Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts

தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்கள ராஜபக்ஷேவும் அல்லக்கை காங்கிரஸ் ‘பச்சைத் தமிழர்’களும்:கு. காமராஜ்

Rajapakse and Hasan















“ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான்.
ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள்.வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம்.எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில எம். எல். ஏ. க்களுக்குமான ‘டீலிங்’ அப்படி.


அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் இரண்டு மாத தமிழக அரசியல் நிலையைப் பார்ப்போம். ஈழத்தில் தமிழர்களுக்காக தனிநாடு கோரும் போராளிகளான தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்குமான போர் சமீப காலங்களில் மிகவும் உச்ச கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இறுதிக்கட்ட போர் என்று இரு தரப்புமே சொல்லுமளவுக்கு போர் கடுமையாக இருக்கிறது. வாழ்வா, சாவா? என்ற நிலையில் தமிழர்கள் அங்கு களத்தில் இருக்கிறார்கள். பூர்வகுடிகளான தமிழ் மக்கள் அங்கு தங்கள் தாய்நாட்டிலேயே நிர்க்கதியாக இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தப்படுகிறார்கள். தமிழ்ச் சிறுவர்கள் படிக்கும் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.



லட்சக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக காடுகளில் தஞ்சம் புகுந்து பாம்புகளினால் சாகும் பரிதாபம் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளுடன் போர் புரிகிறோம் என்று கூறிக்கொண்டு
தன் நாட்டின் சக குடிகளான தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் வான் வழியே குண்டு வீசிக்கொலை செய்கிறது. நாம் வாழும் உலகில் எங்குமே நடைபெறாத இத்தகைய கொடுமைகள் இலங்கையில் மட்டுமே சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்கள் என்ற ஒரு இனமே இருக்கக்கூடாது.அதைப் பூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள ராணுவம் திட்டமிட்டு செயல்படுகிறது.



மேற்கண்ட படுபாதகச் செயலை மனித நேயமிக்க அனைவரும் கண்டித்தனர். தமிழகம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக அக்டோபர் மாதம் தொடக்கத்தில் திரண்டனர். ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்குப்
பிறகு ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒரு சில கட்சிகள் தவிர தமிழகம் ஒரணியில் திரண்டது. மக்களின் எழுச்சியின் விளைவாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை சிங்கள அரசை நிறுத்தி வலியுறுத்தி இந்திய அரசைக் கோரியும், அதை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. (அதன்பின்பு இந்த விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிகள்
பதவிக்காக அந்தர் பல்டி அடித்ததையும் நிவாரண நிதி வசூல் என்று பிரச்சனை திசை மாறியதையும்) சென்னையில் இலங்கை அரசினை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்
நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.



தமிழகம் முழுவதும் மக்களின் எழுச்சியான போராட்டங்கள், அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மிரட்டல், அனைத்துக் கட்சிகளின் மனிதசங்கிலி
போராட்ட அறிவிப்பு என்று ஈழத் தமிழர்க்கு ஆதரவான போராட்டங்கள் உத்வேகமடைந்த நிலையில் இலங்கை சிங்கள அரசு அஞ்சியது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சியை தன் பங்குக்கு ஒடுக்க
சிங்கள அரசு எண்ணியது. ஈழத் தமிழர்கள் ஆதரவுப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய நினைத்த அதன் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் நன்கு பயன்பட்டனர். ஆம். சிங்கள அரசின் முயற்சிக்கு சிங்கள அதிகார வர்க்கத்தின் நீண்ட நாள் ‘நண்பர்’ ராமநாதபுரம்
தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன்அலி உதவினார். ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க நினைத்த சிங்கள அரசின் எண்ணத்திற்கேற்ப தாளமிட்டவர்கள் தான் தமிழக காங்கிரஸ் எம். எல்.
ஏ. க்கள். ஆம் சிங்கள அரசுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் சிலருக்கும் இணைப்புப் பாலமாக விளங்கியவர் அசன் அலி. அதற்கு அவர்கள் தலைவி ராஜிவ்காந்தி கொலை பயன்பட்டது.



தமிழ்நாட்டில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் சிலர் ஆவேசப்பட்டோ, உணர்ச்சி வசப்பட்டோ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதை மட்டுமே வெறும் சாக்காக வைத்துக் கொண்டு,
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஈழ ஆதரவையும் விடுதலைப் புலிகளின் ஆதரவு போராட்டம் என்றும், விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள், ராஜீவ்காந்தி எங்கள் தலைவர். அவரைக்
கொன்றவர்களை நாங்கள் எப்படி ஆதரிப்பது? என்றும் ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை ஆதரிப்பது தேசத் துரோகம் என்றும் ஆகவே நடைபெறும் போராட்டங்கள் தேசத்திற்கு எதிரானது என்றும் ஆகவே
அதை ஆதரிக்க முடியாது என்றும் ஈழத் தமிழர் போராட்டத்தை கணிசமாக நீர்த்துப் போகச் செய்ததில் காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதன் உச்சகட்டமாக எழுந்த வசனங்கள் தான். ‘‘ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’. என்னும் திரைப்பட பாணியிலான வசனம்.



