முறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2

சென்ற பதிவில் நிலம் சம்பந்தமாக குறிப்பிட்ட விடயங்கள் போக இருப்பது நிலத்தை வாங்குதல் அல்லது விற்றலில் இருக்கின்றது.

இப்போது ஒரு நிலத்தை வாங்க முடிவு செய்து உள்ளீர்கள் என்றால் அதனை பற்றிய விடயங்களை ஆராய பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. அப்படி சென்றாலும் வில்லங்கம் சம்பந்தமாக விசாரிக்க நாம் தனியாக லஞ்சம் தர வேண்டி இருக்கிறது. இதையே நாம் முழுவதுமாக கணினி மயமாக மாற்றினால் என்ன? ஒரு இணையத்தளம் மூலம் நீங்கள் பணம் செலுத்திய பின்னர் அந்த குறிப்பிட்ட நிலத்தினை பற்றிய விவரங்களை காண்பித்தால் அரசுக்கும் வருமானம், நிலத்தை வாங்குபவருக்கும் இருந்த இடத்தில் இருந்தே வேலை நடக்கும். நிலத்தை வாங்குபவர் தவிர வேறு யாரும் இதனை பயன்படுத்துவதையும் தடுக்கலாம். இதன் மூலம் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் புகுவதை தடுக்கலாம். இடைத்தரகர்களையும் தவிர்க்கலாம்.

நிலத்தை பார்த்தாச்சு. அடுத்து பதிவு செய்தல் தானே. நிலத்தை வாங்கும்போது பணத்தை கொடுக்க வேண்டும். அதற்கு பதில் ஒரு வங்கியில் உள்ள ஒரு கணக்கில் இருந்தே இதனை முடிக்கலாமே. எப்படி என்றால் உங்களுடைய சேமிப்பு கணக்கு உள்ள வங்கியில் இருந்து நீங்கள் விற்பவரின் கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும்போது அதனை வங்கி தனிப்பட்ட கட்டணம் வாங்கி கொண்டு அதற்கு சான்றிதல் வழங்கி அதனை அப்படியே இணையதளம் மூலமே பத்திர பதிவு செய்யலாம். இந்த பத்திர பதிவிற்கு

வங்கியானது சாட்சியாக இருக்கும் அல்லது வங்கியின் மேலாளர் சாட்சியாக இருப்பார். இதில் பதிவாளர் செய்ய வேண்டியது என்ன வென்றால் அவரும் இணைய தளத்தின் மூலம் அந்த பத்திர பதிவில் செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்தப்பட்டு உள்ளனவா என்று பார்த்து இணையத்தளம் மூலம் அதனை சான்றளிக்க வேண்டும். எல்லாம் சரி என்றால் வாங்கியவரின் வீட்டு முகவரிக்கு அந்த பத்திரம் அடுத்த ஏழு நாட்களுக்குள் வரும்படி செய்யலாம்.

இதில் எந்த ஒரு இடத்திலும் லஞ்சம் வர வாய்ப்பும் இல்லை.

அடுத்தவருக்கு பத்து சதம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.


நிலம் வாங்குவதற்கும் விற்பதற்கும் வழிமுறை செய்து விட்டோம். அடுத்து?

அரசு நிலங்களையும் புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள். அவர்களை என்ன செய்வது? நம் நாட்டில் இருப்பதிலே ஒரு கடினமான கேள்வி இது தான்.

இவர்களை என்ன செய்வது? சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தால் மற்ற கட்சியினர் அதனை அரசியல் ஆக்குவார்கள். காலி செய்வது கடினம். இதற்கு முதலில் இவர்கள் ஏன் இங்கே வந்து குடியேறினார்கள் என்று பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வேலை தேடி அந்த அந்த மாநில தலைநகரத்தில் இப்படி பட்ட இடங்களில் முதலில் குடியேறுகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரங்கள் என்ன? கடல் அல்லது அதனை சார்ந்த இடங்களில் இவர்கள் குடியேறி இருந்தாலும் இவர்கள் மீனவர்கள் கிடையாது. இவர்கள் சென்னையை சுற்றி இருக்கும் குப்பங்களில் குடியேறி இருந்தாலும் அந்த குப்பங்கள் சென்னையின் வரலாற்றில் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது சட்ட விரோத நில ஆக்கிரமிப்பிற்கு மீண்டும் இதே மக்கள்தொகை பெருக்கம் தான் காரணம். இங்கே வந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது ஏற்கனவே குடிசையில் இருக்கும் மக்களும் தங்களின் சந்ததிகளை பன்மடங்கு பெருக்கி இருப்பார்கள். இவர்களோடு புதிதாக கூலி வேலை தேடி இங்கே வருபவர்களும் அந்த அந்த பகுதியில் இருக்கும் அரசியல்வாதிகள் மூலம் தற்காலிகமாக இருக்க சில இடங்களை பெறுகின்றனர். பின்னர் வருடங்கள் கழிந்தாலும் இவர்கள் வேறு இடங்களுக்கு செல்லாத காரணத்தால் அந்த பகுதிகளில் இருக்கும் இவர்கள் அந்த இடங்கள் இவர்களுக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர்.( ஒரு வீட்டில் பதினைந்து வருடங்களுக்கு மேல் வாடகைக்கு குடியிருந்தால் அந்த வீட்டை வாங்க குடியிருந்தவருக்கு முழு உரிமை இருக்கிறது). ஆனால் இது பொறம்போக்கு அல்லது சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு பொருந்தாது. அதனால் இவர்களின் எங்கே இருந்து இங்கே வந்தார்களோ அங்கேயே இவர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் இவர்கள் இங்கே இருந்து கிளம்பி விடுவார்கள். ( புதிதாக எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் தொடங்க வலியுறுத்த வேண்டும். இந்த மாவட்டங்களில் இதற்கு மேல் தொழில் தொடங்க அனுமதித்தால் அது மக்கள் தொகை வெடிப்பிற்கு வழி வகுக்கும்.)ஆக்கிரமிப்பு ஓரளவு இதன் மூலம் கட்டுக்குள் வரும். அடுத்து ஒவ்வொரு பகுதியிலும் வடிகால் வசதியும், அதற்கேற்ப சாலை வசதியும் ஏற்படுத்த வேண்டும்.

நிலம் சம்பந்தமான மற்ற விடயங்கள் அடுத்த பதிவிலும் தொடரும்.

முறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-1

ஏற்கனவே ஊழலை பற்றி நாமும் மற்ற சக பதிவர்களும் எழுதியதில் ஊழல்வாதிகள்
எல்லாரும் திருந்திவிட்டதால் மற்ற பிரச்சினைகளை பற்றி எழுதலாம்
என்று இதனை ஆரம்பித்து உள்ளேன்.
நம் நாட்டில் முறைபடுத்தபடாத பல விடயங்கள் இருக்கின்றன. அதனை பற்றி அலசுவதற்கே இந்த பதிவு. சிறு உதாரணத்திற்கு பெட்ரோல் விலையேற்றம் ஏறிக்கொண்டே சென்றாலும் அரசு இரு மடங்கு ஏற்றினாலும் அதை அப்படியே மற்றவர்களும் செய்கிறார்கள். பெட்ரோல் விலை ஏறும்போது ஒரு முறையும் அரசு பேருந்து கட்டணம் ஏறும்போது ஒரு முறையுமாக ஏற்றினால் என்ன அர்த்தம்? ஷேர் ஆட்டோவில் கிண்டியில் இருந்து ராமாபுரம் சந்திப்பிற்கு முன்னர் பத்து ரூபாய் என்றால் இப்போது இருபது ரூபாய். தட்டி கேட்க முடியாது. அரசு ஏற்றினால் மட்டும் கேட்கிறீர்களா என்ன என்பது தான் அவர்களின் கேள்வி. அது சரி! இதற்கு முன்னர் பேருந்தில் ஐந்து ரூபாய் இப்போது எட்டு ரூபாய் என்று இருக்கிறது என்றால் ஷேர் ஆட்டோவில் இருமடங்கு ஏற்றியதற்கு அரசே ஆதரிக்கிறதா இல்லை இதனை யார் அங்கீகரிகிறார்கள்? இது ஒரு உதாரணம் தான். உண்மையில் இது வெளியில் தெரிவது. தெரியாமல் இருப்பவன ஏராளம்.

எல்லா விடயத்திலும் ஜப்பானை போல் நாமும் இருந்தால் என்ன என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்? ஜப்பானில் நூற்றில் தொண்ணூறு சதம் மலையும் அதனை சார்ந்த பகுதியுமாக இருக்கின்றது.இதில் சில மலைகளில் உறங்கும் எரிமலைகள் இருக்கின்றன. அதனால் மக்களுக்கு என்ன என்ன அடிப்படை தேவைகளோ அதனை அரசே முன்னின்று செய்கிறது. அதாவது ஒரு வீடு என்றால் அதற்கு தேவையான மின்சாரம், எரிவாயு மற்றும் தண்ணீர் போன்றவற்றை அரசே தருகிறது. ஒரு வீட்டின் பயன்பாட்டிற்கேற்ப அதற்கு கட்டணம் அரசிற்கு கட்ட வேண்டும். நம் அரசுகளோ இந்த மூன்றையும் தன்னுடைய முழு கட்டுபாட்டில் வைத்து கொள்ளாமல் தனியாரிடம் சிலவற்றை நேரடியாகவும் பலவற்றை மறைமுகமாகவும் கொடுத்து உள்ளன. அதனால் எதனையும் முழுவதுமாக அரசினால் கட்டுபடுத்த முடியாமல் இருக்கின்றன.அப்படி கட்டுபடுத்த முடியாமல் இருப்பது அடிப்படை தேவைகள் மட்டும் இல்லை. அதனையும் தாண்டி சிலவற்றை கட்டுபடுத்தாமல் விட்டு உள்ளோம். அந்த சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.


 
 
முதலில் தெரிவது நிலம்.


நம் நாட்டில் நூறு சதம் முறையாக வடிவமைக்கப்பட்டு உருவான நகரங்கள் எதுவும் இல்லை. இதிலென்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள். இப்போது சென்னையின் நகர எல்லை தாம்பரம், சோழிங்கநல்லூர், ராயபுரம், அம்பத்தூர் என்று எடுத்து கொள்வோம்.இந்த எல்லைகளுக்குள்ளே எந்த ஒரு பகுதிக்காவது முழுமையான சாலை வசதி இதுவரை செய்து கொடுக்கப்பட்டு உள்ளதா? அப்படி செய்து கொடுக்க அவர்களால் முடியாத பொழுது ஏன் மேலும் குடியிருப்புகள் அமைவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். ஏற்கனவே அனுமதி கொடுத்து குடியிருப்புகளோ அல்லது வீடுகளோ கட்டி கொண்டு குப்பைகள் போல சாலைகளிலும், சரியே அமையாத அடிப்படை வசதிகளுடனும் வாழ்பவர்கள் இருக்கும் நிலையில் ஏன் அப்படி ஒரு நிலையினை மேலும் பெருக்க வேண்டும்?

இப்போது சென்னைக்குள் இருக்கும் விளைநிலங்கள் என்று பார்த்தால் ஒரு சதம் இருக்கிறது. அதை தவிர பசுமைபகுதி அல்லது காடு என்று பார்த்தால் எட்டு சதம் இருக்கிறது. இதனை தவிர மற்ற நிலங்களிலும் இப்போது இல்லையென்றாலும் இன்னும் இருபது வருடங்களில் எப்படியும் கட்டிடங்களோ அல்லது வீடுகளோ கட்டி விடுவார்கள். அதற்கு பின்னர் என்ன செய்வார்கள்? முதலில் இருக்கும் தனி வீடுகளை இடித்து விட்டு அதன் மேல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டினால் ஒழிய எதிர்காலத்தில் ஏற்பட போகும் இட நெருக்கடியை சமாளிக்க முடியாது. அப்படி எல்லாருமே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொண்டு அங்கே குடியேறினால் கூட அதற்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரவிருக்கும் இட நெருக்கடியை சமாளிக்க முடியாது.
இப்போது சென்னையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு கோடிக்குள் வருகிறது. இங்கே வேலை தேடிவருபவர்களால் மக்கள் தொகை அதிகமாகிறது என்றால் அதையே ஏன் அவர்கள் அங்கே செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க கூடாது. மென்பொருள் துறையில் வேலை செய்ய இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் மற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் அது ஒரு அறுபது லட்சம் வருகிறது.


எந்த ஒரு மென்பொருள் நிறுவனமாவது சென்னையை தவிர மற்ற இடங்களில் நிறுவனங்களை நடத்த முடியாது என்று சொல்லுகிறார்களா என்ன? அப்படியில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகள் எங்கு இருந்தாலும் அவர்கள் அங்கே தங்கள் நிறுவனங்களை நடத்த தயாராக இருக்கிறார்கள். அப்படி ஏற்படுத்தி கொடுத்தால் இங்கே இருக்கும் நிறுவனங்கள் வறட்சியில் இருக்கும் பல மாவட்டங்களுக்கு கொண்டு சென்று அந்த மாவட்டங்களில் நிறுவனங்களை நடத்தினால் சென்னையினை நோக்கி மக்கள் வருவது நிறுத்தப்படும். அந்த மாவட்டங்களில் அப்படி உருவாகும் நகரங்கள் முழுவதுமாக வடிவமைப்பு செய்த பின்னர் அதனை கட்டுபடுத்த முடியும்.

முறையான சட்டங்கள் இதற்கு மட்டும் அல்ல பல இடங்களில் தேவைபடுகிறது. நிலம் தொடர்பான மற்ற விடயங்களை அடுத்த பதிவிலும் தொடர்கிறேன்.

போலி முகங்கள்-3

எல்லா சோசியல் நெட்வொர்கிங் தளங்களுமே மில்லியன் கணக்கில் பயனாளிகளை கொண்டு இருக்கின்றன. அதில் முக்கியமானவை பேஸ் புக்(Facebook), ஆர்குட்(Orkut) மற்றும் ஹாய்பைவ்(Hi5). இதில் இருக்கும் பயனாளிகளில் நூறு சதம் உண்மையானவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களின் பயன்பாட்டு முறைகளும் பயன்பாடுகளும் தான் அவர்களை நிர்ணயம் செய்கின்றன. போலிகளை கீழ்க்கண்ட முறைகள் மூலம் கண்டறியலாம். ஆனால் அவர்கள் போலிகள் என்று முழுவதுமாக முத்திரை குத்த முடியாது.

