நீதி கிடைக்குமா? கிடைக்கும் என்றால் என்ன விலை கொடுக்க வேண்டும்?

சீமானின் மீது பிரயோகிக்கப்பட்ட தேசியபாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு பல முறை இழுத்தடிக்கப்பட்டு வந்தது. வழக்கமாக வாதி மற்றும் பிரதிவாதிகளின் தரப்பே ஒத்திவைப்பதற்கு அனுமதி கேட்பார்கள். நம் தமிழ்நாடு தான் எல்லாவற்றிற்கும் முன்னுதாரணம் ஆயிற்றே. இம்முறை நீதிபதிகளே "நீங்கள் இருவரும் ஒத்துக்கொண்டால் கூட இந்த தேதியை நீதி மன்றம் ஒத்துகொள்ளாது, நவம்பர் மாத முதல் வாரத்திற்கு இவ்வழக்கு ஏற்று கொள்ளப்படும் என்று கூறினர். அது தொடர்பான செய்தி
இரண்டு பெண்களை கற்பழித்து, அவர்களைக் கொடூரமாக கொலை செய்த கனடா நாட்டு விமானப்படை தளபதி ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான செய்தி

என்னடா இரண்டு செய்திகளை பற்றி சொல்லி இருக்கானே என்று
பார்கிறீர்களா? இறையாண்மை என்பது இந்தியாவின் கொள்கைகளை எதிர்த்து பேசுவதா? இல்லை உள்ளூரில் குண்டு வைத்து மக்களை கொல்வதா?சட்டத்தின் அடிப்படையே தவறு செய்தவர்களை திருத்துவது தான். ஆனால் இந்த இறையாண்மை சட்டத்தினை இதுவரைக்கும் சரியாக பயன்படுத்திய அரசுகள் இல்லை என்றே கூறலாம். அவர்களை திருத்துவது யார் கையில் இருக்கிறது? சாமானிய மக்களுக்கும் பொதுவானது தானே நீதியும் தர்மமும். சீமானின் மீதான வழக்கு மற்றுமொரு செலினா மீதான கஞ்சா வழக்கு போல் புஸ்வானம் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இறையாண்மைக்கு எதிராக  பேசியதற்காக இன்னும் எத்தனை பேரை கைது செய்ய போகிறார்கள். ஒரு நாளில் கைதும் அன்றே விடுதலையும் என்றால் பரவாயில்லை. மாதகணக்கில் இழுத்தடித்து பின்னர் விடுவித்தல் என்பது இல்லாத இறையாண்மையை ஊட்டி வளர்பதற்க்காகவா? ஒருத்தரை தவறாக வழக்கு பதிந்து விசாரிக்காமல் உள்ளே வைத்ததற்காக நஷ்டஈடு தருவார்களா என்ன? இன்னும் இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமல்ல நீதித்துறையிலும் வளர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

இதே வேகத்தில் நாம் போனால் ஒருவேளை அடுத்த தலைமுறைகள் நன்றாக இருக்க வேண்டுமானால் நீங்கள் வெளிநாடுகளில் சென்று குடியேறுங்கள் அல்லது ஆளும்கட்சியில் இருக்கும் முக்கிய நபர்களின் அடிவருடியாக மாறுங்கள்.

களமாடியவர்களும் கழகத்தில் ஆடியவர்களும்

 ஈழ தமிழர்கள் பற்றிய நினைவுகள் எனக்கு அடிக்கடி வந்து தொல்லை செய்கின்றன.அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அதன் மூலம் தான் நான் ஒரு கேடுகெட்ட ஒரு ஜனநாயக நாட்டில் இருப்பதை பற்றிய புரிந்துணர்வுக்கு கொண்டு வந்தது.எனக்கு ஈழத்தில் நடந்த அந்த உக்கிர போரின் தீவிரம் 2008யின் முற்பகுதியில் தெரிய ஆரம்பித்தது. இங்கே அதனை பற்றி அப்போது பேசியவர்களும் இப்போதும் பேசிக்கொண்டு
இருப்பவர்களுமான பழ நெடுமாறனும் வை.கோவும் அப்போது இருந்த அரசுகளிடம் கெஞ்சித்து கொண்டு இருந்தார்கள்.நெடுமாறன் அவர்கள் அப்போது ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பணம் திரட்டி அங்கே ஈழத்தில் உள்ளவர்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சி செய்தார். விஷயம் கொஞ்சம் கொஞ்சம் தீவிரம் ஆனது.தா.பாண்டியன் இந்த விஷயத்தை கையில் எடுத்த பின்னர் சூடு பிடித்தது.நான் அதுவரை மீடியா பற்றி வேறு விதமாக யோசித்து வைத்து இருந்தேன். மீடியா என்பது ஒரு பொதுவான அமைப்பின் கொள்கையோடு நடுநிலைமையோடு இருக்கும் என்று. ஆனால் நடந்தது வேறு.