பதவிக்காக எந்த இழி செயலையும் செய்யத் தயாராக இருக்கும் காங்கிரஸ், தாம் வெற்றி பெறுவதற்காக ஜெயலலிதா, கருணாநிதி, கம்யூனிஸ்டுகள் ஏன் பெயரளவு கொள்கை கூட இல்லாமல் நேற்று கட்சி
ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் உட்பட யாருடனும் கூட்டு சேரத் தயாராக இருக்கும் காங்கிரசார். பதவிக்கு வந்து விட்டால் இராணுவத்திற்கு ஆயுதம் வாங்குவதிலிருந்து அனைத்திலும் ஊழல் புரிவதில் கை தேர்ந்த காங்கிரசார் 17 வருடங்களுக்கு முன் செத்துப்
போன ராஜீவ்காந்தி விஷயத்தில் மட்டும் அவர் ஆவியே மன்னித்தாலும் இவர்கள் மன்னிக்கத்தயாராக இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையிலேயே இவர்கள் ராஜீவ்காந்தி பேரிலான தீராத அன்பின்பால் குடம் குடமாய் கண்ணீர் வடிக்கிறார்களா? என்று பார்த்தால் அது நீலிக்
கண்ணீர் என்று நடந்தவற்றை ஆராயும் போது தெரிகிறது.



ஆம். சில ஓட்டுக்கள் வாங்குவதற்காக கவர்ச்சி நடிகை மாயாவை களத்தில் இறக்கும் காங்கிரசாருக்கு சில நூறு ஓட்டுக்கள் வாங்குவதற்காக ராஜீவ்காந்தி மரணம் பயன்படுகிறது ஆகவே களத்தில அவரை வைத்து தொடர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள் என்று மேலோட்டமாக கருத முடியாது. ராஜீவ்காந்தி அவர்களுக்கு இன்னும் ‘மதிப்பு’மிக்க தலைவர். அதை அவர்களுக்கு ராஜபக்ஷே ராமநாதபுரம்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி மூலம் புரிய வைத்தார். அசன் அலிக்கும் மகிந்தா  ராஜபக்ஷேவுக்கும் இடையேயான தொடர்பு பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.



ராமநாதபுரம் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அசன் அலிக்கும், இலங்கையின் தற்பொழுதைய அதிபர் ராஜபக்ஷேவுக்கும் நீண்ட காலமாக ‘நெருக்கமான’ தொடர்பு உண்டு. ஆகஸ்டு மாதம் 2005
ஆம் வருடம் இலங்கையின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பாக அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அப்பொழுது அவருக்கு வாழ்த்துக் கூறி அசன் அலி கடிதம் எழுதுகிறார். அவரது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார்.
அப்பொழுது அசன் அலி சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. அதன்பின்பு மகிந்த ராஜபக்ஷே இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்பொழுது அசன் அலிக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார் (கடிதம் பார்க்க). இலங்கை எதிர்க்கட்சிகள் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவும் அசன் அலியை வாழ்த்துகிறார். மற்றும் இலங்கையின் முக்கிய அமைச்சர்கள்
மற்றும் உயர் அதிகார வர்க்கத்தினர் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.
(ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ராஜ்பக்ஷ எழுதிய வாழ்த்துக்
கடிதம்)



இங்கு நம் முன் எழும் வினாக்கள்



1) பிரதமராக இருக்கும் ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பில் அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படும் பொழுது அசன் அலி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதுகிறார். அசன் அலி எந்தப் பதவியிலும் அப்பொழுது இல்லை. சென்னையில் வாழும் சாதாரண இந்தியக் குடிமகன். ஆனால் அவர் ராஜபக்ஷேவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?



2) அசன் அலி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றதும் அவருக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் வாழ்த்துச் சொல்கின்றனர். தமிழகத்தின் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினருக்கு இன்னொரு நாட்டின் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவரும் போட்டி போட்டு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?



3) காங்கிரஸ் கட்சியில் இங்கு பலபேர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி போட காத்திருக்கையில் கட்சிக்கு சம்பந்தமில்லாத அசன் அலிக்கு சீட் கிடைத்தது எப்படி?



4) ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த ராமச்சந்திர வன்னி, மலேசியா பாண்டியன் போன்றோருக்கு தான் சீட் கிடைக்கும் என்று அங்குள்ளவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று, தொகுதிக்கு தொடர்பில்லாத அசன் அலிக்கு சீட் எவ்வாறு கிடைத்தது?



அசன் அலி தமிழக சட்டமன்ற உறுப்பினரான பின்பு இலங்கையின் அதிகார மட்டத்தினருடன் தொடர்பு அதிகரிக்கிறது. தனது நட்பு வட்டாரத்தை காங்கிரஸ் எம். எல். ஏ. க்களில் அதிகரித்து வந்தார். வேலூர் எம். எல். ஏ. ஞானசேகரன் போன்றோர் இதில் அதிக நெருக்கமாகின்றனர். ‘ஒற்றுமை’யாக இருக்கின்றனர். தங்களுக்குள் அனைத்தையும் ‘பகிர்ந்து’ கொள்கின்றனர்.



இந்த நிலையில் தமிழகத்தின் தற்பொழுதைய சம்பவங்களை ஒட்டி ஈழத்தமிழர் ஆதரவு அலை அதிகரிக்கவே அதனைக் குறுக்குச் சால் ஓட்டிக் கெடுக்கும் விருப்பத்தின் விளைவாக 29. 10. 2008 அன்று ராஜபக்ஷே அசன் அலியுடன் பகல் 11 மணிக்கு பேசுகிறார். தமிழகத்தில் நடைபெறும் விஷயங்கள் பரிமாறப்படுகின்றன. தொலைபேசி பேச்சுக்குப் பிறகு அசன் அலி துரிதமாகச் செயல்படுகிறார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அவரே அனைத்து காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் அவரது தொலைபேசியில் இருந்து பேசுகிறார். அதன்படி 23 நவம்பர் 2008 அன்று காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் கூட்டம் கூட்டப்படுகிறது.



