நல்லவர்களா இல்லை கெட்டவர்களா?

முள்ளிவாய்க்காலில் நடந்தது ஒரு இனபேரழிவு என்பது உலக  நாடுகளுக்கு மட்டும் அல்ல, நம்மை போன்று வேடிக்கை பார்த்த அனைவருக்கும் தெரியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது இதற்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை பற்றிய பதிவு அல்ல இது? நாம் என்ன தான் எழுதினாலும் திருந்தாத திருந்த முயற்சி செய்யாதவர்கள் பற்றிய பதிவு இது.

சென்ற தேர்தலுக்கு முன்னர் பல போராட்டங்களில் மாணவ சமுதாயம் ஒன்றிணைந்து போராடினர். அதை எப்படி ஆளும்கட்சி  வேறு ஒரு கட்சியை வைத்து கெடுத்தார்கள் என்பதும் நமக்கு தெரிந்ததே. இவர்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், காரணம் இன்றி ஈழமக்களின் போராட்டங்களை கொச்சை படுத்தினர். இதில் தவறு யாரிடம் உள்ளது??? போராட்டம் நடத்தியவர்களின் நோக்கம் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதில் தான் இருந்தது. அதில் கலந்து கொள்வதாக கூறி அரசியல் செய்த விசமிகளின் முகமுடி இன்னும் கிழிக்கப்படவில்லை.

இன்னும் அவர்களின் போராட்டங்களால் படித்தவர்கள் மட்டும் அல்ல வேடிக்கை பார்கின்றவர்களும் குழம்பி போகின்றார்கள். ஒருவேளை இவர்கள் தான் உண்மையாக போராடுகிறார்களோ என்று.
ஆனால் இந்த தேர்தலில் மாற்றங்கள் கொண்டுவந்தது தேர்தலில் புதிதாக வாக்களித்தவர்கள் தான் என்பது தற்போதய செய்தி.

இந்த புதிதாக சேர்ந்த வாக்காளர்கள் தான் இந்த முறை புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர். இதுவரை ஏமாற்றப்பட்டு அடக்கி வைத்திருந்து இருந்த மாணவர்கள் இப்போது அந்த ஏமாற்று கூட்டத்திற்கு தேர்தலில் சரியான பாடம் கற்பித்து உள்ளனர்.இருந்தாலும் பதிவுலகத்திலும் படித்தவர்கள் மத்தியிலும் அவர்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்ற விவாதம் சென்று கொண்டே தான் இருக்கின்றது.


இதற்கு முற்றுபுள்ளி வைக்க ஒன்று புலிகளின் தரப்பில் இருந்து யாரேனும் முன் வர வேண்டும். இல்லை இவர்களாக உண்மையை ஒப்பு கொள்ளும் நிலை வர வேண்டும்.
 
ஈழத்தமிழர்களை காக்க ஈழத்தமிழர்களே போதும். அவர்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் கேட்டது செய்யும் சக்திகளுடன் சேராமல் இருப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி/ கைம்மாறு/ பிச்சை/மனிதாபிமானம்

மில்லியன் டாலர் கேள்வி

தேர்தல் முடிந்து விட்டது. ஜெயலலிதாவும் பதவி ஏற்று விட்டார். இனி அடுத்தது என்ன? ஜெயலலிதா காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பாரா இல்லையா? இந்த கேள்வி தான் இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி.
காங்கிரஸ் கட்சியின் தலைவியும் உடனே ஜெயலலிதாவிற்கு தேநீர் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து வருகிறார். வழக்கமாக தேநீர் விருந்து எல்லாம் ஜெயலலிதாவே ஏற்பாடு செய்ய சொல்லுவார். ஆனால் இம்முறை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. ஆக காங்கிரஸ் கட்சிக்கு திமுகவை கழட்டிவிடும் எண்ணம் இன்னும் மெருகேறி இருக்கிறது என்பது தெரிகிறது. கழட்டிவிடுவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்ட ஒன்று என்றால் ஏன் தேர்தலுக்கு முன்னரே கழட்டி விடவில்லை. காங்கிரஸ் கட்சியோடு இதுவரை அதிமுக கூட்டணி பற்றி பேசவே இல்லை என்பது மற்றொரு உண்மை. காங்கிரஸ் கூட்டணி அமைக்க விரும்பியது தேமுதிகவுடன் மட்டுமே. அப்படியென்றால் இந்த தேநீர் விருந்து உண்மையில் அதிமுகவை கூட்டணிக்கு அழைக்கும் விருந்தா? இல்லை வேறு எதற்கும் வழிவகை செய்யபடுகிறதா?

தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து என்னவென்றால் காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டணி அமைக்க வேண்டும்.அப்படி அமைக்கப்படும்போது தான் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கழட்டி விடப்படும். திருடர்கள் இருவரும் பிரியும்போது ஒரு சூழ்நிலையில் இதுவரை பாதுகாத்து வந்த ரகசியங்கள் எல்லாம் வெளி வரும். திமுக மீண்டும் தனது செல்வாக்கினை உயர்த்தவேண்டுமானால் காங்கிரஸ் மற்றும் அதிமுகவை எதிர்க்க வேண்டும். தேமுதிகவெல்லாம் ஒரு கட்சி என்று அதனை எதிர்த்து அரசியல் செய்ததால் தான் திமுக இந்த நிலையில் இருக்கிறது. காங்கிரஸ் அதிமுகவை ஒன்றாக எதிர்க்க இருவரும் ஒரே கூட்டணியில் இருந்தால் தானே நன்றாக இருக்கும். அந்த வாய்ப்பு திமுகவிற்கு இந்த கூட்டணி மாற்றத்தால் தான் கிடைக்கும். காங்கிரஸ் எடுக்கும் ஒவ்வொரு அடியும் திமுகவை சீண்டி பார்க்கும் நிலையில் இருக்கும்போது ஈழத்தமிழர்களுக்கு இருவரும் சேர்ந்து(காங்கிரஸ் + திமுக) இருக்கும்போது செய்த பல துரோகங்களை திமுக வெளிக்கொணரும்.


இது அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் நான் ஒன்றும் தீர்க்கதரிசி இல்லையே இதுவெல்லாம் நடக்க.


உண்மையில் என்ன நடக்க போகின்றது என்றால் திமுகவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஒழிய காங்கிரஸ் திமுகவை இப்போதைக்கு வெளியே அனுப்பாது. ஒரு வேளை அதிமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் அதையும் செய்யும். ஆனால் அது தான் நடக்காதே. அதிமுக இந்த முறை தெளிவாக உள்ளது. காங்கிரஸ் உடன் கூட்டணி கிடையாது என்று. காங்கிரஸ் இன்னும் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை கூட்டணியை மாற்றி கொள்ளாது.

இந்த நிகழ்வெல்லாம் நடக்காமல் இருக்கும் திமுக என்றொரு கட்சி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை இருந்தால்.

இலவசம் வேண்டுவோர் கவனிக்க

இன்று விஜய் டிவியில் நீயா நானா பார்க்கும்போது கவனித்த விஷயங்கள். இலவசம் வேண்டும் என்று கேட்கும் நபர்களுக்கு நான் கேட்க நினைத்த கேள்விகள் பின்வருமாறு