மக்களிடம் எதையும் கொண்டு சேர்க்க வேண்டிய மீடியா மற்றும் பத்திரிக்கை துறையினர் இதை அடக்கி வாசித்து பத்திரிக்கை தர்மத்தினை நிலை நாட்டினர். வேறு சிலர் தவறான கருத்துகளோடு தங்களின் சொந்த கருத்துக்களையும் ஊட்டி வளர்த்தனர். இந்த வளர்ச்சியில் இங்கே குளிர் காயும் ஆடுகளின் எண்ணிக்கைகள் அதிகம் ஆனது. நெடுமாறன் சேமித்த அந்த பொருட்கள் கடைசியில் குப்பைக்கு சென்றன. ஆனால் ஒரு சிலர் அனுப்பிய குப்பைகள் அங்கே மக்களுக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இவர்கள் அனுப்பிய அந்த பொருட்கள் மக்களிடம் தான் போய் சேர்ந்ததா என்று யாரும் சரி பார்க்கவில்லை. சரி பார்க்கவும் தேவை இல்லை.நாம் செய்யவேண்டியது என்ன? ஒரு பிரச்சினை கொழுந்துவிட்டு எரியும்போது செய்யும் காரியங்களினால் நமது கழகத்திற்கு என்ன நன்மை என்பதையே பார்க்கும் கட்சியினர் இங்கே அதிகம். ஒரு கழகம் பல நாடகங்களை நடத்தியது.

அனைத்து கட்சிகள் கூட்டம்(14.10.2008 மாலை 4.30):
எல்லா மாநிலங்களிலும்  பொதுவான பிரச்சினைகளில் ஒன்று கூடி தேர்  இழுக்கும் கட்சிகளை பார்க்கலாம். நம் தமிழ்நாட்டில் அது மட்டும் நடக்கவே நடக்காது.  அப்படி ஒரு முயற்சி தான் இந்த அனைத்து கட்சி கூட்டம்.கூட்டத்தின் முடிவில் இப்போதைய முதல்வர் கருணாநிதி
தமிழ்நாட்டினை சேர்ந்த 40 எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்து அறிக்கை விட்டார்.

MPகள் ராஜினாமா: இதன் பின்புலம் என்னவென்று பின்னர் தான் தெரிந்தது. ஒரு தமிழ்நாட்டினை சேர்ந்த மத்திய அமைச்சரை காப்பாற்ற இவர்கள் செய்த நாடகம் தான் இது என பின்னாளில் கூறப்பட்டது.இது உண்மையில் என்னை மிகவும் கவர்ந்த நாடகம். முதலில் இதை கேள்விப்பட்டு இப்படி ஒரு தலைவன் நமக்கு கிடைக்க நாம் என்ன புண்ணியம் செய்தோமோ என்று நினைத்தேன். அப்புறம் எல்லாம் பூச்சாண்டி காமிச்சாங்க என்பது தெரிந்தது.