எதிர்பார்த்தபடியே வேலூர் ஞானசேகரன் எம். எல். ஏ. உட்பட பலரும் வஞ்சனை இன்றி வீர உரை நிகழ்த்துகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசுபவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். மனித சங்கிலி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார். கூட்டத்திற்குப் பிறகு தமிழக காங்கிரஸ் மனித சங்கிலியில் தமிழக காங்கிரஸ் பஙகேற்கவில்லை என்ற நிலைப்பாடு எடுக்கிறது. அதற்கு அவர்களுக்கு ராஜீவ்காந்தி கொலை பயன்படுகிறது. மனித சங்கிலி போராட்டத்திற்கு பின்பு நிலவரம் மாறுகிறது. பிரணாப் முகர்ஜி வருகைக்குப் பிறகு தமிழக முதல்வர் எம். பி. க்கள் ராஜினாமா இல்லை என்ற முடிவுக்கு வரும் தமிழக முதல்வர் ஈழத் தமிழர் நிவாரண நிதி வசூல் செய்கிறார்.



அதன்பின்பு 4. 11. 2008 அன்று காலை 10 மணியிலிருந்து அசன்அலி ராஜபக்ஷேவுக்கு தொலைபேசியில் பேச முயற்சி செய்கிறார். ஆனால் பலமுறை முயன்றும் பேச முடியவில்லை. அதன்பின்பு காலை 12 மணிக்கு ராஜபக்ஷே நேரடியாக அசன் அலியின் கைபேசி 9444112374 எண்ணுக்கு பேசுகிறார்.தொலைபேசியில் ராஜபக்ஷேவுடன் பேசியதை அசன் அலியே குமுதம் ரிப்போர்ட்டர் நிருபரிடமும், ஜூனியர்விகடன் நிருபரிடமும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகவே அதற்கு ஆதாரம் தேவையில்லை. ஏறத்தாழ 25 நிமிடம் பேசிய பின்பு அசன் அலி சக தமிழக காங்கிரஸ் எம். எல்.ஏ. க்களுடன் பேசுகிறார். அதைத் தொடர்ந்து அன்றே தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார். கடிதத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் மிக முக்கியமானது.



‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க ஒரு தூதுக்குழு அமைத்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை
(!) நடத்தி தீர்வு காணுமாறு வலியுறுத்துகிறார். அந்தத் தூதுக்குழுவில் தன்னையும் இணைத்துக்
கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் இலங்கை அமைச்சர்களிடமும்
மற்றும் இலங்கை அதிகாரிகளிடமும் பேசி 50 ஆண்டுகளாகத் தீராத இலங்கைப் பிரச்சனையைத் தான்
தீர்த்து வைப்பதாக நமது முதல்வருக்கே உத்தரவாதம் (!) அளிக்கிறார். அதேபோல அக்குழுவிற்கு
தேவையான அனைத்து வசதிகளையும் தானே செய்து தருவதாக உறுதிமொழி அளிக்கிறார். ’’



(ஹசன் அலி முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம்)



இங்கு நமக்கு எழும் வினாக்கள்



1) ஒரு தமிழக சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தமிழனைப் பூண்டோடு அழிக்கும் இன்னொரு நாட்டு அதிபருடன் சரளமாகப் பேச முடிகிறது?



2) அசன் அலி பேசுவது அவரது கட்சித் தலைவி சோனியாவுக்குத் தெரியுமா? இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியுமா? நமது தமிழக முதல்வருக்குத் தெரியுமா?



3) மேற்கண்ட அனைவருக்கும் தெரியும் என்றால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட முடிவு செய்துள்ளதா? அவ்வாறு தலையிட முடிவெடுத்து அதற்காக வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்திய அரசின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலியை நியமனம் செய்துள்ளதா?



4) அவ்வாறு இல்லாமல் யாருடைய அனுமதியும் பெறாமல் யாருக்கும் தெரியாமல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி பேசியிருந்தால் அதற்கு என்ன தண்டனை?



5) சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள இலங்கை அதிபருடன் அசன் அலி பேசுவதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் பதவி ஏற்கும் பொழுது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாகச் செயல்பட்டுள்ளார். அதற்கு என்ன தண்டனை?



6) 3. 11. 2008 அன்று 12 மணிக்கு ராஜபக்ஷேவுடன் பேசிய உடன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுவதன் காரணம் என்ன?



(ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ரணில் எழுதிய வாழ்த்துக்
கடிதம்)



7) கடிதத்தில் இந்திய தூதுக்குழு இலங்கை சென்றால் அனைத்து உதவிகளையும் தானே செய்து தருவதாக எவ்வாறு உத்தரவாதம் அளிக்க முடிகிறது? அசன் அலிக்கு அங்கு அதிகார மட்டத்தின் அனைத்து நபர்களுடனும் நட்பு உண்டா?



8) அசன் அலி காங்கிரஸ் கட்சி எம். எல். ஏ. க்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு தனது தொலைபேசியில் இருந்து அனைத்து எம். எல். ஏ. க்களுக்கும் பேசுகிறார்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவரைத் தாண்டி ராஜபக்ஷேவின் நண்பருக்கு இதில் என்ன அக்கறை?



9) ராஜபக்ஷேஉடன் பேசிய பின்பு முதல்வருக்கு அன்றே கடிதம் எழுதும் அசன் அலி அதில் இலங்கை பிரச்சனை தீர அனைத்துக் கட்சி தூதுக் குழுவை அமைக்க வலியுறுத்துகிறார். இது அவர் விருப்பமா? இல்லை தொலைபேசியில் பேசிய ராஜபக்ஷே விருப்பமா?



10) ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலம் நீடிக்கும் இலங்கை பிரச்னையில் இங்கிருந்து செல்லும் தூதுக்குழு பேசி தீர்க்கும் என்று முதல்வருக்கு உத்திரவாதம் அளிக்கிறாரே? இது உண்மையான விருப்பமா? அல்லது பேச்சு வார்த்தை என்று ஒரு பக்கம் இழுத்தடித்துக் கொண்டு மறுபக்கம் தமிழனைக் குண்டு வீசிக் கொலை செய்யும் ராஜபக்«க்ஷவின் விருப்பமா?