 1. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிகணினி(Laptop) தேவையா? அவர்கள் அதில் படிப்பு சம்பந்தமாக என்ன செய்ய முடியும்? படம் பார்க்க முடியுமே (Except computer science students) என்று கூறுகிறார்களோ?
 2. மின்சாரமே இல்லாத வீட்டில் தொலைகாட்சிபெட்டியால் என்ன பயன்?
 3. படிப்பதற்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது சரியாக இருக்கலாம். அனைத்து சமுதாயமும் கல்வியில் பங்கேற்க வேண்டும் என்பதும் சரியே. ஆனால் வேலையில் இட ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம்? இட ஒதுக்கீடு என்பதற்கு பதில் எல்லாருக்கும் கட்டாய கல்வி கொண்டு வரலாமே. சரியாக படிக்காதவர்களை அரசு வேலையில் கொண்டு போய் உட்கார செய்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?
 4. இந்தியாவில் மானியத்தில் தான் பெட்ரோல், டீஸல் விற்கிறார்கள் என்கிறார்கள்? இது உண்மையா? பிறகு ஏன் விலையேற்றம் எல்லாம்? பக்கத்து நாடுகளில் இப்படி தான் விலை ஏறுகிறதா?
 5. தொலைகாட்சிபெட்டிகள் இல்லாதவர்கள் ஒரு கோடி பேர் என்றால் இவர்கள் ஏன் ஏற்கனவே தொலைகாட்சிபெட்டி இருப்பவர்களுக்கும் சேர்த்து தொலைகாட்சிபெட்டிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றனவே அதற்கு என்ன செய்ய போகிறார்கள்?
 6. இலவசம் கொடுப்பதற்கு பதில் கல்வியை மேன்படுத்தலாமே. அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தையும் அரசுடமை ஆக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை.
 7. இலவச எரிவாயு இணைப்பு கொடுத்தல் தவறு இல்லை. அதற்கு ஏற்றவாறு தட்டுபாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா? அடுப்பு எரித்து சமைக்கும் குடும்பங்கள் இந்த எரிவாயு இணைப்பினை எப்படி உபயோக படுத்த முடியும். சிலிண்டர் வாங்கும் அளவுக்கு பணம் அவர்களுக்கு எங்கே இருந்து கிடைக்கும்? அதற்கு பதில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு எற்படுத்திருக்கிறார்களா?
 8. அடிப்படை உரிமைகளே இன்னும் சரி செய்யாதபடாதபோது தற்போது அறிவித்துள்ள இலவசங்கள் மக்களின் மேல் வரிச்சுமையை  எற்றாதோ?
 9. வெளிநாடுகளில் சென்று படிக்கும் நம் மாணவர்கள் படிக்கும்போதே வேலை பார்க்கிறார்கள். உங்களால் படிப்புக்கு முழுதொகையும் செலுத்த முடியாது என்பதால் அந்த அந்த மாநிலங்களில் அவர்களுக்கு பகுதி நேர வேலைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதையே இங்கேயும் செய்யலாமே.
 10. அரசின் இலவசங்களால் படித்து விட்டு மேலை நாடுகளில் சென்று குடியேறிவர்களுக்காக தான்  IITs, IIMsஅமைக்கபட்டனவோ?
 11.  உண்மையிலே இட ஒதுக்கீட்டின்படி தான் அந்தந்த சமுதாயத்தின் பொருளாதாரம் இருக்கிறதா? தாழ்த்தபட்டவர்களிலும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அய்யர் அய்யங்கார்களிலும் ஒரு வேளை உணவிற்கு கஷ்டபடுபவர்கள் இருக்கிறார்களே? ( நாங்கள் அப்போது கஷ்டப்பட்டோம் இப்போது அவர்கள் கஷ்டப்படட்டும் என்று சொல்லுவது மனித நேயம் இல்லையே)
 12. இலவச மானியங்கள் எல்லாம் எத்தனை ஏக்கர் நிலம் வைத்து இருப்பவர்களுக்கு கொடுக்கபடுகின்றன? ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து இருப்போர் தான் ஏழை விவசாயியா? உண்மையில் ஏழை விவசாயியை எப்படி இந்த அரசு கண்டுபிடிக்கிறது? வருமான வரி சான்றிதல் வைத்தா?  நில உச்சவரம்பு சட்டம் இன்னும் அமலில் இருக்கிறதா?
 13. வட்டிக்கு விட்டு சம்பாதிப்பவர்களும் வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் தான் சம்பாதிப்பதாக கணக்கில் காட்டுகிறார்கள். அவர்கள் பிள்ளைகளும் மானியங்களை(Scholorship) தானே வாங்குகிறார்கள்.
  எதன் அடிப்படையில் மானியங்கள் கொடுக்கபடுகின்றன. வருடத்திற்கு இவ்வளவு தொகையை செலவு கணக்கில் காட்ட வேண்டும் என்பதற்காகவா?
 14. வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் ஏன் தனியார்துறையில் அதை கட்டாயபடுத்தவில்லை?
 15. வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் அவர்களின் நிறுவனங்களில் முதலில் கொண்டுவரலாமே. முதலில் சதம் பெண்களுக்கு கொடுத்து இதனை ஆரம்பிக்கலாமே. (வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் தங்களின் நிறுவனங்களில் தங்களின் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை என்றோ அல்லது திறமையின் அடிப்படையிலோ தானே வேளை கொடுக்கிறார்கள்)
 16. தனியார் நிறுவனங்கள் எல்லாம் மென்பொருள் நிறுவனங்கள் அமைக்கும்போது ஏன் அரசு அந்த தொழில் இறங்கவில்லை?