மனித சங்கிலி(அக்டோபர் 24, 2008):
 எல்லா கட்சிகளும் கலந்து கொண்ட இந்த மனித சங்கிலி உண்மையில் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி. கார் லோன் வாங்க போன ஒருவன் அது கிடைக்காமல் அந்த காரின் சாவிக்கு லோன் கேட்ட வரலாறு அன்றைக்கு தான் நடந்தது. எல்லாருக்கும் தெரியும் இது எல்லாரையும் நம்பவைக்கும் ஒரு முயற்சி என்று. ஆனால் எதிர்த்து கேட்க தான் துணிவில்லை.
அதன் பின் நடந்த போராட்டங்கள் எல்லாம் மக்களை வாக்காளர்களாக மட்டுமே பார்த்தவர்கள் செய்த நாடகங்கள்.
 திருமாவளவன் நடத்திய உண்ணாவிரத போராட்டமும் அதன் பின் நடந்த வன்முறைகளும் அரசியலில் அவரின் இருப்பினை உறுதி செய்தது. ஆனால் உயர் நீதி மன்றத்தினுள் நடந்த அந்த தாக்குதல்கள் அரசின் உண்மையான முகத்தினை உலகுக்கு காட்டிற்று. இங்கே எல்லாருமே போராட்டம் நடத்தினார்கள் ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்று தனித்தனியே . ஆனால் யாரை எதிர்த்து என்பது தான் இங்கே கேள்வியே?
திருமாவளவன் ஆளும்கட்சியில் இருந்து ஆளும்கட்சியினை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இதன் விளைவுகள் என்று பார்த்தால் இனிமேல் ஈழம் சம்பந்தமாக எந்த போராட்டமும் நடத்த கூடாது என்று அரசே உத்திரவிடும் அளவுக்கு போனது. இது தான் திருமாவளவன் எதிர்பார்த்தாரோ என்று யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
எல்லாராலும் விமர்சிக்கப்பட்ட மணிநேர உண்ணாவிரதம் நடந்தது. இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகிற்கும் தமிழ்நாட்டின் அரசியல் வியாதிகள் அரசியல் கோமாளிகள் என்பதை மீண்டும் உலகிற்கு பறைசாற்றின. இதைவிடவெல்லாம் கொடுமை என்னவென்றால் அதே ஆளும்கட்சிகளே மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்து வந்ததே. களின் ஆரம்பத்தில் காஷ்மீரில் நடந்த தேர்தலின் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு அங்கே தீவிரவாதம் விதைக்கப்பட்டது. அதையே தமிழ்நாட்டில் இப்போது விதைத்து விட்டு உள்ளார்கள். இங்கே விதைத்தது தீவிரவாதம் அல்ல. ஆனால் பணம் இருந்தால் யாரும் ஜெயிக்கலாம் என்ற ஒரு பணநாயக கருத்தினை முன்மொழிந்து போயுள்ளார்கள்.
 இனிமேல் நடக்கும் எந்த ஒரு தேர்தலும் இப்படி தான் இருக்கும் என்பதை நான் சொல்லி தெரிய போவதில்லை.
முதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும் அதில் பேருந்து ஒன்றில் பயணிக்கும் ஒருத்தருக்கும் அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கும் நடக்கும் அந்த தகராறு இப்படி பெரிதாகிறது என்பதை காட்டி இருப்பார்கள். கடைசியில் அந்த பயணியின் நிலைமை என்னவென்று பார்க்க ஆள் இல்லாமல் போயிருக்கும். நாம் எதற்க்காக போராடுகிறோம் என்றே தெரியாமல் இவர்கள் போராடியதன் விளைவுகள் பல மறைக்கப்பட்டுள்ளன.




போராளிகளின் குடும்பங்களை சேர்ந்த பலர் தப்பித்து இந்தியா வந்தவண்ணம் இருந்தனர். இங்கே அப்போது ஆளும்கட்சியில் இருந்த ஒரு கட்சியிடம் 3000 போராளிகளின் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த கட்சியும் கூட்டணி தலைமையை கேட்டு சொல்லுவதாக கூறியது. இன்னும் அந்த வேண்டுகோள் அவர்களின் சீரிய பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. இப்போது அந்த போராளிகளின் குடும்பங்கள் என்னவானார்கள் என்பதை இவர்களுக்கு நாம் தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு இவர்களின் ஞாபக மறதி நோய் வளர்ந்துள்ளது.



மேலும் ஒரு நிகழ்ச்சியை சொல்வதென்றால் இங்கே வருகின்ற ஈழ தமிழர்களை சிங்கள ராணுவம் எந்த அளவுக்கு துன்புரித்தியதோ அதைவிட இங்கே அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். காட்டிகொடுக்கபட்ட பல போராளிகள் எப்படி என்று தெரியாமல் இருந்தனர். ஆனால் அவர்களை காட்டி கொடுத்தது இங்கே போராட்டம் நடத்திய ஒரு நல்ல கட்சியின் தலைமை தான்.
 
