ஜெகத் கஸ்பாரும் நக்கீரன் வார இதழும் ஈழதமிழர்களுக்கு ஆதரவாளர்களா?

தற்போது நடந்து வரும் மத்திய புலனாய்வு துறையின் சோதனைகளில் சிக்கியவர்களுக்கு ஆதரவாக புதிதாக எப்படி ஆதரித்து பேசலாம் என்பதற்கு தட்ஸ் தமிழில் வந்த ஒரு செய்தி உதாரணமாக இருக்கிறது.
"சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடந்த சிபிஐ சோதனை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கு எதிரான, பழிவாங்கல் நடவடிக்கையோ என்று சந்தேகப்படுத்தும் வகையில் ஆங்கில மீடியாக்களின் செய்திகள் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நக்கீரன் இதழை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு பத்திரிக்கை என்று வர்ணித்திருப்பதே இந்த சந்தேகத்திற்குக் காரணம்.

இன்று காலை தொடங்கிய இந்த சிபிஐ ரெய்டு குறித்த செய்திகளை அனைத்து தமிழ் மீடியாக்களும் நடுநிலையுடன் கூறி வரும் நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி மட்டும் குயுக்தியான பார்வையுடன் வெளியிட்டு வருவது பலத்த சந்தேங்கங்களை ஏற்படுத்தியுள்ளது. (Pro-LTTE Nakkeran என்று நக்கீரனை இந்த ஆங்கிலத் தொலைக்காட்சி வர்ணிக்கிறது)


இதனால், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ், மத போதகரும் தமிழ் மையம் அமைப்பின் தலைவருமான ஜெகத் கஸ்பார் ஆகியோரது வீடுகளை குறி வைத்து நடந்து வரும் சோதனைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தற்போது பலத்த விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இவர்கள் குறித்து அந்தத் தொலைக்காட்சி, விடுதலைப் புலிகள் ஆதரவாளர் கஸ்பார் என்றும், விடுதலைப் புலிகள் ஆதரவுப் பத்திரிக்கை நக்கீரன் என்றும் கூறுவது விஷமத்தனமாகவே தோன்றுகிறது.


ஈழத் தமிழர்கள் என்றாலே ஒரு தீவிரவாதக் கூட்டம் போலவே சித்தரித்துப் பழகி விட்டவை இந்த ஆங்கில மீடியாக்கள். காரணம், இவர்களுக்கு இலங்கை விவகாரம் குறித்து எந்த ஆழமான அறிவும் கிடையாது. அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை வைத்து அன்றைய பொழுதை 'கத்திக் கத்தியே' கழிப்பது தான் இந்த அரைகுறை மீடியாக்களின் வழக்கம்."


எப்படியெல்லாம் யோசித்து கதையா திருப்ப முயற்சி பண்றாங்க பாருங்க.
உண்மையில் ஜெகத் கஸ்பாரும் நக்கீரன் வார இதழும் ஈழத்தமிழர்களின் ஆதரவு என்று யார் இவர்களை நம்ப வைத்தது? அத்தனை வடஇந்திய தொலைகாட்சிகளிலும் மாறன் சகோதரர்களுக்கு பங்கு இருக்கிறது. ஒரு விவகாரத்தில் இருந்து தப்புவதற்கு சொல்லப்படும் உதாரனங்களும் ஏற்புடையவையாகவே இருக்க வேண்டும். அந்த தொலைகாட்சிகளில் ஈழத்தமிழர்கள் ஆதரவு பத்திரிக்கை என்றோ புலிகள் ஆதரவு பத்திரிக்கை என்றோ வரவில்லை. திமுக ஆதரவு பத்திரிக்கை என்றே வந்துள்ளது. இணைப்பு இதில் உள்ளது (Kamaraj is an Associate Editor of pro-DMK magazine Nakkeeran.)
 
ஆங்கிலத்தில் படிக்காதவர்கள் யாரும் நேரடியாக தட்ஸ்தமிழ் மட்டும் படித்து இருந்தால் உண்மையில் ஈழத்தமிழர்களுக்கு இவர்கள் எல்லாம் ஆதரவானவர்கள் என்பது போலவும் ஈழதமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்பதற்காக தான் சோதனை செய்கிறார்கள் என்பது போல் அல்லவா நடிக்கிறார்கள்.

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் எல்லாரும் குற்றவாளிகள் இல்லையா? இந்த ஊழல்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஈழத்தமிழர்களின் பெயரை சொல்லி தான் இவ்வளவு நாளும் ஏமாற்றினீர்கள். ஊழல் குற்றசாட்டுக்குமா ஈழத்தமிழர்களை இழுப்பது ?

ஒருவேளை அவர்கள் IBN LIVE பற்றி சொல்லி இந்த விஷயத்தை திசை திருப்ப முயலலாம்
http://ibnlive.in.com/news/2g-scam-cbi-raids-nira-radias-office-residence/137456-3.html?from=tn

3 Response to "ஜெகத் கஸ்பாரும் நக்கீரன் வார இதழும் ஈழதமிழர்களுக்கு ஆதரவாளர்களா?"

 1. இந்த இரண்டு துரோகிகளும் ஈழத்தமிழின அழிப்புக்கு துணைபோன கோடரிக்காம்புகள்.வட இந்திய ஊடகங்களின் தமிழ் எதிர்ப்புணர்வு எப்போதும் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

  ஜெகத் கஸ்பர் ஈழத்தமிழர்களுக்காக எதுவும் சாதித்துவிடவில்லை. ஈழத்தின் அவதியை படம் பிடித்துக் காட்டி தமிழகத்தில் இசை நிகழ்ச்சிகள், இன்னபிற நிகழ்ச்சிகள் நடத்திக் கோடீஸ்வரனானது தான் அவரது சாதனை.
  http://www.asiantribune.com/index.php?q=node/4959

  நக்கீரன் பத்திரிக்கை நம்பகத்தன்மையை இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. பரபரப்பு வேண்டும், பயணத்தின் போது பொழுது போக வேண்டும் என்று படிப்பவர்களால் ஓடிக்கொண்டிருக்கும் வியாபாரம் அது.

  தாடி வைத்து முண்டாசு கட்டியவனெல்லாம் அல்கொய்தா அடியாட்கள் என்று அமெரிக்கர்கள் நடந்து கொள்வதைப் போல, வட இந்தியப் பத்திரிக்கைகள் ஈழ்த்தமிழர்களையும் புலிகளையும் பிரித்துப் பார்ப்பதில்லை. விவாதம் ஏதுமின்றி மாற்றிக் கொள்ளப்பட வேண்டிய கொள்கை அது. (http://hmsjr.wordpress.com/)

  "புலி பசித்தாலும் புல்லை திண்காது".அது போல "புலி எப்போதும் கிழட்டு நரிகளை கொல்லாது"

Popular Posts