 •  தன்னுடைய படத்தை தவிர மற்றவர்களின் படத்தை ஒருவர் போட்டு இருந்தால் அந்த கணக்கு உடையவரை கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு குழந்தையை படத்தை போட்டு இருந்தால் நாம் அவரை சந்தேக பட வேண்டியது இல்லை. அதற்கு பதில் அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் பெண்ணின் படமோ அல்லது ஆணின் படமோ இருந்தால் யோசிக்க வேண்டும். அதுவே ஆடைகளற்ற உடலின் படம் என்றால் கண்டிப்பாக அந்த கணக்கினை வைத்திருப்பவர் கண்டிப்பாக ஒரு போலி தான்.
 • பல ஆண்களின் கணக்கில் ஆண்கள் மட்டுமே இருந்தால் அதை வைத்து அவர்களை போலி என்று கூற இயலாது. அது அவரின் தலை எழுத்து.
 • அடுத்த முக்கியமான விடயம் அந்த கணக்கினை அவர்கள் தொடங்கியது எப்போது என்பது. நேற்று தொடங்கிய கணக்கில் இன்றைக்கு பத்து பேர் என்றால் ஏற்று கொள்ளலாம் ஐம்பது பேர் என்றால் யோசிக்க வேண்டும்.
 • ஒருவரின் கணக்கில் இருக்கும் படங்களை விட அவருடைய கணக்கின் பெயர் பல கார்டூன் படங்களுடன் சேர்க்கபட்டிருக்கும்.(tagged)
 • ஒரு சிலர்  தங்களின் கணக்கினை தொடங்குவது அந்த கணக்கில் இணைக்கப்பட்டு இருக்கும் இணையதள விளையாட்டுக்களில் விளையாடும்போது உங்களின் நட்பு வட்டத்தை விரிவாக்க சொல்லி அழைக்க வேண்டும்.( இல்லையென்றால் கோடி ரூபாய் உங்களின் கணக்கில் இருந்து சென்று விடும்!). அப்படி அழைப்பு விடுத்தும் நம்முடைய விளையாட்டுக்கு தோழர்கள் கிடைக்கவில்லை என்றால் தனியாக ஒரு சில போலி கணக்குகள் தொடங்கி அவர்களின் நட்பு வட்டத்தை விளையாட்டில் காட்டி மகிழ்கிறார்கள். ஒரு அளவுக்கு மேல் பல கணக்குகளில் இருந்து விளையாட முடியாது என்பதால் அவர்கள் உங்களை தொந்தரவு செய்ய கூடும்.
 • பெரும்பாலும் போலி கணக்கினை வைத்துள்ளவர்கள் தங்களின் கணக்கில் இருக்கும் படங்களை எல்லாரும் பார்க்கும் வகையில் வைத்திருப்பார்கள். அதாவது நீங்கள் அவருக்கு அன்னியமாக இருந்தாலும் கூட அவரின் கணக்கில் இருக்கும் தனிப்பட்ட படங்களை பார்க்கலாம். உண்மையில் எந்த ஒருவரும் தன்னுடைய அந்தரங்க படங்களை இப்படி பொதுவில் விட்டுவைக்க மாட்டார்கள்.
 • ஒருவரின் கணக்கில் இருக்கும் தகவல்கள் முழுமையாக இல்லாமல் sggdgdgdgdgdfg என்றோ அல்லது xxxx என்றோ அல்லது கிறுக்கியோ இருந்தால் நிச்சயம் அது போலி தான்.
 • முழுமையான கணக்கினை தொடங்க போலிகள் காத்திருப்பது இல்லை. அதற்காக எல்லா போலிகளும் அப்படி இருப்பதில்லை. ஒரு சிலர் நிறுத்தி நிதானமாக தங்களின் கணக்கினை மற்றவர் கவரும் வகையில் அல்லது சந்தேகபடாதவகையில் நிரப்பி இருப்பார்கள்.
 • போலிகள் தங்களுடைய கணக்கில் இடும் ஒரே வாசகம் இங்கே வந்து பாருங்கள் சொர்க்கம் தெரியும் என்பது போல் தான் இருக்கும். ஆக அவர்களின் முகப்பு பக்கத்தில் இடப்படும் வாசகங்களில் அது தெரிந்து விடும்.
 • ஒருவரின் கணக்கில் ஓராயிரம் பெண்கள் தினம் சேர்கிறார்கள் என்றால் நிச்சயம் அந்த கணக்கினை உடையவர் புகழ் பெற்ற ஒரு நபராக இருக்க வேண்டும். அல்லது அவர் போலி தான்.
 •  பெண்கள் பெரும்பாலும் தெரியாத ஆண்களை தனது நண்பர்களாக ஏற்று கொள்வது இல்லை. அப்படி இல்லாமல் ஒரு அழகான பெண்ணிடம் இருந்து உங்களுக்கு நண்பராக அழைப்பு(Friend Request) வந்தால் முதலில் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் யார் என்று. உங்களிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரிந்து விடும். நீங்கள் ஓமகுச்சி போல் உங்களின் புகைப்படத்தை போட்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு ஐஸ்வர்யா ராயின் தங்கையிடம் இருந்து நண்பர் அழைப்பு(Friend Request)  வந்தால் யோசிக்க வேண்டும் அல்லவா.
 • இதே கதை தான் பெண்களுக்கும். பெரும்பாலும் ஆண்கள் பெண்களுக்கு தான் நண்பர் அழைப்பு விடுகின்றனர். அதை விடுத்து ஒரு அழகு பெண் உங்களுக்கு நண்பராக இருக்க அழைத்தால் யோசியுங்கள்.
 • மேற்கண்டவை எல்லாமே உங்களுக்கு அவர்களை யார் என்றே தெரியவில்லை என்றால் நீங்கள் செய்ய வேண்டியது.
மேலே சொன்ன விடயங்கள் கடினமாக இருந்தால் முதலில் உங்களுக்கு தெரிந்திராத அல்லது பேசிடாத நபர்களை கணக்கில் வகைபடுத்துங்கள். அடுத்து அதில் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பாருங்கள். ஒன்றும் இல்லையென்றால் அவர்களுக்கும் உங்களுக்கும் பொதுவான நண்பர்கள் யார் என்று பாருங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பாருங்கள். அதுவும் ஒன்றும் இல்லையென்றால். உங்களுக்கு இடையில் பொதுவான விடயம் என்ன இருக்கின்றது பாருங்கள். அப்படி ஒன்றுமே இல்லையென்றால் நிச்சயம் அவர்களை நீக்குங்கள். இல்லையென்றால் அவர்களால் நீங்கள் பாதிக்கப்பட போவது இல்லையென்றாலும் உங்களின் நண்பர்கள் பாதிக்கப்படலாம்.

போலி முகங்கள்-2

போலியான முகவரிகளுடன்(Fake Profiles) இவர்களின் வாழ்க்கை தொடங்கினாலும் இவர்கள் ஏதோ ஒரு விடயத்தில் தூண்டப்பட்டு இந்த விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள்.அது விளையாட்டு என்று நினைத்து விட்டுவிட்டால் மறு நாளில் இருந்து அவர் நல்ல மனிதராக நட மாடலாம். ஆனால் அவர் அந்த போலி கணக்கினை தினமும் நான்கு மணி நேரங்களுக்கு மேல் உபயோகித்தால் அது சத்தியமாக ஒருவகை மன நோயின் அறிகுறி தான்.
இந்த நோய் ஒருவித தாக்கத்தை அவருக்குள் உண்டு செய்கிறது. பெண் போல் உடை அணிந்து கொண்டு ஒருவர் தினமும் வந்தால் அவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.(யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இப்படி எழுதவில்லை) தான் ஆண் இல்லையென்றே அவரின் உள்மனதில் பதியும் அல்லவா அதே போல் தான் இங்கேயும் பெண் பெயரில் ஒருவர் தன்னுடைய அந்தரங்க விடயங்களை விவரித்து கொண்டே இருந்தால் அங்கே அவர் அப்படி ஒரு பெண் இருப்பதாக எதிரில் இருக்கும் நபர்களை மட்டும் ஏமாற்றவில்லை. தன்னையும் தான்.இவர்கள் மனநோயினால் பாதிக்கபடுவது ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களை நம் நண்பராக இணைத்து கொண்டால் நாம் நமது கணக்கில் வைத்திருக்கும் குடும்பம் சம்பந்தமான படங்களை(Profile Pictures and albums) இவர்கள் முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இது ஒரு முக்கியமான விடயம்/எச்சரிக்கையும் கூட. உங்கள் வீட்டு பெண்களின் படங்கள் வெளியிடங்களுக்கு பரவலாம். பலான தளங்களில் இவர்கள் வேறு ஒரு படத்துடன் இணைத்து உங்களை பழி தீர்த்து கொள்ளலாம். அல்லது அத்தகைய படங்களை உங்களுக்கே அனுப்பி உங்களை வெறுப்படைய செய்யலாம்.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் ஒரு குழப்பமும் இருக்காது. ஏன் என்றால் அந்த கணக்கில் இவர்கள் ஒன்றி விடுகிறார்கள். அவர்களுடன் பழகும் போலிகளும் இவர்களும் தங்களை தானே ஏமாற்றிக்கொண்டு இதை ஒரு விதமான முறையில் பரப்புகிறார்கள். சரி பரப்பிவிட்டார்கள். அடுத்து என்ன செய்வார்கள்? நாம் பணத்தையோ அல்லது பொருளையோ இழந்தால் சரி என்று விட்டு விடுகிறோம். நம்மை ஒருவர் போலியான கணக்கில் இருந்து கொண்டு பேசியதை போல் ஜோடனை செய்யப்பட்ட விவாதங்களை வைத்து நம்மை அசிங்கபடுத்துகிறார் என்றால்?

இவர்களுக்கு பொதுவாக இருக்கும் பழக்கங்கள்.


இவர்கள் ஒரு நாளைக்கு பல மணிநேரம் செலவிட்டாலும் இவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் அல்லது கணிபொறி சம்பந்தமான வேலைகள் அல்லது கணிபொறி மூலம் வேலை செய்பவர்கள் இல்லை.

இவர்கள் தொடர்ந்து கணிபொறி அருகில் இருப்பதால் முதுகு வலி இருக்க வாய்ப்புண்டு. இவர்களுக்கு இரவு தூக்கம் சரியாக இருக்காது. இவர்களுக்கு புதிதாக எந்த ஒரு வேலையும் செய்ய தோன்றாது.(இது முற்றிலும் உண்மை.) வேலைகள் வந்தால் தலைவலி என்பார்கள்.

மன நோயாளிகளை பாதுகாப்பது எதற்கென்றால் முதலில் அவர்களும் மனிதர்கள் என்பதற்கு தான். நம்மாலோ அல்லது அவர்களாலே கூட அவர்களுக்கு தீங்கு நேரலாம். இதற்கு அடுத்து எல்லாரும் கவனிக்க வேண்டிய காரணம் ஒன்று தான்.


அவர்களால் நமக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் நம்மை பாதுகாக்க தான் மன நோயாளிகளை பாதுகாக்கிறார்கள் அல்லது அடைத்து வைக்கிறார்கள்.உண்மை இப்படி இருக்கும்போது நாம் எதற்கு அவர்களை நமது வீடு போன்ற இணைய கணக்கில் உள்ளே நுழைய விடவேண்டும்? உண்மையில் யார் யாருக்கு அதிகபடியான நண்பர்கள் வேண்டும்? ஏன் வேண்டும்? சாதாரண ஒரு நபருக்கு ஐம்பதுகளில் நண்பர் எண்ணிக்கை இருந்தால் அது ஏற்று கொள்ளலாம். அதிகபடியான நண்பர்கள் இருக்க வேண்டும் என ஏன் நாம் எதிர்பார்கின்றோம்? அதனால் யாருக்கு பலன் இருக்கின்றது?நான் ஒரு அரசியல்வாதி என்றால் என்னுடைய கருத்தினை பரப்ப ஒரு ஊடகம் தேவை. அதற்கு தான் என்றால் சரி.நான் ஒரு விற்பனையாளர் என்றால் என்னுடைய பொருட்களை விற்க அல்லது விற்பனை தளத்திற்கு நண்பர்களை கொண்டு செல்ல என்றால் அதுவும் சரி.நான் ஒரு புகழ் பெற்ற நபர்.என்னுடன் பலர் பேச முனைந்து நண்பர் அழைப்பு விடுகிறார்கள் என்றால் அதுவும் சரி.ஆனால்ஒரு 15 அல்லது பதினாறு வயது பெண் அல்லது பையனின் கணக்கில் ஆயிர கணக்கில் நண்பர்கள் இருந்தால் அது எங்கே அவர்களை கொண்டு போய் விடும் என்பதை யோசியுங்கள்.
 
ஒவ்வொரு விடயத்தையும் யோசித்து யோசித்து செய்யும் பெற்றோர்களுக்கு இது பெரிய சவால் தான். உங்கள் மகன் அல்லது மகளின் கணக்கில் இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை கண்காணியுங்கள்.
மற்றவர்களுக்கு வருவோம்.

யார் யார் எப்படியெல்லாம் உபயோகபடுத்துகிறார்கள் என்று விவரித்தேன். அப்படி ஒரு முகம் தெரியாத நண்பரின் நட்பினால் நீங்கள் பெற போவது என்ன? அவரின் இணையதளத்தை மற்றவர்களுக்கு கொண்டு செல்லவோ அல்லது அவரின் கருத்துக்களை நீங்கள் கேட்கவோ விரும்பவில்லை என்றால் முதலில் அவரின் கணக்கினை உங்கள் நண்பர் வட்டத்தில் இருந்து துண்டியுங்கள். அதிலே பாதி பிரச்சினைகள் குறையும்.தெரியாத நண்பரின் கணக்கில் எழுதியிருக்கும் வாசகங்களை அழுத்தி அது வேறு ஒரு தப்பான தளத்தில் உங்களை விட்டுவிட்டால் என்ன செய்வது? அதுவும் குடும்பத்தில் அனைவரும் இருக்கும்போது நடந்தால்?

அடுத்த பதிவில் போலிகளை கண்டுபிடிப்பது எப்படி என்று பதிய உள்ளேன்.

போலி முகங்கள்-1

உங்களில் பலருக்கு இந்த பழக்கம் இருந்திருக்கலாம் அல்லது இந்த பழக்கம் உடையவர்கள் உங்களின் பக்கங்களில் நுழைந்து உங்களை ஏமாற்றி கொண்டு இருக்கலாம். இந்த பழக்கம் உள்ளவர்கள் அனைவரும் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே மருத்துவ உலகங்கள் கூறுகின்றன. அப்படி என்ன பழக்கம் பற்றி நான் கூறுகின்றேன் என்றால் மற்றவர்களையோ அல்லது தங்களை தாங்களே ஏமாற்றி கொள்வதற்காக போலியாக ஒரு இணைய முகவரிகளுடன்(Fake Profile) உலாவரும் பழக்கம் தான். இவர்களை எல்லாம் கீழ்க்கண்ட இணைய தளங்களில் பார்க்கலாம்.
 • பொது குழுமங்கள்(Forums)
 • கல்யாண பதிவு இணையங்கள்(Matrimony Sites)
 • சோசியல் நெட்வொர்கிங் தளங்கள்( Social networking sites)
 • செய்தி தளங்கள்.(News sites)
பொது குழுமங்கள்(Forums):
நாம் எல்லாரும் ஒரு தளத்தில் ஒரு செய்தி பிடிக்கவில்லை அல்லது நமக்கு எதிராக இருந்தால் உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். இப்படி தெரிவிக்க முதலில் நமது பெயரில் இருக்கும் கணக்கின் மூலம் மறுப்பு அல்லது எதிர்ப்பை வெளியிடுகிறோம். அப்படி வெளியிட்டவுடன் உங்களின் மறுப்பு அல்லது எதிர்ப்புக்கு ஒரு மறுமொழி வர இப்படியே இது தொடர்கிறது. ஒரு நிலையில் நமது கணக்கின் மூலம் கொடுக்கும் பதிலுரைகளுக்கு வலுவூட்ட அதில் இன்னொருவரின் ஆதரவு தேவைபடுகிறது. அந்த இன்னொருவர் கிடைத்துவிட்டால் இந்த போலி முகங்களுக்கு வேலை இல்லை. ஆனால் எல்லாரும் கோவணம் கட்டி இருக்கும்போது நான் அப்படி இருக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் மனிதர்களுக்கு அவர்களே தொடங்கும் வேறு ஒரு கணக்கு தான் தோழன். அதாவது இல்லாத ஒரு நபரின் வாதத்தால் தனது வாதத்திற்கு வலு சேர்க்கும் திட்டம். இப்படி வலு சேர்க்கும் இவர்களின் திறமை போலி கணக்கு தொடங்குவதில் மட்டுமே இருக்கிறது. இவர்களுக்கு வாதத்திறமை கடைசி வரைக்கும் கிடைப்பதில்லை.அவர்களின் வாதமும் ஜெயிப்பது இல்லை.

கல்யாண பதிவு இணையங்கள்(Matrimony Sites):
வெளிநாடுகளில் இருக்கும் முறைகள் எல்லாம் இந்தியா வந்தால் எப்படி இருக்கும். அப்படி துணைகளை நாமே தேடுவதற்கு மேலைநாடுகளில் செயல்பட்டு வந்த முறைகளை போல இந்தியாவினுள் அறிமுகபடுத்தபட்ட தளங்கள் தான் இந்த இணைய தளங்கள். இதில் உறுப்பினர் ஆவது ஒன்றும் கடினமான வேலை இல்லை ஆனால் ஒரு நிலைக்கு மேல் உங்களால் அடுத்தவரின் தகவல்கள் எடுக்க முடியாது. அதற்கு கட்டணங்கள் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். (இதில் இருக்கும் மணமகன் அல்லது மனமகள்களின் தொலைபேசி மற்றும் வருமான விவரங்களை மற்ற நிறுவனங்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர்.)