அங்கே களமாடியவர்கள் போதும் என்று இப்போதற்க்கு ஓய்ந்து போய்விட்டார்கள் ஆனால் அவர்களின் பெயரை சொல்லி இன்னும் இங்கே வசூலிக்கும் பணத்தில் வீடு வாங்கிய அன்பர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள். வியாபாரம் தான் நோக்கம் என்றால் வேறு எதாவது சொல்லி பிழைக்க வேண்டியது தானே. மக்களின் பிணங்களின் மேல் ஏறி இப்படி நரமாமிசம் தின்றவர்களை என்னவென்று சொல்லுவது. இவர்களின் ஒரே ஒரு நோக்கம் மக்களை காப்பாற்றுதல் இல்லை. இவர்களின் வியாபாரத்தினை விரிவுபடுத்தியதும் 
 மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களை கொச்சை படுத்தியதையும் தவிர இவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
    ஜாக்கிரதையாக இருங்கள் ஈழ தமிழர்களே உங்களின் ரத்தத்தினை உறிஞ்சும் அட்டைகள் இலங்கையில் மட்டும் இல்லை. தமிழத்திலும் தான் இருக்கிறார்கள்.

ஜனநாயகம் VS முடியாட்சி

நம் நாடு ஏன் முடியாட்சியிலிருந்து  சுதந்திரம் பெற வேண்டும்  என்பதை பற்றி யோசிக்க வேண்டிய தருணங்கள் சிலவற்றை நமது நாட்டின்  ஜனநாயகம் மற்ற முடியாட்சி நாடுகளுக்கு இந்நேரம் தந்திருக்கும்.எல்லா முடியாட்சி மன்னர்களும் கொள்ளையர்கள் தான். ஆனால் அவர்களுக்கென்று சில வரையறை வைத்து இருந்தனர். அதனால் அவ்வபோது மட்டுமே பிரச்சினைகள் இருந்து வந்தன. இப்போது ஜனநாயகம் என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த கொள்ளையர்களின் கழிப்பிடமாகவே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம். மாட்டிகொண்டாலும் பிரச்சினை இல்லை. நம்மிடம் அப்படி ஒரு கடினமான இறுக்கமான எந்த ஒரு அமைப்பும் இல்லை. மத்திய புலனாய்வு துறை என்பது ஆட்சியாளர்களின் துறையாக மாறி வருடங்கள் பல கடந்துள்ளன. காவல்துறையை பற்றி நாம் கேட்கவே வேண்டாம். கறைபடியாத துறைகள் என்று எதுவும் யாருக்கும் நினைவு இருப்பதாக தோணவே இல்லை. 

 
  • மன்னர்கள் தங்கள் வருங்கால சந்ததிகளும் இருந்து கொள்ளை அடிக்கட்டும் என்பதற்காக கொஞ்சமாவது விட்டு வைத்தார்கள் இல்லையென்றால் எதையாவது உருவாக்கி வைத்தனர். இங்கே ஆந்திர கர்னாடக எல்லையில் ரெட்டி சகோதரர்கள் பல வருடங்கள் இருந்து எடுக்கக வேண்டிய தாதுக்களை சில வருடங்களில் சுருட்டி உள்ளனர். இது ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பிரச்சினை அல்ல. ஒரு இடத்தில் மிக அதிகமாக தோண்டும்போது ஏற்படும் பள்ளங்கள் பூமியின் மேல் அடுக்குகளில் மாற்றங்களை உண்டு செய்யும் வல்லமை உள்ளது. நாம் இதனால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

  • மன்னர்கள் எப்போதும் நீதியை நிலை நாட்டினர் என்று சொல்ல முடியாது ஆனால் முடிந்த அளவில் நீதியை செயல்படுத்த முயற்சி செய்தனர். இங்கே நீதிமன்றங்களுக்கே பாதுகாப்பு இல்லை. நீதிமன்றங்களுக்குள் நடைபெற்ற தாக்குதல்களுக்கே நீதி கேட்டு நீதிபதிகள் கெஞ்சித்து கொண்டு இருக்கிறார்கள். இதில் நமக்கு எங்கே போய் இவர்கள் நீதி வழங்குவார்கள்.நேற்று என் வீட்டின் மாடியில் தூங்கி கொண்டு இருந்த என் நண்பர்கள் மற்றும் தம்பிகளின் செல்பேசிகள் யாரோ புண்ணியவான் நிறுத்தி நிதானமாக திருடி சென்று உள்ளார். இதில் நிறுத்தி நிதானம் என்பது அவர் மொட்டை மாடியில் இருந்து பீர் குடித்து அதன்பின் திருடியதை குறிக்கிறது. வேறு ஒன்றும் இல்லை.ஒரு வேளை திருடர்களிடம் வீடுகளை பாதுகாக்க சொல்லலாமா? உங்களுக்கு தெரிந்த சிறு திருடர்கள் இருந்தால் சொல்லுங்கள். பெரும் திருடர்கள் வேண்டாம். அவர்கள் அரசியலில் இருக்கட்டும்.

