ஈழத்தமிழர்களின் பெயரில் நடக்கும் மோசடிகள்

ஈழத்தமிழர்களை நமது மத்திய மாநில அரசுகளும்  அரசியல் கட்சிகளும் ஏமாற்றி விட்டன,ஏமாற்றியும் வருகின்றன. ஆனால் இந்த பதிவு அவர்களை ஏமாற்றி வரும் சக மனிதர்கள் மற்றும் நம் சக தமிழக தமிழர்களை பற்றியது. 
 
அவர்களுக்கு நமது தமிழக அரசு வழங்கும் உதவிதொகையானது மிக சொற்பமே. அந்த உதவித்தொகையை வைத்து மட்டுமே வைத்து ஒருவர் தனது தேவைகளை ஒரு வாரத்திற்கு கூட பூர்த்தி செய்ய இயலாது. அப்படி இருக்கும் நிலையில் அவர்கள் வெளியில் சென்று வேலை பார்த்து தான் தங்களின் குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் உள்ளனர். அப்படி வேலைக்கு செல்லும்போதும் அவர்கள் காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு வரைக்கும் தான் முகாமிற்கு செல்லும் நிலை உள்ளது. அருகே இருக்கும் இடங்களில் அவர்கள் வேலை செய்தாலும் அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியங்கள் கொடுக்கப்படுவதில்லை. இது தான் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் நடக்கிறது. யாரும் இதனை தட்டிகேட்கவும் முடியாது. காரணம் அவர்கள் அகதிகள் என்பது தான். அவர்களின் உழைப்பை யார் வேண்டுமானாலும் அங்கே பொறுப்பில் இருப்பவர்களை சரிகட்டியோ இல்லை சரிகட்டாமலோ சுரண்ட முடியும் என்பதே உண்மை.

அடுத்தது தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு என்று சகத்தமிழர்கள் கொடுக்கும் பணம் இடைத்தரகர்களிடம் போனது போகவே அவர்களிடம் போகிறது. உதாரணத்திற்கு அவர்களின் ஓராண்டிற்கு தேவையான தொகை நாற்பதாயிரம் என்றால் இடைத்தரகர்கள் உதவி செய்பவர்களிடம் கூறும் தொகை அறுபதாயிரம். ஆக இவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. உதவி செய்பவர்கள் இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு என்று சொல்லும்போது எல்லாருமே இரக்கப்பட்டு உதவி செய்கிறோம். அவர்களுக்கு அருகில் இருக்கும் பள்ளி கல்லூரிகளிலும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு நாமே பேசும்போது கட்டணங்களில் சலுகைகளும் தருகிறார்கள். ஆனால் இது எல்லாம் ஈழத்தமிழர்களுக்கும் தெரிவதில்லை,உதவி செய்பவர்களுக்கும் தெரிவதில்லை, இந்த இடைத்தரகர்களுக்கு மட்டுமே தெரிகிறது. இந்த விசயத்தில் நாம் எளிதாக ஏமாறுவதை தடுக்கலாம். எனது நண்பர்கள் சிலர், படிப்பு செலவிற்கு என்று ஈழத்தமிழர்களின் குழந்தைகள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி என்று செய்யபோகும் போது இந்த இடைத்தரகர்கள் வந்தார்கள். அவர்களே நேரில் சென்று கட்டணங்களை கட்டிவிட்டு குழந்தைகளை கல்லூரிகளில் விட்டுவிட்டு வருவோம் என்றார்கள். நண்பர்கள் நேரில் சென்று அதே கல்லூரியில் கேட்டபின்னர் தான் தெரிந்தது இடைத்தரகர்கள் நண்பர்களிடம் கூறிய தொகையானது இடைதரகர்களின் கமிஷனையும் சேர்த்து தான் என்று. நண்பர்கள் நேரில் சென்று கட்டணத்தையும் கல்லூரி விடுதியில் சேருவதற்கு கட்டணத்தையும் கட்டிய பின்னரும் இடைத்தரகர்கள் நண்பர்களிடம் கேட்ட தொகை அளவு செலவாகவில்லை.




அரசியல்வாதிகளும் அலுவலர்களும் தான் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் சகத்தமிழர்களுமா இப்படி ஏமாற்றுவது? கட்டண ரசிதுகளை கேட்டால் மட்டுமே இவர்களை(இடைத்தரகர்கள்) பற்றி தெரிய வருகிறது.

ஈழத்தில் சண்டை நடக்கும்போது அங்கே இருந்து தப்பிவருபவர்கள் இங்கே இருக்கும் நிலை சரியில்லை என்பதால் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களுக்கு இங்கே உதவி செய்வதாக சொல்லி வசூல் செய்கின்றனர். அந்த பணத்தில் அவர்களை இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்களின் பெயரில் வசூல் செய்த பணத்தில் போரூரில் வீடு கட்டிய நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உதவி செய்பவர்களை விட இவர்கள் சொல்லும் கதை தான் உண்மை என்பது போல் உள்ளது. அந்த அளவுக்கு உதவி கேட்பவர்களிடம் பழகி உள்ளார்கள். ஆனால் உதவி தொகையில் ஒரு பகுதி தான் சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்கிறது.


உதவி செய்பவர்கள் பலர் இருந்தாலும் இன்னும் ஈழத்தமிழர்களின் நிலை மாறாமல் இருக்க காரணம் இவர்களை போன்ற இடைத்தரகர்கள் தான். உதவி செய்பவர்களும் உதவி கேட்பவர்களும் நல்லவர்களாக இருந்து என்ன பிரயோஜனம். இடைத்தரகர்கள் நல்லவர்களாக இல்லையே.




உதவி செய்பவர்கள் அனைவரும் தயவு செய்து உங்களின் உதவிகள் சம்பந்தபட்டவர்களிடம் உதவிகள் போய் சேர்கின்றதா என்பதை ஒரு முறை உறுதிபடுத்தி கொண்டு பின்னர் அவர்கள் மூலமாகவே கூட உதவிகளை தொடரலாம்.

பெரியாரிடம் வெங்காய விலையை கேட்க சொன்னால் என்ன ....கு இவர் முதல்வராக இருக்கிறார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி: வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டிருக்கிறார்களே?
அது கொடுத்தாச்சு... அது பற்றி அறிக்கை வரும்.
இன்று கூட இ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என கூறியதாக செய்திகள் வந்துள்ளதே?
அது எனக்கு தெரியாது. இவ்வாறு, முதல்வர் கருணாநிதி சிரித்தபடியே பேட்டியளித்தார்.

மீண்டும் மீண்டும் இவர் வயதிற்க்கோ இல்லை இவர் இருக்கும் பதவிக்கோ ஏற்றபடி பேசாமல் தான் அந்த பதவிக்கு ஏற்றவன் இல்லை என்று நிருபிக்கிறார். 
 
இவர் தனிப்பட்ட முறையில் மற்றவர்களின் அந்தரங்கங்களை விமர்சிப்பது இவருடன் இருக்கும் அலுவலர்களுக்கு தெரிந்ததே. ஆனால் இப்படி பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதற்கு அப்படி முதல்வர் பொறுப்பில் இருந்து தான் பேச வேண்டுமா?

ஒருவேளை இவருக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல வருகிறாரோ? இல்லை வெங்காயம் பயிரிடுவதெல்லாம் அவருக்கே தெரியாது என்று சொல்ல வருகிறாரோ?




யாருடைய சாவாவது மக்களை சந்தோசப்படும் என்று மக்கள் நினைத்தால் உண்மையில் அப்படி ஒரு பிறவிக்கு அப்படி ஒரு பிறப்பிற்கு அந்த இழிபிறவி மட்டும் அல்ல அந்த குடும்பமும் வருத்தப்படும் நாள் கண்டிப்பாக வரும்.( நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மேல் சொன்ன தகவல்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.)

புலி பயம் காட்டி ஊழலில் இருந்து தப்பித்து கொள்ள கருணாநிதி முயற்சி

ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை எப்படியெல்லாம் திசை திருப்பலாம் என்பதற்கு நேற்று தான் ஒரு பதிவு போட்டேன். அந்த பூச்சாண்டி எல்லாம் ஒத்து வராததால் சோனியா குடும்பம் எதற்கு பயப்படும் என்று பார்த்து கொண்டிருந்த கலைஞர் இப்போது புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று கிலி வேறு கிளப்பியுள்ளார்.

லத்திகா சரண் ஒரு தேர்ந்த போலிஸ் அதிகாரி என்ற தரத்தினை எப்போதோ இழந்து விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழீழ ஆதரவாளர்களை நோக்கி இவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்ச்சைகளில் கொண்டு போய் தான் முடிந்துள்ளன.

ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து அந்த வழியாக செல்லும் ரயில்களை தகர்க்க முயற்சி செய்ததாக காவல்துறை அந்த ஒரு வாரத்திலே பல கதைகள் சொன்னது. அதை சொன்னதும் நமது லத்திகா சரண் தான்.
அதே போல் சென்னையிலும் தண்டவாளத்தில் கற்களை வைத்து சமூக விரோதிகள் முயற்சி செய்தனர் என்றனர். ஒரே நேரத்தில் ஒரு மனிதர் இரு இடங்களில் இருந்து இரு வேறு செயல்களை செய்ய முடியாது என்பதால் அதற்கு காரணம் என்று இவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் நமது உளவுத்துறை எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு தமீழத்தில் இருந்து இங்கே தங்கிருக்கும் பெண்களிடம் தங்களது காம லீலைகளை அரங்கேற்றி உள்ளனர் தமிழக உளவுத்துறையினர்.

