நீதி கிடைக்குமா? கிடைக்கும் என்றால் என்ன விலை கொடுக்க வேண்டும்?

சீமானின் மீது பிரயோகிக்கப்பட்ட தேசியபாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு பல முறை இழுத்தடிக்கப்பட்டு வந்தது. வழக்கமாக வாதி மற்றும் பிரதிவாதிகளின் தரப்பே ஒத்திவைப்பதற்கு அனுமதி கேட்பார்கள். நம் தமிழ்நாடு தான் எல்லாவற்றிற்கும் முன்னுதாரணம் ஆயிற்றே. இம்முறை நீதிபதிகளே "நீங்கள் இருவரும் ஒத்துக்கொண்டால் கூட இந்த தேதியை நீதி மன்றம் ஒத்துகொள்ளாது, நவம்பர் மாத முதல் வாரத்திற்கு இவ்வழக்கு ஏற்று கொள்ளப்படும் என்று கூறினர். அது தொடர்பான செய்தி
இரண்டு பெண்களை கற்பழித்து, அவர்களைக் கொடூரமாக கொலை செய்த கனடா நாட்டு விமானப்படை தளபதி ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான செய்தி

என்னடா இரண்டு செய்திகளை பற்றி சொல்லி இருக்கானே என்று
பார்கிறீர்களா? இறையாண்மை என்பது இந்தியாவின் கொள்கைகளை எதிர்த்து பேசுவதா? இல்லை உள்ளூரில் குண்டு வைத்து மக்களை கொல்வதா?சட்டத்தின் அடிப்படையே தவறு செய்தவர்களை திருத்துவது தான். ஆனால் இந்த இறையாண்மை சட்டத்தினை இதுவரைக்கும் சரியாக பயன்படுத்திய அரசுகள் இல்லை என்றே கூறலாம். அவர்களை திருத்துவது யார் கையில் இருக்கிறது? சாமானிய மக்களுக்கும் பொதுவானது தானே நீதியும் தர்மமும். சீமானின் மீதான வழக்கு மற்றுமொரு செலினா மீதான கஞ்சா வழக்கு போல் புஸ்வானம் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இறையாண்மைக்கு எதிராக  பேசியதற்காக இன்னும் எத்தனை பேரை கைது செய்ய போகிறார்கள். ஒரு நாளில் கைதும் அன்றே விடுதலையும் என்றால் பரவாயில்லை. மாதகணக்கில் இழுத்தடித்து பின்னர் விடுவித்தல் என்பது இல்லாத இறையாண்மையை ஊட்டி வளர்பதற்க்காகவா? ஒருத்தரை தவறாக வழக்கு பதிந்து விசாரிக்காமல் உள்ளே வைத்ததற்காக நஷ்டஈடு தருவார்களா என்ன? இன்னும் இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமல்ல நீதித்துறையிலும் வளர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

இதே வேகத்தில் நாம் போனால் ஒருவேளை அடுத்த தலைமுறைகள் நன்றாக இருக்க வேண்டுமானால் நீங்கள் வெளிநாடுகளில் சென்று குடியேறுங்கள் அல்லது ஆளும்கட்சியில் இருக்கும் முக்கிய நபர்களின் அடிவருடியாக மாறுங்கள்.

0 Response to "நீதி கிடைக்குமா? கிடைக்கும் என்றால் என்ன விலை கொடுக்க வேண்டும்?"

Popular Posts