  • என் வீட்டின் பக்கத்தில் நேற்று ஆளும்கட்சியின் எதோ கூட்டம் நடந்தது. எங்கள் தெருவில் எப்பவும் மின்சாரம் எப்பவும் தட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும். Low voltage Problem. இதற்கு பலமுறை எங்கள் வீட்டின் சொந்தகாரர் மின்சார வாரியத்தில் புகார் அளித்து உள்ளார். ஒருவேளை இதற்கு உடனடி தீர்வு காண அவர் ஆளும்கட்சியில் சேர வேண்டுமோ? மன்னர் ஆட்சியில் மட்டுமே ஒரு சமயத்தில் இருந்து அடுத்த சமயத்திற்கு மாற சொல்லி கட்டாய படுத்துவார்கள். இப்பவும் அப்படி தானா?

  • மன்னராட்சியில் மட்டுமே மன்னரின் கருத்துக்களுக்கு எதிர்த்து கருத்து சொல்வது பெருங்குற்றமாக கருதப்பட்டது. ஜனநாயகத்தில் இந்த பிரச்சினை இல்லை. கருத்துரிமை, எழுத்துரிமை மற்றும் பேச்சுரிமை என்று இருப்பதாக சொன்னார்கள். (சமுக அறிவியல் புத்தகத்தில் படித்தது ). இவை எல்லாம் இன்னும் தொடர்வதாக நான் நினைத்தது சற்று முன்னர் தான் இல்லாமல் போனது. ஆளும்கட்சியினரின்  சுய விருப்பங்களுக்கு ஏற்ப சட்டங்கள் மாறுகின்றன.வைகோ, பழநெடுமாறன் மற்றும் சிலர் விசயத்தில் விசாரித்த ஆணையம் எந்த ஒரு தீவிரவாத அமைப்பையும் ஆதரித்து பேசுவது தவறாகாது என்றார்கள். பின்னர் அதையே காட்டி சீமானை கைது செய்தார்கள். ஒருவேளை ஆணையம் கொடுத்த அந்த தீர்ப்பு புறாக்களில் கட்டி அனுப்பபட்டதால் ஆட்சியில் உள்ளவர்களுக்கு வந்து சேர்வது இல்லையோ?
     இதெல்லாம் பார்க்கும்போது ஜனநாயகத்தின் அடிப்படைகள் ஒன்று ஒன்றாக நமது ஜனநாயகத்தில் இருந்து கழன்று கொண்டு முடிவில் ஒற்றை ஆட்சி முறைக்கே  வந்து கடேசியில் முடிசூட்டு விழா அழைப்பு நமக்கு வருமோ?

  • மன்னராட்சியில் ஊழல் இருந்ததா? இருந்திருந்தால் எப்படி இருந்து இருக்கும்? ஆனால் ஜனநாயகத்தில் இருந்தால் எப்படி இருக்கும் இப்படி இருக்கும். நீதிமன்றங்களே ஊழல்களை அங்கீகரிக்கலாமா என்று கேட்டு உள்ளன.

 
ஒவ்வொரு புரட்சியின்போதும் முடியாட்சில் இருந்து மக்கள் ஆட்சி வந்ததாக சொல்வார்கள். மக்கள் ஆட்சியின் முடிவில் இருந்து என்ன வர போகிறது?

நானும் SBIல வீட்டு கடன் வாங்கி இருக்கேன்...

நான் இதுவரைக்கும் கடன் வாங்க கூட யோசிக்கும் ஒரு ரகம். நான் மதுரையில் கட்ட இருக்கும் ஒரு வீட்டுக்காக SBIல வீட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடன் வாங்கும் முன் எந்த வங்கியில் வாங்கலாம்னு பலர்கிட்ட கேட்டப்போ (அவங்க வாங்கி இருக்காங்களோ இல்லியோ )ஆளுக்கு ஒரு வங்கியின் பெயரை சொன்னாங்க. அவங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை எனக்கு அனுப்பினர். அதில் எல்லாரும் பார்ப்பது போல் நானும் குறைந்த வட்டி விகிதம் இருக்கிறது என்பதற்காக SBIயை தேர்ந்தெடுத்தேன்.
 SBIயில் தொடர்பு கொண்டபோது அவர்கள் கூறிய அனைத்து கோப்புக்களும் தந்தால் வீட்டுகடன் 1 மாதத்தில் கிடைக்கும் என்றார்கள்.
Purpose :

• Purchase/ Construction of House/ Flat

• Purchase of a plot of land for construction of House

• Extension/ repair/ renovation/ alteration of an existing House/ Flat

• Purchase of Furnishings and Consumer Durables as a part of the project cost.