இவர்கள் எப்போதுமே புது கதைகளை சோடிக்கவும் ஒரு பிரச்சினையை திசை திருப்ப மற்றொரு பிரச்சினையை செய்வதற்குமே பயன்பட்டு இருக்கின்றனர்.


இவரே தான் சொல்வதாக ஒரு செய்தியும், மத்திய உளவுத்துறையும் ராவும் சொல்வதாகவும் ஒரு செய்தியும் பரப்பபட்டது.   எது எப்படி இருந்தாலும் ஊழல்களில் இருந்து தப்பிக்க இப்படியெல்லாமா சொல்லுவது.

அப்படி ஒருவேளை உளவுத்துறை என்று ஒன்று இருந்தால் இங்கே நடக்கும் அசம்பாவிதங்களை முன்னரே தடுத்திருக்க முடியாதா என்ன?

ஜெகத் கஸ்பாரும் நக்கீரன் வார இதழும் ஈழதமிழர்களுக்கு ஆதரவாளர்களா?

தற்போது நடந்து வரும் மத்திய புலனாய்வு துறையின் சோதனைகளில் சிக்கியவர்களுக்கு ஆதரவாக புதிதாக எப்படி ஆதரித்து பேசலாம் என்பதற்கு தட்ஸ் தமிழில் வந்த ஒரு செய்தி உதாரணமாக இருக்கிறது.
"சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடந்த சிபிஐ சோதனை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கு எதிரான, பழிவாங்கல் நடவடிக்கையோ என்று சந்தேகப்படுத்தும் வகையில் ஆங்கில மீடியாக்களின் செய்திகள் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நக்கீரன் இதழை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு பத்திரிக்கை என்று வர்ணித்திருப்பதே இந்த சந்தேகத்திற்குக் காரணம்.

இன்று காலை தொடங்கிய இந்த சிபிஐ ரெய்டு குறித்த செய்திகளை அனைத்து தமிழ் மீடியாக்களும் நடுநிலையுடன் கூறி வரும் நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி மட்டும் குயுக்தியான பார்வையுடன் வெளியிட்டு வருவது பலத்த சந்தேங்கங்களை ஏற்படுத்தியுள்ளது. (Pro-LTTE Nakkeran என்று நக்கீரனை இந்த ஆங்கிலத் தொலைக்காட்சி வர்ணிக்கிறது)


இதனால், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ், மத போதகரும் தமிழ் மையம் அமைப்பின் தலைவருமான ஜெகத் கஸ்பார் ஆகியோரது வீடுகளை குறி வைத்து நடந்து வரும் சோதனைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தற்போது பலத்த விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இவர்கள் குறித்து அந்தத் தொலைக்காட்சி, விடுதலைப் புலிகள் ஆதரவாளர் கஸ்பார் என்றும், விடுதலைப் புலிகள் ஆதரவுப் பத்திரிக்கை நக்கீரன் என்றும் கூறுவது விஷமத்தனமாகவே தோன்றுகிறது.


ஈழத் தமிழர்கள் என்றாலே ஒரு தீவிரவாதக் கூட்டம் போலவே சித்தரித்துப் பழகி விட்டவை இந்த ஆங்கில மீடியாக்கள். காரணம், இவர்களுக்கு இலங்கை விவகாரம் குறித்து எந்த ஆழமான அறிவும் கிடையாது. அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை வைத்து அன்றைய பொழுதை 'கத்திக் கத்தியே' கழிப்பது தான் இந்த அரைகுறை மீடியாக்களின் வழக்கம்."


எப்படியெல்லாம் யோசித்து கதையா திருப்ப முயற்சி பண்றாங்க பாருங்க.
உண்மையில் ஜெகத் கஸ்பாரும் நக்கீரன் வார இதழும் ஈழத்தமிழர்களின் ஆதரவு என்று யார் இவர்களை நம்ப வைத்தது? அத்தனை வடஇந்திய தொலைகாட்சிகளிலும் மாறன் சகோதரர்களுக்கு பங்கு இருக்கிறது. ஒரு விவகாரத்தில் இருந்து தப்புவதற்கு சொல்லப்படும் உதாரனங்களும் ஏற்புடையவையாகவே இருக்க வேண்டும். அந்த தொலைகாட்சிகளில் ஈழத்தமிழர்கள் ஆதரவு பத்திரிக்கை என்றோ புலிகள் ஆதரவு பத்திரிக்கை என்றோ வரவில்லை. திமுக ஆதரவு பத்திரிக்கை என்றே வந்துள்ளது. இணைப்பு இதில் உள்ளது (Kamaraj is an Associate Editor of pro-DMK magazine Nakkeeran.)
 
ஆங்கிலத்தில் படிக்காதவர்கள் யாரும் நேரடியாக தட்ஸ்தமிழ் மட்டும் படித்து இருந்தால் உண்மையில் ஈழத்தமிழர்களுக்கு இவர்கள் எல்லாம் ஆதரவானவர்கள் என்பது போலவும் ஈழதமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்பதற்காக தான் சோதனை செய்கிறார்கள் என்பது போல் அல்லவா நடிக்கிறார்கள்.

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் எல்லாரும் குற்றவாளிகள் இல்லையா? இந்த ஊழல்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஈழத்தமிழர்களின் பெயரை சொல்லி தான் இவ்வளவு நாளும் ஏமாற்றினீர்கள். ஊழல் குற்றசாட்டுக்குமா ஈழத்தமிழர்களை இழுப்பது ?

ஒருவேளை அவர்கள் IBN LIVE பற்றி சொல்லி இந்த விஷயத்தை திசை திருப்ப முயலலாம்
http://ibnlive.in.com/news/2g-scam-cbi-raids-nira-radias-office-residence/137456-3.html?from=tn

விடுதலையான சீமான் ஆவேசம் செய்திக்கு தினமலரில் வந்த முட்டாள்தனமான விமர்சனங்கள்.

தினமலரின் கோமாளிகளுக்கு ஒரு கேள்வி. தினமலரில் வந்த சீமான் பற்றிய செய்திக்கு உங்களின் கருத்துக்களை பார்த்தேன். மிக்க நன்றி.


ஊழல்களில் ஊறி வளர்ந்த காரணத்தால் புதிதாக யார் நல்லது பற்றி பேசினாலும் உங்களுக்கு கோபம் வருகிறதா? உங்களின் மூலையில் இருப்பது மூளையா? இல்லை களிமண்ணா?

தமிழக அரசியலுக்கு தீர்வு சொல்ல வக்கில்லை. உங்களுக்கெல்லாம் ஒரு பேப்பர். அதில் எழுத உங்களை போன்ற அறிவு ஜீவிகள் இருக்கும்வரை இமாய ஊழல்களுக்கு இந்தியாவில் பஞ்சம் இருக்காது. உங்கள் பேப்பரில் வரும் செய்திகளுக்கு நீங்களே கருத்துக்களை திணிப்பதை விட்டுவிட்டு நேரடியாக பேசுவதற்கு கலந்துரையாடல்கள் நடப்பதற்கு ஏற்பாடு செய்யவும்.



கோழைகள் போல கருத்துக்களை நீங்கள் சொல்லுவதை மட்டும் போடுவதை நிறுத்துங்கள். நீங்களும் போங்கடா நீங்களும் உங்கள் பத்திரிக்கை தர்மமும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் குறைகள் சொல்லுவதை விட்டுவிட்டு அந்த பிரச்சினைக்கு முழுவதுமான ஒரு தீர்வினை சொல்லுங்கள். அதற்கு வக்குள்ளவர்கள் கருத்துக்கள் பதியுங்கள். அதன் பின்னர் நான் உங்களை ஆதரிக்கிறேன்


ஜகன் - சென்னை,இந்தியா 2010-12-11 07:21:25 IST


சைமன் என்கிற சீமான் ஒரு ஹிந்து எதிரி (கருணாநிதியை போல்). இவர்கள் இருவருக்கும் வோட்டு போடாதீர்...


சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா 2010-12-11 07:18:36 IST

இலங்கைத்தமிழர் பிரச்சினை ஒரு போதும் தமிழக தேர்தலில் எதிரொலித்ததில்லை. இனியும் அது எதிரொலித்து ஒரு தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் தமிழ் நாட்டு தலைவர்கள் அனைவரும் (இதில் யாருக்கும் விதிவிலக்கில்லை) அரசியல் விளம்பரத்திற்க்காக, சுயமையப்படுத்தும் நோக்கில், தனக்கு கூட்டம் கூடுகிறது என்பதற்காக ஒரு கருவியாகத்தான் இலங்கைத்தமிழர் பிரச்சினையை கையாளுகிறார்களே ஒழிய யாருக்கும் எந்த அக்கறையும் உண்மையில் கிஞ்சித்தும் கிடையாது. உண்மையில் 1983 முதல் 1990 வரை சாதாரண தமிழக மக்களுக்கும் ஒரு அக்கறை உணர்வு இலங்கை தமிழர்கள் மீது இருந்தது. அதை சுத்தமாக கெடுத்தது வே.பிரபாகரன் தான். பிரபாகரன் பிரேமதாசாவுடன் சேர்ந்து... "சிங்கள மக்களும் (இ) தமிழ் மக்களும் சண்டை இருந்தாலும் சகோதரர்கள்.. இதில் இந்தியா தலையிட வேண்டிய அவசியமில்லை என்று கூட்டறிக்கை விட்டார்...(அப்புறம் பிரேமதாசாவையே குண்டு வெடிப்பின் மூலம் கொன்றார் என்பது வேறு விஷயம்)...". அப்பொழுதே இந்தியா வின் அக்கறை குறைய ஆரம்பித்தது. பின் 1991 ல் ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் இருக்கும் கொஞ்சநஞ்ச இந்திய, தமிழக அனுதாபத்தினை இழக்க நேரிட்டது. அதன் பின் இலங்கை தாக்கம் என்று ஏதும் கிடையாது... இனியும் எந்த தேர்தலிலும் ஏற்ப்படப்போவதில்லை...சீமான்/நெடுமாறன்/பெ.தி.க/வைகோ போன்றவர்களுக்கு கூட்டம் வேண்டுமானால் கூடலாம்...ஓட்டு என்பது கிஞ்சித்தும் கிடையாது. (வைகோ மட்டும் அதிமுக உடன் (மாறினால் தி.மு.க உடன்) இருப்பதால் அந்த ஆதரவில் கரையேற வாய்ப்புள்ளது...). தமிழக மக்கள் இப்போது எதிர்நோக்கியிருக்கும் சொந்த பிரச்சினைகள் தான் தேர்தலில் எதிரொலிக்கும். சீமான் தனியாக நிற்கும் பட்சத்தில் ஒரு 500 லிருந்து 5000 ஓட்டு வேண்டுமானால் வாங்கலாம்...டெபாசிட் கெடைக்காது....


