டில் இந்திரா காந்தியின் குடும்பத்தோடு இருந்துள்ளார் ஆனால் இந்திரா காந்தியும் மேனகா காந்தியும் அப்போது அங்கு இருந்த மூன்றாவது பெண்ணை பற்றி பயந்தனர் என்று மேனகா காந்தி இப்போது கூறியுள்ளார். முதலில் ராஜீவ் காந்தியின் வலியுறுத்தலின் பேரில் மேனகா புறக்கணிக்கபட்டார். வழக்கமாக கணவர் இறந்தவுடன் மனைவி அந்த பதவியை பெறுவது தான் தற்போது நடைமுறை. அதனை அங்கே யாரேனும் வலியுறுத்தினால் என்ன செய்வது என்பதால் மேனகா காந்தி அங்கே இருப்பது சோனியா காந்திக்கு பெரும் உறுத்தலாக இருந்தது.பின்னர் இந்திரா காந்தியும் சோனியா காந்தியும் ஒன்றாக சேர்ந்து மேனகாவிற்கு தொல்லை கொடுத்துள்ளனர்.மகனை கல்யாணம் செய்ததால் ஒருத்தர் நமக்கு சொந்தகாராகி விட்டார் என்பதை இந்திராவினால் ஏற்று கொள்ள முடியவில்லை. மேனகா மனதளவிலும் உடல் அளவிலும் இந்திராவின் வீட்டில் துன்புருத்தபட்டதாக பின்னர் பேட்டி அளித்துள்ளார்.
மேனகாவை வெளியே அனுப்ப இந்திராவின் வீட்டில் இருந்த எல்லாரும் தயாராக இருந்தனர். அந்த சந்தர்ப்பமும் வந்தது. மேனகா காந்திக்கு சஞ்சய்யின் கனவுகள் மெய்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். ஆனால் எல்லாரும் மேனகாவை வெளியே அனுப்பும் கனவினை மெய்பட வைத்தனர். இந்திரா லண்டன் சென்று இருந்த நேரம் மேனகா தொடங்கிய சஞ்சய் விசார் மனச்(
Sanjay Vichar Manch)அதற்கு வழிவகுத்தது.
இதில் பேசுவதற்காக மேனகா எழுதியிருந்த உரை இந்திரா காந்தியின் பார்வைக்கு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனுப்பியவர் ராஜீவ். அங்கே இந்திராவின் உடன் இருப்பவர் சோனியா. வேறு என்ன வேண்டும்? விஷயம் பற்றிக்கொள்ள. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இந்த உரை இந்திராவின் பார்வைக்கு மேனகா கொண்டு சென்று ஒப்புதல் பெறப்பட்டு தான் அவர் பேசினார் என்பதே.
மார்ச் மாதம் 28, 1984: லண்டனில் இருந்து காலையில் திரும்பிய இந்திராவை பார்க்க சென்ற மேனகாவை இந்திரா திருப்பி அனுப்பினார்.இந்திராவை மேனகா சந்திக்க சென்ற பொழுது அங்கே இந்திராவின் மொத்த குடும்பமும் விவாதத்தில் இருந்துள்ளனர். திரும்பவும் மதியம் சென்று சந்திப்பதாக இருந்தார் ஆனால் அதற்கு முன்னரே இந்திரா கூப்பிட்டு அனுப்பிருந்தார்.வரவேற்பறையில் இருந்த மேனகாவை வீட்டை விட்டு வெளியேற வேலையாட்கள் முன்னியிலையில் உத்தரவிட்டார்.
ஏன் நான் என்ன தவறு செய்தேன்?என்று கேட்டதற்கு இந்திரா லண்டனில் இருக்கும்போது இங்கே மேனகா பேசியது தெரியும் என்று சொன்னார். பொருட்களை எடுத்து செல்ல அவகாசம் கேட்டதற்கு மறுக்கப்பட்டு வெளியே மேனகாவின் தாயார் வீட்டிற்க்கு அனுப்பப்பட இருந்தார். அதற்குள் மேனகாவின் அக்கா அம்பிகாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 1௦ நிமிடங்களில் அங்கு இருந்தார்.அம்பிகா தன் தங்கைக்கு பரிந்து பேசுவதற்கு முற்பட்டார். ஆனால் ஒரே வார்த்தையில் இது உனது தங்கையின் கணவர் வீடு அல்ல. இது இன்றைய பிரதமரின் வீடு என்று கூறி இந்திரா ஆவேசபட்டார். இருந்தாலும் அம்பிகாவிடம் இது எடுபடவில்லை. இருந்தாலும் மெதுவாக கிளம்பலாம் என்று முடிவு எடுத்து அன்றைய மதிய உணவினை மேனகாவின் அறையிலேயே மேனகாவும் அம்பிகாவும் முடித்தனர். பின்னர் அமிதாப் பச்சன் நடித்த படத்தையும் பார்த்து கொண்டு இருந்தனர். இந்த அறையின் மறுபக்கம் இருந்த அறையில் இந்திராவின் அறை இருந்தது. அவர்கள் இந்திராவிடம் விட்டுகொடுத்து போவதற்கு தயாராக இல்லை. இரவு பதினோரு மணியளவில் கண்ணீரும் கம்பலையுமாக இந்திராவின் வீட்டைவிட்டு மேனகாவும் அம்பிகாவும் வருனுடன் வெளியேறினர். அரசியலில் வாரிசு போட்டி வரும் என்று தெரிந்தால் அப்போதே கொன்று விடும் வழக்கம் வடஇந்திய அரசுகளில் இருந்தது.அதற்கு வீட்டைவிட்டு அனுப்புதல் எவ்வளவோ மேல் என்று ராஜீவ் நினைத்து இருக்கலாம்.