• Takeover of an existing loan from other Banks/ Housing Finance Companies



Features:

• Interest charged on the daily reducing balance

• No penalty for prepayments made

• No hidden costs

• All the features of our product, including interest rates, are in the public domain.

• Loan sanctioned within 6 days of submission of required documents.

• Option to club income of your spouse and children to compute eligible loan amount

• Provision to club depreciation, expected rent accruals from property proposed to compute eligible loan amount

• Provision to finance cost of furnishing and consumer durables as part of project cost

• Repayment permitted upto 70 years of age

• Free personal accident insurance cover upto Rs.40 Lac.

• Optional Group Insurance from SBI Life at concessional premium (Upfront premium financed as part of project cost)

• ‘Plus’ schemes which offer attractive packages with concessional interest rates to Govt. Employees, Teachers, Employees in Public Sector Oil Companies.

• Special scheme to grant loans to finance Earnest Money Deposits to be paid to Urban Development Authority/ Housing Board, etc. in respect of allotment of sites/ house/ flat



Eligibility

• Minimum age 18 years as on the date of sanction

• Maximum age limit for a Home Loan borrower is fixed at 70 years, i.e. the age by which the loan should be fully repaid.

Availability of sufficient, regular and continuous source of income for servicing the loan repayment.



Loan Amount:

• 40 to 60 times of NMI, depending on repayment capacity as % of NMI as under –



Net Annual Income EMI/NMI Ratio

Upto Rs.2 lacs 40%

Above Rs.2 lac to Rs. 5 lac 50%

Above Rs. 5 lacs 55%



Pre-closure Penalty:

No penalty if the loan is precolsed from own savings/windfall gains for which documentary evidence is produced by the customer.

In case, such proof is not produced by the borrower, penalty @2% on the amount prepaid in excess of normal EMI dues shall be levied if the loan is preclosed within 3 years from the date of commencement of repayment.

Maximum Repayment Period:

• for applicants upto 45 years of age: 20 years

• for applicants over 45 years of age: 15 years



Documents:

• Completed application form

• Passport size photograph

• Proof of Identity – PAN Card/ Voters ID/ Passport/ Driving License

• Proof of Residence – Recent Telephone Bill/ Electricity Bill/ Property tax receipt/ Passport/ Voters ID

• Proof of business address in respect of businessmen/ industrialists

• Sale Deed, Agreement of Sale, Letter of Allotment, Non encumbrance certificate, Land/ Building Tax paid receipt etc. (as applicable and subject to satisfaction report from our empanelled lawyer)

• Copy of approved plan and approval from the Local Body

• Statement of Bank Account/ Pass Book for last 6 months

இதெல்லாம் பார்த்து விட்டு அதனை தயார் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு salary account இருப்பது axis bankல். நான் விண்ணப்பிபதோ SBIயில்.
Axis bankல் ஆறு மாத வங்கி பரிவர்த்தனை விவரம் கேட்டு நான் அனுப்பினேன். அன்றைய தேதி மே 15, 2010.
அவர்கள் உடனே 19 மே அன்று எனக்கு pdf வடிவத்தில் அனுப்பினர்.
அதனை நான் SBIக்கு அன்றே அனுப்பினேன்.
அவர்கள் இதற்க்கு பதிலாக காகித வடிவில் aixs bankகில் இருந்து அவர்களின் முத்திரையுடன்  வாங்கி கொரியர் செய்ய சொல்லினர். (21 மே).
axis bankனை மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர்கள் மே 27 அன்று நேரில் வந்து வாங்கி கொள்ளும்படி கூறினர்.
இப்போது எல்லா ஆவணங்களும் தயார். மதுரையில் ராஜா முத்தையா மகாலின் எதிர்புறம் உள்ள SBI அலுவலகத்தில் நான் விண்ணப்பிக்க சென்றேன். இன்று தேதி 28 ஆகஸ்ட் 2010.
இவ்ளோ நாள் என்ன செய்து கொண்டு இருந்தாய் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. என்ன செய்ய? நான் கட்டி கொண்டு இருந்த வீட்டின் பட்ட என் தாயின் பெயரில் இருந்து எனக்கு மாற்றப்பட்டு இருந்தது. அது சரி தான். எங்களிடம் இதற்க்கு முன்னர் யாரிடம் இருந்து வாங்கினோமோ அவர்களின் பத்திரம் இருந்தது. அதற்க்கு முன்னர் இந்த இடம் காடுகள் நிறைந்த போட்டால் காடாக இருந்து உள்ளது. அவரிடம் இருந்து வாங்கிய பத்திரம் எங்கே என்று SBI வங்கியில் கேட்க அதனை கண்டு பிடிக்க ஆன நேரம் தான் இந்த இடைவெளி. 7௦ வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலை என்னவென்று நமக்கு தெரியாது. அதற்க்கு முன்னர் இருந்த பத்திரத்தினையும் கண்டுபிடிக்க சொல்லிவிடுவார்களோ என்று அதையும் தேடினோம்.நல்லவேளை கேட்கவில்லை.