இதில் போலிகள் எப்படி உருவாகின்றனர் என்றால் உங்களுக்கு அல்லது உங்களின் நண்பருக்கு உருவாக்கப்பட்ட அந்த கணக்கினை வைத்து நீங்கள் ரொம்ப நேர்மையாக எல்லாரையும் தொடர்பு கொள்கிறீர்கள் ஆனால் உங்களின் தகுதிகளை வைத்து உங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.பத்தாம் வகுப்பு படித்த மணமகன் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு அழைப்பு விடுகிறார் என்று வைத்து கொள்வோம். அந்த பெண்ணை பெற்றவர்கள் என்ன யோசிப்பார்கள் அல்லது என்ன செய்வார்கள்?இங்கே அந்த பெண்ணின் வீட்டில் இருந்து வரும் பதிலில் அல்லது பல காலமாக பதில் வராத காரணத்தில் அந்த பையன்/ மணமகன் என்ன செய்வார்? ஒரு வேலை அவர் சூழலை புரிந்தவராக இருந்தால் விடயம் அதோடு முடிந்து விடும். ஆனால் அப்படி இல்லை என்றால் அந்த நபர் தொடங்கும் விடயம் ஒரு போலியான மணமகன். அந்த போலிக்கு இந்த பெண்ணை விட படிப்பு அதிகம், வருமானமும் அதிகம். இப்படி அவரின் கற்பனையில் விளைந்த அந்த மணமகனை வைத்து அந்த மணமகளின் கணக்கிற்கு அழைப்பு விடுத்து ஏமாற்றுகின்றனர். அதற்கு அந்த பெண்ணின் வீட்டில் இருந்து மறு மொழி வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவர் உடனே நீங்கள் எனக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவர் என்று மறுமொழி அனுப்புவார்.
 
சோசியல் நெட்வொர்கிங் தளங்கள்( Social networking sites):
இந்த நூற்றாண்டுகளில் என்னவெல்லாம் சம்பாதிதீர்களோ அதையெல்லாம் விட உங்களிடம் ஒரு சோசியல் நெட்வொர்கிங் இணையதளத்தில் உங்களுக்கு கணக்கு இல்லாததை பெரிய குறையாக கூறும் காலம் இது. எப்படி பொது குழுமங்களில் தன் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு சிலர் போலியான கணக்குகளை கொண்டுள்ளனரோ அதே போல் சிலர் போலியாக கணக்குகளை தொடங்குகின்றனர்.அவர்கள் ஏன் தொடங்குகிறார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட காரணங்களில் எதோ ஒன்று அவர்களிடம் இருக்கிறது.
 • தனது கட்சிக்கு அல்லது தனது கொள்கைகளை எதிர்க்கும் நபர்களுக்கு எதிராக.
 • மறைமுக அல்லது தனது செக்ஸ் தேவைகளுக்காக.
 • தலித் அல்லது பார்பனிய கொள்கைகளை பரப்பும் போலியான வட்டங்களை உருவாக்குதல்.
 • பணம் கறக்க பெண்ணாக போலியான தகவல்களுடன்.
 • மார்க்கெட்டிங் எனப்படும் முறைக்காக.
இப்படி பல காரணங்கள் இருந்தாலும் பெண் போல இருக்கும் ஆண்கள் செய்யும் மார்கெட்டிங் அல்லது பணம் பிடுங்கும் முயற்சிகள் தான் அதிகம் நடக்கின்றன.


அடுத்த அளவில் செக்ஸ் தேவைகளுக்காக என்று இது போகின்றது.
 
செய்தி தளங்கள்.(News sites):
செய்தி தளங்களை பொறுத்த அளவில் இது வேறு விதமாக இருக்கிறது. தங்களுக்கு மட்டுமே அதிக வாசகர்கள் அல்லது படிப்பவர்கள் வருகிறார்கள் என்று மற்றவர்களை நம்ப வைக்கவும் அல்லது அதன் மூலம் மேலும் வாசகர்களை கவரவும் இந்த போலியான முகவரிகள் அல்லது கணக்குகள் அவர்களுக்கு தேவைபடுகிறது. மேலும் ஒரு செய்திக்கு தான் வெளியிடும் கருத்து மற்றவர்களால் கவரப்படுவதை அனைவரும் விரும்புகிறார்கள். அப்படி வெளியிடும் கருத்து முகத்தை சுளிக்கும் விதமாக இருந்தால் என்ன செய்யலாம். அதற்கு மறுமொழி கொடுக்கலாம் அல்லது நாமும் ஒரு போலியான முகவரியை உருவாக்கி அதிலிருந்து அதை விட மகாமட்டமான பதில் கொடுக்கலாம். இப்படி அவர்களின் வெறுப்பையோ அல்லது கண்டனத்தையோ தெரிவிக்க சிலர் போலியான முகவரிகளை உடைய கணக்குகளை உருவாக்குகின்றனர்.
 
 
இந்த போலியான முகவரிகள் அல்லது கணக்குகள் யாரையுமே பாதிக்காமல் இருந்தால் இப்படியொரு தொடரினை நான் எழுதும் நிலைக்கு வந்திருக்க மாட்டேன். எனது பேஸ்புக் முகவரியில் இருக்கும் நண்பர்களில் பலர் போலிகள் என்றே எனக்கு தெரியும். என்னுடன் படித்த நண்பர் ஒருவருக்கு போலியான இணையத்தளம் மூலம் வேலைக்கு வருமாறு என்னுடன் படித்த நண்பர்களில் சிலர் அனுப்பி இருக்கின்றனர். அவரும் அந்த முகவரிக்கு சென்று எல்லாம் பார்த்து விட்டு ஏமாந்து விட்டார். பின்னர் அவரின் இமெயிலில் மீண்டும் ஒருமுறை சரி பார்த்த பொழுது தான் மேற்படி விவரம் எல்லாம் போலிகள் என்று தெரிந்தது.( இப்போது வேண்டுமானால் இது போல் போலி பரிசு சீட்டு அல்லது ஓசி பண மோசடிகள் அதிகம் ஆனால் அப்போது இந்த அளவுக்கு கிடையாது.)


என்னுடன் கூட படித்தவர் ஒருவரின் ஈமெயில் கணக்கினை யாரோ ஒருவர் திருடி அதை திரும்ப ஒப்படைக்க பணம் கேட்ட சம்பவம் நடந்தது.

இதெல்லாம் விட ஆறு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய யாஹூ ஈமெயில் கணக்கினை யாரோ திருடி எல்லாவற்றையும் அழித்து விட்டனர். இப்படி எல்லாம் செய்ய இவர்கள் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதும் இதில் அவர்களின் ஆதாயம் பற்றியும் தான் நான் யோசித்தேன்.

ஆனால் அதையும் மீறி சில விடயங்கள் இருக்கின்றன என்பது தெரிந்தது. அதை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

மன்னிக்கவும்

அடுத்தடுத்து துக்க நிகழ்வுகள் நடந்ததால் என்னால் எழுத இயலவில்லை. மன்னிக்கவும்.

ஊழல்களை பற்றி பேசுவதற்கு ஊழல்வாதிகளுக்கு மட்டும் தான் தகுதி உண்டா?

இந்த பதிவை நான் எழுதுவதற்கு முன்னர் என்னை பற்றி சொல்ல விரும்புகிறேன். நான் பாரதிய ஜனதா கட்சியோ அல்லது அதன் துணை அமைப்புகளில் எதன் மீதோ ஈடுபாடு கொண்டவன் கிடையாது.எல்லாருக்கும் பாபா ராம்தேவ் மோசடி செய்கின்றார், உண்ணாவிரதம் இருந்து அதனை அரசியல் செய்கின்றார் என்று முகநூலில் பலர் எழுதுவதை கண்டேன். எனக்கு இந்த விடயம் தான் புரியவில்லை. அவர் என்ன கட்சியோ இல்லை வேறு எந்த அமைப்போ. அதனை பற்றி நமக்கு என்ன கவலை. ஒரு வேளை அவர் சேர்த்து வைத்துள்ள சொத்து உங்களின் சந்தேகத்தை தூண்டுகிறதா? அப்படியானால் இவர் முறை கேடாக சொத்து சேர்த்தார் என்றோ அல்லது கருப்பு பணம் இவர் பெயரில் வைத்து இருந்தார் என்றோ நீங்கள் நம்புவீர்கள் என்றால் அது உங்களை நீங்களே ஏமாற்றும் காரியம் தான். இவரிடம் கருப்பு பணம் இருந்தால் இவர் எந்த தைரியத்தில் கருப்பு பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்க முற்படுகிறார்? கருப்பு பணம் ஒழிக்கும் சட்டம் இயற்றபட்டால் முதலில் இவர் மாட்டிகொள்வார் என்று தெரியாமலா இவர் கருப்பு பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்க நினைக்கிறார்? உண்மை இப்படி இருக்க நம்மில் பலருக்கு அவரின் காவி உடை கண்ணை உறுத்துகிறது. சிலருக்கு அவர் வைத்துள்ள பணம் கண்ணை உறுத்துகிறது. சரி அவருக்கு தான் தகுதி இல்லை. நம் தமிழ்நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க எந்த தலைவராவது முயற்சிகள் எடுத்தனரா?

அதுவும் கிடையாது. ஒரு வேளை அப்படி ஒருத்தர் போராட்டம் நடத்தினால் அதனை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்வதற்கு யாரேனும் இருக்கின்றனரா? அதுவும் இல்லை. ஆதரித்தால் எங்கே நம்மையும் காவி சங்கத்தில் சேர்ந்தவன் என்று பெயர் குத்தி விடுவார்களோ என்று ஒரு பயம். நமக்கு எப்போதுமே யாரையாவது குறை சொல்வதிலே காலம் போகின்றது. தாழ்த்தபட்ட மக்கள் பார்ப்பான் நடத்தும் நாடகம் என்கிறார்கள். அவர்களோ அவனிடம் பணம் இருக்கிறது. அவன் நடத்தும் உண்ணாவிரதம் எங்களை ஏமாற்றுவதற்கான முயற்சி என்கின்றனர். ஆகா இதுவல்லவோ ஒற்றுமை. நீ உண்ணாவிரதம் இருந்தால் நான் கலந்து கொள்ள மாட்டேன். நான் உண்ணாவிரதம் இருந்தால் நீ கலந்து கொள்ளாதே. ஆதரவு தெரிவிக்காதே. இதுதான் உண்மையில் இந்திய குடிமக்களின் நிலைப்பாடு.

என்னை கேட்டால் யார் நல்ல விடயங்களை முன்னிறுத்தி செயல்பட்டாலும் ஆதரவு தெரிவிக்கிறேன். இது அவர்களின் அந்த நல்ல விடயங்களுக்கான ஆதரவு மட்டுமே. அவர்களுக்கான ஆதரவு இல்லை. அந்த விடயம் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.

நல்லவர்களா இல்லை கெட்டவர்களா?

முள்ளிவாய்க்காலில் நடந்தது ஒரு இனபேரழிவு என்பது உலக  நாடுகளுக்கு மட்டும் அல்ல, நம்மை போன்று வேடிக்கை பார்த்த அனைவருக்கும் தெரியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது இதற்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை பற்றிய பதிவு அல்ல இது? நாம் என்ன தான் எழுதினாலும் திருந்தாத திருந்த முயற்சி செய்யாதவர்கள் பற்றிய பதிவு இது.

சென்ற தேர்தலுக்கு முன்னர் பல போராட்டங்களில் மாணவ சமுதாயம் ஒன்றிணைந்து போராடினர். அதை எப்படி ஆளும்கட்சி  வேறு ஒரு கட்சியை வைத்து கெடுத்தார்கள் என்பதும் நமக்கு தெரிந்ததே. இவர்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், காரணம் இன்றி ஈழமக்களின் போராட்டங்களை கொச்சை படுத்தினர். இதில் தவறு யாரிடம் உள்ளது??? போராட்டம் நடத்தியவர்களின் நோக்கம் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதில் தான் இருந்தது. அதில் கலந்து கொள்வதாக கூறி அரசியல் செய்த விசமிகளின் முகமுடி இன்னும் கிழிக்கப்படவில்லை.

இன்னும் அவர்களின் போராட்டங்களால் படித்தவர்கள் மட்டும் அல்ல வேடிக்கை பார்கின்றவர்களும் குழம்பி போகின்றார்கள். ஒருவேளை இவர்கள் தான் உண்மையாக போராடுகிறார்களோ என்று.
ஆனால் இந்த தேர்தலில் மாற்றங்கள் கொண்டுவந்தது தேர்தலில் புதிதாக வாக்களித்தவர்கள் தான் என்பது தற்போதய செய்தி.

இந்த புதிதாக சேர்ந்த வாக்காளர்கள் தான் இந்த முறை புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர். இதுவரை ஏமாற்றப்பட்டு அடக்கி வைத்திருந்து இருந்த மாணவர்கள் இப்போது அந்த ஏமாற்று கூட்டத்திற்கு தேர்தலில் சரியான பாடம் கற்பித்து உள்ளனர்.இருந்தாலும் பதிவுலகத்திலும் படித்தவர்கள் மத்தியிலும் அவர்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்ற விவாதம் சென்று கொண்டே தான் இருக்கின்றது.


இதற்கு முற்றுபுள்ளி வைக்க ஒன்று புலிகளின் தரப்பில் இருந்து யாரேனும் முன் வர வேண்டும். இல்லை இவர்களாக உண்மையை ஒப்பு கொள்ளும் நிலை வர வேண்டும்.
 
ஈழத்தமிழர்களை காக்க ஈழத்தமிழர்களே போதும். அவர்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் கேட்டது செய்யும் சக்திகளுடன் சேராமல் இருப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி/ கைம்மாறு/ பிச்சை/மனிதாபிமானம்

மில்லியன் டாலர் கேள்வி

தேர்தல் முடிந்து விட்டது. ஜெயலலிதாவும் பதவி ஏற்று விட்டார். இனி அடுத்தது என்ன? ஜெயலலிதா காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பாரா இல்லையா? இந்த கேள்வி தான் இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி.
காங்கிரஸ் கட்சியின் தலைவியும் உடனே ஜெயலலிதாவிற்கு தேநீர் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து வருகிறார். வழக்கமாக தேநீர் விருந்து எல்லாம் ஜெயலலிதாவே ஏற்பாடு செய்ய சொல்லுவார். ஆனால் இம்முறை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. ஆக காங்கிரஸ் கட்சிக்கு திமுகவை கழட்டிவிடும் எண்ணம் இன்னும் மெருகேறி இருக்கிறது என்பது தெரிகிறது. கழட்டிவிடுவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்ட ஒன்று என்றால் ஏன் தேர்தலுக்கு முன்னரே கழட்டி விடவில்லை. காங்கிரஸ் கட்சியோடு இதுவரை அதிமுக கூட்டணி பற்றி பேசவே இல்லை என்பது மற்றொரு உண்மை. காங்கிரஸ் கூட்டணி அமைக்க விரும்பியது தேமுதிகவுடன் மட்டுமே. அப்படியென்றால் இந்த தேநீர் விருந்து உண்மையில் அதிமுகவை கூட்டணிக்கு அழைக்கும் விருந்தா? இல்லை வேறு எதற்கும் வழிவகை செய்யபடுகிறதா?

தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து என்னவென்றால் காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டணி அமைக்க வேண்டும்.அப்படி அமைக்கப்படும்போது தான் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கழட்டி விடப்படும். திருடர்கள் இருவரும் பிரியும்போது ஒரு சூழ்நிலையில் இதுவரை பாதுகாத்து வந்த ரகசியங்கள் எல்லாம் வெளி வரும். திமுக மீண்டும் தனது செல்வாக்கினை உயர்த்தவேண்டுமானால் காங்கிரஸ் மற்றும் அதிமுகவை எதிர்க்க வேண்டும். தேமுதிகவெல்லாம் ஒரு கட்சி என்று அதனை எதிர்த்து அரசியல் செய்ததால் தான் திமுக இந்த நிலையில் இருக்கிறது. காங்கிரஸ் அதிமுகவை ஒன்றாக எதிர்க்க இருவரும் ஒரே கூட்டணியில் இருந்தால் தானே நன்றாக இருக்கும். அந்த வாய்ப்பு திமுகவிற்கு இந்த கூட்டணி மாற்றத்தால் தான் கிடைக்கும். காங்கிரஸ் எடுக்கும் ஒவ்வொரு அடியும் திமுகவை சீண்டி பார்க்கும் நிலையில் இருக்கும்போது ஈழத்தமிழர்களுக்கு இருவரும் சேர்ந்து(காங்கிரஸ் + திமுக) இருக்கும்போது செய்த பல துரோகங்களை திமுக வெளிக்கொணரும்.