11) அசன் அலி மட்டும் ராஜபக்ஷே உடன் நட்பு வைத்துள்ளாரா? பிற காங்கிரஸ் எம். எல். ஏ.க்களுக்கும் தொடர்பு உள்ளதா?



12) விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினார்கள் என்ற ‘குற்றத்திற்காக’ வைகோ, சீமான், அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழனைக் கொலை செய்யும் சிங்கள அதிபர் ராஜபக்ஷே உடன் தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் யாருக்கும் தெரியாமல் ‘கள்ள உறவு’ வைத்துள்ளனரே? அதற்கு என்ன தண்டனை?


(ராஜபக்ஷ பிரதமராக இருந்தபோது எழுதிய கடிதம்)



13) அசன் அலி இந்தியாவிற்கான இலங்கை துணை தூதர் அம்சா உடன் எப்பொழுது பேசினாலும் சிங்களத்தில் மட்டும் பேசுகிறாரே. அதற்கு என்ன காரணம்? இருவருக்கும் தாய்மொழி தமிழாக இருந்தும் வேற்று மொழியில் பேச என்ன காரணம்?



இதுபற்றி யாரும் அசன் அலியிடம் வினா எழுப்பினால் எந்த மொழியில் பேசினால் என்ன? என்று எதிர்கேள்வி கேட்கிறார். நாம் கேட்பது இதுதான். எந்த மொழியில் பேசினால் என்ன என்று கூறுபவர் தமிழ்மொழியில் ஏன் பேச மறுக்கிறார் என்பதுதான். பேசும் ‘ரகசியம்’ அருகிலிருப்பவர்களுக்கு வெளிப்பட்டு விடும் என்பதாலா?



14) இலங்கை துணைத் தூதர் அம்சா இங்கு ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பெயர்களில் உல்லாச விடுதிகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் நடத்தும் பல்சுவை விருந்துகளில் பங்கேற்கும் பத்திரிகையாளர்கள் யார் யார்? அதில் எந்தெந்த காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் பங்கேற்கின்றனர். அதில் என்னென்ன ‘பரிமாறப்’படுகின்றன? இது போன்ற பல வினாக்கள் நம்முன் எழுகின்றன. ஆனால் யாரிடமும் பதில்தான் இல்லை. வாசகர்களாகிய தாங்கள் பதிலை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.



ஈழத்தமிழர் பிரச்னையில் இன உணர்வாய் இங்கு எழுச்சி ஏற்படும் பொழுதெல்லாம் அசன் அலி,வேலூர் ஞானசேகரன் மற்றும் சில காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் ராஜீவ்காந்தி கொலையைச்சாக்காக வைத்துக் கொண்டு ‘அதீத’ ஆர்வம் காட்டுகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவான போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகின்றனர். குறுக்குச் சால் ஓட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் ராஜீவ்காந்தி மீதான பற்று காரணமல்ல என்று அசன் அலி மகிந்தா ராஜபக்ஷே தொடர்பைப் பார்த்தாலே புரிகிறது. தமிழர்கள் அங்கு தனது இனத்தைப் பூண்டோடு அழிக்கும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து களத்தில் நின்று போராடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு பெரும்பாலாக நினைப்பது இங்குள்ள தமிழனின் தார்மீக ஆதரவைத்தான்.



ஆனால் இங்கோ சில சில குரல்களைத் தவிர்த்து கனத்த மௌனம் நிலவுகிறது. குரல் கொடுக்கும் கொஞ்சப் பேரும் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள். தமிழக காங்கிரசாரோ ராஜிவ்காந்தி கொலையை முகமூடியாக அணிந்து கொண்டு தமிழனைப் பூண்டோடு அழிக்கும் மகிந்த ராஜபக்ஷேஉடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு குறுக்குச்சால் ஓட்டுகின்றனர். குழி பறிக்கின்றனர். ஒரு காலத்தில் பெரியார் போன்ற தலைவர்கள், இருந்த தமிழக காங்கிரஸ் இன்று சிங்கள அதிபர் ராஜபக்«க்ஷவின் ஆலோசனை கேட்டுச் செயல்படும் நிலைக்கு மாறிவிட்டது என்பது எவ்வளவு சீரழிந்த நிலைக்கு தமிழக காங்கிரஸ் சென்றுவிட்டது என்பதை அறியலாம்.



இறுதியாக ஒன்று மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக காங்கிரஸ் அறிவித்ததற்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அசன் அலி இவ்வாறு வருத்தப்பட்டார்.எங்களை எல்லாரும் அம்மா (ஜெயலலிதா) காங்கிரஸ் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை என்று வருத்தப்பட்டார். அது தவறு. அவர்களை சிங்கள காங்கிரஸ் என்று அழைப்பதே ஏகப் பொருத்தம்.அதைத்தான் அசன் அலி உள்ளிட்ட அவரது ஆதரவு எம். எல். ஏ. க்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வர்.