மண்ணின் மைந்தன் - bangalore,இந்தியா 2010-12-11 07:10:09 IST

அம்மா என்ன தமிழ் நாட்டுல பாத்து பைசா கூட கொள்ளை அடிகளையா என்ன... உங்கள மாதிரி முட்டாள்கள் இருப்பதால் தான் ஒரு புரட்சிய ஆரம்பிக்கவே முடியாது......


vicky - yangsusong,சீனா 2010-12-11 06:59:14 IST

பிக் காமெடி! என்னையா இப்படி காமடிய பேசறிங்க! நிறுத்த முடியவில்லை சிரிப்பை......

jopet - singapore,சிங்கப்பூர் 2010-12-11 05:30:42 IST

ஏன்டா கொய்யாலே! நீ இந்தியாவை கூறு போடுவே. அப்புறம் இலங்கையில புலிகளை காப்பாத்த இங்கே ரத்த ஆறு ஓடும்ன்னு சொல்லுவ. அதெல்லாம் பாத்துட்டு அரசாங்கமும் போலீஸும் சும்மாயிருக்கணும். அதுக்கு உன்னை புடிச்சி ஏன்டா அப்படி பேசுனன்னு கேட்டா அப்புடித்தான் பேசுவேன் பேசகூடாதுண்ணா எனக்கு தனி ஈழம் வாங்கிகுடுன்னு லூசுபயலுக மாதிரியே பேசுவீங்க. என்னமோ ராஜேபக்சே இங்கேருந்து சொன்னவுடனே அப்படியே டிரசவுர்ல ஒன்னுக்கு போயிட்டு பயந்துகிட்டு தனி ஈழம் கொடுக்கிர மாதிரி. வெண்ணைகளா உலகமே கண்டிச்சும் எவன பத்தியும் கவலை படாம அவன் இருக்குறான். இதுல இந்த 85 வயசு அம்னிதர் சத்தம் போடணுமா ? அவர் பதவியை ராஜினாமா செஞ்சாருன்னா அதை கேட்டு உலகமே ஸ்தமபிசிடுமா? ஆனா புலிகளை சுட மாட்டான்கலாம் தனி ஈழம் கிடைச்சிடுமாம். ஏன்டா நீ புலிகளுடைய காசுல படம் எடுத்த நன்றிக்கு எங்க தமிழகம் தான் கிடைசுச்சா?தமிழ் நாட்டு அரசியள்ள நீ ஜெயிச்சாலும் யாருக்காக சட்டசபையில போராடுவ. தனி ஈழம்ன்னு அங்கயும் கத்துவ. பிரபாகரன் வாழ்கன்னு அங்கயும் பேசுவ. உனக்கு, இந்த வைகோவுக்கு எல்லாம் MP சீட்டு MLA சீட்டு கிடைச்சாலும் என்ன பிரோஜனம். தமிழ் நாட்டுக்கோ இந்தியாவுக்கோ குரல் கொடுக்க போறதில்லை. அங்கயும் போய் ரத்தஆறு ஓடும், நாடு ரெண்டாகும்ன்னு தான் பேசுவீங்க. இதுல என்ன பியுட்டின்னா நீ தமிழ் தமிழன்னு பேசிகிட்டு சிங்களகாரியை வச்சே படம் எடுக்கறதுதான். போதும்டா தமிழை என்னமோ நீங்கதான் குத்தகை எடுத்து வச்சிருக்க மாதிரியும் நீங்க இல்லேனா தமிழ் அழிஞ்சிடுமுன்ற மாதிரி பேசாதிங்கடா. எங்களுக்கும் தெரியும்டா உங்க கூத்தெல்லாம். முதல்ல உன்னை, இந்த வைகோ இன்னும் ரெண்டு மூணு டிக்கெட்டுங்க இருக்கீங்க. உங்களை எல்லாம் இலங்கையில குடியுரிமை வாங்கி கொடுத்து அங்கேயே அந்த வன்னி காட்டுலயே குடியிருந்து சேவை செய்யுங்கடான்னு சொல்லணும். போதும்டா இங்கே தமிழ் நாட்டுல எங்க அப்பா அம்மாவுக்கு அண்ணன் தங்கச்சிக்கு நாங்க முழுசா எங்க கடமையா செய்யவே எங்களுக்கு நேரம் பத்தமாட்டேங்குது. இதுல இந்தியாவுக்கு வேற கடமை செய்யணும் இலங்கை தமிழர்களுக்கு வேற கடமை செய்யனும்ன்னா எங்களால முடியலடா? உன்னை மாதிரி லூசு பயலுக கத்தறதுன்னால கலைஞர் has already spent 100 கோடி, which is more than enough. Further more, has done like KALAINGAR for Tamizh refugees in TN....

sathish - melbourne,ஆஸ்திரேலியா 2010-12-11 04:05:24 IST


சபாஸ் ,,சரியான போட்டி,,,, கொசுவுக்கும்,,, கொரங்குக்கும் போட்டி,,, நேத்து முளைச்ச காளான்,, சினிமாவிலே இப்போ தம்பிடி குறையுது,, இல்லே ,,அதனாலே அரசியலில் பூந்துட்டாரு,,, அறிவுள்ளவன் பின்னாலேயும் பத்து பேர்,,, இது போலே அறிவு கெட்ட ....யம் பின்னாலேயும் பத்து பேரு,,,,...

மருதூர் மாணிக்கம் - madurai,இந்தியா 2010-12-11 01:46:09 IST
சீமானே! சிறையில் இருந்தும் உனக்கு புத்தி வரவில்லை. உன்னை இந்த முறை பாளையங்கோட்டையில் பல வருடங்களுக்கு உள்ளே அனுப்பி வைத்து விடுவோம். கலைஞரை எதிர்த்தால் டெபாசிட் கூட வாங்க மாட்டாய்....

குஞ்சுமணி - சென்னை.,இந்தியா 2010-12-11 01:07:28 IST
உனக்கு டிபாசிட் கிடைத்தால் நான் இங்கு கமெண்ட் எழுதுவதை நிறுத்துகிறேன். வாசகர்களும் உன்னை வாழ்த்துவார்கள். நீ வெற்றி பெற்றால் மனித தெய்வம் என நான் நினைக்கும் மருத்துவர் ஐயாவின் கட்சியில் இருந்து விலகி உன்னுடைய அடிமையாக வாழ்நாள் முழுவதும் இருக்கிறேன்....

பாரத புத்திரன் - chennai,இந்தியா 2010-12-11 00:29:37 IST
திரு சீமான் அவர்களே!உண்மையை வெறியோடு பேசுவது,அரசியல் தலைவர்களை ஒத்தைக்கு ஒத்தையா வாறியான்னு கூப்டுறது இதுல்லாம் இல்ல அரசியல். அர்ப்பணிப்பு...மகாத்மா மாதிரி. அடிக்க போறியா? முடிஞ்ச வரைக்கும் என்னை அடி. உடைத்து கைகள் ஓய்ந்த பின்பு ,உனது கோபம் தீர்ந்த பிறகாவது என் மக்களின் நிலை பற்றி யோசி....இது தான் தலைமைக்கு அழகு. உன்னோட மீட்டிங் கொஞ்சம் கேட்டேன். ரொம்ப கேவலமா இருக்கு. கருப்பு சட்டை போட்டு பெரியார் பக்தன்னு சொல்றீங்களே!பெரியாருக்கு இருந்த எதிரியையும் மதிக்கும் பண்பு உங்களுக்கு இல்லாமல் போனது வேட்க கேடு தானே? வாய்க்கு வந்ததெல்லாம் பேசும் வழக்கம் தொண்டனுக்கு இருந்தால் தலைவனுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அந்த பழக்கம் தலைவனுக்கு இருந்தால் முதல் அடி உனக்கு அல்ல,உன்னை நம்பி வரும் தொண்டனுக்கே;,,,,,,,,,,,,,,,,,,,,,,பாரத் மாதா கி ஜெய்.தேசம் காப்போம்,தேசியம் காப்போம்....

கே.கைப்புள்ள - nj,இந்தியா 2010-12-11 00:13:28 IST
யாருடா இவன் இந்த சீமான் கோமான். இவன் யாரு இவன் முதல்ல. நீயெல்லாம் இந்த மாறி பேசுர அளவுக்கு ஜனநாயகம் இருக்கு. அதனாலதான் நீ கொரல் விடுற. நீயெல்லாம் யார்ன்னு நெனச்சு சும்மா சவுண்ட் விட்டுகிட்டு திரியிற? இது மாறி சின்ன சின்ன கொசு தொல்ல தாங்கலப்பா....