33 சதவிதம் கொடுப்பது இருக்கட்டும்

இந்த பதிவு பெண்களை பழித்து எழுதப்பட்ட பதிவு அல்ல. இன்றைய பெண்களின் நிலை பற்றிய பதிவு.

இன்றைய பெண்களில் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களில் பலருக்கு மகளிர் இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியவில்லை. இட ஒதுக்கீடு என்றால் அவர்களை பொறுத்த வரையில் ஆண்களின் இடத்தை பிடித்தல் என்ற அர்த்தத்தில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். (தொண்ணூறு சதம் அப்படி தான். மற்றவர்கள் என்னை மன்னிக்கவும்) . அவர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி தான் தெரியவில்லை என்றால் நாட்டின் அரசியலும் தெரியவில்லை. நாட்டில் என்ன நடக்கின்றது என்றும் தெரியவில்லை. விடுதலை போராட்டத்திற்கும் தீவிரவாததிற்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. (ஆயுதம் ஏந்தியவர்கள் எல்லாரும் போராளிகள் அல்லர்; போராளிகள் எல்லாரும் ஆயுதம் தரிப்பதில்லை)
 
சே குவேராவை டி- சர்ட்டில் அணிந்து செல்லும் பெண்களுக்கு அவர் யார் என்ற கேள்வி எழுவது இல்லை. விசாரித்து பார்த்தால் அவர் ஒரு பாப் சிங்கர் என்று சொல்கிறார்கள். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பெண்களுக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை கேட்பதற்கு கூட விருப்பம் இல்லை  ஆனால் மற்றவர்களின் பாலியல் சம்பந்தப்பட்ட அந்தரங்க விஷயங்களில் அவர்களின் ஆர்வம் அளவிட முடியவில்லை. ஒருத்தருக்கு சாப்பாட்டு பொட்டணம் வாங்கி தந்ததை பெருமையாக சொல்லும் பெண்களுக்கு தங்கள் அருகிலே ஒருவர் முதியோர் இல்லம் வைத்து நடத்தினாலும் தெரிவதில்லை.
 
ஒரு வேலை தங்களுக்கு ஆக வேண்டுமானால் யாரையும் சந்திக்கும் அதே நேரம் வேலை ஆனவுடன் அவர்களின் இருப்பிடம் கூட உதவி செய்தவருக்கு தெரிவதில்லை.
வேலை செய்யும் ஆண் பெண் இருவரில் வேலை தெரியவில்லை என்றால் இரவென்றாலும் ஆண் வேலை செய்ய கட்டாய படுத்தபடுகிறான். அதே நேரத்தில் பெண் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தாலும் குறிப்பிட்ட நேரம் அதாவது வேலை நேரத்தை விட அதிகமாக வேலை செய்ய கட்டாயபடுத்தபட்டால் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் விடுவதில்லை. ஒரே வேலைக்கு ஒரே நிலையில் இருக்கும் இருவரில் யார் நன்றாக வேலை செய்கிறார்களோ அவர்களுக்கு தானே அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். சரியாக வேலை செய்யாத பெண்களும் வேலை செய்யும் ஆண்களும் ஒரே சம்பளம் கேட்பது சரியா? வேலை செய்ய சொல்லும்போது  நான் பெண் என்று கூறும் பலர் சம்பள உயர்வு கேட்கும்போது அதை ஞாபக படுத்துவதில்லையே. அது ஏன்?
 