எப்படியெல்லாம் சிண்டு முடியுறாங்க

சென்னையில் புத்த பிட்சுகளின் சேவை மையத்தில் நடந்த தாக்குதலை கண்டிக்க வேண்டியது ஒரு பத்திரிக்கையின் கடமையாக இருக்கலாம். ஆனால் வேறு யாரை காரணம் சொல்லலாம் என்பதில் கூட அரசியல் நடத்துகிறது தினமலர்.நேற்று காலை வரை  இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

தினமலர் இதனை போன்று செய்தி வெளியிட்ட பின்னர் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஒரு பயம் வந்துள்ளது. விடுதலை  புலிகள் நடமாட்டம்  தமிழ்நாட்டில் இருக்கிறது என்று யாரேனும் குற்றம் சாட்டி விடுவார்கள் என்று பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.என்னுடைய கேள்வி அவர்கள் தான் உண்மையில் இந்த தாக்குதல்களை நடத்தியவர்களா? இல்லை யாரையாவது இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கைது செய்துள்ளார்களா?
அப்போ இந்த சம்பவத்திற்கும் பழ.கருப்பயாவை தாக்கியவர்களுக்கும் சம்பந்தம் இல்லையா?

பெரியாரிடம் வெங்காய விலையை கேட்க சொன்னால் என்ன ....கு இவர் முதல்வராக இருக்கிறார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி: வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டிருக்கிறார்களே?
அது கொடுத்தாச்சு... அது பற்றி அறிக்கை வரும்.
இன்று கூட இ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என கூறியதாக செய்திகள் வந்துள்ளதே?
அது எனக்கு தெரியாது. இவ்வாறு, முதல்வர் கருணாநிதி சிரித்தபடியே பேட்டியளித்தார்.

மீண்டும் மீண்டும் இவர் வயதிற்க்கோ இல்லை இவர் இருக்கும் பதவிக்கோ ஏற்றபடி பேசாமல் தான் அந்த பதவிக்கு ஏற்றவன் இல்லை என்று நிருபிக்கிறார். 
 
இவர் தனிப்பட்ட முறையில் மற்றவர்களின் அந்தரங்கங்களை விமர்சிப்பது இவருடன் இருக்கும் அலுவலர்களுக்கு தெரிந்ததே. ஆனால் இப்படி பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதற்கு அப்படி முதல்வர் பொறுப்பில் இருந்து தான் பேச வேண்டுமா?

ஒருவேளை இவருக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல வருகிறாரோ? இல்லை வெங்காயம் பயிரிடுவதெல்லாம் அவருக்கே தெரியாது என்று சொல்ல வருகிறாரோ?




யாருடைய சாவாவது மக்களை சந்தோசப்படும் என்று மக்கள் நினைத்தால் உண்மையில் அப்படி ஒரு பிறவிக்கு அப்படி ஒரு பிறப்பிற்கு அந்த இழிபிறவி மட்டும் அல்ல அந்த குடும்பமும் வருத்தப்படும் நாள் கண்டிப்பாக வரும்.( நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மேல் சொன்ன தகவல்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.)

விடுதலையான சீமான் ஆவேசம் செய்திக்கு தினமலரில் வந்த முட்டாள்தனமான விமர்சனங்கள்.

தினமலரின் கோமாளிகளுக்கு ஒரு கேள்வி. தினமலரில் வந்த சீமான் பற்றிய செய்திக்கு உங்களின் கருத்துக்களை பார்த்தேன். மிக்க நன்றி.


ஊழல்களில் ஊறி வளர்ந்த காரணத்தால் புதிதாக யார் நல்லது பற்றி பேசினாலும் உங்களுக்கு கோபம் வருகிறதா? உங்களின் மூலையில் இருப்பது மூளையா? இல்லை களிமண்ணா?

தமிழக அரசியலுக்கு தீர்வு சொல்ல வக்கில்லை. உங்களுக்கெல்லாம் ஒரு பேப்பர். அதில் எழுத உங்களை போன்ற அறிவு ஜீவிகள் இருக்கும்வரை இமாய ஊழல்களுக்கு இந்தியாவில் பஞ்சம் இருக்காது. உங்கள் பேப்பரில் வரும் செய்திகளுக்கு நீங்களே கருத்துக்களை திணிப்பதை விட்டுவிட்டு நேரடியாக பேசுவதற்கு கலந்துரையாடல்கள் நடப்பதற்கு ஏற்பாடு செய்யவும்.



கோழைகள் போல கருத்துக்களை நீங்கள் சொல்லுவதை மட்டும் போடுவதை நிறுத்துங்கள். நீங்களும் போங்கடா நீங்களும் உங்கள் பத்திரிக்கை தர்மமும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் குறைகள் சொல்லுவதை விட்டுவிட்டு அந்த பிரச்சினைக்கு முழுவதுமான ஒரு தீர்வினை சொல்லுங்கள். அதற்கு வக்குள்ளவர்கள் கருத்துக்கள் பதியுங்கள். அதன் பின்னர் நான் உங்களை ஆதரிக்கிறேன்


ஜகன் - சென்னை,இந்தியா 2010-12-11 07:21:25 IST


சைமன் என்கிற சீமான் ஒரு ஹிந்து எதிரி (கருணாநிதியை போல்). இவர்கள் இருவருக்கும் வோட்டு போடாதீர்...


சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா 2010-12-11 07:18:36 IST

இலங்கைத்தமிழர் பிரச்சினை ஒரு போதும் தமிழக தேர்தலில் எதிரொலித்ததில்லை. இனியும் அது எதிரொலித்து ஒரு தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் தமிழ் நாட்டு தலைவர்கள் அனைவரும் (இதில் யாருக்கும் விதிவிலக்கில்லை) அரசியல் விளம்பரத்திற்க்காக, சுயமையப்படுத்தும் நோக்கில், தனக்கு கூட்டம் கூடுகிறது என்பதற்காக ஒரு கருவியாகத்தான் இலங்கைத்தமிழர் பிரச்சினையை கையாளுகிறார்களே ஒழிய யாருக்கும் எந்த அக்கறையும் உண்மையில் கிஞ்சித்தும் கிடையாது. உண்மையில் 1983 முதல் 1990 வரை சாதாரண தமிழக மக்களுக்கும் ஒரு அக்கறை உணர்வு இலங்கை தமிழர்கள் மீது இருந்தது. அதை சுத்தமாக கெடுத்தது வே.பிரபாகரன் தான். பிரபாகரன் பிரேமதாசாவுடன் சேர்ந்து... "சிங்கள மக்களும் (இ) தமிழ் மக்களும் சண்டை இருந்தாலும் சகோதரர்கள்.. இதில் இந்தியா தலையிட வேண்டிய அவசியமில்லை என்று கூட்டறிக்கை விட்டார்...(அப்புறம் பிரேமதாசாவையே குண்டு வெடிப்பின் மூலம் கொன்றார் என்பது வேறு விஷயம்)...". அப்பொழுதே இந்தியா வின் அக்கறை குறைய ஆரம்பித்தது. பின் 1991 ல் ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் இருக்கும் கொஞ்சநஞ்ச இந்திய, தமிழக அனுதாபத்தினை இழக்க நேரிட்டது. அதன் பின் இலங்கை தாக்கம் என்று ஏதும் கிடையாது... இனியும் எந்த தேர்தலிலும் ஏற்ப்படப்போவதில்லை...சீமான்/நெடுமாறன்/பெ.தி.க/வைகோ போன்றவர்களுக்கு கூட்டம் வேண்டுமானால் கூடலாம்...ஓட்டு என்பது கிஞ்சித்தும் கிடையாது. (வைகோ மட்டும் அதிமுக உடன் (மாறினால் தி.மு.க உடன்) இருப்பதால் அந்த ஆதரவில் கரையேற வாய்ப்புள்ளது...). தமிழக மக்கள் இப்போது எதிர்நோக்கியிருக்கும் சொந்த பிரச்சினைகள் தான் தேர்தலில் எதிரொலிக்கும். சீமான் தனியாக நிற்கும் பட்சத்தில் ஒரு 500 லிருந்து 5000 ஓட்டு வேண்டுமானால் வாங்கலாம்...டெபாசிட் கெடைக்காது....


மண்ணின் மைந்தன் - bangalore,இந்தியா 2010-12-11 07:10:09 IST

அம்மா என்ன தமிழ் நாட்டுல பாத்து பைசா கூட கொள்ளை அடிகளையா என்ன... உங்கள மாதிரி முட்டாள்கள் இருப்பதால் தான் ஒரு புரட்சிய ஆரம்பிக்கவே முடியாது......


vicky - yangsusong,சீனா 2010-12-11 06:59:14 IST

பிக் காமெடி! என்னையா இப்படி காமடிய பேசறிங்க! நிறுத்த முடியவில்லை சிரிப்பை......

jopet - singapore,சிங்கப்பூர் 2010-12-11 05:30:42 IST

ஏன்டா கொய்யாலே! நீ இந்தியாவை கூறு போடுவே. அப்புறம் இலங்கையில புலிகளை காப்பாத்த இங்கே ரத்த ஆறு ஓடும்ன்னு சொல்லுவ. அதெல்லாம் பாத்துட்டு அரசாங்கமும் போலீஸும் சும்மாயிருக்கணும். அதுக்கு உன்னை புடிச்சி ஏன்டா அப்படி பேசுனன்னு கேட்டா அப்புடித்தான் பேசுவேன் பேசகூடாதுண்ணா எனக்கு தனி ஈழம் வாங்கிகுடுன்னு லூசுபயலுக மாதிரியே பேசுவீங்க. என்னமோ ராஜேபக்சே இங்கேருந்து சொன்னவுடனே அப்படியே டிரசவுர்ல ஒன்னுக்கு போயிட்டு பயந்துகிட்டு தனி ஈழம் கொடுக்கிர மாதிரி. வெண்ணைகளா உலகமே கண்டிச்சும் எவன பத்தியும் கவலை படாம அவன் இருக்குறான். இதுல இந்த 85 வயசு அம்னிதர் சத்தம் போடணுமா ? அவர் பதவியை ராஜினாமா செஞ்சாருன்னா அதை கேட்டு உலகமே ஸ்தமபிசிடுமா? ஆனா புலிகளை சுட மாட்டான்கலாம் தனி ஈழம் கிடைச்சிடுமாம். ஏன்டா நீ புலிகளுடைய காசுல படம் எடுத்த நன்றிக்கு எங்க தமிழகம் தான் கிடைசுச்சா?தமிழ் நாட்டு அரசியள்ள நீ ஜெயிச்சாலும் யாருக்காக சட்டசபையில போராடுவ. தனி ஈழம்ன்னு அங்கயும் கத்துவ. பிரபாகரன் வாழ்கன்னு அங்கயும் பேசுவ. உனக்கு, இந்த வைகோவுக்கு எல்லாம் MP சீட்டு MLA சீட்டு கிடைச்சாலும் என்ன பிரோஜனம். தமிழ் நாட்டுக்கோ இந்தியாவுக்கோ குரல் கொடுக்க போறதில்லை. அங்கயும் போய் ரத்தஆறு ஓடும், நாடு ரெண்டாகும்ன்னு தான் பேசுவீங்க. இதுல என்ன பியுட்டின்னா நீ தமிழ் தமிழன்னு பேசிகிட்டு சிங்களகாரியை வச்சே படம் எடுக்கறதுதான். போதும்டா தமிழை என்னமோ நீங்கதான் குத்தகை எடுத்து வச்சிருக்க மாதிரியும் நீங்க இல்லேனா தமிழ் அழிஞ்சிடுமுன்ற மாதிரி பேசாதிங்கடா. எங்களுக்கும் தெரியும்டா உங்க கூத்தெல்லாம். முதல்ல உன்னை, இந்த வைகோ இன்னும் ரெண்டு மூணு டிக்கெட்டுங்க இருக்கீங்க. உங்களை எல்லாம் இலங்கையில குடியுரிமை வாங்கி கொடுத்து அங்கேயே அந்த வன்னி காட்டுலயே குடியிருந்து சேவை செய்யுங்கடான்னு சொல்லணும். போதும்டா இங்கே தமிழ் நாட்டுல எங்க அப்பா அம்மாவுக்கு அண்ணன் தங்கச்சிக்கு நாங்க முழுசா எங்க கடமையா செய்யவே எங்களுக்கு நேரம் பத்தமாட்டேங்குது. இதுல இந்தியாவுக்கு வேற கடமை செய்யணும் இலங்கை தமிழர்களுக்கு வேற கடமை செய்யனும்ன்னா எங்களால முடியலடா? உன்னை மாதிரி லூசு பயலுக கத்தறதுன்னால கலைஞர் has already spent 100 கோடி, which is more than enough. Further more, has done like KALAINGAR for Tamizh refugees in TN....