இதுவே முதலில் இறந்தது ராஜீவ் காந்தியாக இருந்தால் சோனியா காந்தி நிச்சயம் அனுதாபம் பெற்று அப்போதே பெரிய அளவில் வந்திருப்பார். என்ன இருந்தாலும் இந்தியர்கள் அடுத்த நாட்டினர் மேல் கொஞ்சமாவது இரக்கம் காட்டுவர்.
அடுத்த பதிவில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.
லண்டனில் தற்போது வசித்து வருபரும் முன்னாள் நிறுவனருமான K.S.நாயரின் புத்தகம் சில விசயங்களை சொல்லியுள்ளது. அதில் கவனிக்கதக்க ஒன்று Operation Casino(ஆபரேஷன் கேசினோ). 1970ம் ஆண்டின் மத்தியில் இந்திரா காந்தியின் அரசாங்கமானது பல்வேறு நிதிநெருக்கடிகளில் சிக்கித்தவித்தது. அதில் இருந்து தப்புவிக்க என்ன வழி என்று யோசித்து கொண்டுவரும் வேளையில் இரான் அரசாங்கம் இந்தியாவுக்கு கடன் தருவது பற்றி பரிசிலிப்பதாக சொன்னது. அவ்வாறு தரும்தொகை $250 million dollars என்று இருந்தது. அதனை பெறுவதற்கு $6 million dollars லஞ்சம் கொடுக்க எடுத்த முயற்சி தான் இந்த ஆபரேஷன் கேசினோ.
சுவிஸ் வங்கிகளில் பணம் போடுவது இக்காலத்தில் ஒன்றும் புதிது அல்ல. ஆனால் லஞ்சப்பணம் எல்லாம் அங்கே தான் செல்லவேண்டும் என்று வழி காட்டிய பெருமை சஞ்சய் காந்திக்கே சேரும். சஞ்சய் காந்தி தான் இந்திரா காந்தியின் அப்போதைய அரசாங்கத்தில் நம்பர் 2. அவர் அனுமதி இன்றி ஒன்றும் நடவாது. பல்வேறு விசயங்களில் அவரே நம்பர் 1. இந்திரா காந்தி எல்லாம் கணக்கிலே வர மாட்டார்.
இந்த ஆபரேஷன் கேசினோ முற்றிலும் சஞ்சய் காந்தியின் நேரடி வழிகாட்டுதலில் நடைபெற்று இருக்கிறது. சஞ்சய் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கில் இந்த பணம் செலுத்தப்பட்டதாக சொல்லபடுகிறது. ஆனால் இதில் வேறு விடயங்கள் நடந்ததாக நாயர் எழுதி உள்ளார். 1974ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனைக்களுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் ஒரு சரிவிற்கு சென்று கொண்டு இருந்ததாக சொல்கின்றனர். இதில் இருந்து மீள்வதற்கு அப்போதைய இரான் அதிபர் ஷா கடன் தருவதாக கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது அந்த கடனை பெறுவதற்கு கொடுத்ததாக சொல்லப்படும் லஞ்சப்பணம் எங்கு சென்றது? ஏன் கொடுக்கப்பட்டது என்று இன்றும் தெரியவில்லை. முதலில் கொரியரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து இருக்கின்றனர். ஆனால் நாயர் இதற்கு ஒத்து கொள்ளாததால் அப்போதைய மத்திய அரசின் நிதி செயலாளர் கோபி கவுள் நூறு டாலர் நோட்டுகளாக மாற்றி சாம்சொநைட் பெட்டிகளில் கொண்டு செல்ல கூறியிருக்கிறார். அதற்கும் நாயர் ஒத்துவராத காரணத்தினால் ரிசர்வ் வங்கியின் ஜெனிவா கிளையின் மூலம் நாயருக்கு ஆறு மில்லியன் டாலர் அளவுக்கு ஒரு காசோலை தர ஏற்பாடு செய்திருக்கிறது. இதை சஞ்சய் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்துவதோடு நாயரின் பணி முடிந்து உள்ளது.
இரானின் நிதியமைச்சரை சரிகட்ட கொடுத்ததாக சொல்லப்பட்ட இந்த பணம், பலரின் கைகளில் போனதாக கூறப்பட்டது. ஆனால் இரானின் நிதியமைச்சர் இந்த கடன் வழங்குவதற்கு விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறார். ஷாவின் தங்கையான அஷ்ரபின் நெருங்கிய நண்பரான ரசிடியான் மூலம் இந்த கடன் கிடைத்துள்ளது. ரசிடியான் இந்தியாவில் பிறந்து இரானில் தொழில் செய்து கொண்டிருந்தவர். இவர் அதே நேரம் சஞ்சய் காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இவருக்கு தான் சஞ்சய் காந்தி இந்த ஆறு மில்லியன் டாலர்ஸ் பணத்தை கொடுத்தார் என்று அப்போது பாராட்டப்பட்டு உள்ளது. அதாவது நிதி நிலைமையை சமாளிக்க பெறப்படும் கடனிற்கு லஞ்சம் கொடுப்பதில் தவறு இல்லை என்று வாதிட்டனர். ஆனால் ஆறு மில்லியன் டாலர்ஸ் லஞ்சம் பெற்றதாக சொல்லப்பட்ட அந்த இந்திய தொழில் அதிபர் சஞ்சய் காந்திக்காக தான் பெற்றார் என்பது தான் உண்மை. கொடுப்பது போல் கொடுத்து பின்னர் அதனை வாங்கி உள்ளார் சஞ்சய் காந்தி.
நாட்டிலே முதல் முறையாக கடன் வாங்கி தனது அரசாங்கத்திடம் கொடுக்க லஞ்சம் பெற்ற முதல் மத்திய அமைச்சர் வேறு யாரும் இருக்க முடியாது.