Chandra - Denver,யூ.எஸ்.ஏ 2010-12-11 00:11:33 IST
Do contest against Kalaignar and lose deposit. You need to take a oath that, if you lost the deposit, you will never speak agaist him. It is the people who decide about who win or loose. Find out your real support in the ground by contesting against Kalaignar....

சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து பற்றிய தினமலரின் செய்தி

சென்னை : சினிமாக்காரர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்த‌ை ரத்து செய்து சென்னை ஐகோர்‌ட் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரி பரந்தாமன் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

சீமான் கைது செய்ததை இந்த பத்திரிக்கை வரவேற்கிறதா? இல்லை விடுதலை செய்த நீதிபதிகளை கண்டிக்கிறதா?




அதென்னா சினிமாகாரர் சீமான்? சினிமாவில் இருந்து வந்த முதல்வர் இருக்கிறார், எதிர்கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். தண்ணி அடித்துவிட்டு பேசும் விஜயகாந்த் இருக்கிறார். இவர்களையெல்லாம் விட சீமான் என்ன குற்றம் செய்தார்?



மற்றொரு பதிவில் சீமானை விடுதலை செய்வார்கள் ஆனால் இதனை போன்ற வழக்குகளை பதிவு செய்த காவல்துறையை கண்டிக்கவாவது செய்வார்களா என்று கேட்டு இருந்தேன். இதுவரை தீர்ப்பில் அப்படி ஒரு கண்டிப்பு இருப்பதாக வெளி வரவில்லை.



இதற்கு பெயர் தான் இந்திய நீதி.. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் இஷ்டம் போல இதனை போன்ற பல வழக்குகளை பதிவு செய்யலாம்.

ஸ்பெக்ட்ரம் விசாரணை என்னும் கண்துடைப்பு

ராசாவின் வீடுகளில் எல்லாம் நேற்று மத்திய புலனாய்வு துறையினர் சோதனைகள் செய்தனர். இந்த செய்திகளை படித்தவுடன் ஏதோ ராசாவின் வண்டவாளங்கள் எல்லாம் உடனே தண்டவாளம் ஏறியதாக நினைக்கும் ஏமாளிகளுக்காக இந்த பதிவு. ராசாவின் ஊழல் நடந்து பல மாதங்கள் ஆகின்றன. விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்கள் நாம் தான் என அவர்கள் ஏற்கனவே நிருபித்து உள்ளனர். அப்படி இருக்கும்போது ஊழல் சம்பந்தமாக எந்த ஆவணங்கள் கிடைத்து இருக்கும். அப்படி கிடைக்கும் ஆவணங்கள் எல்லாம் நிதிமன்றத்தில் சமர்பித்து எப்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்? அந்த ஆவணங்கள் எல்லாம் நாங்களும் சோதனை செய்து கண்டுபிடித்தோம் என்று சொல்வதற்கு மட்டுமே மற்றபடி அதில் ஒன்றும் இருக்காது.( எய்தவர்களை விட்டுவிட்டு அம்பை போய் நோவதேன்? ஏதோ கருணாநிதியின் குடும்பத்தினரின் வீடுகளில் சோதனை செய்து இருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. பணம் இருக்கின்ற இடத்தில் சோதனை செய்தால் தானே எதாவது கிடைக்கும். )




இதுவரை எத்தனை ஊழல்களை கண்டுபிடித்திருக்கிறார்கள் இந்தியாவில்? அதில் எத்தனை ஊழல்களில் பணத்தை திரும்ப வாங்கி இருக்கிறார்கள்? ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் கையூட்டு வாங்கியவர்களை எல்லாம் உடனே பிடித்து கைது செய்து விட்டு அவர்கள் வாங்கிய பணத்தை வசூலிக்க முடியும். ஆனால் இது போல் உள்ள ஊழல்களில் எல்லாம் எங்கே இருந்து பணத்தை திரும்ப பெற முடியும்.

சுவிஸ் பங்கில் இருந்தா இந்த பணத்தை வசூலிக்க முடியும்.

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஏற்கனவே ஊழல் குற்ற சாட்டில் இருக்கும் ஒருத்தர் மத்திய புளாய்வு துறையின் தலைவராக நீடித்து கொண்டு இருக்கும்போது மத்தியிலும் மாநிலத்திலும் திமுகவின் கூட்டணி இருக்கும்போதும் ஒரு கண்துடைப்புக்காக என்றாவது இந்த சோதனை நடந்துள்ளதே என்று ஏற்று கொள்ள வேண்டும்.அதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது :-(

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-6

ஈழதமிழர்கள் படுகொலையில் ராஜிவ்காந்தியின் பங்கு என்று எழுத ஆரம்பித்தால் இந்த பதிவுகள் எண்ணிக்கை எப்படியும் நூறினை தாண்டும்.


ஜால்ரா போடுவதற்கு யாராவது இருந்தால் நல்லது என நினைக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஜால்ரா போடுபவர்கள் தான் முதல் எதிரிகள் என்பதை உணர வேண்டும். அப்படி அவருக்கு வெளிநாட்டு கொள்கை என்ற பெயரில் தங்களின் வளத்தை வளர்த்து கொண்ட அதிகாரிகள் தான் அதிகம். அத்தகைய அதிகாரிகள் தங்களுக்கு சொந்தமான அல்லது தங்களுக்கு ஆதாயம் தரும் நிறுவனங்களின் கொள்கைகளை தான் தூக்கிபிடிப்பதில் அக்கறை காட்டினர். இலங்கையை பிரித்து ஈழம் அமைப்பதென்றால் அதற்கு ஒரே ஒரு போராளி குழுவை மட்டும் வளர்த்தாலே போதும். ஆனால் அதையே பல போராளி குழுக்களாக வளர்த்து விட்டு அதன் மூலம் இலங்கையை தன கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் அப்போதைய இலங்கையின் மீதான வெளியுறவு கொள்கையாக இருந்தது.




வெளியுறவு கொள்கைக்காக அடுத்தவர்களை ஏமாற்றியது போல் நம்மை நாமே ஏமாற்றி விளையாடும் விளையாட்டு ராஜீவ் காந்தியின் காலத்திலேயே வந்தது. உதாரணம் மாலத்தீவு புரட்சி. அதில் ஆதியும் அந்தமும் இந்தியர்களே. ஆட்சியை பிடிக்க நினைக்கும் எதிர்க்கட்சி தலைவரை ஆட்சியில் உட்கார வைக்க இந்தியா எடுத்த முயற்சி தோல்வி (உளவுத்துறையின் வேலை). ஆனால் அதையே ராஜ தந்திரமாக மாற்ற இந்தியாவே படைகளை அனுப்பி புரட்சியை தடுத்தது. இதில் புரட்சி செய்ய அனுப்பப்பட்டவர்கள் தான்

பத்மநாபாவின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இவர்களை முழுவதுமாக கட்டுபடுத்தி வைத்திருந்தவர்கள் நமது உளவுத்துறையினர் தான். (புலிகள் தமிழின எதிரிகளையும் துரோகிகளையும் ஏன் கொல்லவேண்டும்? இவர்களை விட்டுவைத்தால் போராளிகளுக்கும் காசுக்காக கொலைகளை செய்பவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும்)



இவர்களையும் ஏனைய போராளி குழுக்களையும் புலிகள் அழித்தனர். அதில் சில எச்சங்களை மிச்சம் விட்டதால் வந்த விளைவு தான் இன்றைய அவர்களின் நிலை.(ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றோர் இன்னமும் உயிருடன் இருக்கின்றனர்.)


ஈழதமிழர்களை கொல்ல சொல்லி ராஜீவ் இந்திய அமைதிப்படையை அனுப்பவில்லை. ஆனால் அனுப்பிய படையை நிர்வகிக்க அனுப்பிய ஆட்கள் தங்களின் அதிகாரத்தையும் தங்களுக்கு தேவையானவற்றை இலங்கை அரசிடம் இருந்து பெற்று கொள்ள அவர்கள் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறினர்.( சண்டைக்காரர்கள் இருவருக்கும் இடையில் போட்டால் தான் அதன் பெயர் ஒப்பந்தம். சண்டைக்காரனும் சாட்சிக்காரனும் போட்டு கொண்டால் அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை? இதை கூட ஒழுங்காக அமல்படுத்த முடியாத நாடு தான் நம் நாடு. இவர்களை நம்பி ஒப்பந்தம் போட்டவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்பதே தனி தொடராக எழுத வேண்டும்.)


முதலில் ஒப்பந்தங்களை மட்டுமே மீறிய அவர்கள் ஏற்கனவே அவர்கள் வளர்த்து வைத்த போராளி குழுக்களை வைத்து தங்களின் விளையாட்டை தொடங்க முற்பட்டனர். அதற்கு பதிலடி புலிகள் கொடுத்தனர். தாக்குதல் நடத்திவிட்டு மறைந்து கொள்வதென்ற கொரில்லா தாக்குதல்களை தாங்க முடியாமல் அப்பாவி மக்களை துன்புறுத்த தொடங்கினர். இந்த துன்புறுத்தல்கள் எல்லாம் பின்னர் வன்முறை, கற்பழிப்பு, கொலைகள் என்று போனது. அதுவே பின்னர் ராஜிவின் கைமீறி சென்று கூட்டம் கூடமாக தமிழர்களை கொல்லும் நிலையை உருவாக்கியது.( மக்களை துன்புறுத்தினால் போராளிகளை காட்டி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். இப்போது போல் அப்போது யாரும் இல்லை)



இந்திய அமைதிப்படை செய்த அட்டுழியங்களை இந்த பதிவில் இணைத்து உள்ளேன்.


