ஊழல்களை பற்றி பேசுவதற்கு ஊழல்வாதிகளுக்கு மட்டும் தான் தகுதி உண்டா?

இந்த பதிவை நான் எழுதுவதற்கு முன்னர் என்னை பற்றி சொல்ல விரும்புகிறேன். நான் பாரதிய ஜனதா கட்சியோ அல்லது அதன் துணை அமைப்புகளில் எதன் மீதோ ஈடுபாடு கொண்டவன் கிடையாது.



எல்லாருக்கும் பாபா ராம்தேவ் மோசடி செய்கின்றார், உண்ணாவிரதம் இருந்து அதனை அரசியல் செய்கின்றார் என்று முகநூலில் பலர் எழுதுவதை கண்டேன். எனக்கு இந்த விடயம் தான் புரியவில்லை. அவர் என்ன கட்சியோ இல்லை வேறு எந்த அமைப்போ. அதனை பற்றி நமக்கு என்ன கவலை. ஒரு வேளை அவர் சேர்த்து வைத்துள்ள சொத்து உங்களின் சந்தேகத்தை தூண்டுகிறதா? அப்படியானால் இவர் முறை கேடாக சொத்து சேர்த்தார் என்றோ அல்லது கருப்பு பணம் இவர் பெயரில் வைத்து இருந்தார் என்றோ நீங்கள் நம்புவீர்கள் என்றால் அது உங்களை நீங்களே ஏமாற்றும் காரியம் தான். இவரிடம் கருப்பு பணம் இருந்தால் இவர் எந்த தைரியத்தில் கருப்பு பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்க முற்படுகிறார்? கருப்பு பணம் ஒழிக்கும் சட்டம் இயற்றபட்டால் முதலில் இவர் மாட்டிகொள்வார் என்று தெரியாமலா இவர் கருப்பு பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்க நினைக்கிறார்? உண்மை இப்படி இருக்க நம்மில் பலருக்கு அவரின் காவி உடை கண்ணை உறுத்துகிறது. சிலருக்கு அவர் வைத்துள்ள பணம் கண்ணை உறுத்துகிறது. சரி அவருக்கு தான் தகுதி இல்லை. நம் தமிழ்நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க எந்த தலைவராவது முயற்சிகள் எடுத்தனரா?

அதுவும் கிடையாது. ஒரு வேளை அப்படி ஒருத்தர் போராட்டம் நடத்தினால் அதனை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்வதற்கு யாரேனும் இருக்கின்றனரா? அதுவும் இல்லை. ஆதரித்தால் எங்கே நம்மையும் காவி சங்கத்தில் சேர்ந்தவன் என்று பெயர் குத்தி விடுவார்களோ என்று ஒரு பயம். நமக்கு எப்போதுமே யாரையாவது குறை சொல்வதிலே காலம் போகின்றது. தாழ்த்தபட்ட மக்கள் பார்ப்பான் நடத்தும் நாடகம் என்கிறார்கள். அவர்களோ அவனிடம் பணம் இருக்கிறது. அவன் நடத்தும் உண்ணாவிரதம் எங்களை ஏமாற்றுவதற்கான முயற்சி என்கின்றனர். ஆகா இதுவல்லவோ ஒற்றுமை. நீ உண்ணாவிரதம் இருந்தால் நான் கலந்து கொள்ள மாட்டேன். நான் உண்ணாவிரதம் இருந்தால் நீ கலந்து கொள்ளாதே. ஆதரவு தெரிவிக்காதே. இதுதான் உண்மையில் இந்திய குடிமக்களின் நிலைப்பாடு.

என்னை கேட்டால் யார் நல்ல விடயங்களை முன்னிறுத்தி செயல்பட்டாலும் ஆதரவு தெரிவிக்கிறேன். இது அவர்களின் அந்த நல்ல விடயங்களுக்கான ஆதரவு மட்டுமே. அவர்களுக்கான ஆதரவு இல்லை. அந்த விடயம் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.

4 Response to "ஊழல்களை பற்றி பேசுவதற்கு ஊழல்வாதிகளுக்கு மட்டும் தான் தகுதி உண்டா?"

  1. நீங்கள் சொல்வது சரிதான்... காவியை விட்டு பொது விசயத்துக்கு வந்தால் எல்லாம் நலம் பெறும் ..எதிலும் அரசியல் லாபம் கொள்ளும் எவருக்கும் மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துவர்.. வாழ்த்துக்கள்

    நான் கேட்கணும்னு நினைத்ததை நீங்க கேட்டுடிங்க ...

    ///
    என்னை கேட்டால் யார் நல்ல விடயங்களை முன்னிறுத்தி செயல்பட்டாலும் ஆதரவு தெரிவிக்கிறேன். இது அவர்களின் அந்த நல்ல விடயங்களுக்கான ஆதரவு மட்டுமே. அவர்களுக்கான ஆதரவு இல்லை. அந்த விடயம் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.
    //


    நானும்தான்

    தங்கள் கருத்துக்கு நன்றி ராஜா

Popular Posts