இந்த வண்டியை நாம வச்சிருக்கோம், இந்த வண்டியை வச்சிருந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்காங்க ?

என்னடா, கரகாட்டகாரன்ல வார நகைசுவையை போட்டு இருக்கானேன்னு பார்க்கிறிங்களா? அதென்னங்க குற்றம் செய்தவனை விட்டுவிட்டு குற்றத்தை மட்டுமே பார்கிறார்கள். இந்திய நீதிமன்றத்தில் நீரா ராடியா சம்பந்தப்பட்ட டேப்பினை ஒப்படைக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறதாம். பாருங்க இந்த கொடுமையை. இந்த டேப் எல்லாம் இருப்பது அரசாங்கத்திடமே. ஆனாலும் நீதிமன்றத்திற்கு அரசின் மேல் நம்பிக்கை இல்லை. ஒரு வேலை இந்த மத்திய அரசு தான் இந்த டேப்பில் தனக்கு வேண்டாத நபர்கள் பற்றிய விவரங்களை அதுவாகவே தவறவிடுகிறதா? இல்லை மராட்டிய மாநிலத்தில் கார்கில் தியாகிகளுக்கான குடியிருப்பு சம்பந்தபட்ட தகவல்கள் காணாமல் போனது போல் இந்த டேப்புகள் எல்லாம் காணாமல் போய் விடும் என்று நினைக்கிறதா?



நாம் ஒரு நூறு ரூபாய் கையூட்டு வாங்குகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். அதை ஒருத்தர் காவல்துறையில் புகார் அளிக்கிறார். நம்மை விசாரிக்கும்போது நாமும் ஒத்துக்கொண்டு விடுகிறோம். அப்போது நீங்கள் தானே குற்றத்தை ஒத்துக்கொண்டு விட்டீர்கள் என்று உங்களை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் விடுவார்களா என்ன?

நீரா ராடிய கையூட்டு பெற்றதை அவரே ஒத்துக்கொண்டு இருக்கும்போது அவரை தானே முதலில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நீரா ராடியா டேப் விவகாரத்தில் டேப்களை வெளியே கசிய விடக்கூடாது என்று கூறி மனு தாக்கல் செய்த ரத்தன் டாட்டாவிற்க்காக டேப்பினை நீதிமன்றத்தில் ஒப்படைக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

ஒரு சக்கரை நோயாளிக்கு இருதய துடிப்பு நின்று விட்டால் காலில் போயா சிகிச்சை அளிப்பார்கள்.

நீரா ராடியா டேப்பிணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது இருக்கட்டும் நீரா ராடியாவை எப்போது நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள்.

9 Response to "இந்த வண்டியை நாம வச்சிருக்கோம், இந்த வண்டியை வச்சிருந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்காங்க ?"

  1. //நீரா ராடியா டேப்பிணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது இருக்கட்டும் நீரா ராடியாவை எப்போது நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள். //

    நல்ல கேள்வி

    /நீரா ராடியா டேப்பிணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது இருக்கட்டும் நீரா ராடியாவை எப்போது நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள். //

    கடவுளுக்கே வெளிச்சம்

    நீரா ராடியா வெறும் புரோக்கர் தான், அவளை வைத்து தங்களது வியாபாரத்தை விருத்தி செய்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவன முதலாளிகளும், வாயில் விரலை வைத்தால் கூட கடிக்கத் தெரியாத தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரையும் என்ன செய்வது என்று சொல்லவில்லையே? முதல் திருடன் ராசாவும் அவனை பின்னால் இருந்து ஆட்டி வைக்கும் அவனது கட்சித் தலைவரும்தான். அதற்க்கப்புறம் தான் தொழிலதிபர்கள், கடைசியாகத்தான் நீரா ராடியா. மலம் கழித்தவர்களை விட்டு விட்டு மலத்தை வெட்டக் கூடாது என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் வெட்டச் சொல்வது மலத்தை. என்னதான் தமிழ் பற்று என்றாலும், திருடனுக்கு போயா வக்காலத்து வாங்குவது?

    Jayadev Das அவர்களுக்கு,

    நான் எந்த ஒரு பதிவிலும் அந்த திருடர்கள் கூட்டத்திற்கு ஆதரவாக பேசவில்லை. நான் கேட்பது மிக எளிதான கேள்வி. நீங்கள் ஒரு நூறு ரூபாய் லஞ்சம் பெற்றதாக சந்தேகபட்டாலே உங்களை நமது காவல்துறை கைது செய்யும்போது நீரா ராதியா அறுபது கோடி ரூபாய் பெற்றதை ஒப்புக்கொண்ட பின்னரும் கைது செய்யாமல் இருக்கும் மர்மம் தான் என்ன என்று கேட்கிறேன்? நீதிமன்றம் உத்திரவிடட்டும் நான் உங்களை அப்போது கைது செய்கின்றேன் என்றா உங்களை விட்டுவிடும். முதலில் வேர்களை வெட்டினால் தான் மரத்தை சாய்க்க முடியும். நீங்கள் கிளைகளை மட்டுமே பார்த்திருப்பதாக தெரிகிறது. இந்த விசயத்தில் நீரா ராடியாவும் ஒரு வேர், ராசாவும் ஒரு வேர். அவ்வளவு தான். மரங்கள் வேறு இடங்களில் நிம்மதியாக இருக்கின்றன

    ஆமினா,Venkat Saran.
    தங்களின் கருத்திற்கும் தங்களின் தொடர் வருகைக்கும் நன்றிகள். பல கேள்விகள் நீங்கள் கேட்கவேண்டும் என நான் எதிர்பார்கிறேன்

    Unknown says:

    நீரா..பெற்றது கையூட்டு கணக்கில் வராதோ என்னவோ ? கமிஷனாகப் பெற்று அதற்கு வருமானகணக்கு காட்டியிருந்தால் ? இதனால் தான் தைரியமாக ஒப்புக் கொண்டிருப்பாரோ ? கணக்கு பண்ணுவதில் கில்லாடியா ? (கிழராடியா !)

    மீரா ராடியா திருட்டு விசிடி வியாபாரம் சூடு பிடிக்குமா?

    thalaivan says:

    neera radia oru paarpanachi.. ava budhiya kaamichitta..

    Unknown says:

    என்னப்பா இதெல்லாம்

    நான் என்னமோ இவல எந்த M.P யோ தள்ளிகின்னு போயிடாங்கோலோன்னு வந்தா
    போங்கப்பா ...............ஸ்

Popular Posts