Download (PDF Zipped):


Volume 1 Part 1: http://www.mediafire.com/?emj0zigyjyu

Volume 1 Part 2: http://www.mediafire.com/?i5tzkzyjfny

Volume 1 Part 3: http://www.mediafire.com/?tz1mvzdgggz

தும்பை விட்டுவிட்டு அதிகாரிகளின் போக்கிலே சென்றால் அழிவது எதிரிகள் மட்டும் அல்ல தாங்களும் தான் என்பதை ராஜீவ் காந்தியின் வாழ்க்கை தந்த பாடமாக இருக்கட்டும்.

ராசாவின் கொண்டையில் மேலுமொரு மாணிக்கம்

ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் எதாவது ஒரு வகையில் தங்களின் செல்வாக்கினை மற்றவர்களிடம் காட்ட முயல்வது இந்திய ஜனஞாயகத்தில் எதார்த்தமான விஷயம். ஊழல் செய்பவர்கள் தான் ஊழலை ஊக்குவிக்கிறார்கள் என்பது உண்மை என்பது போல் ராசா தன்னுடைய அதிகாரத்தை நீதிபதியிடமே காட்ட முயற்சித்துள்ளது திமுகவின் மற்ற செயல்பாடுகள் எப்படி என்பதை காட்டுகிறது. இன்று தான் savukku.net (சவுக்கின் வாசகன் நான்) இல் வந்த "ஜாபர் சேட் டவுசரை கழற்றிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி" செய்தியை படித்து கொண்டிருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் அடுத்த செய்தி ராசாவின் பெருமைகளாக வந்து விட்டது. இப்படியே போனால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் மாரடைப்பில் சாவது நிச்சயம். அத்தனை புது புது ஊழல்களை செய்துள்ளார்கள்.



இனிமேல் யாராவது புது ஊழல்களை பற்றி அறிவிப்பதென்றால் தயவு செய்து ஒரு நாளைக்கு ஒரு ஊழலுக்கு மேல் அறிவிக்க வேண்டாம். மாத கடைசியில் ஆயிரம் ரூபாய் சேமிப்பதே அரிதாக இருக்கும்போது இப்படியெல்லாம் அறிவித்து கொண்டே போனீர்கள் என்றால் நானும் திமுகவில் இணைந்து மக்கள் தொன்றாற்ற கிளம்பிவிடுவேன். (மக்கள் சேவையே மகேசன் சேவை. அவர் கொண்டுவந்த பையின் நிறம் மஞ்சள் அதனால் தான் இன்னமும் மஞ்சள் துண்டு அணிந்திருப்பதாக கேள்விபட்டேன்.)




எது எதற்கெல்லாம் காரணம் சொல்கிறார்கள் பாருங்கள். இனிமேல் ராசா பதில் மனு தாக்கல் செய்யும்போது சொல்லுவார்." நீதிபதியை நலம் விசாரிக்கவே நான் அலைபேசியில் அழைத்தேன். அப்போது நீதிபதியும் தமிழ்நாடு பார் கவுன்சிலின் தலைவரா சந்திரமோகன் அவர்களும் ஒரு நல்ல விஷயத்தை பேசிக்கொண்டு இருந்தார்கள். நான் என்னவென்று மட்டுமே கேட்டேன். அதற்காக நீதிபதி நான் மிரட்டினேன் என்று எல்லாம் எடுத்துகொண்டால் நாங்கள் என்ன செய்வது".

ரூம் போட்டு யோசித்திருப்பான்களோ

ஈழத்தமிழர் மக்கள்தொகை - ஒரு நெருடல் கணக்கெடுப்பு

ஈழத்தமிழர் மக்கள் தொகையை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ? அவ்வளவு தூரம் இலங்கை அரசு குறைப்பதற்காக முயற்சித்துள்ளது. இரண்டாயிரத்து எட்டு சூலை  மாதம் கணக்குப்படி 21,324,791.
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு கணக்குப்படி 20,238,000.
ஒரு வருடத்தில் மக்கள் கணக்கில் 1,086,791 குறைந்துள்ளனர்.

இத்தனைக்கும் 2008ம் ஆண்டு கிழக்கு மாவட்டங்கள் எல்லாம் அரசாங்கத்திடம் இருந்தன. அப்படி இருக்கும்போது அடுத்த ஒரு வருடத்தில்(2009) வடக்கு மாவட்டங்களும் இவர்கள் கட்டுபாட்டில் வந்திருந்தாலும் ஏற்கனவே இருந்த மக்கள் தொகையில் எப்படி இப்படி ஒரு பெரிய இடைவெளி வந்தது. அதாவது 1+ 1= 1. இது தான் என்னுடைய கேள்வி.

மக்கள்தொகை இவர்கள் கூட்டுகிறார்களா? இல்லை பத்து தமிழர்களை கொன்று ஒருத்தரை மட்டும் கணக்கில் காட்டுகிறார்களா?






இலங்கையில் இறந்தவர்களின் தொகை 2009

இருக்கின்ற மக்கள் தொகையில் தான் இப்படி என்றால் இறந்தவர்களின் எண்ணிக்கைகளையும் பெரிய குழப்பம் வந்துள்ளது. 2008 ஆண்டு 2009 ஆண்டுகளை பார்த்தீர்கள் என்றால் போர் நடந்த மாதங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைதீவுகளில் குறைவான எண்ணிக்கையே பதிவில் உள்ளது. ஆனால் போருக்கு பின்னரும் கொழும்பில் இறந்தவர்கள் மற்ற இடங்களை விட பல மடங்கு காட்டப்பட்டு உள்ளது. இதிலும் சந்தேகங்கள் உள்ளன. போரில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான தொகை எவ்வளவு? சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? போரில் பிடிபட்ட அந்த மீதி போராளிகள் அத்தனை பேரையும் இந்த கணக்கில் சேர்த்து உள்ளார்களா என்ன?


இதற்கு பதிலாக நாங்களே ஒரு எண்ணிக்கை சொல்கிறோம் அது தான் உங்களின் மக்கள்தொகை என்று அறிவித்து இருக்கலாம். பின்னர் இதனையே இந்தியாவும் பின்பற்ற கூடும்.

உள்ளம் 'தரிசாக' இருக்கும் அன்னைகளை பற்றி ஒரு ஈனபிறவியின் கருத்து

இவரெல்லாம் அன்னை தெரசா பற்றி பேசவில்லையென்று யார் அழுதது. அன்னை தெரசாவை பற்றி பேச சொன்னால் இவர் ஜெயலலிதாவை கிண்டல் செய்வதாக நினைத்து இவர் சொல்லிய வார்த்தைகள் தான் "அன்னை தெரசா என்று ஒருவர்தான் இருக்க முடியும். வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் "தரிசாக'' இருக்கும். "தரிசாக'' இருப்பதெல்லாம், தெரசா அல்ல."

அன்னை தெரசாவை பற்றி பேசுவதற்கு ஒரு யோக்யதை வேண்டும். அய்யா நீங்கள் சொல்லுவது போல் தரிசான அம்மாவாக ஜெயலலிதா இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருமி சொல்லக்கூடாது. ஒரு ஈனபிறவி எடுத்து இங்கே ஆட்சியில் இருக்கும் கலைஞர் சொல்லகூடாது. அரசியல் நாகரிகம் பற்றி அடிக்கடி சொல்லிவிட்டு அதை மீறும் ஒரு ஞாபகமறதி நோயாளி அதை சொல்லகூடாது. (வயசானால் ஞாபகமறதி எல்லாம் வரும் சரி தான் ஆனால் வயசானால் எல்லார் மேலும் இரக்கம் வரும். அது உங்களிடம் இதுவரை யாரும் பார்க்கவில்லையே. இரக்கமே உருவான தெரசாவை பற்றி ஈழதமிழர்கள் கொல்லப்படும்போது ஆட்சியில் இருந்து வேடிக்கை பார்த்த ஒரு இழிபிறவி சொல்லகூடாது.( அப்போது அவர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சேர்த்த பணத்தை எண்ணிக்கொண்டு இருந்ததாக சொல்கிறார்கள். இப்படி சேர்த்தும் இன்னமும் பணம் சேர்க்கும் வழி என்னவென்று தான் யோசித்து கொண்டு இருக்கிறார். மடியில் கணம் இல்லையென்றால் இவராக ஏன் இவரின் சொத்து கணக்கை தானாக சொல்ல வேண்டும்?)




மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்த மாநில தலைவர்கள் எல்லாம் மாநிலத்தில் இருக்கும் தேசிய பிரச்சினைகளுக்கும் பொது பிரச்சினைகளுக்கும் ஒன்றாக தான் போராடுகிறார்கள். ஆனால் இந்த ஈனபிறவிகள் எல்லாம் இருக்கும்வரை அப்படி ஒன்றும் நடவாது என்றே தான் தோன்றுகிறது. இவர் முதலில் ஆரம்பிப்பார்.பின்னர் அந்த அம்மா பதிலடி கொடுக்கும். இப்படி மாற்றி மாற்றி விளையாடும் இவர்களுக்கு மனித உயிர்கள் எல்லாம் என்றைக்கு முக்கியமாகபட்டு உள்ளது. அந்த அம்மா போர் என்றால் உயிர் இழப்பு சகஜம் என்று சொன்னாலும் பின்னர் தனிதமிழ் ஈழமே நிரந்திர தீர்வு என்று கூறி விட்டார். ஆனால் கடைசி வரை வோட்டுக்காக கெஞ்சினாரே தவிர தனிதமிழ் ஈழத்தை இவர் ஆதரிக்கவும் இல்லை. நிரந்திர தீர்வை கூட சொல்ல முடியாத இவர் முதல்வன் படத்தில் வரும் அந்த மோசமான முதல்வர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.(ரகுவரன் நடித்த வேடம்)



அந்த அம்மா வேண்டுமானால் ஈழ தமிழர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஈழதமிழர்களுக்கு மட்டும் இல்லை தமிழினத்திற்க்கே துரோகி என்பதை மக்கள் அறிவார்கள்.