sathish - melbourne,ஆஸ்திரேலியா 2010-12-11 04:05:24 IST


சபாஸ் ,,சரியான போட்டி,,,, கொசுவுக்கும்,,, கொரங்குக்கும் போட்டி,,, நேத்து முளைச்ச காளான்,, சினிமாவிலே இப்போ தம்பிடி குறையுது,, இல்லே ,,அதனாலே அரசியலில் பூந்துட்டாரு,,, அறிவுள்ளவன் பின்னாலேயும் பத்து பேர்,,, இது போலே அறிவு கெட்ட ....யம் பின்னாலேயும் பத்து பேரு,,,,...

மருதூர் மாணிக்கம் - madurai,இந்தியா 2010-12-11 01:46:09 IST
சீமானே! சிறையில் இருந்தும் உனக்கு புத்தி வரவில்லை. உன்னை இந்த முறை பாளையங்கோட்டையில் பல வருடங்களுக்கு உள்ளே அனுப்பி வைத்து விடுவோம். கலைஞரை எதிர்த்தால் டெபாசிட் கூட வாங்க மாட்டாய்....

குஞ்சுமணி - சென்னை.,இந்தியா 2010-12-11 01:07:28 IST
உனக்கு டிபாசிட் கிடைத்தால் நான் இங்கு கமெண்ட் எழுதுவதை நிறுத்துகிறேன். வாசகர்களும் உன்னை வாழ்த்துவார்கள். நீ வெற்றி பெற்றால் மனித தெய்வம் என நான் நினைக்கும் மருத்துவர் ஐயாவின் கட்சியில் இருந்து விலகி உன்னுடைய அடிமையாக வாழ்நாள் முழுவதும் இருக்கிறேன்....

பாரத புத்திரன் - chennai,இந்தியா 2010-12-11 00:29:37 IST
திரு சீமான் அவர்களே!உண்மையை வெறியோடு பேசுவது,அரசியல் தலைவர்களை ஒத்தைக்கு ஒத்தையா வாறியான்னு கூப்டுறது இதுல்லாம் இல்ல அரசியல். அர்ப்பணிப்பு...மகாத்மா மாதிரி. அடிக்க போறியா? முடிஞ்ச வரைக்கும் என்னை அடி. உடைத்து கைகள் ஓய்ந்த பின்பு ,உனது கோபம் தீர்ந்த பிறகாவது என் மக்களின் நிலை பற்றி யோசி....இது தான் தலைமைக்கு அழகு. உன்னோட மீட்டிங் கொஞ்சம் கேட்டேன். ரொம்ப கேவலமா இருக்கு. கருப்பு சட்டை போட்டு பெரியார் பக்தன்னு சொல்றீங்களே!பெரியாருக்கு இருந்த எதிரியையும் மதிக்கும் பண்பு உங்களுக்கு இல்லாமல் போனது வேட்க கேடு தானே? வாய்க்கு வந்ததெல்லாம் பேசும் வழக்கம் தொண்டனுக்கு இருந்தால் தலைவனுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அந்த பழக்கம் தலைவனுக்கு இருந்தால் முதல் அடி உனக்கு அல்ல,உன்னை நம்பி வரும் தொண்டனுக்கே;,,,,,,,,,,,,,,,,,,,,,,பாரத் மாதா கி ஜெய்.தேசம் காப்போம்,தேசியம் காப்போம்....

கே.கைப்புள்ள - nj,இந்தியா 2010-12-11 00:13:28 IST
யாருடா இவன் இந்த சீமான் கோமான். இவன் யாரு இவன் முதல்ல. நீயெல்லாம் இந்த மாறி பேசுர அளவுக்கு ஜனநாயகம் இருக்கு. அதனாலதான் நீ கொரல் விடுற. நீயெல்லாம் யார்ன்னு நெனச்சு சும்மா சவுண்ட் விட்டுகிட்டு திரியிற? இது மாறி சின்ன சின்ன கொசு தொல்ல தாங்கலப்பா....

Chandra - Denver,யூ.எஸ்.ஏ 2010-12-11 00:11:33 IST
Do contest against Kalaignar and lose deposit. You need to take a oath that, if you lost the deposit, you will never speak agaist him. It is the people who decide about who win or loose. Find out your real support in the ground by contesting against Kalaignar....

சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து பற்றிய தினமலரின் செய்தி

சென்னை : சினிமாக்காரர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்த‌ை ரத்து செய்து சென்னை ஐகோர்‌ட் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரி பரந்தாமன் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

சீமான் கைது செய்ததை இந்த பத்திரிக்கை வரவேற்கிறதா? இல்லை விடுதலை செய்த நீதிபதிகளை கண்டிக்கிறதா?