சரி மீண்டும் நம்முடைய வீட்டுகடன் விசயத்திற்கு வருவோம்.

அன்று வார இறுதி நாள். காசோலையில் தான் வங்கிக்கு (8000)விண்ணபத்திர்க்கான செலவிற்கும் அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தவும் கட்ட வேண்டுமாம்.

அடித்து பிடித்து அன்று செலுத்தினேன்.
அப்பாட ஒரு வேலையாக விண்ணபித்து விட்டேன்.இனிமேல் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தேன்



மீண்டும் ஒரு சிக்கல்..

அவர்கள்(SBI bank) மீண்டும் கடைசி 6 மாத வங்கி பரிவர்த்தனைகளின் விவரம் கேட்டனர். மீண்டும் இங்கே அசிஸ் வங்கியில் சொல்லி வாங்கி குடுக்க ஒரு வாரம் ஆனது. இதற்க்கு இடையில் நான் 4 முறை மதுரைக்கும் சென்னைக்கும் சென்று வந்தேன்.
 
வங்கியின் சார்பாக ஒருத்தர் என்னை தொடர்பு கொண்டார்.(Legal advisor) அவர் என்னை நேரில் அவரின் வீட்டில் சந்திக்க கூறினார். நான் சென்னையில் இருப்பதாக கூறியதால் என் வீட்டில் இருந்து யாரையாவது அனுப்ப கூறினார். என் சார்பாக என் தம்பி சென்று அவரிடம் தேவையான கோப்புகளும் பணமும் கொண்டு  சென்று வேலையே முடித்தார்.
என்னை  வங்கியில் இருந்து ஆகஸ்ட் 23ம் நாள்  தொடர்பு கொண்டார்கள்.
என்னவென்றால் என்னிடம் 4 கடன் அட்டைகள் இருந்தன. அவற்றின் மூலம் நான் வேறு எதுவும் தொடர்ந்து வாங்கியது இல்லை. ஆனால் ULIPகு(To avoid the IT) தேவையானபோது செலுத்தும்படி நான் பணித்து(ICICI biller service) இருந்தேன். அதனால் அவர்கள் தொடர்ந்து செலுத்தி வந்தனர். இது தான் இப்போது பிரச்சனை. நான் இப்போது திரும்ப மதுரைக்கு சென்று விளக்கம் அளிக்க வேண்டும். அதுவும் மறு நாள் அங்கே இருந்து திரும்ப இங்கே வர வேண்டும். இப்படிபட்ட சூழலில் அங்கே சென்று என் கணக்கு வழக்குகளை விவரித்தேன். அதனை கைப்பட எழுதி குடுக்க கூறினார். நானும் எழுதி குடுத்தேன்.மேலும் அதன் 3 மாத விவரங்கள் எடுத்து அனுப்ப கூறினார்.
திரும்ப அதே கதை தான் திரும்ப அதே போல் எல்லா பரிவர்த்தனைகளையும் எடுத்து அனுப்பினேன்.
அப்பாடா இனி பிரச்சினை இல்லை, வீட்டுகடன் கிடைத்து விடும்  என்று இருந்தேன்.
என்னை மீண்டும் எல்லா மூல பத்திரங்களுடன் பதிவு செய்வதற்கான அறைக்கு வரும்படி பணித்தார்கள். எனக்கு செப்டம்பர் ௭ம் நாள் ஒதுக்கி இருப்பதாக கூறினார். நானும் வேறு நாள் இருந்தால் கூறுங்களேன் என்று கூறினேன் ஏனென்றால் அது வருவது செவ்வாய் கிழமையில். திங்கள் அல்லது வெள்ளியாக இருந்தால் பரவாயில்லை, சமாளிக்கலாம். ஆனால் செவ்வாய் என்பதால் திங்கட்கிழமை இரவு பயணித்து திரும்ப செவ்வாய் இரவு திரும்பும் எண்ணத்துடன் பயணித்தேன்.