என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா?

 என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா? அப்படின்னு ஒரு படத்துல தான் பார்த்து இருக்கோம். ஆனால் அதையே நேரில் நிருபித்திருக்கிறது தினமலர். இங்கே இருப்பவர்களும் இலங்கையில் இருப்பவர்களும் ஏன் ஐ.நா சபையே கூறியபோது கூட இனபடுகொலை நடந்ததாக சொல்லாத தினமலர் இப்போது "இலங்கை போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ஷே காரணம் : அதிர்ச்சி தகவல்" என்று மிகபெரிய ஒரு விஷயத்தை கண்டுபிடித்து இருக்கிறது. நடிகர் வடிவேலின் புலிகேசி படத்தில் அவரின் ஒற்றன் ஒருவன் பழைய செய்தியை ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி பின்னர் கூறுவான். அதே போல் தான் தினமலர் இப்போது இந்த தலைப்பை கொடுத்துள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138235
தமிழ்நாட்டில் துப்பறிந்து தைரியமாக முன்கூட்டியே எழுதும் பத்தரிக்கைகள் தான் இல்லை. ஆனால் எல்லாருக்கும் தெரிந்த செய்தியை இப்போது தான் தெரிந்தது போல் எழுதுவது நியாயமா? இப்போது கூட எழுதவில்லை என்றால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டு வந்திருக்குமோ? அப்படி செய்து இருந்தால் தினமலரில்  நடுநிலை  இல்லை என்பது தினமலரில் இன்னும் பின்னூட்டங்கள் போடும் மெத்தபடித்தவர்களுக்கும் தெரிந்து விடும் என்ற பயமா?
நான் இதுவரை நான்கு முறை பின்னூட்டங்கள் போட்டு இருந்தேன். இதுவரை ஒருமுறை கூட எதுவும் வெளிவந்ததில்லை. இத்தனைக்கும் நான் மோசமான வார்த்தை பிரயோகம் செய்தது இல்லை. ஒருவேளை உண்மையை சொன்னால் போடமாட்டார்களா? இல்லை பின்னூட்டம் போடுவதற்கென்றே தினமலர் ஏற்பாடு செய்திருக்கும் நபர்களின் பின்னூட்டங்கள் தான் தினமலரில் வெளியாகுமா?
ஒருவேளை இது தான் தினமலரின் தர்மமா? செய்திகளை முந்தி தந்தால் அதை செய்தித்தாள் என்று சொல்லலாம். ஆனால் இப்படி இரண்டு வருடங்கள் பின்தங்கி தரும் செய்தித்தாளை என்னவென்று சொல்லுவது?

இன துரோகிகளாக ஆவது எப்படி?

 ஆரம்பத்தில் நல்லவர்களாக தங்களை மக்கள் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் பலர் இப்போது நல்லவர்களாக இல்லை. அவர்களில் சிலர் மிரட்டப்பட்டு (இறையாண்மை சட்டத்திற்காக) ஆளும் அரசுடன் இணைக்கப்பட்டனர். பலர் பணம் கொழிக்கும் தொழில் தான் இது என்று கண்டுபிடித்து அதிலே முழுவீச்சாக இறங்கியுள்ளனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது வெகு சுலபம்.
கீ.வீரமணியுடன் சேர்ந்து இயங்கும் கூட்டம் இதற்கு நல்ல உதாரணம். பெரியார் தொடங்கிய கட்சியை தனது குடும்ப சொத்தாக கொண்டு வளர்ந்து பெரியாரின் கொள்கைகளை குழிதோண்டி புதைக்கும் இந்த நல்ல மனிதர் இதுவரை தானாக எதையும் செய்தது இல்லை. இவருக்கு எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த அடிமையின் பல்லக்கு எப்போதும் தயாராகவே இருக்கும். தற்போது இந்த பல்லக்கு கருணாநிதியின் சேவைக்காக சென்றுள்ளது.
பல்லக்கு என்றால் தூக்க நான்கு பேர்களுக்கு மேல் வேண்டுமே. அதற்காக முதலில் சேர்ந்தவர் தான் சுப.வீரபாண்டியன். இவரின் பேச்சில் மயங்காதவர் எவரும் இல்லை என்று இருந்தது. இப்போது இவர் பேச்சை கேட்டால் எரிச்சல் தான் வருகிறது. எல்லாருக்கும் சிறை பல மாற்றங்களை தந்திருக்கலாம். இவருக்கு எப்படி காலில் விழுந்து கிடப்பது என்று சொல்லி தந்திருக்கிறது. சுயமரியாதை பற்றி சொல்லிதர வேண்டிய பேராசிரியர் மரியாதை கேட்டு அலைகிறார். 
பல்லக்கினை தூக்கி செல்ல இருக்கும் இன்னொரு கலியுக சிற்பி ஜகத்ரட்சகனை பற்றி என்னவென்று சொல்வது. இவருக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டு விழாவே வைக்கும் அளவுக்கு கவிதைகளில் தேறி வருகிறார். எப்படியெல்லாம் யோசிக்குரானுங்க? அந்த நான்கு பல்லக்கு தூக்கிகளில் நான்காவது இடமே ரொம்ப முக்கியமான இடம். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அந்த இடத்தை பிடித்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் அனைவரும் பணத்தின் அருமை தெரிந்தவராகவே இருக்கவேண்டும். இல்லையென்றால் பல சூழ்நிலைகளில் கோபமோ இல்லை; இன உணர்வோ வந்து விடும். அந்த சமயங்களில் மது, மாது என இறங்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.  இப்படி பல நல்லவர்களை தான் அப்போதைய இலங்கை துணை கமிஷனர் அம்சா வளைத்து போட்டார்.
பணம் தான் என்றால் பணத்தால் அடிப்பார். பணம் அவர்களுக்கு தேவையில்லை தொழில் தொடங்க அம்சாவே ஏற்பாடு செய்துள்ளார். என்ன ஒரு கரிசனம். பல நட்சத்திர தாங்கும் விடுதிகளில் விபச்சாரம் செய்து பிடிபட்ட நடிகை மூலம் மாது வேண்டும் என கேட்கும் அந்த இன உணர்வாளர்களை சரி செய்து விடுவார் அம்சா. அதையும் மீறி எழுதுபவர்களை கவனிக்க காவல்துறை இருக்கிறது. போதாதென்றால் அண்ணன் திருமா இருக்கிறார். இல்லை என்றால் எல்லாரையும் குழப்பி விடும் ஜகத் இருக்கிறார். இப்படி அனைத்து வளங்கள் தளங்களையும் கையாண்டு மானம் ரோசம் இல்லாதவர்கள் அனைவரையும் தனக்காக பேசவைத்துள்ளார் அம்சா. 
அதே வாயால் முதல் நாள் புகழ்ந்து விட்டு மறுநாள் நான் அடிப்பது போல் அடிக்குறேன் நீ அழுவது போல் அழு என்று இவர்கள் நடித்த நாடகங்கள் நூறு நாட்களை தாண்டும். யாராலும் மறுத்து அறிக்கை விடமுடியாதபடி இவர்களே புலிகளின் சார்பில் அறிக்கைகளை விட்டார்கள்.( பார்வதி அம்மாள் மற்றும் புலிகளை நேரில் சந்தித்தது போல் வந்த கட்டுரைகள்). இந்தியாவில் தான் இவர்கள் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றால் இலங்கையில் சென்று உங்களை என் தாயார் போல் கவனித்து கொள்வேன் என்று அங்கேயும் வாக்குறுதி கொடுத்து நாங்கள் எல்லாரும் இன்னும் திருந்தவில்லை என்பதை பறை சாற்றினார் திருமா.
புலிகளின் மீதான தடை நீங்க விசாரணை கமிசன் முன் தானாக பேச வாராத திருமா வீதியெங்கும் சுவரொட்டிகளில்  பிரபாகரனோடு  கைகோர்த்து நிற்கிறார்.  இந்த கை தானே ராஜபக்ஷேவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. மக்கள் இன்னும் சுவரொட்டிகளை நம்பி தான் செய்திகளின் உண்மை நிலைமையை பரிசோதிப்பது இல்லை. அதுவே தமிழ்மக்களின் சாபகேடும். இந்த கூட்டணியில் மது மாது என்று போய் ஐட்ஸ் வாங்கி வந்த ஞான சேகரன் காங்கிரஸ் கட்சிக்காரரும் இருக்கிறார். அதையே முதலாக கொண்டு முன்னேறி வந்த ராம்நாடு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹுசைன் அலி இருக்கிறார்.ஹுசைன் அலி  தான் முதலில் இந்த தொழிலை ( இனதுரோகியாக மாறும் தொழில்) தொடங்கி வைத்து ராஜபக்ஷேவின் ஆதரவோடு மற்றவர்களையும் குப்பிட்டு சென்று அறிமுகம் செய்கிறார்.
இதில் வைகோவை இவர்கள் சேர்த்து கொள்ள மாட்டார்கள். அவர் பணத்தையும் வாங்கி கொண்டு பின்னர் இவர்கள் தான் பணம் கொடுத்து பேச சொன்னவர்கள் என்று சொல்வார் என்பதால் தான் அப்படி.  