இது அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் நான் ஒன்றும் தீர்க்கதரிசி இல்லையே இதுவெல்லாம் நடக்க.


உண்மையில் என்ன நடக்க போகின்றது என்றால் திமுகவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஒழிய காங்கிரஸ் திமுகவை இப்போதைக்கு வெளியே அனுப்பாது. ஒரு வேளை அதிமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் அதையும் செய்யும். ஆனால் அது தான் நடக்காதே. அதிமுக இந்த முறை தெளிவாக உள்ளது. காங்கிரஸ் உடன் கூட்டணி கிடையாது என்று. காங்கிரஸ் இன்னும் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை கூட்டணியை மாற்றி கொள்ளாது.

இந்த நிகழ்வெல்லாம் நடக்காமல் இருக்கும் திமுக என்றொரு கட்சி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை இருந்தால்.

இலவசம் வேண்டுவோர் கவனிக்க

இன்று விஜய் டிவியில் நீயா நானா பார்க்கும்போது கவனித்த விஷயங்கள். இலவசம் வேண்டும் என்று கேட்கும் நபர்களுக்கு நான் கேட்க நினைத்த கேள்விகள் பின்வருமாறு


 1. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிகணினி(Laptop) தேவையா? அவர்கள் அதில் படிப்பு சம்பந்தமாக என்ன செய்ய முடியும்? படம் பார்க்க முடியுமே (Except computer science students) என்று கூறுகிறார்களோ?
 2. மின்சாரமே இல்லாத வீட்டில் தொலைகாட்சிபெட்டியால் என்ன பயன்?
 3. படிப்பதற்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது சரியாக இருக்கலாம். அனைத்து சமுதாயமும் கல்வியில் பங்கேற்க வேண்டும் என்பதும் சரியே. ஆனால் வேலையில் இட ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம்? இட ஒதுக்கீடு என்பதற்கு பதில் எல்லாருக்கும் கட்டாய கல்வி கொண்டு வரலாமே. சரியாக படிக்காதவர்களை அரசு வேலையில் கொண்டு போய் உட்கார செய்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?
 4. இந்தியாவில் மானியத்தில் தான் பெட்ரோல், டீஸல் விற்கிறார்கள் என்கிறார்கள்? இது உண்மையா? பிறகு ஏன் விலையேற்றம் எல்லாம்? பக்கத்து நாடுகளில் இப்படி தான் விலை ஏறுகிறதா?
 5. தொலைகாட்சிபெட்டிகள் இல்லாதவர்கள் ஒரு கோடி பேர் என்றால் இவர்கள் ஏன் ஏற்கனவே தொலைகாட்சிபெட்டி இருப்பவர்களுக்கும் சேர்த்து தொலைகாட்சிபெட்டிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றனவே அதற்கு என்ன செய்ய போகிறார்கள்?
 6. இலவசம் கொடுப்பதற்கு பதில் கல்வியை மேன்படுத்தலாமே. அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தையும் அரசுடமை ஆக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை.
 7. இலவச எரிவாயு இணைப்பு கொடுத்தல் தவறு இல்லை. அதற்கு ஏற்றவாறு தட்டுபாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா? அடுப்பு எரித்து சமைக்கும் குடும்பங்கள் இந்த எரிவாயு இணைப்பினை எப்படி உபயோக படுத்த முடியும். சிலிண்டர் வாங்கும் அளவுக்கு பணம் அவர்களுக்கு எங்கே இருந்து கிடைக்கும்? அதற்கு பதில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு எற்படுத்திருக்கிறார்களா?
 8. அடிப்படை உரிமைகளே இன்னும் சரி செய்யாதபடாதபோது தற்போது அறிவித்துள்ள இலவசங்கள் மக்களின் மேல் வரிச்சுமையை  எற்றாதோ?
 9. வெளிநாடுகளில் சென்று படிக்கும் நம் மாணவர்கள் படிக்கும்போதே வேலை பார்க்கிறார்கள். உங்களால் படிப்புக்கு முழுதொகையும் செலுத்த முடியாது என்பதால் அந்த அந்த மாநிலங்களில் அவர்களுக்கு பகுதி நேர வேலைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதையே இங்கேயும் செய்யலாமே.
 10. அரசின் இலவசங்களால் படித்து விட்டு மேலை நாடுகளில் சென்று குடியேறிவர்களுக்காக தான்  IITs, IIMsஅமைக்கபட்டனவோ?
 11.  உண்மையிலே இட ஒதுக்கீட்டின்படி தான் அந்தந்த சமுதாயத்தின் பொருளாதாரம் இருக்கிறதா? தாழ்த்தபட்டவர்களிலும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அய்யர் அய்யங்கார்களிலும் ஒரு வேளை உணவிற்கு கஷ்டபடுபவர்கள் இருக்கிறார்களே? ( நாங்கள் அப்போது கஷ்டப்பட்டோம் இப்போது அவர்கள் கஷ்டப்படட்டும் என்று சொல்லுவது மனித நேயம் இல்லையே)
 12. இலவச மானியங்கள் எல்லாம் எத்தனை ஏக்கர் நிலம் வைத்து இருப்பவர்களுக்கு கொடுக்கபடுகின்றன? ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து இருப்போர் தான் ஏழை விவசாயியா? உண்மையில் ஏழை விவசாயியை எப்படி இந்த அரசு கண்டுபிடிக்கிறது? வருமான வரி சான்றிதல் வைத்தா?  நில உச்சவரம்பு சட்டம் இன்னும் அமலில் இருக்கிறதா?
 13. வட்டிக்கு விட்டு சம்பாதிப்பவர்களும் வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் தான் சம்பாதிப்பதாக கணக்கில் காட்டுகிறார்கள். அவர்கள் பிள்ளைகளும் மானியங்களை(Scholorship) தானே வாங்குகிறார்கள்.
  எதன் அடிப்படையில் மானியங்கள் கொடுக்கபடுகின்றன. வருடத்திற்கு இவ்வளவு தொகையை செலவு கணக்கில் காட்ட வேண்டும் என்பதற்காகவா?
 14. வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் ஏன் தனியார்துறையில் அதை கட்டாயபடுத்தவில்லை?
 15. வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் அவர்களின் நிறுவனங்களில் முதலில் கொண்டுவரலாமே. முதலில் சதம் பெண்களுக்கு கொடுத்து இதனை ஆரம்பிக்கலாமே. (வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் தங்களின் நிறுவனங்களில் தங்களின் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை என்றோ அல்லது திறமையின் அடிப்படையிலோ தானே வேளை கொடுக்கிறார்கள்)
 16. தனியார் நிறுவனங்கள் எல்லாம் மென்பொருள் நிறுவனங்கள் அமைக்கும்போது ஏன் அரசு அந்த தொழில் இறங்கவில்லை?

33 சதவிதம் கொடுப்பது இருக்கட்டும்

இந்த பதிவு பெண்களை பழித்து எழுதப்பட்ட பதிவு அல்ல. இன்றைய பெண்களின் நிலை பற்றிய பதிவு.

இன்றைய பெண்களில் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களில் பலருக்கு மகளிர் இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியவில்லை. இட ஒதுக்கீடு என்றால் அவர்களை பொறுத்த வரையில் ஆண்களின் இடத்தை பிடித்தல் என்ற அர்த்தத்தில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். (தொண்ணூறு சதம் அப்படி தான். மற்றவர்கள் என்னை மன்னிக்கவும்) . அவர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி தான் தெரியவில்லை என்றால் நாட்டின் அரசியலும் தெரியவில்லை. நாட்டில் என்ன நடக்கின்றது என்றும் தெரியவில்லை. விடுதலை போராட்டத்திற்கும் தீவிரவாததிற்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. (ஆயுதம் ஏந்தியவர்கள் எல்லாரும் போராளிகள் அல்லர்; போராளிகள் எல்லாரும் ஆயுதம் தரிப்பதில்லை)
 
சே குவேராவை டி- சர்ட்டில் அணிந்து செல்லும் பெண்களுக்கு அவர் யார் என்ற கேள்வி எழுவது இல்லை. விசாரித்து பார்த்தால் அவர் ஒரு பாப் சிங்கர் என்று சொல்கிறார்கள். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பெண்களுக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை கேட்பதற்கு கூட விருப்பம் இல்லை  ஆனால் மற்றவர்களின் பாலியல் சம்பந்தப்பட்ட அந்தரங்க விஷயங்களில் அவர்களின் ஆர்வம் அளவிட முடியவில்லை. ஒருத்தருக்கு சாப்பாட்டு பொட்டணம் வாங்கி தந்ததை பெருமையாக சொல்லும் பெண்களுக்கு தங்கள் அருகிலே ஒருவர் முதியோர் இல்லம் வைத்து நடத்தினாலும் தெரிவதில்லை.
 
ஒரு வேலை தங்களுக்கு ஆக வேண்டுமானால் யாரையும் சந்திக்கும் அதே நேரம் வேலை ஆனவுடன் அவர்களின் இருப்பிடம் கூட உதவி செய்தவருக்கு தெரிவதில்லை.
வேலை செய்யும் ஆண் பெண் இருவரில் வேலை தெரியவில்லை என்றால் இரவென்றாலும் ஆண் வேலை செய்ய கட்டாய படுத்தபடுகிறான். அதே நேரத்தில் பெண் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தாலும் குறிப்பிட்ட நேரம் அதாவது வேலை நேரத்தை விட அதிகமாக வேலை செய்ய கட்டாயபடுத்தபட்டால் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் விடுவதில்லை. ஒரே வேலைக்கு ஒரே நிலையில் இருக்கும் இருவரில் யார் நன்றாக வேலை செய்கிறார்களோ அவர்களுக்கு தானே அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். சரியாக வேலை செய்யாத பெண்களும் வேலை செய்யும் ஆண்களும் ஒரே சம்பளம் கேட்பது சரியா? வேலை செய்ய சொல்லும்போது  நான் பெண் என்று கூறும் பலர் சம்பள உயர்வு கேட்கும்போது அதை ஞாபக படுத்துவதில்லையே. அது ஏன்?
 
இது இப்படியென்றால் பேருந்தில் பயணம் செய்யும்போதும் ஆண்கள் உட்கார்ந்து இருப்பது பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் இருக்கைகளாக இல்லாமல் இருந்தாலும் ஆண்களை எழ வைத்து அந்த இடங்களை பிடிப்பது வழக்கமாகின்றது.( முதியோராக இருந்தால் இடம் அளிப்பது ஆண்களே).ஆக பொது விடயங்களில் தொடங்கி அரசியல் வரை அவர்கள் இன்னும் வளர வேண்டிய சூழல் இருக்கின்றது. எதையும் நேர்மையாக சாதிப்பதற்கு பதில் கண்ணீரால் சாதிப்பதை தவிர்த்து மேற்கண்ட விடயங்களில் ஆண்களுக்கு நிகராக அவர்களும் வர வாழ்த்துகிறேன். (அப்பாடா தப்பிச்சேன்).

மீண்டும் தகவல் சொல்ல வந்துவிட்டார்கள்

ஐநா சபையின் ஈழத்தமிழர்களின் படுகொலை சம்பந்தமான அறிக்கை வந்துவிட்டது.எல்லாருக்கும் தெரிந்த ஐநாவுக்கு தெரியாத அந்த படுகொலைகளை பற்றி ஐநா கடின முயற்சிகளுக்கு பின்னர் வெளி கொணர்ந்துள்ளது.(?) இந்த அறிக்கையின்படி இலங்கை போர்குற்றம் செய்துள்ளது உறுதியாகிறது. சரி ஒரு வழியாக அறிக்கை வந்து விட்டது அடுத்தது என்ன? அது தான் அறிக்கை கொடுத்து விட்டோம்ல வேறு என்ன உங்களுக்கு வேணும். கொல்லப்பட்டது உண்மை.(அப்படி தான் கொல்லுவாங்க-இந்தியா) அதற்காக பஞ்சாயத்து எல்லாம் செய்ய சொல்லக்கூடாது.
இந்தியாவிலே இந்திய குடிமக்கள் கொல்லபட்டதையே நாங்கள் கணக்கில் கொண்டு வரவில்லை. அப்புறம் எப்படி இந்தியாவை பஞ்சயாத்துக்கு அழைக்கிறார்கள் இந்திய அரசியல்வியாதிகள்( நானும் இந்திய குடிமகன் தான்.) ஒரு வேளை வேடிக்கை பார்த்த பிராந்திய வல்லரசு என்கின்ற முறையில் தலையிட சொல்கிறார்களோ? அதுவும் கிடையாது. காந்திய நாடு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட காரணத்தால் அழைக்கிறார்களோ? அதுவும் கிடையாது.(திலீபனின் அகிம்சை உண்ணாவிரத போராட்டம் அவரின் உயிரை குடிக்கும் அளவுக்கு சென்றும் இந்தியாவின் கல்மனம் இறங்கவில்லையே.) இலங்கை இனபடுகொலைகளில் இந்தியாவின் பங்கு இல்லாமல் இருந்திருந்தால் கூட பஞ்சாயத்து செய்யும் அருகதை இருந்திருக்கலாம். அருகதையே இல்லாத ஒரு நாட்டின் தலைமையிடம் முறையிட்டால் என்ன நடக்கும்? என்ன தான் எதிர்பார்க்கிறார்கள்? இந்தியா களத்தில் இறங்கி ராஜபக்ஷேவை கைது செய்து இந்தியாவிலேயே அதுவும் தமிழ்நாட்டில் வேலூர் சிறைச்சாலையில் அடைத்து விடுவார்களா  என்ன?
வேறு என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள் மக்களே?
சரி அடுத்த நாட்டின் பிரச்சினைகளில் நடுநிலையுள்ள எந்த நாடும் தலையிடாது(அந்த நடுநிலையான நாடு இந்தியா இல்லை). நம் நாட்டுக்குள் இருக்கும் பிரச்சினைகளை பார்க்கலாம் என்றால் ஊழல் தான் முதலில் வருகிறது. ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீட்டில் ஊழல் இருப்பது பாமரர்களுக்கும் தெரியும். அதை விசாரிக்க தணிக்கை குழு ஒன்று அறிவித்து அதன் அறிக்கை கூட வந்துள்ளது மன்னிக்கவும் கசிந்துள்ளது. ஊழல் நடந்தது உண்மை தான் ஆனால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே குழுவின் உண்மையான பரிந்துரை. உண்மையிலே மடியில் கணம் இல்லையென்றால் ஏன் இப்படி ஓடி ஒளிய வேண்டும்? நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியது தானே.

உண்மையில் மேல் சொல்லப்பட்ட இரண்டிலும் காங்கிரெஸ் திமுகவின் பங்கு இருக்கிறது. எல்லாருக்கும் தெரியும். ஆனால் தெரியாத விஷயம் ஒன்றே ஒன்று தான்.