இது இப்படியென்றால் பேருந்தில் பயணம் செய்யும்போதும் ஆண்கள் உட்கார்ந்து இருப்பது பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் இருக்கைகளாக இல்லாமல் இருந்தாலும் ஆண்களை எழ வைத்து அந்த இடங்களை பிடிப்பது வழக்கமாகின்றது.( முதியோராக இருந்தால் இடம் அளிப்பது ஆண்களே).ஆக பொது விடயங்களில் தொடங்கி அரசியல் வரை அவர்கள் இன்னும் வளர வேண்டிய சூழல் இருக்கின்றது. எதையும் நேர்மையாக சாதிப்பதற்கு பதில் கண்ணீரால் சாதிப்பதை தவிர்த்து மேற்கண்ட விடயங்களில் ஆண்களுக்கு நிகராக அவர்களும் வர வாழ்த்துகிறேன். (அப்பாடா தப்பிச்சேன்).

மீண்டும் தகவல் சொல்ல வந்துவிட்டார்கள்

ஐநா சபையின் ஈழத்தமிழர்களின் படுகொலை சம்பந்தமான அறிக்கை வந்துவிட்டது.எல்லாருக்கும் தெரிந்த ஐநாவுக்கு தெரியாத அந்த படுகொலைகளை பற்றி ஐநா கடின முயற்சிகளுக்கு பின்னர் வெளி கொணர்ந்துள்ளது.(?) இந்த அறிக்கையின்படி இலங்கை போர்குற்றம் செய்துள்ளது உறுதியாகிறது. சரி ஒரு வழியாக அறிக்கை வந்து விட்டது அடுத்தது என்ன? அது தான் அறிக்கை கொடுத்து விட்டோம்ல வேறு என்ன உங்களுக்கு வேணும். கொல்லப்பட்டது உண்மை.(அப்படி தான் கொல்லுவாங்க-இந்தியா) அதற்காக பஞ்சாயத்து எல்லாம் செய்ய சொல்லக்கூடாது.
இந்தியாவிலே இந்திய குடிமக்கள் கொல்லபட்டதையே நாங்கள் கணக்கில் கொண்டு வரவில்லை. அப்புறம் எப்படி இந்தியாவை பஞ்சயாத்துக்கு அழைக்கிறார்கள் இந்திய அரசியல்வியாதிகள்( நானும் இந்திய குடிமகன் தான்.) ஒரு வேளை வேடிக்கை பார்த்த பிராந்திய வல்லரசு என்கின்ற முறையில் தலையிட சொல்கிறார்களோ? அதுவும் கிடையாது. காந்திய நாடு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட காரணத்தால் அழைக்கிறார்களோ? அதுவும் கிடையாது.(திலீபனின் அகிம்சை உண்ணாவிரத போராட்டம் அவரின் உயிரை குடிக்கும் அளவுக்கு சென்றும் இந்தியாவின் கல்மனம் இறங்கவில்லையே.) இலங்கை இனபடுகொலைகளில் இந்தியாவின் பங்கு இல்லாமல் இருந்திருந்தால் கூட பஞ்சாயத்து செய்யும் அருகதை இருந்திருக்கலாம். அருகதையே இல்லாத ஒரு நாட்டின் தலைமையிடம் முறையிட்டால் என்ன நடக்கும்? என்ன தான் எதிர்பார்க்கிறார்கள்? இந்தியா களத்தில் இறங்கி ராஜபக்ஷேவை கைது செய்து இந்தியாவிலேயே அதுவும் தமிழ்நாட்டில் வேலூர் சிறைச்சாலையில் அடைத்து விடுவார்களா  என்ன?
வேறு என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள் மக்களே?
சரி அடுத்த நாட்டின் பிரச்சினைகளில் நடுநிலையுள்ள எந்த நாடும் தலையிடாது(அந்த நடுநிலையான நாடு இந்தியா இல்லை). நம் நாட்டுக்குள் இருக்கும் பிரச்சினைகளை பார்க்கலாம் என்றால் ஊழல் தான் முதலில் வருகிறது. ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீட்டில் ஊழல் இருப்பது பாமரர்களுக்கும் தெரியும். அதை விசாரிக்க தணிக்கை குழு ஒன்று அறிவித்து அதன் அறிக்கை கூட வந்துள்ளது மன்னிக்கவும் கசிந்துள்ளது. ஊழல் நடந்தது உண்மை தான் ஆனால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே குழுவின் உண்மையான பரிந்துரை. உண்மையிலே மடியில் கணம் இல்லையென்றால் ஏன் இப்படி ஓடி ஒளிய வேண்டும்? நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியது தானே.

