இந்த வண்டியை நாம வச்சிருக்கோம், இந்த வண்டியை வச்சிருந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்காங்க ?
என்னடா, கரகாட்டகாரன்ல வார நகைசுவையை போட்டு இருக்கானேன்னு பார்க்கிறிங்களா? அதென்னங்க குற்றம் செய்தவனை விட்டுவிட்டு குற்றத்தை மட்டுமே பார்கிறார்கள். இந்திய நீதிமன்றத்தில் நீரா ராடியா சம்பந்தப்பட்ட டேப்பினை ஒப்படைக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறதாம். பாருங்க இந்த கொடுமையை. இந்த டேப் எல்லாம் இருப்பது அரசாங்கத்திடமே. ஆனாலும் நீதிமன்றத்திற்கு அரசின் மேல் நம்பிக்கை இல்லை. ஒரு வேலை இந்த மத்திய அரசு தான் இந்த டேப்பில் தனக்கு வேண்டாத நபர்கள் பற்றிய விவரங்களை அதுவாகவே தவறவிடுகிறதா? இல்லை மராட்டிய மாநிலத்தில் கார்கில் தியாகிகளுக்கான குடியிருப்பு சம்பந்தபட்ட தகவல்கள் காணாமல் போனது போல் இந்த டேப்புகள் எல்லாம் காணாமல் போய் விடும் என்று நினைக்கிறதா?
நாம் ஒரு நூறு ரூபாய் கையூட்டு வாங்குகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். அதை ஒருத்தர் காவல்துறையில் புகார் அளிக்கிறார். நம்மை விசாரிக்கும்போது நாமும் ஒத்துக்கொண்டு விடுகிறோம். அப்போது நீங்கள் தானே குற்றத்தை ஒத்துக்கொண்டு விட்டீர்கள் என்று உங்களை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் விடுவார்களா என்ன?
நீரா ராடிய கையூட்டு பெற்றதை அவரே ஒத்துக்கொண்டு இருக்கும்போது அவரை தானே முதலில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நீரா ராடியா டேப் விவகாரத்தில் டேப்களை வெளியே கசிய விடக்கூடாது என்று கூறி மனு தாக்கல் செய்த ரத்தன் டாட்டாவிற்க்காக டேப்பினை நீதிமன்றத்தில் ஒப்படைக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்.
ஒரு சக்கரை நோயாளிக்கு இருதய துடிப்பு நின்று விட்டால் காலில் போயா சிகிச்சை அளிப்பார்கள்.
நீரா ராடியா டேப்பிணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது இருக்கட்டும் நீரா ராடியாவை எப்போது நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள்.


9:45 AM
satheshpandian
, Posted in