ராஜபக்ஷேவையையும் கருணாநிதி குடும்பத்தையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி செய்வதற்கு ஒரே ஒருவருக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. அந்த நபர் சோனியா காந்தி. அவருக்கும் இது தெரியும். அதனால் தான் இருவரும் ஈழத்தமிழர்களின் போரில் சோனியா காந்திக்கு இருக்கும் அந்த சந்தற்பத்தை அவருக்கு எடுத்து கூறி களத்தில் இறக்கினர். அவரும் விடுவாரா என்ன? களத்தில் இறங்கி கொன்று குவிக்க ஒப்புதல் அளித்தார். புலிகளிடம் சிக்கியிருக்கும் மக்களை காப்பாற்ற மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினர். சுதந்திரமாக புலிகளின் நாட்டினுள் வாழ்ந்த ஐந்து லட்சம் மக்களில் மூன்று லட்சம் மக்களை கொன்று விட்டு மற்றவர்களை முகாம் என்ற பெயரில் அடைப்பதற்கு பெயர் தான் மனிதாபிமான நடவடிக்கை.இந்த நடவடிக்கை இப்போது அண்டை நாட்டில் நடந்துள்ளது. சரி. நம் நாட்டில் ஊழல்வாதிகளை தடுக்க முடியாத அதே அரசு இந்திய அளவில் மட்டும் அல்ல உலக அளவிலும் ஊழல்களை வளர்த்து வருகிறது. ஐநா நினைத்து இருந்தால் இந்த படுகொலைகளை தடுத்து இருக்க முடியும் என்பது ஐநாவின் முன்னாள் அதிகாரி கூறியிருக்கிறார். சரி இதை தவிர்த்து இருக்க முடியும் என்றால் தடுக்காமல் இருக்க யார் என்ன செய்தார்கள் எவ்வளவு கொடுத்தார்கள். ஐநாவின் பொது செயலாளர் பாகி மூன் அப்பாவி என்கிறார்கள்.(?) அடுத்த நிலையில் நம்பியார் இருக்கிறார். இவர் தான் வெள்ளை கொடியுடன் புலிகளின் தலைவர்களை சரணடைய கூறியவர். இவர் அப்பாவி என்றால் நம்புவதற்கு யார் இருக்கிறார்கள்? ஆக குற்றம் செய்தவர்களும் குற்றம் நடப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து குற்றத்தை விசாரிக்க இருக்கிறார்களாம். அதை வலியுறுத்தியவர்கள் யார் என்றால் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களும் வேறொரு பிரச்சினையை சமாளிக்க மற்றொரு பிரச்சினையை கிளப்பும் கேடுகட்ட இந்த நடைமுறை எப்போது மாறுமோ?

என்னை பொறுத்தவரையில் ஊழலுக்கு மரண தண்டனையே சரியான தீர்வாக அமையும். இல்லையென்றால் இந்த நாடும் மக்களும் புரையோடி போயிருக்கும் ஊழலில் திளைத்து ஒரு நிலையில் வெறுத்து ஆயுதம் எடுக்க நேரிடும்.

உண்மையில் மின்வெட்டு எவ்வளவு நேரம்?


தினமும் சென்னையில் ஒரு மணி நேரமும் தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் மூன்று மணிநேரமும் மின்வெட்டு என்று வெளியிட்டார்கள். ஆனால் இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னரே மற்ற இடங்களில் மூன்று மணிநேர மின்வெட்டு அமலில் இருந்தது. அப்படியென்றால் இத்தகைய அறிவிப்பினால் என்ன பயன்? இது யாருக்கு அறிவிக்கிறார்கள்? முன்னர் அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மக்களை ஏமாற்றினார்கள். இப்போது அறிவித்து விட்டும் மக்களை ஏமாற்றுகிறார்கள். சென்னையில் ஒரு மணிநேர மின்வெட்டு ஒரு வேலை கோபாலபுரத்திற்கு மட்டும் வேண்டுமானால் பொருந்தலாம்.மற்ற இடங்களில் அந்த அந்த மின்வாரிய ஆட்கள் செல்வசெளிப்பானவர்க்கு தனியாக கவனிக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு மணிநேரம் மட்டும் தடை செய்கின்றனர். அதே பகுதியில் மற்றவர்களுக்கு பகலில் மட்டும் அல்ல இரவிலும் மின்வெட்டு நடக்கிறது. நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் இது நடக்கிறது. இதன் மூலம் யாருக்கு அதிக மின் சேவை செய்ய முடியுமோ அவர்களுக்கு மின்வாரியம் நன்றாகவே சேவை செய்கிறது.
 
உதாரணத்திற்கு சைதாபேட்டையில் ஒரு சில இடங்களில் ஒரு மணிநேரம் தான் மின்வெட்டு மற்றவர்களுக்கு மின்வாரிய ஊழியர்களை பொறுத்து மின்வெட்டு அமலாகிறது.மதுரையில் மூன்று மணிநேரம் மின்வெட்டு ஒரு சிலருக்கு மட்டும் தான். மற்றவர்களுக்கு வேலை பார்ப்பதாக கூறி மேலும் பல மணிநேரம் மின்வெட்டு இருக்கிறது.


இலவச தொலைகாட்சிபெட்டிகள் கொடுக்கும் முன்னர் கொஞ்சம் மின்பற்றாகுறையை பற்றி யோசித்தும் இருக்கலாம்.

தூங்கும் போதும் துரத்தும் நினைவுகள்

தூங்கும் போதும் துரத்தும் நினைவுகள்
காதலனைப் பற்றியது அல்ல!

கள்வர்களைப் பற்றியது
63 லும் வீழ்த்தி விட வேண்டும்!
தூங்கும் போதும் துரத்தும் நினைவுகள் !

திமுகவின் வெற்றி உறுதி

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் எல்லா இடங்களிலும் சோதனை  நடத்தி கருப்பு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை   தடுத்து வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் பொதுமக்கள் இதில் பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.இதுவரை சிக்கிய கணக்கில் வராத பணத்தின் மதிப்பு இருபது கோடிகள் என்றால் இன்னும் இருபது நாட்களில் எவ்வளவு கோடிகள் கைப்பற்றப்படும். இது வரை சிக்கிய பணம் எல்லாம் சாதாரணம். அண்ணன் அஞ்சா நெஞ்சனின் கோட்டையில் பதுக்கப்பட்டு இருக்கும் பணத்தின் மதிப்பில் இதெல்லாம் தூசு.

தேர்தலில் பணம் பட்டுவாடவை தடுக்க தேர்தல் ஆணையம் எடுக்கும் இந்த முயற்ச்சியை பற்றி வேறு யாருமே இதுவரை கண்டனக்குரல் எழுப்பவில்லை. ஆனால் கலைஞர் மட்டும் இதனை எழுப்பி அதனை தடுத்தும் விட்டார். இனிமேல் பயணிகள் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் கோடிகளை துணிமணி பைகளில் கொண்டு செல்லலாம்.
 
பட்டுவாடாவிற்கு ஏற்பாடு செய்துவிட்டது. அடுத்து இருப்பது வாக்காளர்களை கவர்வது அல்லது பயமுறுத்துவது. வாக்காளர்களை கவர இலவசங்களை அள்ளி கொடுத்து விட்டன இரு பிரதான கட்சிகளும். ( சும்மா இருக்கும் பெண்களுக்கு குழந்தைகள் தான் இன்னும் இந்த கட்சிகள் கொடுப்பதாக சொல்லவில்லை.) இந்த இலவசங்கள் ஆட்சிக்கு வந்தால் தரப்படும். வருவதற்கு முன்னால் என்ன தருவீர்கள் என்று கேட்கும் வாக்காளர் பெருமக்களுக்கு, வெள்ளி கொலுசு, ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை தரப்படுகிறது. இந்த பட்டியல் கொஞ்சம் நீளம் என்பதால் இவற்றை மட்டுமே போட்டு உள்ளேன். கவரும் விஷயங்கள் செய்து விட்ட பின்னர் மிச்சம் இருப்பது பயமுறுத்துவது. அதனையும் சிறப்பாக செய்யத்தான் நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே. கழக உடன்பிறப்புகள் அந்த அந்த தொகுதிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களை குப்பிட்டு பேசி உள்ளனர். வாக்காளர்களிடம் வெப் கேமரா இருப்பதால் எளிதாக நீங்கள் யாருக்கு போடுகிறீர்கள் என்று பார்த்து விடுவோம் இது தான் அவர்களின் முதல் தாக்குதல். நாங்கள் ஜெயித்து வந்த பின்னர் உங்களுக்கு மாநகராட்சியில் இருந்து எதுவும் வரவிடாமல் செய்வோம். (திமுக தான் இப்போது மதுரையில் உள்ளது.) இப்படி பல நல்ல காரணங்களை கூறி ஒட்டு கேட்கின்றனர்.

இது தவிர சன் தொலைகாட்சியில் வரும் புது செய்திகளையும் கவனியுங்கள். வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள செலவுகள் இடத்தை பொறுத்து வேறுபடுகிறதாம். எப்படிஎன்றால் கிருஷ்ணகிரியில் வேட்பாளர் சாப்பிடும் வடையின் விலை ஏழு ரூபாய் என்றால் சென்னையில் பத்து ரூபாய்யாம். வெஜ் பிரியாணிக்கு தொண்ணூறு என்றும் நான்-வெஜ் பிரியாணிக்கு நூற்றிபத்து ரூபாயும் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளதை கிண்டல் செய்துள்ள சன் தொலைக்காட்சி, இன்னொரு வகையில் ஒரு நன்மை செய்துள்ளது. அது என்னவென்றால் வேட்பாளர் பிரியாணிக்கு தொண்ணூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய எதிர்பார்க்கிறார் என்றால் இவர் தொகுதி பயன்பாட்டு நிதியில் எவ்வளவு பணத்தை தனக்கு பிரியாணி வாங்க செலவு செய்வார் என்பதை காட்டியுள்ளது. மேலும் பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தினால் கஷ்டபடுகின்றனர் என்று செய்திகள் வெளியிட்டதே தவிர மக்கள் பணத்துடன் வெளியே செல்லும்போது அந்த பணம் எங்கே இருந்து கொண்டு செல்லப்படுகிறது என்பதை விவரிக்க ஆதாரங்களை எடுத்து செல்ல பணிக்கவில்லை.( வங்கியில் இருந்து எடுத்திருந்தால் இதெல்லாம் தேவையே இல்லையே.).
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் இதில் பாதிக்கபடுகின்றனர் என்பது அடுத்த புகாராம். கணக்கில் வராத பணம் எதில் முதலிடு செய்தாலும் அது கருப்பு பணம் தானே. இதில் என்ன ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை.(ஒரு வேளை அந்தந்த மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தான் தேர்தலில் பணத்தை செலவு செய்ய போகிறார்களா?)

தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் எதற்கு  என்று கூட கேட்கும் காலம் வரும் என்றே தான் நினைக்கிறேன்.கடந்த மாநகராட்சி தேர்தலில் வாக்குபெட்டிகள் ரோட்டில் கிடந்தபோது இந்த நீதிமன்றங்கள் என்ன செய்தன என்று தெரியவில்லை. வழக்கம் போல நடப்பதை தடுக்கும் நீதிமன்றங்களும் நடந்த பின்னர் அதனை மறுக்கும் அரசியல்வாதிகளும் அவர்களின் சொற்பேச்சு நடக்கும் அதிகாரிகளும் இருக்கும் வரையில் திமுக ஜெயிக்க தான் செய்யும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு இலவசமும் எங்களின் வரிப்பணம் என்பதை உணருங்கள்.

தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களும் அதை மதிக்க தவறும் அரசு இயந்திரங்களும்

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல.இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல.
நானும் விவரம் தெரிந்த நாளில் (அதாவது இன்டர்நெட் வசதிகள் வந்த பின்னர்) இருந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். கருத்துரிமை என்பது நமது தமிழ்நாட்டில் ஏட்டளவில் மட்டுமே தான் இருக்கின்றது. அதுவும் யாராவது வழக்கு தொடுத்தால் மட்டுமே அதனை ஏட்டில் வைத்து உள்ளார்கள் என்பது புலனாகிறது. பின்னர் மீண்டும் இதனை போன்ற ஒரு சம்பவத்தில் பழையபடி யாரோ ஒரு காவல்துறை அதிகாரி கருத்துரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை தடுக்கலாம், கைது செய்யலாம் ஏன் பொடாவில் கூட போடலாம்.ஒருவரை இப்படி கைது செய்து சிறையில் அடைத்து பின்னர் அவர் நிரபராதி என்று தீர்ப்பானால் அவரை கைது செய்த காவல்துறை அதிகாரிக்கு என்ன தண்டனை தர வேண்டும்/தரலாம். ஒரு வேளை அரசின் அழுத்தத்தின் பேரில் தான் அவர் செய்தார் என்று தீர்ப்பானால் அதற்கு சம்பந்தபட்டவரை என்ன செய்யலாம்/ செய்வார்கள்?

என்ன பாவம் செய்தார்கள் ஜப்பானியர்?

வெள்ளிகிழமை காலை மணி பதினொன்றுக்கு ஆரம்பித்த இயற்கையின் ருத்ர தாண்டவம் இன்னும் முடியவில்லை ஜப்பானில். அப்படி என்ன பாவங்கள் செய்தார்கள் நம்மை விட? சிறந்த தொழிலதிபர்கள், சிறந்த மக்கள், சிறந்த அரசியல்வாதிகள் இருந்தும் இந்த இயற்கை பேரழிவு மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே தடைகல். நட்பில் மட்டும் அல்ல அரசியல் நாகரிகத்திலும் கூட ஜப்பானியர்களின் கால் தூசிக்கு கூட நமது அரசியல்வாதிகள் ஈடாக மாட்டார்கள்.

நேற்று இரவு முதல் நமது தொலைகாட்சிகளில் நமது அணு உலைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும் அவற்றை ஒன்றும் செய்ய முடியாது என்றும் தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கின்றனர். இதில் நம்மை பார்த்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும் என்று வேறு சொல்லி வருகின்றனர். ஒருவேளை நமது உலைகள் பாதுகாப்பானவையாகவே இருக்கட்டுமே அதை ஏன் இந்த நேரத்தில் சொல்ல வேண்டும். மக்கள் ஒன்றும் இங்கே உலைகளின் பாதுக்காப்பினை பற்றி பேசவில்லையே. கல்பாக்கத்தில் ஒரு முறை உலைகள் பற்றிய பீதி ஏற்பட்டபோது இப்படியா சொல்லிக்கொண்டு இருந்தனர். அரசின் கடை நிலை ஊழியர்கள் மட்டுமே அந்த நேரத்தில் அங்கே இருந்து விளக்கி கொண்டு இருந்தனர். இப்போது என்ன வென்றால் தொலைகாட்சியில் சொல்லி கொண்டே இருக்கின்றனர். நாம் ஜப்பானுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறோம் என்று வேறு அவர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக நினைத்து இங்கே கதை சொல்லி கொண்டு திரிகின்றனர்.
சுனாமியும் அனுகதிர்வீச்சும் ஏற்படுத்திய பிரச்சினைகளில் இருந்து ஜப்பான் மீள மற்ற நாடுகள் போர்க்கப்பல்களில் நிவாரணங்களை அனுப்பும்போது நம் பிரதமர் நிவாரணம் அனுப்பட்டுமா என்று கேட்டதாக செய்திகள் வந்தன. என்ன கொடுமை சார் இது.

பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஜெயலலிதா

ஹசன் அலி விவகாரத்தை மத்திய அரசு அதன் பிரம்மாஸ்திரமாக வைத்து காரியங்களை சாதிக்க உள்ளது. திமுக உடன் காங்கிரஸின் கூட்டணி உறுதியான உடனே ஹசன் அலி விவகாரத்தினை மத்திய அரசு சரியாக கையாளுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. ஹசன் அலியின் மொத்த சொத்தின் மதிப்பு ஒன்பது பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று உள்ளது. இவர் குதிரைகளை வாங்கி விற்கும் தொழிலில் இருந்து உடைந்த இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழிலில் கோடி கட்டியுள்ளார். இதற்காக இவர் யாரிடமிருந்து கடன் பெற்றார் என்ற விவரம் தெரியவில்லை. அதன் பின்னர் இவர் தொடங்கியுள்ள பத்து சுவிஸ் வங்கி கணக்குகளில் யாருடைய பணம் உள்ளது என்றும் தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் பணம் சத்தியமாக இவரிடம் போய் முடங்கவில்லை என்பது கலைஞர் தொலைகாட்சியிலும் மலேசியாவிலும் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து தெரிகிறது.


