ஏர்டெல்லின் தரங்கெட்ட சேவை

நான் கடந்த ஐந்து வருடங்களாக ஏர்டெல்லின் சேவையை உபயோகபடுத்தி வருகிறேன். ஒரே நம்பர் தான் எல்லாரிடமும் கொடுத்து வைத்திருப்போம் என்பதால் இப்படி. நான் சென்னையில் இருந்து சோழிங்கநல்லூர் அருகே உள்ள நிறுவனதிற்கு எங்கள் நிறுவனத்தின் பேருந்தில் செல்கிறேன். எப்போது வேளச்சேரிக்கு அருகில் வந்தாலும் பேசிக்கொண்டு இருந்தாலும் என்னுடைய அலைபேசியானது தொடர்பை துண்டிக்கிறது. இப்போது நான் பேசிக்கொண்டு இருக்கும் நபர் மிகவும் முக்கியமானவராகவோ, இல்லை வேண்டியவராகவோ அல்லது நம்மை தவறாக நினைக்க கூடிய ஆளாகவோ இருக்கும் நிலையில் நமது இணைப்பு தானாக துண்டிக்கபட்டால் எப்படி இருக்கும்? நாம் அவசரம் அவசரமாக மீண்டும் முயற்சித்து அந்த நபரிடம் வருத்தம் தெரிவித்து பேசுவதை தொடர்வோம். ஆனால் சென்னையிலே இருக்கும் வேளச்சேரியினுள் இப்படி என்றால் மற்ற இடங்களில் எப்படி என்று தெரியவில்லை. நண்பர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது தான்( ஏர்டெல்லின் தகவல்தொழில்நுட்ப பிரிவில் இருக்கிறார்) அவர் சொன்னார்." பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதற்கேற்ப தங்களின் தொலைதொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குறைந்தது தனது வாடிக்கையாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இத்தகைய தொலைதொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கை அல்லது அதன் வீச்சை உயர்த்த வேண்டும். ஆனால் இதை ஏர்டெல் பின்பற்றவில்லை. நாமும் தினமும் இந்த பிரச்சினைகளை கடந்து தான் போகின்றோம். இதை ஏன் நாம் கண்டு கொள்ளபோகிறோம் என்ற நினைப்பிலே ஏர்டெல் தொடர்ந்து இது மாதிரியாக வரும் புகார்களை கண்டுகொள்வது இல்லை."

லாபம் மட்டுமே குறிக்கோள் என்றால் கூட சேவை நன்றாக இருந்தால் கண்டு கொள்ளாமல் போகலாம். ஆனால் இது மட்டும் தான் பிரச்சினை என்றில்லை. முதலில் முதலிலே கட்டணம் செலுத்தி பெரும் சேவையில் இருந்தேன். ஏர்டெல்லில் இருந்து பேசினார்கள். உங்களின் அலவலகத்தில் இருக்கும் நண்பர்களுக்குள் பேசினால் கட்டணம் இல்லை என்றார்கள். அதற்காக பேசியபின் கட்டணம் செலுத்தும் சேவையை தேர்ந்தெடுத்தேன். முதலில் இது நல்ல விசயமாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறிக்கொண்டே இருந்தது. அது வரை முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி வந்த நான் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. சில நாட்கள் பேசியதற்கும் பல நாட்கள் பேசாதபோதும் கட்டணம் கட்டி இருந்தேன். நமக்கு தெரிந்த இதே தகவல் தொழில்நுட்ப நண்பர் மூலமே நான் பேசி இருந்த அழைப்புகளை சரிபார்த்தேன். அப்போது தான் நான் பேசாத அழைப்புகளும் அதில் இருந்தது கண்டுபிடித்து ஏர்டெல்லில் முதலில் கேட்டபோது கட்டி தான் ஆக வேண்டும் என்றார்கள். பின்னர் நாங்கள் வழக்கு பதிவோம் என்றவுடன் அவர்களே இறங்கிவந்து அந்த அழைப்புகளை கழித்து இனிமேல் இவ்வாறு நடக்காது என்று கூறினார்கள்.


ஏர்டெல் உபயோகபடுத்தும் முறையானது கொடுப்பது போல் கொடுத்து பின்னர் அதற்கும் பணம் பறிப்பது. இந்த முறையானது முதலிலே கண்டு கொள்பவர்கள் விலகி நிற்கிறார்கள். என்னை போன்றவர்கள் அதே நம்பர் வேண்டும் என்பதால் அமைதியுடன் அதே நம்பர் உடன் அடுத்த சேவைக்கு தாவுவதற்கு உள்ளோம். உங்களுக்கு தெரிந்த நல்ல சேவை அல்லது குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கும் நிறுவனம் இருந்தால் எனக்கு கூறுங்களேன்.

10 Response to "ஏர்டெல்லின் தரங்கெட்ட சேவை"

 1. தங்களது பதிவு நிச்சயம் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது. எனது நண்பர் தமிழ்நாட்டிலிருந்து எனக்கு பேசும்போது கூட இதையேதான் சொன்னார். சிக்னல் இல்லாத பகுதிகளில் மிகவும் கொடுமை.! வம்சம் படத்துல வர்றா மாதிரிதான் மரத்துல ஏறியும் டேங்குல ஏரியும் பேச வேண்டியிருப்பதாக.. ரொம்ப வருத்தப்பட்டு சொன்னான். அதை அப்படியே தெளிவுபடுத்தியிருக்கீங்க..! பகிர்வுக்கு நன்றி..!

  பிஎஸ்என்எல்லும் தரங்கெட்ட சேவையைத்தான் வழங்குகிறது.

  raja says:

  நீங்க பாக்யசாலி... என் பி.எஸ்.என்.எல். சேவை பேசமாலே காச எடுத்துக்குவாங்க... வழிப்பறித்திருடர்கள் என்பவர்கள் அரசு மற்றும் பெரும் நிறுவனங்களாக மாறி நீண்டநாட்களாகவிட்டது.. உங்களுக்கு விபரம் தெரியாதா...?

  நன்றி பனித்துளி சங்கர் அவர்களே.

  ramalingam,raja

  தங்களின் கருத்துகளுக்கு நன்றி. நம்மை ஏமாற்றுவதற்கு தான் எல்லாரும் அலைகிறார்கள். என்ன செய்வது?

  எல்லா நிறுவனங்களுமே இதே போல் தான்

  நீங்கள் வேறு நிறுவனத்தின் இணைப்பை பெற்றாலும் அதே நம்பரை உபயோகப் படுத்தும் வரையில் விரைவில் சட்டம் வர இருப்பதாகப் படித்தேன், வந்தபின்பு நல்ல நிறுவனத்தின் இணைப்பைப் பெற்றுக் கொள்ளுங்களேன்!

  //வரையில் // வகையில் [மன்னிக்கவும்]

  Jayadev Das அவர்களுக்கு,

  தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

  நிச்சயம் வேறொரு அலைபேசி இணைப்பு வழங்குனருக்கு மாறுவதற்கு உள்ளேன்.

  நான் போரூர் அருகில் இருக்கும் முகலிவாக்கத்தில் இருக்கிறேன் இங்கும் இதே பிரச்சனைதான். அதனால் நான் ஏர்டெல் உபயோகிப்பதையே விட்டு விட்டேன்.

Popular Posts