அதென்னா சினிமாகாரர் சீமான்? சினிமாவில் இருந்து வந்த முதல்வர் இருக்கிறார், எதிர்கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். தண்ணி அடித்துவிட்டு பேசும் விஜயகாந்த் இருக்கிறார். இவர்களையெல்லாம் விட சீமான் என்ன குற்றம் செய்தார்?



மற்றொரு பதிவில் சீமானை விடுதலை செய்வார்கள் ஆனால் இதனை போன்ற வழக்குகளை பதிவு செய்த காவல்துறையை கண்டிக்கவாவது செய்வார்களா என்று கேட்டு இருந்தேன். இதுவரை தீர்ப்பில் அப்படி ஒரு கண்டிப்பு இருப்பதாக வெளி வரவில்லை.



இதற்கு பெயர் தான் இந்திய நீதி.. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் இஷ்டம் போல இதனை போன்ற பல வழக்குகளை பதிவு செய்யலாம்.

என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா?

 என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா? அப்படின்னு ஒரு படத்துல தான் பார்த்து இருக்கோம். ஆனால் அதையே நேரில் நிருபித்திருக்கிறது தினமலர். இங்கே இருப்பவர்களும் இலங்கையில் இருப்பவர்களும் ஏன் ஐ.நா சபையே கூறியபோது கூட இனபடுகொலை நடந்ததாக சொல்லாத தினமலர் இப்போது "இலங்கை போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ஷே காரணம் : அதிர்ச்சி தகவல்" என்று மிகபெரிய ஒரு விஷயத்தை கண்டுபிடித்து இருக்கிறது. நடிகர் வடிவேலின் புலிகேசி படத்தில் அவரின் ஒற்றன் ஒருவன் பழைய செய்தியை ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி பின்னர் கூறுவான். அதே போல் தான் தினமலர் இப்போது இந்த தலைப்பை கொடுத்துள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138235
தமிழ்நாட்டில் துப்பறிந்து தைரியமாக முன்கூட்டியே எழுதும் பத்தரிக்கைகள் தான் இல்லை. ஆனால் எல்லாருக்கும் தெரிந்த செய்தியை இப்போது தான் தெரிந்தது போல் எழுதுவது நியாயமா? இப்போது கூட எழுதவில்லை என்றால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டு வந்திருக்குமோ? அப்படி செய்து இருந்தால் தினமலரில்  நடுநிலை  இல்லை என்பது தினமலரில் இன்னும் பின்னூட்டங்கள் போடும் மெத்தபடித்தவர்களுக்கும் தெரிந்து விடும் என்ற பயமா?
நான் இதுவரை நான்கு முறை பின்னூட்டங்கள் போட்டு இருந்தேன். இதுவரை ஒருமுறை கூட எதுவும் வெளிவந்ததில்லை. இத்தனைக்கும் நான் மோசமான வார்த்தை பிரயோகம் செய்தது இல்லை. ஒருவேளை உண்மையை சொன்னால் போடமாட்டார்களா? இல்லை பின்னூட்டம் போடுவதற்கென்றே தினமலர் ஏற்பாடு செய்திருக்கும் நபர்களின் பின்னூட்டங்கள் தான் தினமலரில் வெளியாகுமா?
ஒருவேளை இது தான் தினமலரின் தர்மமா? செய்திகளை முந்தி தந்தால் அதை செய்தித்தாள் என்று சொல்லலாம். ஆனால் இப்படி இரண்டு வருடங்கள் பின்தங்கி தரும் செய்தித்தாளை என்னவென்று சொல்லுவது?

தினமலர்,சுயமாக உழைத்து சம்பாரித்தல் தவறு என்கிறதா அல்லது தமிழர்கள் எல்லாம் அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிறதா?



தினமலர்- வாரமலரில் தற்போது வந்துள்ள செய்தி.(கருத்து என்றே கூறலாம்). அமெரிக்காவில் தற்போது இருக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை உயர்வதாகவும்(மக்கள் தொகையும் தான்.) அதனால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்துவருவதாகவும் சொல்லிவிட்டு அதற்காக இந்தியர்கள்  அரசியலில் அங்கீகாரம் கேட்கின்றார்கள் என்று புகார் கூறியுள்ளது. தினமலர் இந்தியர்கள் அங்கு வாழக்கூடாது என்கிறதா? இல்லை அங்கு இருக்கும் ஜனநாயகம் இவர்களுக்கு பிடிக்கவில்லையா? உண்மையான ஜனநாயகம் என்பது எல்லாருக்கும் ஆட்சியில் பங்களிப்பு கொடுப்பது என்பதே. இங்கே இருக்கும் பணநாயகம் போல் அங்கும் இருக்க வேண்டும் என சொல்லவருகிறதா?
அதை விட்டுவிட்டு எங்கே போனாலும் பேசகூடாது என்று சொல்லும் தினமலரை என்னவென்று சொல்லுவது?
சாமியே வரம் தந்தாலும் இவர்கள் தரக்கூடாது என்று சொல்வார்கள் போலிருக்கு. அங்கே குடியுரிமை பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபட முழுஉரிமை இருக்கிறது. இந்தியாவில் தான் அகதிகளை பிச்சைகாரர்களாக நடத்துகிறது. அமெரிக்காவில் அப்படி இல்லை. மற்றவர்களுக்கு வேண்டுமானால் அமெரிக்கா ஒரு மோசமான நாடாக இருக்கலாம். அந்த நாட்டு மக்களை சிறப்பாக நடத்துவது போல் வேறு எங்கும் நடத்துவதில்லை.  
தினமலருக்கு எப்பவும் ஆள்பவர்கள் ஆண்டு கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் தங்களுக்கு எப்பவும் பல்லக்கு தூக்கிகள் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்களோ

Popular Posts