இவரிடம் பணம் கொடுத்தவர்களில் ரெட்டி சகோதரர்கள், அந்திராவினை சேர்ந்த ஒரு கட்சித்தலைவரின் மகன், தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆகியோர் முக்கியமானவர்கள் என்று செய்தி கசிகிறது. இந்த விவகாரம் முன்னரே தெரிந்து இருந்தாலும் மேலே சொல்லப்பட்ட நபர்களை நோக்கி மட்டும் இப்போதைக்கு மத்திய புலனாய்வு துறையின் கைகள் நீளுகிறது. ஒரு வேளை தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கைது செய்யப்படும் நிலையும் வரலாம்.தேர்தல்கள் வரும்போது மட்டும் நீதிமன்றங்களும் மத்திய புலனாய்வு துறையும் சிறப்பாக இயங்க காரணம் என்ன?

தலைக்கு மேல் தொங்கும் கத்திகள்

நாம் எதிர்பார்த்தது போலவே கலைஞரின் ராஜினாமா மற்றும் கூட்டணி முறிவு நாடகங்கள் முடிவுற்று இன்று ஏழு வருட கூட்டணி மீண்டும் இணைகிறது. பலர் எதிர்பார்த்தது போல் இந்த தேர்தலில் காங்கிரஸ் கலைஞரையோ அல்லது கலைஞர் காங்கிரசையோ கை கழுவுவார்கள் என்று தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் காங்கிரஸ் ஏற்கனவே கிடைத்த உளவுத்துறையின் கணிப்பின் பேரிலே காய்களை நகர்த்துகிறது. காங்கிரஸ் தனித்து நின்றால் தற்போது பாமக கட்சி எந்த அளவில் இருக்கிறதோ அதே அளவில் தான் இருக்கும் என்று காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். அதன் கைகளில் சிக்கிய மானாக இருந்தாலும் திமுக ஒன்றும் சாதாரண கட்சி இல்லை. ஸ்பெக்ட்ரம் பணத்தில் குளித்தவர்கள் எல்லாம் திமுகவில் தான் அதிகம் இருக்கிறார்கள். இப்போது மத்திய அரசின் கையில் தான் அனைத்து மத்திய அரசின் துறைகளும் இருக்கிறது(நீதி, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு துறை  போன்றவை தனிப்பட்ட மற்றும் தன்னிச்சையாக இயங்ககூடிய நிறுவனங்கள் என்றாலும் உண்மையில் இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன)

அத்தனை துறைகளையுமே இந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களில் துஸ்பிரயோகம் செய்ய இருக்கிறது.தமிழ்நாட்டில் நடக்கும் இந்த தேர்தலில் என்ன தான் பணம் பட்டுவாடா செய்தாலும் மக்கள் திமுக கூட்டணிக்கு எதிராக தான் இருக்கிறார்கள். அந்த எதிர்ப்பு இன்னும் ஒரு மாதத்தில் ஆதரவு என்று மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை பெட்ரோல் விலையை ஒரே மாதத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் உள்ள விலைக்கு குறைத்தாலோ அல்லது கச்சதீவு ஒப்பந்தத்தை முறித்து காட்டினாலோ அல்லது விலைவாசியை ஒரே மாதத்தில் குறைத்து காட்டினாலோ அல்லது மின்வெட்டு இல்லாமல் ஒரு மாதத்தில் தமிழகம் இருந்தாலோ தான் இது நடக்கும். ஆனாலும் திமுக கூட்டணி ஜெயிக்க வேண்டுமே. அதற்கு தான் தேர்தல் முடிந்தவுடன் ஒரு மாத இடைவெளி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மின்னணு இயந்திரங்களில் ஓட்டுக்கள் மாற்றப்பட்டு திமுகவின் கூட்டணி ஜெயிக்கவைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.


ஒரே நாள் இரவிலே சென்ற பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் செய்ய தமிழகம் முழுவதும் மின்வேட்டினை ஏற்படுத்தி வெற்றி கண்டனர். அதே முறை இந்த தேர்தலிலும் வெற்றி பெற வழிவகுக்கலாம். அந்த வாய்ப்பு இல்லை என்றால் திமுக காங்கிரசிடம் இந்த அளவுக்கு ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டாம். எப்படி என்றாலும் திமுகவினருக்கு கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் வேண்டும். காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் கூட்டணி வேண்டும். கூட்டணி மட்டும் எதுவும் இல்லையென்றால் காங்கிரஸ் இருக்கும் இடம் காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமே தெரியும் ஒரு கட்சியாக மாறி விடும்.
 
உதாரணத்திற்கு காங்கிரஸ் கட்சியில் செத்து சுடுகாடு சென்ற பலர் இன்னமும் தொண்டர்களாக இருக்கின்றனர். இதை காங்கிரஸில் இருக்கும் சிதம்பரம் ஒரு முறை கண்டே பிடித்து விட்டார். அப்படி இருக்கும் கட்சிக்கு என்ன பலம் இருக்க முடியும்? ஒட்டுண்ணியின் பலமே அது எங்கு ஒட்டி கொண்டு இருக்கின்றது என்பதில் தானே.
இப்படி ஒரு கூட்டணி தான் நம்மை அடுத்த ஐந்து வருடங்கள் ஆள போகின்றது என்றால் நம் நிலை எப்படி இருக்கும். இப்போது இருக்கும் விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் பொருளாதார முன்னேற்றம் தான் என்று கருத்து சொல்கின்ற ஆட்களும் இருக்கிறார்கள். இவர்கள் தான் உலகிலே மிக்க படித்தவர்கள்.(எட்டாவது பாஸ்). பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு விலைவாசியை கட்டுபாட்டில் வைக்கும் காரணிகளை கட்டுபடுத்த தவறியவர்கள் மத்திய அரசு மட்டுமே. உண்மையில் பெட்ரோல் விலை ஏற்றத்தை அரசினால் கட்டுபடுத்த முடியும். அதன் மூலம் விலைவாசியையும் கட்டுபடுத்த முடியும். எப்படி என்றால் மத்திய அரசு தன் கையிருப்பில் சில ஆயிரம் கோடிகளை வைத்து உள்ளது. இது எதற்காக என்றால் எப்போது எல்லாம் கச்சா எண்ணையின் விலை ஏறுகிறதோ அப்போது எல்லாம் மத்திய அரசு அதில் இருந்து எடுத்து சமாளிக்கும். பின்னர் பீப்பாயின் விலை குறையும்போது அதன் கையிருப்பில் பணம் சேரும்.( பீப்பாயின் விலை ஏறும்போது பெட்ரோல் விலை ஏற்றி பின்னர் குறையும்போது பெட்ரோல் விலையை குறைக்க வேண்டுமே. ஆனால் அப்படி நாம் செய்வதில்லை) இப்படி பலவழிகளில் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அப்படி விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று இருக்கும்போது மத்திய அரசு ஏன் அப்படி செய்வது இல்லை என்பது தெரியுமா? அதற்கும் நாம் தான் காரணம். ஒவ்வொரு மாநிலமும் தங்களின் தேவைக்கு என்று சில ஆயிரம் கோடிகளை மானியமாகவும் கடனாகவும் மத்திய அரசிடம் இருந்து பெறுகின்றன. இந்த தொகை எப்படியும் லட்சம் கோடியில் இப்போது இருக்கும். அந்த தொகையினை ஒழுங்காக செலவு செய்தால் அதன் பின்னர் அதே தேவைக்கு இதே போல் மானியமாகவும் கடனாகவும் கேட்க தேவையில்லை.( பேரிடர் நிவாரண நிதி இதில் வரவில்லை). அந்தந்த தொகுதிகளில் இருக்கும் வேலைகளுக்கு என்று ஆரம்பித்து ஒவ்வொரு முறையும் லஞ்சம் வழங்கப்பட்டு செய்யும் வேலைகளின் செலவு தொகையை விட பல இடங்களில் லஞ்சம் அதிகம் என்றாகின்றது. (உதாரணத்திற்கு லஞ்சம் அதிகமாகி விட்டது இப்போது என்று பாலம் கட்டாமல் இருக்க முடியாது என்பதால் அதில் கலக்கும் பொருட்களின் தரமும் குறைகிறது. தரம் சரி இல்லையென்பதால் இதே பாலம் அடுத்த மழையில் பல்லை இளிக்கிறது).

இதே சங்கிலி தொடர் பின்னரும் நடக்கிறது. அது சரி இந்த சங்கிலி தொடர் எப்போதும் இருப்பது போல் தானே இப்போதும் இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள். அது தான் இல்லை. எப்போதுமே லஞ்சம் எல்லா மட்டங்களிலும் ஒரே அளவில் பரவும்போது விலைவாசியை பற்றி கவலை படத்தேவையே இல்லை. ஆனால் இப்போது அதி மிஞ்சிய அளவில் இருக்கும் லஞ்சப்பணம் கருப்பு பணமாக மாறுகிறது.அந்த பணம் வெளிநாடுகளில் தேங்கி விட்டால் இங்கே அந்த லஞ்சம் கொடுத்த நிறுவனங்கள் அந்த லஞ்ச பணத்தையும் தங்களின் முதலீடுகளில் ஒன்றாக தான் கருதுவார்கள். அந்த முதலீட்டை எப்படி திரும்ப பெறுவது என்று யோசிக்கும்போது நம்மை போன்ற சாமானியர்களுக்கே தெரியும் பொருட்களின் விலையேற்றம் மூலம் லாபத்தை அதிகரிக்கலாம் என்று அவர்கள் எல்லாம் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு தெரியாதா என்ன?
விலையை ஏற்ற வேண்டும் அதே நேரத்தில் அது தெரியவும் கூடாது அல்லது மத்திய அரசின் மூலம் தங்களுக்கு தேவையான துறையில் ஒதுக்கீடு பெற வேண்டும். இதில் முதலில் சொன்னது உடனடியாக லாபம் பார்க்கும் விடயம். மற்றதில் உங்களின் கருப்பு பணம் அனைத்தையும் முதலீடு என்ற பெயரில் நுழைக்கும் வசதியும் இருக்கிறது. உங்கள் ஊரில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ஒரு லட்ச ரூபாய் என்று வைத்து கொள்ளுங்கள். உங்கள் ஊரினை சுற்றி 400 ஏக்கர் நிலம் இருக்கின்றது என்று வைத்து கொள்வோம். இந்த நிலம் பலரிடம் பரவி இருக்கிறது. அதாவது சிறு சிறு விவசாயிகள் பலரின் நிலமாக அது இருக்கிறது. நீங்கள் இப்போது அமைச்சருக்கு வேண்டிய ஒருத்தர், அந்த அமைச்சர் 40 கோடி ரூபாய் உங்களிடம் கொடுக்கிறார் என்று வைத்து கொள்வோம். எப்போதுமே நமக்கு சொந்த ஊரின் மேல் ஒரு கண் இருக்கும். வழக்கமாக எல்லாரும் செய்வது போல் நீங்களும் சாலையின் இருமங்கிலும் உள்ள நிலத்தினை ஏக்கர் ஒரு லட்சத்தி ஐந்பதாயிரம் என்று வாங்குகிறீர்கள்.( இப்போதெல்லாம் ஏக்கர் ஒரு லட்சம் என்றால் ஆளும்கட்சியினர் எழுபத்தி ஐந்து லட்சத்திற்கு தான் வாங்குகின்றனர்). விருப்பபட்டு கொடுப்பவர்கள் பலர் எனும்போது அவர்களின் நிலங்களின் இடையில் சிக்கி கொள்ளும் நிலத்தின் உரிமையாளர் கண்டிப்பாக நிலத்தை விற்றே ஆக வேண்டிய நிலைக்கு ஆகின்றார். காலங்காலமாக விவசாயம் செய்தவர்களை திடீர் என்று வேறு தொழில் பார்க்க வைத்தால் என்ன நடக்கும். நிலத்தை விற்று கிடைத்த பணத்தை கண்டிப்பாக புதிதாக தொடங்கும் தொழிலில் தான் முதலீடு செய்வர். ஒரே ஊரில் பலர் நிலத்தை விற்று ஒருவர் ஏற்கனவே இருக்கும் தொழிலில் போட்டியாக தொழில் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றார்.அந்த தொழிலில் பற்றாக்குறை அதிகம் இருந்தால் அவரால் தொடர்ந்து அதே தொழிலில் நடத்த முடியும். ஆனால் அப்படி ஒரு தொழிலிலும் பலர் இருந்தால் பற்றாக்குறை குறைந்து பொருளின் விலையும் குறைந்து தொழில் செய்பவர் நட்டம் அடைகிறார்.( இது MRF நிறுவனம் அரியலூர் அருகே விவசாயிகளிடம் நிலத்தை வாங்கியதால் வந்த நிலைமை. விருப்பபட்டு கொடுத்தவர்கள் சிலர் மட்டுமே.)உண்மையை சொல்லப்போனால் விலைவாசியை பாதிக்கும் காரணிகள் என்று சொல்லப்படும் அனைத்திற்கும் இப்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு என்று செய்திருக்கும் அனைத்தும் தான் இப்போது நம்மை பாதிக்கின்றது.( சிமெண்ட் தொழிலில் ஆதிக்கம் செலுத்துவது தற்போது உள்ள திமுக கட்சியினரே.சிமெண்ட் விலை அதன் மூலபோருட்களின் விலை அதே நிலையில் இருக்கும்போதும் ஏறுகின்றது அல்லது எற்றபடுகின்றது.)

இப்படி விலைவாசியை ஏற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணியினர் ஸ்பெக்ட்ரம் பணத்தில் சில புதிய முதலீடுகள் வந்திருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர்.( தொழில்கள் புதிதாக தொடங்குகின்றனர் என்று பார்த்தால் அடுத்தவரிடம் இருந்து அந்த தொழிலை பிடுங்கி கொள்கின்றனர்.)
சென்ற தேர்தலில் எப்படி சிதம்பரம் ஜெயித்து வந்தாரோ அதே போல் இந்த முறையும் பலர் ஜெயித்து வர முடியும். (அதே பணம் தானே இப்போதும் வேலை செய்ய போகிறது.அப்புறம் என்ன?) இந்த ஸ்பெக்ட்ரம் பணம் வெளிநாட்டில் அதிக அளவில் இருக்கின்றது என்கிறார்கள். இதுவரை இந்தியாவிற்குள் வந்த ஸ்பெக்ட்ரம் பணமே இவ்வளவு விலைவாசியை ஏற்றுகிறது என்றால் முழுபணமும் உள்ளே நுழைந்தால் அப்போது என்ன நிலையில் நாம் இருக்க போகிறோம் என்று தெரியவில்லை.காஷ்மீரில் தீவிரவாதம் தொண்ணூறுகளுக்கு பின்னர் தான் நுழைந்தது. ஏன் நுழைந்தது? அதற்கு முன்னர் பிரிவினைவாதம் பற்றி அவர்கள் ஏன் பேசவில்லை? நமது தேர்தலின் லட்சணம் அப்படி. தேர்தலில் 1987 இல் நடந்த சம்பவங்கள் தான் இன்றைய காஷ்மீரின் நிலைக்கு காரணம். தேர்தலில் தில்லுமுல்லுக்கள் ஒரு அளவிற்கு மேல் செல்லும்போது மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேர்தல்களில் நம்பிக்கை இருப்பது இல்லை. விளைவு ஆயுதங்கள் ஏந்தும் கலாச்சாரம். அதே நிலைக்கு தமிழகம் செல்லாமல் இருப்பதற்காக இம்முறை தேர்தல் முறைகேடுகள் பெரிய அளவில் இருக்க வேண்டும். அப்படி ஒரு வேளை முறைகேடுகள் தேர்தலில் நடந்தால் விலைவாசியை மட்டும் இந்த அரசு நம் மீது திணிக்காது. அது தீவிரவாதத்தையும் நம் மீது விதைத்து விருட்சமாக வளர்த்து விடும்

அடுத்த நாடகம் தயார்

 தற்போதைக்கு முடிவிற்கு வந்துள்ளதாக நினைக்கப்படும் திமுக காங்கிரஸ் கூட்டணி, மீண்டும் இணையும் என்றே தெரிகிறது.
கூட்டணிகட்சியான காங்கிரஸ் முரண்டு பிடித்து கொண்டே அதிமுகவிடம் பேரம் பேசினாலும் அதிமுகவின் பிடி ஒன்றை வைத்தே இந்த பேச்சுவார்த்தையை காங்கிரஸ் செய்தது. அந்த பிடி என்னவென்றால் ஹசன் அலிக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள நிதித்துறை சம்பந்தப்பட்ட விவகாரம் என்றே தெரிகிறது. இதுவரை ஏமாளியாக இருந்த காங்கிரஸ் இப்போது திமுக மற்றும் அதிமுகாவை சமாளிக்கும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. திமுகவை சமாளிக்க ஸ்பெக்ட்ரம் என்றும் அதிமுகவை சமாளிக்க ஹசன் அலி என்றும் காங்கிரஸின் நிலைப்பாடு உள்ளது. இதில் யார் காங்கிரஸின் இழுப்பிற்கு ஒத்து வருகிறார்களோ அவர்களுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க இருக்கும் நிலையில் ஈழத்தமிழர்களை கொல்வதற்கு உதவிய  கருணாநிதி கூட்டணி முறிவு நாடகத்தை கொண்டு வந்தார். ஒருவேளை அந்த நாடகம் ஒரு முடிவிற்கு வந்து மீண்டும்
இந்திராவின் மருமகளே என்று கருணாநிதி சொல்லும் காலம் தொலைவில் இல்லை.
பின் குறிப்பு: யார் கொள்ளை அடிக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. கொள்ளை அடிக்கின்றவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கவும் ஒரு திறமை வேண்டும்.