உண்மையில் மேல் சொல்லப்பட்ட இரண்டிலும் காங்கிரெஸ் திமுகவின் பங்கு இருக்கிறது. எல்லாருக்கும் தெரியும். ஆனால் தெரியாத விஷயம் ஒன்றே ஒன்று தான்.

ராஜபக்ஷேவையையும் கருணாநிதி குடும்பத்தையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி செய்வதற்கு ஒரே ஒருவருக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. அந்த நபர் சோனியா காந்தி. அவருக்கும் இது தெரியும். அதனால் தான் இருவரும் ஈழத்தமிழர்களின் போரில் சோனியா காந்திக்கு இருக்கும் அந்த சந்தற்பத்தை அவருக்கு எடுத்து கூறி களத்தில் இறக்கினர். அவரும் விடுவாரா என்ன? களத்தில் இறங்கி கொன்று குவிக்க ஒப்புதல் அளித்தார். புலிகளிடம் சிக்கியிருக்கும் மக்களை காப்பாற்ற மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினர். சுதந்திரமாக புலிகளின் நாட்டினுள் வாழ்ந்த ஐந்து லட்சம் மக்களில் மூன்று லட்சம் மக்களை கொன்று விட்டு மற்றவர்களை முகாம் என்ற பெயரில் அடைப்பதற்கு பெயர் தான் மனிதாபிமான நடவடிக்கை.இந்த நடவடிக்கை இப்போது அண்டை நாட்டில் நடந்துள்ளது. சரி. நம் நாட்டில் ஊழல்வாதிகளை தடுக்க முடியாத அதே அரசு இந்திய அளவில் மட்டும் அல்ல உலக அளவிலும் ஊழல்களை வளர்த்து வருகிறது. ஐநா நினைத்து இருந்தால் இந்த படுகொலைகளை தடுத்து இருக்க முடியும் என்பது ஐநாவின் முன்னாள் அதிகாரி கூறியிருக்கிறார். சரி இதை தவிர்த்து இருக்க முடியும் என்றால் தடுக்காமல் இருக்க யார் என்ன செய்தார்கள் எவ்வளவு கொடுத்தார்கள். ஐநாவின் பொது செயலாளர் பாகி மூன் அப்பாவி என்கிறார்கள்.(?) அடுத்த நிலையில் நம்பியார் இருக்கிறார். இவர் தான் வெள்ளை கொடியுடன் புலிகளின் தலைவர்களை சரணடைய கூறியவர். இவர் அப்பாவி என்றால் நம்புவதற்கு யார் இருக்கிறார்கள்? ஆக குற்றம் செய்தவர்களும் குற்றம் நடப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து குற்றத்தை விசாரிக்க இருக்கிறார்களாம். அதை வலியுறுத்தியவர்கள் யார் என்றால் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களும் வேறொரு பிரச்சினையை சமாளிக்க மற்றொரு பிரச்சினையை கிளப்பும் கேடுகட்ட இந்த நடைமுறை எப்போது மாறுமோ?

என்னை பொறுத்தவரையில் ஊழலுக்கு மரண தண்டனையே சரியான தீர்வாக அமையும். இல்லையென்றால் இந்த நாடும் மக்களும் புரையோடி போயிருக்கும் ஊழலில் திளைத்து ஒரு நிலையில் வெறுத்து ஆயுதம் எடுக்க நேரிடும்.

Popular Posts