எப்போதும் போல் ஆரம்பம் நன்றாக இருந்தது. தேவையான கோப்புகளின் மூலங்களை வாங்கி கொண்டனர். ஆனால் என்னிடம் AXIS bankன் Cheque leafs இல்லை. அதற்க்கு பதிலாக நான் என்னுடைய SBI Account leafs தருவதாக கூறிய போது சரி என்று கூறினார். 
 
அதை நம்பி நான் என்னுடைய SBI கிளையில் விண்ணபித்து அடுத்த வாரத்தில் வாங்கினேன்.
இப்போது அவர்கள் கூறியது போன்று நான் பதிவு செய்து அது வரும் நாளை எதிர் பார்த்தேன். அது வருவதற்கு 2 வாரங்கள் ஆனது. பின்னர் வில்லங்க சான்றிதல்(EC) கேட்டு விண்ணபித்தேன்.
வங்கியின் பெயரில் பதிவு செய்து கிடைத்த பத்திரம், வில்லங்க சான்றிதல், அவர்கள் கேட்ட Cheque leafs எல்லாம் எடுத்து கொண்டு என் தந்தை சென்றார். வழக்கம் போல் ஆரம்பம் நன்றாக இருந்தது. எனக்கு ECS எந்த வங்கி கிளையில் உள்ளதோ அதனுடைய cheque leafs இருந்தால் மட்டுமே கடன் வெளியாகும் என்றார் அங்கே இருந்தவர்.
அதனை சென்னை வந்து நான் விண்ணப்பித்து விட்டேன்.
அவர்கள் குடுத்த விண்ணப்பத்தில் முதல் முறை (Firts release for home loan) பணம் பெறுவதற்கான கையொப்பம் பெறுவதற்கு என் தந்தை எனக்கு அனுப்பினார். அவர் அனுப்பியது அக்டோபர் முதல் நாள், எனக்கு கிடைத்தது அக்டோபர் நான்கில். அதனை நான் பூர்த்தி செய்து நாங்கள் கட்டி கொண்டு இருக்கும் இன்றைய வீடிற்கு இன்றைய தேதி வரை உள்ள
 செலவுகளின் பட்டியல்களை பெற்று அதனை அரசு அங்கீகாரம் பெற்ற சிவில் பொறியாளரிடம் அங்கிகாரம் பெற்று குடுத்தோம். இரண்டு நாளில் சரி பார்க்க ஆள் வருவார்கள் என்று கூறினார்கள். சொன்னது போலவே ௩ நாள் ஒருத்தர் வந்து பார்த்து சென்றார். அவர் இரு நாட்களில் முதல் தொகை கிடைக்கும் என்றார்.
வீட்டுகடன் தொகை வந்து சேருமோ இல்லையோ ஆனால் சில பாடங்கள் கற்று கொண்டு விட்டேன் இதன் மூலம்.
  • தனியார் வங்கிகள் ஓரிரு நாட்களில் வீடு கடன் தொகை தருகிறார்கள். ஆனால் வட்டி அதிகம்.
  • கடன் அட்டைகளின் இருப்பு நம்முடைய வீட்டு கடனையும் பாதிக்கும்.
  • எப்போதும் நாம் வேலை பார்க்கும் இடத்தின் பக்கத்திலே வீட்டு கடன் மூலம் வீடுகள் வாங்குவது எளிது.
  • எல்லா சான்றிதள்களும் இருந்தாலும் உண்மையில் சபையில் வங்கி கடன் வாங்குவது கடினம்.
யாருக்கேனும் தூக்கம் வரவில்லை என்றால் முதலில் இருந்து வாசிக்கவும். நிச்சயம் தூக்கம் வரும்.



Popular Posts