மெரினாவில் ஓரிடம் வேண்டும்

இறந்தவர்களுக்கு கொடுத்தது போக எனக்கும் ஓரிடம் வேண்டும்.

கொள்கை வகுத்தவனுக்கு ஓரிடம்.

கொள்கை வளர்த்தவனுக்கு ஓரிடம்.

கொள்ளை அடித்த எனக்கு ஏன் இல்லை ஓரிடம்?

ஆட்சியில் செத்தால் இடம் என்றார்கள்.

லட்சம் தமிழர் செத்தும் இடம் இல்லை எனக்கு.

இன்னும் ஈழத்தமிழர் போதுமா தாய்தமிழரும் வேண்டுமா?

---யாரோ என் கனவில் சொன்னதுஎதிலும் லஞ்சம்

 இரு வாரங்களுக்கு முன்னர் நாங்கள் கட்டிக்கொண்டு இருக்கும் வீடு சம்பந்தமாக மதுரை சென்றேன். வீட்டின் வேலை முழுவதும் முடியும் நிலையில் இருப்பதால் தற்போது இருக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கான

மின் இணைப்பினை(Commercial) மாற்றி வீடுகளுக்காக வழங்கப்படும் மின் இணைப்பாகவும்(Domestic) வீட்டின் ஒரு பகுதிக்கு முத்தறுவாய் மின்திறன் (3-phase )மின் இணைப்பு பெறவும் சென்று இருந்தேன்.முதலில் ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் கட்டிடங்களுக்கான மின் இணைப்பிலிருந்து மாற்ற கோரி ஒரு விண்ணப்பம் கொடுக்க கூறினார். அதோடு மீண்டும் வீடுகளுக்கான மின் இணைப்பு கொடுக்க கூறி ஒரு விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்றனர். நான் முத்தறுவாய் மின்திறன் மின் இணைப்பு புதிதாக வாங்க வேண்டும் என்று கூறியபோது அதற்கு ஒரு விண்ணப்பமும் கொடுக்க கூறினர். இந்த விண்ணப்பங்களை வெளியில் இருக்கும் தரகரிடம் இருந்தே வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அவரிடமே அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கும்போது அவர் கேட்ட தொகை ஐநூறு ரூபாய்.இதை எடுத்து கொண்டு உள்ளே சென்றால் முதலில் தற்போது இருக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கான மின் இணைப்பினை(Commercial) மாற்றி வீடுகளுக்காக வழங்கப்படும் மின் இணைப்பாக(Domestic) மாற்றுவதற்கு வருவார்கள் என்றார்கள். இதற்கு தமிழக மின்சார வாரியத்திற்கு ஐநூறும் (350+150) அலுவலருக்கு ஆயிரத்தி ஐநூறும் கொடுத்தோம்.
இது தவிர வீட்டிற்கு வந்து மின் இணைப்பினை மாற்றி கொடுக்கும் ஊழியருக்கு ஒரு இரு நூறு கொடுத்தோம்.

இந்த பணத்தினை இவர்களுக்கு கொடுக்கும் முன்னர் என் அப்பாவிடம் சண்டையிட்டேன். மின்சார வாரியத்தில் கட்டவேண்டிய பணத்தை கட்டியாகிற்று அப்புறம் எதற்கு இன்னும் இவர்களுக்கு அழுகிறீர்கள் என்று. அதற்கு என் அப்பா கூறியதாவது" பக்கத்து வீட்டுக்காரன் லஞ்சம் கொடுக்கவில்லை என்று புதிதாக முத்தறுவாய் மின்திறன் (3-phase )மின் இணைப்பு கேட்டு கொடுக்கவில்லை. அவன் சண்டை போட்டு போயி ஒரு மாதம் ஆக போகிறது. இன்னும் பக்கத்து வீட்டிற்கு அந்த மின் இணைப்பு வந்தபாடில்லை. நீயும் அதே மாதிரி சண்டை போட்டால் இங்கேயும் அதுவே தான் நடக்கும்" என்றார். நான் இதற்கு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்கிறேன். இவனுங்க என்ன செய்யுரானுங்கனு பார்க்கலாம் என்றேன். ஆனால் அப்பாவிற்கு அதில் உடன்பாடும் இல்லை. நீ புகார் அளித்து விட்டு சென்னை சென்று விடுவாய். இங்கே இருக்க போவது நான் தானே என்றார். லஞ்சம் கேட்பவரும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான். லஞ்சம் கொடுக்க எத்தனிக்கும் எனது தந்தையும் அதே புகுதியில் தான் இருபது வருடங்களாக உள்ளார். பின்னர் எதற்காக லஞ்சம்?
நான் எங்கள் வீட்டிற்கு வந்த மின் இணைப்பு கொடுப்பாளரிடம்(Wire man) கேட்டபோது அவர் வாதம் வித்தியாசமாக இருக்கிறது.  
 • முதலில் சொல்லும் காரணம் விலைவாசி அதிகமாகிடுச்சு
 • இரண்டாவதாக சொல்லுவது மேலே இருப்பவர்களுக்காக தான் வாங்குகிறோம் என்பது. அதாவது அந்த ஆயிரத்தி ஐநூறு ரூபாயில் மின்வாரியத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் எல்லாருக்கும் பங்கு உண்டாம். தெரிந்தவர் என்பதால் ரொம்ப கம்மியாம்.
 • மூன்றாவதாக சொல்லும் காரணம் தான் இந்த பதிவினை நான் எழுதுவதற்கு காரணம் எல்லாரும் வாங்குறாங்க நானும் வாங்குறேன் அல்லது வாங்க வைக்கபடுகிறேன் என்பது அது.இந்த மின்வாரிய ஊழியர் மாநகராட்சியில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு அவர் கொடுத்த லஞ்சத்தினை பற்றி சொல்லுகிறார். அதாவது இது ஒரு தொடர் சங்கிலி போல் நீளுகிறது.இந்த சங்கிலி தொடர் லஞ்சம் வாங்க முடியாத அல்லது வாய்ப்பு அற்ற துறையில் உள்ளவர்களால் சில நேரம் உடைகிறது.
 உதாரணத்திற்கு ஒரு காவல்துறையில் வேலை பார்க்கும் ஒரு அலுவலர் மாநகராட்சியில் தன்னுடைய வேலை எளிதாக நடைபெற லஞ்சம் கொடுக்கிறார் (சத்தியமாக காவல்துறைக்கு லஞ்சம் வாங்கி தான் பழக்கம், கொடுத்து இல்லை என்பது இப்போதைக்கு வேண்டாம்) என்று வைத்து கொள்வோம். இந்த காவல்துறை அலுவலர் இதனை ஈடுகட்ட வேறு யாரிடமாவது லஞ்சமாக வாங்குவார். அப்படி கொடுத்தவரும் ஒரு அரசு ஊழியர் என்றால் அவர் என்ன செய்வார். காவல்துறை அலுவலர்க்கு கொடுத்த பணத்தை வேறு எங்காவது லஞ்சமாக வாங்கி ஈடு செய்கிறேன் என்பார். ஆக மொத்தத்தில் இதுவரை லஞ்சம் வாங்காத யாரேனும் அரசு துறையில் இருந்தால் அவர்களை லஞ்சம் வாங்க தூண்டுகிறார்கள். அரசு ஊழியர்கள் சரி வாங்குகிறார்கள். மற்றவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்றால் இவர்களிடமிருந்தோ அல்லது தங்களிடம் யார் லஞ்சம் கொடுப்பார்கள் என்றோ தான் பார்க்கிறார்கள்.

ஒரு வேளை உங்களிடம் ஒரு வேலைக்கு லஞ்சம் பெறும் ஒருத்தர் இருக்கும் துறையில் இருந்து யாரேனும் ஒரு வேலைக்கு உங்களிடம் யாரேனும் வந்தால் நீங்கள் லஞ்சம் கேட்பீர்களா இல்லையா?

தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்கள ராஜபக்ஷேவும் அல்லக்கை காங்கிரஸ் ‘பச்சைத் தமிழர்’களும்:கு. காமராஜ்

Rajapakse and Hasan“ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான்.
ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள்.வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம்.எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில எம். எல். ஏ. க்களுக்குமான ‘டீலிங்’ அப்படி.


அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் இரண்டு மாத தமிழக அரசியல் நிலையைப் பார்ப்போம். ஈழத்தில் தமிழர்களுக்காக தனிநாடு கோரும் போராளிகளான தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்குமான போர் சமீப காலங்களில் மிகவும் உச்ச கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இறுதிக்கட்ட போர் என்று இரு தரப்புமே சொல்லுமளவுக்கு போர் கடுமையாக இருக்கிறது. வாழ்வா, சாவா? என்ற நிலையில் தமிழர்கள் அங்கு களத்தில் இருக்கிறார்கள். பூர்வகுடிகளான தமிழ் மக்கள் அங்கு தங்கள் தாய்நாட்டிலேயே நிர்க்கதியாக இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தப்படுகிறார்கள். தமிழ்ச் சிறுவர்கள் படிக்கும் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.லட்சக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக காடுகளில் தஞ்சம் புகுந்து பாம்புகளினால் சாகும் பரிதாபம் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளுடன் போர் புரிகிறோம் என்று கூறிக்கொண்டு
தன் நாட்டின் சக குடிகளான தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் வான் வழியே குண்டு வீசிக்கொலை செய்கிறது. நாம் வாழும் உலகில் எங்குமே நடைபெறாத இத்தகைய கொடுமைகள் இலங்கையில் மட்டுமே சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்கள் என்ற ஒரு இனமே இருக்கக்கூடாது.அதைப் பூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள ராணுவம் திட்டமிட்டு செயல்படுகிறது.மேற்கண்ட படுபாதகச் செயலை மனித நேயமிக்க அனைவரும் கண்டித்தனர். தமிழகம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக அக்டோபர் மாதம் தொடக்கத்தில் திரண்டனர். ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்குப்
பிறகு ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒரு சில கட்சிகள் தவிர தமிழகம் ஒரணியில் திரண்டது. மக்களின் எழுச்சியின் விளைவாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை சிங்கள அரசை நிறுத்தி வலியுறுத்தி இந்திய அரசைக் கோரியும், அதை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. (அதன்பின்பு இந்த விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிகள்
பதவிக்காக அந்தர் பல்டி அடித்ததையும் நிவாரண நிதி வசூல் என்று பிரச்சனை திசை மாறியதையும்) சென்னையில் இலங்கை அரசினை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்
நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் மக்களின் எழுச்சியான போராட்டங்கள், அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மிரட்டல், அனைத்துக் கட்சிகளின் மனிதசங்கிலி
போராட்ட அறிவிப்பு என்று ஈழத் தமிழர்க்கு ஆதரவான போராட்டங்கள் உத்வேகமடைந்த நிலையில் இலங்கை சிங்கள அரசு அஞ்சியது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சியை தன் பங்குக்கு ஒடுக்க
சிங்கள அரசு எண்ணியது. ஈழத் தமிழர்கள் ஆதரவுப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய நினைத்த அதன் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் நன்கு பயன்பட்டனர். ஆம். சிங்கள அரசின் முயற்சிக்கு சிங்கள அதிகார வர்க்கத்தின் நீண்ட நாள் ‘நண்பர்’ ராமநாதபுரம்
தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன்அலி உதவினார். ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க நினைத்த சிங்கள அரசின் எண்ணத்திற்கேற்ப தாளமிட்டவர்கள் தான் தமிழக காங்கிரஸ் எம். எல்.
ஏ. க்கள். ஆம் சிங்கள அரசுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் சிலருக்கும் இணைப்புப் பாலமாக விளங்கியவர் அசன் அலி. அதற்கு அவர்கள் தலைவி ராஜிவ்காந்தி கொலை பயன்பட்டது.தமிழ்நாட்டில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் சிலர் ஆவேசப்பட்டோ, உணர்ச்சி வசப்பட்டோ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதை மட்டுமே வெறும் சாக்காக வைத்துக் கொண்டு,
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஈழ ஆதரவையும் விடுதலைப் புலிகளின் ஆதரவு போராட்டம் என்றும், விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள், ராஜீவ்காந்தி எங்கள் தலைவர். அவரைக்
கொன்றவர்களை நாங்கள் எப்படி ஆதரிப்பது? என்றும் ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை ஆதரிப்பது தேசத் துரோகம் என்றும் ஆகவே நடைபெறும் போராட்டங்கள் தேசத்திற்கு எதிரானது என்றும் ஆகவே
அதை ஆதரிக்க முடியாது என்றும் ஈழத் தமிழர் போராட்டத்தை கணிசமாக நீர்த்துப் போகச் செய்ததில் காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதன் உச்சகட்டமாக எழுந்த வசனங்கள் தான். ‘‘ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’. என்னும் திரைப்பட பாணியிலான வசனம்.பதவிக்காக எந்த இழி செயலையும் செய்யத் தயாராக இருக்கும் காங்கிரஸ், தாம் வெற்றி பெறுவதற்காக ஜெயலலிதா, கருணாநிதி, கம்யூனிஸ்டுகள் ஏன் பெயரளவு கொள்கை கூட இல்லாமல் நேற்று கட்சி
ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் உட்பட யாருடனும் கூட்டு சேரத் தயாராக இருக்கும் காங்கிரசார். பதவிக்கு வந்து விட்டால் இராணுவத்திற்கு ஆயுதம் வாங்குவதிலிருந்து அனைத்திலும் ஊழல் புரிவதில் கை தேர்ந்த காங்கிரசார் 17 வருடங்களுக்கு முன் செத்துப்
போன ராஜீவ்காந்தி விஷயத்தில் மட்டும் அவர் ஆவியே மன்னித்தாலும் இவர்கள் மன்னிக்கத்தயாராக இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையிலேயே இவர்கள் ராஜீவ்காந்தி பேரிலான தீராத அன்பின்பால் குடம் குடமாய் கண்ணீர் வடிக்கிறார்களா? என்று பார்த்தால் அது நீலிக்
கண்ணீர் என்று நடந்தவற்றை ஆராயும் போது தெரிகிறது.ஆம். சில ஓட்டுக்கள் வாங்குவதற்காக கவர்ச்சி நடிகை மாயாவை களத்தில் இறக்கும் காங்கிரசாருக்கு சில நூறு ஓட்டுக்கள் வாங்குவதற்காக ராஜீவ்காந்தி மரணம் பயன்படுகிறது ஆகவே களத்தில அவரை வைத்து தொடர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள் என்று மேலோட்டமாக கருத முடியாது. ராஜீவ்காந்தி அவர்களுக்கு இன்னும் ‘மதிப்பு’மிக்க தலைவர். அதை அவர்களுக்கு ராஜபக்ஷே ராமநாதபுரம்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி மூலம் புரிய வைத்தார். அசன் அலிக்கும் மகிந்தா  ராஜபக்ஷேவுக்கும் இடையேயான தொடர்பு பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.ராமநாதபுரம் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அசன் அலிக்கும், இலங்கையின் தற்பொழுதைய அதிபர் ராஜபக்ஷேவுக்கும் நீண்ட காலமாக ‘நெருக்கமான’ தொடர்பு உண்டு. ஆகஸ்டு மாதம் 2005
ஆம் வருடம் இலங்கையின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பாக அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அப்பொழுது அவருக்கு வாழ்த்துக் கூறி அசன் அலி கடிதம் எழுதுகிறார். அவரது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார்.
அப்பொழுது அசன் அலி சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. அதன்பின்பு மகிந்த ராஜபக்ஷே இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்பொழுது அசன் அலிக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார் (கடிதம் பார்க்க). இலங்கை எதிர்க்கட்சிகள் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவும் அசன் அலியை வாழ்த்துகிறார். மற்றும் இலங்கையின் முக்கிய அமைச்சர்கள்
மற்றும் உயர் அதிகார வர்க்கத்தினர் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.
(ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ராஜ்பக்ஷ எழுதிய வாழ்த்துக்
கடிதம்)இங்கு நம் முன் எழும் வினாக்கள்1) பிரதமராக இருக்கும் ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பில் அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படும் பொழுது அசன் அலி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதுகிறார். அசன் அலி எந்தப் பதவியிலும் அப்பொழுது இல்லை. சென்னையில் வாழும் சாதாரண இந்தியக் குடிமகன். ஆனால் அவர் ராஜபக்ஷேவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?2) அசன் அலி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றதும் அவருக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் வாழ்த்துச் சொல்கின்றனர். தமிழகத்தின் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினருக்கு இன்னொரு நாட்டின் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவரும் போட்டி போட்டு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?3) காங்கிரஸ் கட்சியில் இங்கு பலபேர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி போட காத்திருக்கையில் கட்சிக்கு சம்பந்தமில்லாத அசன் அலிக்கு சீட் கிடைத்தது எப்படி?4) ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த ராமச்சந்திர வன்னி, மலேசியா பாண்டியன் போன்றோருக்கு தான் சீட் கிடைக்கும் என்று அங்குள்ளவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று, தொகுதிக்கு தொடர்பில்லாத அசன் அலிக்கு சீட் எவ்வாறு கிடைத்தது?அசன் அலி தமிழக சட்டமன்ற உறுப்பினரான பின்பு இலங்கையின் அதிகார மட்டத்தினருடன் தொடர்பு அதிகரிக்கிறது. தனது நட்பு வட்டாரத்தை காங்கிரஸ் எம். எல். ஏ. க்களில் அதிகரித்து வந்தார். வேலூர் எம். எல். ஏ. ஞானசேகரன் போன்றோர் இதில் அதிக நெருக்கமாகின்றனர். ‘ஒற்றுமை’யாக இருக்கின்றனர். தங்களுக்குள் அனைத்தையும் ‘பகிர்ந்து’ கொள்கின்றனர்.இந்த நிலையில் தமிழகத்தின் தற்பொழுதைய சம்பவங்களை ஒட்டி ஈழத்தமிழர் ஆதரவு அலை அதிகரிக்கவே அதனைக் குறுக்குச் சால் ஓட்டிக் கெடுக்கும் விருப்பத்தின் விளைவாக 29. 10. 2008 அன்று ராஜபக்ஷே அசன் அலியுடன் பகல் 11 மணிக்கு பேசுகிறார். தமிழகத்தில் நடைபெறும் விஷயங்கள் பரிமாறப்படுகின்றன. தொலைபேசி பேச்சுக்குப் பிறகு அசன் அலி துரிதமாகச் செயல்படுகிறார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அவரே அனைத்து காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் அவரது தொலைபேசியில் இருந்து பேசுகிறார். அதன்படி 23 நவம்பர் 2008 அன்று காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் கூட்டம் கூட்டப்படுகிறது.எதிர்பார்த்தபடியே வேலூர் ஞானசேகரன் எம். எல். ஏ. உட்பட பலரும் வஞ்சனை இன்றி வீர உரை நிகழ்த்துகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசுபவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். மனித சங்கிலி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார். கூட்டத்திற்குப் பிறகு தமிழக காங்கிரஸ் மனித சங்கிலியில் தமிழக காங்கிரஸ் பஙகேற்கவில்லை என்ற நிலைப்பாடு எடுக்கிறது. அதற்கு அவர்களுக்கு ராஜீவ்காந்தி கொலை பயன்படுகிறது. மனித சங்கிலி போராட்டத்திற்கு பின்பு நிலவரம் மாறுகிறது. பிரணாப் முகர்ஜி வருகைக்குப் பிறகு தமிழக முதல்வர் எம். பி. க்கள் ராஜினாமா இல்லை என்ற முடிவுக்கு வரும் தமிழக முதல்வர் ஈழத் தமிழர் நிவாரண நிதி வசூல் செய்கிறார்.அதன்பின்பு 4. 11. 2008 அன்று காலை 10 மணியிலிருந்து அசன்அலி ராஜபக்ஷேவுக்கு தொலைபேசியில் பேச முயற்சி செய்கிறார். ஆனால் பலமுறை முயன்றும் பேச முடியவில்லை. அதன்பின்பு காலை 12 மணிக்கு ராஜபக்ஷே நேரடியாக அசன் அலியின் கைபேசி 9444112374 எண்ணுக்கு பேசுகிறார்.தொலைபேசியில் ராஜபக்ஷேவுடன் பேசியதை அசன் அலியே குமுதம் ரிப்போர்ட்டர் நிருபரிடமும், ஜூனியர்விகடன் நிருபரிடமும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகவே அதற்கு ஆதாரம் தேவையில்லை. ஏறத்தாழ 25 நிமிடம் பேசிய பின்பு அசன் அலி சக தமிழக காங்கிரஸ் எம். எல்.ஏ. க்களுடன் பேசுகிறார். அதைத் தொடர்ந்து அன்றே தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார். கடிதத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் மிக முக்கியமானது.‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க ஒரு தூதுக்குழு அமைத்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை
(!) நடத்தி தீர்வு காணுமாறு வலியுறுத்துகிறார். அந்தத் தூதுக்குழுவில் தன்னையும் இணைத்துக்
கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் இலங்கை அமைச்சர்களிடமும்
மற்றும் இலங்கை அதிகாரிகளிடமும் பேசி 50 ஆண்டுகளாகத் தீராத இலங்கைப் பிரச்சனையைத் தான்
தீர்த்து வைப்பதாக நமது முதல்வருக்கே உத்தரவாதம் (!) அளிக்கிறார். அதேபோல அக்குழுவிற்கு
தேவையான அனைத்து வசதிகளையும் தானே செய்து தருவதாக உறுதிமொழி அளிக்கிறார். ’’(ஹசன் அலி முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம்)இங்கு நமக்கு எழும் வினாக்கள்1) ஒரு தமிழக சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தமிழனைப் பூண்டோடு அழிக்கும் இன்னொரு நாட்டு அதிபருடன் சரளமாகப் பேச முடிகிறது?2) அசன் அலி பேசுவது அவரது கட்சித் தலைவி சோனியாவுக்குத் தெரியுமா? இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியுமா? நமது தமிழக முதல்வருக்குத் தெரியுமா?3) மேற்கண்ட அனைவருக்கும் தெரியும் என்றால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட முடிவு செய்துள்ளதா? அவ்வாறு தலையிட முடிவெடுத்து அதற்காக வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்திய அரசின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலியை நியமனம் செய்துள்ளதா?4) அவ்வாறு இல்லாமல் யாருடைய அனுமதியும் பெறாமல் யாருக்கும் தெரியாமல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி பேசியிருந்தால் அதற்கு என்ன தண்டனை?5) சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள இலங்கை அதிபருடன் அசன் அலி பேசுவதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் பதவி ஏற்கும் பொழுது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாகச் செயல்பட்டுள்ளார். அதற்கு என்ன தண்டனை?6) 3. 11. 2008 அன்று 12 மணிக்கு ராஜபக்ஷேவுடன் பேசிய உடன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுவதன் காரணம் என்ன?(ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ரணில் எழுதிய வாழ்த்துக்
கடிதம்)7) கடிதத்தில் இந்திய தூதுக்குழு இலங்கை சென்றால் அனைத்து உதவிகளையும் தானே செய்து தருவதாக எவ்வாறு உத்தரவாதம் அளிக்க முடிகிறது? அசன் அலிக்கு அங்கு அதிகார மட்டத்தின் அனைத்து நபர்களுடனும் நட்பு உண்டா?8) அசன் அலி காங்கிரஸ் கட்சி எம். எல். ஏ. க்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு தனது தொலைபேசியில் இருந்து அனைத்து எம். எல். ஏ. க்களுக்கும் பேசுகிறார்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவரைத் தாண்டி ராஜபக்ஷேவின் நண்பருக்கு இதில் என்ன அக்கறை?9) ராஜபக்ஷேஉடன் பேசிய பின்பு முதல்வருக்கு அன்றே கடிதம் எழுதும் அசன் அலி அதில் இலங்கை பிரச்சனை தீர அனைத்துக் கட்சி தூதுக் குழுவை அமைக்க வலியுறுத்துகிறார். இது அவர் விருப்பமா? இல்லை தொலைபேசியில் பேசிய ராஜபக்ஷே விருப்பமா?10) ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலம் நீடிக்கும் இலங்கை பிரச்னையில் இங்கிருந்து செல்லும் தூதுக்குழு பேசி தீர்க்கும் என்று முதல்வருக்கு உத்திரவாதம் அளிக்கிறாரே? இது உண்மையான விருப்பமா? அல்லது பேச்சு வார்த்தை என்று ஒரு பக்கம் இழுத்தடித்துக் கொண்டு மறுபக்கம் தமிழனைக் குண்டு வீசிக் கொலை செய்யும் ராஜபக்«க்ஷவின் விருப்பமா?11) அசன் அலி மட்டும் ராஜபக்ஷே உடன் நட்பு வைத்துள்ளாரா? பிற காங்கிரஸ் எம். எல். ஏ.க்களுக்கும் தொடர்பு உள்ளதா?12) விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினார்கள் என்ற ‘குற்றத்திற்காக’ வைகோ, சீமான், அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழனைக் கொலை செய்யும் சிங்கள அதிபர் ராஜபக்ஷே உடன் தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் யாருக்கும் தெரியாமல் ‘கள்ள உறவு’ வைத்துள்ளனரே? அதற்கு என்ன தண்டனை?


(ராஜபக்ஷ பிரதமராக இருந்தபோது எழுதிய கடிதம்)13) அசன் அலி இந்தியாவிற்கான இலங்கை துணை தூதர் அம்சா உடன் எப்பொழுது பேசினாலும் சிங்களத்தில் மட்டும் பேசுகிறாரே. அதற்கு என்ன காரணம்? இருவருக்கும் தாய்மொழி தமிழாக இருந்தும் வேற்று மொழியில் பேச என்ன காரணம்?இதுபற்றி யாரும் அசன் அலியிடம் வினா எழுப்பினால் எந்த மொழியில் பேசினால் என்ன? என்று எதிர்கேள்வி கேட்கிறார். நாம் கேட்பது இதுதான். எந்த மொழியில் பேசினால் என்ன என்று கூறுபவர் தமிழ்மொழியில் ஏன் பேச மறுக்கிறார் என்பதுதான். பேசும் ‘ரகசியம்’ அருகிலிருப்பவர்களுக்கு வெளிப்பட்டு விடும் என்பதாலா?14) இலங்கை துணைத் தூதர் அம்சா இங்கு ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பெயர்களில் உல்லாச விடுதிகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் நடத்தும் பல்சுவை விருந்துகளில் பங்கேற்கும் பத்திரிகையாளர்கள் யார் யார்? அதில் எந்தெந்த காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் பங்கேற்கின்றனர். அதில் என்னென்ன ‘பரிமாறப்’படுகின்றன? இது போன்ற பல வினாக்கள் நம்முன் எழுகின்றன. ஆனால் யாரிடமும் பதில்தான் இல்லை. வாசகர்களாகிய தாங்கள் பதிலை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.ஈழத்தமிழர் பிரச்னையில் இன உணர்வாய் இங்கு எழுச்சி ஏற்படும் பொழுதெல்லாம் அசன் அலி,வேலூர் ஞானசேகரன் மற்றும் சில காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் ராஜீவ்காந்தி கொலையைச்சாக்காக வைத்துக் கொண்டு ‘அதீத’ ஆர்வம் காட்டுகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவான போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகின்றனர். குறுக்குச் சால் ஓட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் ராஜீவ்காந்தி மீதான பற்று காரணமல்ல என்று அசன் அலி மகிந்தா ராஜபக்ஷே தொடர்பைப் பார்த்தாலே புரிகிறது. தமிழர்கள் அங்கு தனது இனத்தைப் பூண்டோடு அழிக்கும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து களத்தில் நின்று போராடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு பெரும்பாலாக நினைப்பது இங்குள்ள தமிழனின் தார்மீக ஆதரவைத்தான்.ஆனால் இங்கோ சில சில குரல்களைத் தவிர்த்து கனத்த மௌனம் நிலவுகிறது. குரல் கொடுக்கும் கொஞ்சப் பேரும் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள். தமிழக காங்கிரசாரோ ராஜிவ்காந்தி கொலையை முகமூடியாக அணிந்து கொண்டு தமிழனைப் பூண்டோடு அழிக்கும் மகிந்த ராஜபக்ஷேஉடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு குறுக்குச்சால் ஓட்டுகின்றனர். குழி பறிக்கின்றனர். ஒரு காலத்தில் பெரியார் போன்ற தலைவர்கள், இருந்த தமிழக காங்கிரஸ் இன்று சிங்கள அதிபர் ராஜபக்«க்ஷவின் ஆலோசனை கேட்டுச் செயல்படும் நிலைக்கு மாறிவிட்டது என்பது எவ்வளவு சீரழிந்த நிலைக்கு தமிழக காங்கிரஸ் சென்றுவிட்டது என்பதை அறியலாம்.இறுதியாக ஒன்று மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக காங்கிரஸ் அறிவித்ததற்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அசன் அலி இவ்வாறு வருத்தப்பட்டார்.எங்களை எல்லாரும் அம்மா (ஜெயலலிதா) காங்கிரஸ் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை என்று வருத்தப்பட்டார். அது தவறு. அவர்களை சிங்கள காங்கிரஸ் என்று அழைப்பதே ஏகப் பொருத்தம்.அதைத்தான் அசன் அலி உள்ளிட்ட அவரது ஆதரவு எம். எல். ஏ. க்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வர்.


எப்படியெல்லாம் சிண்டு முடியுறாங்க

சென்னையில் புத்த பிட்சுகளின் சேவை மையத்தில் நடந்த தாக்குதலை கண்டிக்க வேண்டியது ஒரு பத்திரிக்கையின் கடமையாக இருக்கலாம். ஆனால் வேறு யாரை காரணம் சொல்லலாம் என்பதில் கூட அரசியல் நடத்துகிறது தினமலர்.நேற்று காலை வரை  இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

தினமலர் இதனை போன்று செய்தி வெளியிட்ட பின்னர் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஒரு பயம் வந்துள்ளது. விடுதலை  புலிகள் நடமாட்டம்  தமிழ்நாட்டில் இருக்கிறது என்று யாரேனும் குற்றம் சாட்டி விடுவார்கள் என்று பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.என்னுடைய கேள்வி அவர்கள் தான் உண்மையில் இந்த தாக்குதல்களை நடத்தியவர்களா? இல்லை யாரையாவது இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கைது செய்துள்ளார்களா?
அப்போ இந்த சம்பவத்திற்கும் பழ.கருப்பயாவை தாக்கியவர்களுக்கும் சம்பந்தம் இல்லையா?

Popular Posts