ச்சே இவ்வளவு தானா இந்த உலகம்

இனபடுகொலை சம்பந்தமாக வந்த காணொளியை கண்டபின்னரும்  உலகமே
ஒன்று கூடி நம்மை இன்னும் ஏமாற்றுகிறது என்று புரிகிறது. அந்த காணொளியில் தான் எல்லாமே தெள்ளதெளிவாக உள்ளதே. இன்னும் வேறு என்ன கேட்கிறார்கள்? இன்னும் நம்மை எப்படியெல்லாம் நம்பவைத்து ஏமாற்ற போகிறார்கள். போர்குற்றவியல் நீதிமன்றம் எல்லாம் தமிழனுக்கு சரிபட்டு வருமா? பாலியல் கொடுமைகள் எல்லாம் போரில் சாதாரணம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் சக தமிழன்/ தமிழச்சிகள் இவ்வளவு கொடூரமாக கொல்லப்படும்போது இனிமேலும் துரோகிகளை பற்றி மூடி மறைத்து எழுதுவது தவறு என்றே உணருகிறேன்.
கருணா என்றாலே  துரோகம் என்று பொருளா? அதனால் அந்த இருவரை பற்றியும் நாம் பார்க்க வேண்டியது இல்லை.
ஜகத்கேஷ்பருக்கு முன்னரே (December 2008) புலிகளின் மீதான பிடி மட்டும் அல்ல துரோகங்களும் இறுகுகிறது என்று தெரியும். ஆனாலும் சொல்லவில்லை. அவரே முன்னின்று போராட்டங்களை ஊக்குவிப்பது போல நடித்து தன் மீதான மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பினார். அப்போதும் கலைஞரை கண்டித்தோ இல்லை மத்திய அரசை கண்டித்தோ கோஷங்கள் எழுப்பகூடாது என்று சொல்லி மாணவர்களையும் மற்றவர்களையும் ஏமாற்றியவர். இவரை வைகோ, நெடுமாறன் போன்றோர்கள் நம்பவில்லை. இவர் பேச்சில் ஆளை வீழ்த்தும் வல்லமை கொண்டவர் ஆதலால் இன்னமும் இவரை நம்பும் ஏமாளிகள் உள்ளனர். இவர் தானாக எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொண்டவரில்லை. முத்துகுமரனின் இறுதி ஊர்வலத்திற்க்கோ அல்லது அதற்கு முதல் நாளிலோ இவர் எங்கே இருந்தார் என்று தெரிந்தவர்கள் கூறவும்?

அடுத்து  வருபவர் திருவாளர் தொல். திருமாவளவன். இவரோ அல்லது இவர் கட்சி சார்ந்தவர்களோ இல்லாமல் எந்தவொரு போராட்டமும் நடைபெறாது. இவர்கள் நடத்தினால் மட்டும் தான் இவரின் கட்சிகாரர்கள் கலந்துகொள்வார்கள் என்றில்லை. எங்கு எந்த போராட்டம் நடந்தாலும் இவர்களே மாணவர்களோ அல்லது மற்றவர்களோடு கலந்து விடுவர். பின்னர் நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் இவரின் கட்சிக்காரர்களே காரணம். முத்துகுமரனின் இறுதி ஊர்வலத்தில் மாணவர்களை அடித்து விரட்டிய பெருமை இவர்களையே சாரும். ஈழத்தமிழர்களின் இனபடுகொலைகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தில் குழப்பமும் அதையே பின்னர் கலவரமாகவும் மாற்றிய பெருமை இவரையும் இவர் கட்சியினரையுமே சேரும்.

பத்திரிக்கையாளர்கள்: ஈழ பிரச்சினைகளுக்கு முன்னர் வரை பத்திரிக்கை என்றால் அதில் ஒரு தர்மம் கடைபிடிப்பதாகவும் (ஊமை விழிகள் படத்தினை பார்த்து ஏமாந்தது தான்) அதை மீறாமல் எப்போதும் இருப்பார்கள் என்று நினைத்து இருந்தேன். எந்த பத்திரிக்கை நடுநிலையை காத்தது என்றே தெரியவில்லை. அப்படி ஒரு ஒற்றுமை. தினமலரில் ஆரம்பித்து( உங்களுக்கெல்லாம் சாவே வராதா? அப்படியே தான் இருப்பிங்களா என்ன?)  நான் கடைசியாக ஏமாந்தது நக்கீரனிடம். அத்தனை பத்திரிக்கைகளுமே ஊழல்கள் லஞ்ச லாவண்யத்தில் சிக்கி நம்மை ஏமாற்றி விட்டன. ( இதற்கு வேற எவ்வளவோ தொழில்கள் இருக்கின்றனவே. இதில் தான் இந்த மோசடிகளை செய்ய வேண்டுமா?)


மீடியா: எப்போது ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பித்தார்களோ அப்போதே நடுநிலை என்பது போய்விட்டது. சன் தொலைகாட்சியில் கிளிநொச்சி வீழ்ந்த உடனே ஆனையிறவு வீழ்ந்ததாக செய்தி போட்டார்கள். அந்த அளவு செய்திகள் நடுநிலையாக இருந்தன.( ஆனால் மூன்று நாட்கள் போராடி தான் ஆனையிறவை விட்டு புலிகள் பின்வாங்கினார்கள்) . கலைஞர் தொலைகாட்சியில் மானமிகு நமிதாவை ஆடவிட்டு அதை மக்கள் பார்க்கும்படி செய்து இருந்தார்கள்.ஜெயா தொலைகாட்சியில் இலங்கையில் போரா என்று கேட்டு புண்ணியம் கட்டியவர்கள் தான் இருக்கிறார்கள்.மக்கள் தொலைகாட்சி இலங்கை போரை தொடர்ந்து காட்டியது. ஆனால் அதில் அரசியல் தேவைக்காக என்பதும் இருந்தது. விஜயில் பரவாயில்லை. நிகழ்ச்சிகளில் யாரேனும் ஈழ பிரச்சினைகளுக்கு அழுதாலும் காட்டினார்கள்.


நான் இந்த பதிவினை மனம் வெறுத்தே பதிவு செய்கிறேன். பலரின் பெயர்கள் எழுதவே நினைக்கின்றேன். ஆனால் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள்  எல்லாம் நல்லவர்களாக இருக்கிறார்கள். அதனால் நான் எழுதுவது கடினம்.
உங்களுக்கு தெரிந்த துரோகிகளை(புதிய ) பற்றி கூறவும். இனிமேலாவது நாம் ஏமாறாமல் இருப்போம் ஆக.

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் இவர் நெருப்பு மாதிரியாம் அவரே சொல்லிகொள்கிறார்

இந்தா பார்த்துக்கோ நானும் ரௌடி நானும் ரௌடி.
இது தான் தினமலரில் வந்துள்ள புது செய்தி.
அதே மாதிரி தான் இதுவும் கை சுத்தம் அப்படியென்றால் எதையும் நேரடியாக எதிர்கொள்ள வேண்டியது தானே. அதென்ன தன் பெயரில் ஏதும் இல்லையென்று இவரே பத்த்ரிக்கைகளுக்கு கொடுப்பது. முன்பு தான் தன் பெயரில் சொத்துக்களை வாங்கி பின்னர் ஊழல் குற்றசாட்டில் சிக்கிக்கொண்டு அவர்களே வெட்கப்பட்டு பதவியை ராஜினாமா செய்தார்கள் என்று கேள்விபட்டேன்.
இவர் என்னவென்றால் தன்பெயரில் எதுவும் இல்லை என்பதை இவரே ஒத்துகொள்கிறார். இதில் இவர் வங்கிக்கணக்கில், வைப்பு தொகையாக ரூ. 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134ம்ல சேமிப்பு தொகையாக ரூ. 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ம் மட்டுமே உள்ளது.(கூட்டினால் என்ன வரும் என்று எனக்கு தெரியாது. கணக்கில் நான் கொஞ்சம் வீக். இது இரண்டையும் கூட்டினால் ஒரு லட்சத்து ஐந்பதாயிரம் கோடி எல்லாம் வராது என்று சொல்ல வருகிறாரோ? நான் தான் கணக்கில் வீக் என்றால் இவருமா?)
பாவம் மஞ்சப்பையோடு கிளம்பியவருக்கு மாதம் உதவித்தொகையாக ஒரு லட்சம் கொடுத்தார்களோ என்னமோ?( கட்சி தொடங்கிய வருடத்தில் இருந்து) இவரும் சாதாரணமாக சொல்கிறார். அவருடைய மொத்த சொத்தும் ஏழு கோடிக்கு உள்ளே என்று. காமராசர் எல்லாம் இருந்தார் என்றால் தூக்கில் தொங்கணும். அப்படி ஒரு வளமான  கட்சியாக திமுக வளர்ந்திருக்கிறது. அவர் இருந்திருந்தால் அவரும் ஒரு பெரிய தொகையை தன்னுடைய சொத்தாக சொல்லிருப்பார். திமுகவை விட காங்கிரஸ் தான் மிக வளமையான கட்சியாக இருக்கிறது. திமுக ஆட்சியில் இருந்து பெரிதாக கொள்ளை அடிப்பதற்கு முன்னரே காங்கிரஸ் தான் கொள்ளை அடிப்பது எப்படி என்று போபர்ஸ் பீரங்கி ஊழலில் மற்றவர்களுக்கு பாடம் நடத்தியது. இப்போது மாணவர்கள்  எல்லாம் வாத்தியாருக்கு பாடம் எடுக்கிறார்கள்.(ஒருவேளை இதை தான் தாய் எட்டு அடி என்றால் குட்டி பதினாறு அடி பாயும் என்று கூறினாரோ?)
என்னமோ போங்க. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி வைத்து இருப்பவர்களும் நாங்களும்  ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி தான் வைத்து உள்ளோம் அவ்வளவு தான் என்று சொன்னால் என்ன செய்வது?

