ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-6

ஈழதமிழர்கள் படுகொலையில் ராஜிவ்காந்தியின் பங்கு என்று எழுத ஆரம்பித்தால் இந்த பதிவுகள் எண்ணிக்கை எப்படியும் நூறினை தாண்டும்.


ஜால்ரா போடுவதற்கு யாராவது இருந்தால் நல்லது என நினைக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஜால்ரா போடுபவர்கள் தான் முதல் எதிரிகள் என்பதை உணர வேண்டும். அப்படி அவருக்கு வெளிநாட்டு கொள்கை என்ற பெயரில் தங்களின் வளத்தை வளர்த்து கொண்ட அதிகாரிகள் தான் அதிகம். அத்தகைய அதிகாரிகள் தங்களுக்கு சொந்தமான அல்லது தங்களுக்கு ஆதாயம் தரும் நிறுவனங்களின் கொள்கைகளை தான் தூக்கிபிடிப்பதில் அக்கறை காட்டினர். இலங்கையை பிரித்து ஈழம் அமைப்பதென்றால் அதற்கு ஒரே ஒரு போராளி குழுவை மட்டும் வளர்த்தாலே போதும். ஆனால் அதையே பல போராளி குழுக்களாக வளர்த்து விட்டு அதன் மூலம் இலங்கையை தன கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் அப்போதைய இலங்கையின் மீதான வெளியுறவு கொள்கையாக இருந்தது.
வெளியுறவு கொள்கைக்காக அடுத்தவர்களை ஏமாற்றியது போல் நம்மை நாமே ஏமாற்றி விளையாடும் விளையாட்டு ராஜீவ் காந்தியின் காலத்திலேயே வந்தது. உதாரணம் மாலத்தீவு புரட்சி. அதில் ஆதியும் அந்தமும் இந்தியர்களே. ஆட்சியை பிடிக்க நினைக்கும் எதிர்க்கட்சி தலைவரை ஆட்சியில் உட்கார வைக்க இந்தியா எடுத்த முயற்சி தோல்வி (உளவுத்துறையின் வேலை). ஆனால் அதையே ராஜ தந்திரமாக மாற்ற இந்தியாவே படைகளை அனுப்பி புரட்சியை தடுத்தது. இதில் புரட்சி செய்ய அனுப்பப்பட்டவர்கள் தான்

பத்மநாபாவின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இவர்களை முழுவதுமாக கட்டுபடுத்தி வைத்திருந்தவர்கள் நமது உளவுத்துறையினர் தான். (புலிகள் தமிழின எதிரிகளையும் துரோகிகளையும் ஏன் கொல்லவேண்டும்? இவர்களை விட்டுவைத்தால் போராளிகளுக்கும் காசுக்காக கொலைகளை செய்பவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும்)இவர்களையும் ஏனைய போராளி குழுக்களையும் புலிகள் அழித்தனர். அதில் சில எச்சங்களை மிச்சம் விட்டதால் வந்த விளைவு தான் இன்றைய அவர்களின் நிலை.(ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றோர் இன்னமும் உயிருடன் இருக்கின்றனர்.)


ஈழதமிழர்களை கொல்ல சொல்லி ராஜீவ் இந்திய அமைதிப்படையை அனுப்பவில்லை. ஆனால் அனுப்பிய படையை நிர்வகிக்க அனுப்பிய ஆட்கள் தங்களின் அதிகாரத்தையும் தங்களுக்கு தேவையானவற்றை இலங்கை அரசிடம் இருந்து பெற்று கொள்ள அவர்கள் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறினர்.( சண்டைக்காரர்கள் இருவருக்கும் இடையில் போட்டால் தான் அதன் பெயர் ஒப்பந்தம். சண்டைக்காரனும் சாட்சிக்காரனும் போட்டு கொண்டால் அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை? இதை கூட ஒழுங்காக அமல்படுத்த முடியாத நாடு தான் நம் நாடு. இவர்களை நம்பி ஒப்பந்தம் போட்டவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்பதே தனி தொடராக எழுத வேண்டும்.)


முதலில் ஒப்பந்தங்களை மட்டுமே மீறிய அவர்கள் ஏற்கனவே அவர்கள் வளர்த்து வைத்த போராளி குழுக்களை வைத்து தங்களின் விளையாட்டை தொடங்க முற்பட்டனர். அதற்கு பதிலடி புலிகள் கொடுத்தனர். தாக்குதல் நடத்திவிட்டு மறைந்து கொள்வதென்ற கொரில்லா தாக்குதல்களை தாங்க முடியாமல் அப்பாவி மக்களை துன்புறுத்த தொடங்கினர். இந்த துன்புறுத்தல்கள் எல்லாம் பின்னர் வன்முறை, கற்பழிப்பு, கொலைகள் என்று போனது. அதுவே பின்னர் ராஜிவின் கைமீறி சென்று கூட்டம் கூடமாக தமிழர்களை கொல்லும் நிலையை உருவாக்கியது.( மக்களை துன்புறுத்தினால் போராளிகளை காட்டி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். இப்போது போல் அப்போது யாரும் இல்லை)இந்திய அமைதிப்படை செய்த அட்டுழியங்களை இந்த பதிவில் இணைத்து உள்ளேன்.


Download (PDF Zipped):


Volume 1 Part 1: http://www.mediafire.com/?emj0zigyjyu

Volume 1 Part 2: http://www.mediafire.com/?i5tzkzyjfny

Volume 1 Part 3: http://www.mediafire.com/?tz1mvzdgggz

தும்பை விட்டுவிட்டு அதிகாரிகளின் போக்கிலே சென்றால் அழிவது எதிரிகள் மட்டும் அல்ல தாங்களும் தான் என்பதை ராஜீவ் காந்தியின் வாழ்க்கை தந்த பாடமாக இருக்கட்டும்.

2 Response to "ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-6"

  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?

    நன்று...

Popular Posts