ரோம் எரியும்போது பிடில் வாசித்து கொண்டு இருந்தவர்கள் தலைவர்கள் மட்டும் அல்ல, நாமும் தான்

ஈழ தமிழர்கள் இனபடுகொலை செய்யப்பட்டு கொண்டு இருந்தபோது நாம் சார்ந்து இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருந்தன என்றே தான் இன்னமும் நாம் பேசுகிறோம். ஆனால் நாம் என்ன செய்தோம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. இதுவே நமது வீட்டில் இருப்பவர்களில் ஒருத்தருக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்க்கிறோம் என்று வைத்து கொள்வோம். மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் பார்த்து கொள்வார் என்று வீட்டிலேயே இருக்கலாமே என்றா நாம் இருக்கின்றோம். மருத்துவமனையின் ஞாபகம் தூக்கத்தில் கூட வரும் அல்லவா?
அதே உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு வந்திருக்கும்? எதோ கூட்டாமாங்க, பேரணியாம். அவங்க நடத்துறாங்க. இவங்க நடத்துறாங்க. அவ்வளவு தான். அந்த பேரணியோ இல்லை உண்ணாவிரதமோ முடிந்தவுடன் வீட்டுக்கு போய் ஓய்வு எடுக்க சென்று விடுகிறோம். திரும்பவும் கேட்கிறேன். நம் வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால் எப்படி தூங்க முடிகிறது?  இதில் தமிழர்களின் சார்பாக என்று ஒரு போராட்டம் கூட நடந்தது இல்லை.



நான் இந்த கட்சியை சார்ந்தவன். அதனால் இந்த கட்சி நடத்தும் போராட்டத்தில் பங்கு கொள்கிறேன் என்று சொன்னார்கள். நான் அந்த கட்சி. அதனால் அந்த கட்சி என்றைக்கு போராட்டம் நடத்துகிறதோ? அன்று தான் நான் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார்கள்.
என்ன கொடுமை இது. ஒரு நாளாவது இந்தியாவில் இருக்கும் தமிழர்களின் சார்பாக என்று இந்த போராட்டம் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? யார் யார் இந்த இனபடுகொலைகளுக்கு காரணமோ அவர்கள் எல்லாருக்கும் பயம் வந்திருக்காதா?


இது பேரணி அல்லது உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களை பற்றியது. மற்றவர்களுக்கு என்றால் நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றே தான். உங்க வீட்ல இழவு விழுந்தா தான் வந்து கலந்து கொள்வீர்களா? பக்கத்து வீட்டுக்காரன் என்றால் கலந்துகொள்ள மாட்டீர்களா?

இதில் வேறு சிலகொடுமைகளும் உண்டு. அடுத்தவர்கள் நடத்தும் போராட்டத்தில் சென்று தங்களின் முகமும் கட்சியின் பெயரும் வர வேண்டும் என்பதற்காக மட்டும் கலந்து கொண்டு மறுநாள் செய்திதாள்களில் வந்தவர்களும் உண்டு. இவர்களை யாரும் அழைக்கவே வேண்டாம். அவர்களாகவே வந்து விழாவை சிறப்பித்து தாங்கள் வந்த நோக்கம் நிறைவேறியவுடன் சென்று விடுவார்கள்.( வேற என்ன புகைப்படங்கள் தான்).
இப்படி பட்டவர்கள் தான் பல மாணவர்களின் போராட்டங்களை குழப்பி கேடு விளைவித்தது. புலிகளின் தலைவரோடு புகைப்படங்கள் எல்லாம் எடுத்து கொண்டால் புலிகளை ஆதரிக்கிறார் என்று எந்த மடையர்கள் சொன்னாரோ தெரியவில்லை. (வெள்ளையாக இருப்பவன் எல்லாம் போய் சொல்ல மாட்டான் என்று சொல்வது போல்). இன்னமும் இந்த உலகம் அவரை நம்புகிறது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை எனக்கு. உண்மையில் இந்த இனபடுகொலைகளை தடுக்க முயற்சித்தவர்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் சிறைவாசத்தை அனுபவித்தார்கள். ஆனால் எதையுமே பார்க்காமல் இவர்கள் தான் ஏதோ இனபடுகொலைகளை தடுக்க முயற்சித்தவர்கள் என்பது போல் ஏன் இன்னும் நடிக்கிறார்கள்? ஒருவேளை அடுத்த வருடம் வரும் தேர்தலை முன்னிட்டோ?

என்னை கேட்டால் போராட்டம் நடத்த ஒரு எளிமையான வழி இருக்கிறது. நீங்கள் ஒன்றுமே செய்ய தேவை இல்லை. அது மட்டுமே தான் இதனை போன்ற மோசமான நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது. ஒன்றும் செய்யாமல் என்றால் வீட்டில் உட்காந்து தொலைக்காட்சி பார்ப்பது இல்லை. உங்கள் வீட்டில் தொலைகாட்சியே இல்லை என்றால் என்ன செய்வீர்கள்? வீட்டிற்கு வெளியே வந்து நிற்பீர்கள் அல்லவா? அது போல் ஒரு நாள் அனைவரும் வந்து நின்றாலே எல்லாம் நின்று போய்விடும். (தவறாக இருந்தால் மன்னிக்கவும்).

இதை ஏன் இப்பொழுது சொல்கிறேன் என்றால் இந்த ஈழத்தமிழர் போராட்டமானது முடிந்துவிட்டது என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். ஆனால் அது ஒரு தொடர்கதை. அதில் இருக்கும் காற்புள்ளியானது கண்ணுக்கு தெரியாமல் உள்ளது. அவ்வளவு தான். மீண்டும் இதே தப்பினை நமது ஆட்சியாளர்கள் திரும்ப செய்யாமல் இருக்க  நாம் திடமனதோடு தமிழர்களாகவோ அல்லது மனிதர்களாகவோ இருக்க வேண்டுகிறேன்

இந்த வண்டியை நாம வச்சிருக்கோம், இந்த வண்டியை வச்சிருந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்காங்க ?

என்னடா, கரகாட்டகாரன்ல வார நகைசுவையை போட்டு இருக்கானேன்னு பார்க்கிறிங்களா? அதென்னங்க குற்றம் செய்தவனை விட்டுவிட்டு குற்றத்தை மட்டுமே பார்கிறார்கள். இந்திய நீதிமன்றத்தில் நீரா ராடியா சம்பந்தப்பட்ட டேப்பினை ஒப்படைக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறதாம். பாருங்க இந்த கொடுமையை. இந்த டேப் எல்லாம் இருப்பது அரசாங்கத்திடமே. ஆனாலும் நீதிமன்றத்திற்கு அரசின் மேல் நம்பிக்கை இல்லை. ஒரு வேலை இந்த மத்திய அரசு தான் இந்த டேப்பில் தனக்கு வேண்டாத நபர்கள் பற்றிய விவரங்களை அதுவாகவே தவறவிடுகிறதா? இல்லை மராட்டிய மாநிலத்தில் கார்கில் தியாகிகளுக்கான குடியிருப்பு சம்பந்தபட்ட தகவல்கள் காணாமல் போனது போல் இந்த டேப்புகள் எல்லாம் காணாமல் போய் விடும் என்று நினைக்கிறதா?



நாம் ஒரு நூறு ரூபாய் கையூட்டு வாங்குகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். அதை ஒருத்தர் காவல்துறையில் புகார் அளிக்கிறார். நம்மை விசாரிக்கும்போது நாமும் ஒத்துக்கொண்டு விடுகிறோம். அப்போது நீங்கள் தானே குற்றத்தை ஒத்துக்கொண்டு விட்டீர்கள் என்று உங்களை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் விடுவார்களா என்ன?

நீரா ராடிய கையூட்டு பெற்றதை அவரே ஒத்துக்கொண்டு இருக்கும்போது அவரை தானே முதலில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நீரா ராடியா டேப் விவகாரத்தில் டேப்களை வெளியே கசிய விடக்கூடாது என்று கூறி மனு தாக்கல் செய்த ரத்தன் டாட்டாவிற்க்காக டேப்பினை நீதிமன்றத்தில் ஒப்படைக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

ஒரு சக்கரை நோயாளிக்கு இருதய துடிப்பு நின்று விட்டால் காலில் போயா சிகிச்சை அளிப்பார்கள்.

நீரா ராடியா டேப்பிணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது இருக்கட்டும் நீரா ராடியாவை எப்போது நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள்.

ஏர்டெல்லின் தரங்கெட்ட சேவை

நான் கடந்த ஐந்து வருடங்களாக ஏர்டெல்லின் சேவையை உபயோகபடுத்தி வருகிறேன். ஒரே நம்பர் தான் எல்லாரிடமும் கொடுத்து வைத்திருப்போம் என்பதால் இப்படி. நான் சென்னையில் இருந்து சோழிங்கநல்லூர் அருகே உள்ள நிறுவனதிற்கு எங்கள் நிறுவனத்தின் பேருந்தில் செல்கிறேன். எப்போது வேளச்சேரிக்கு அருகில் வந்தாலும் பேசிக்கொண்டு இருந்தாலும் என்னுடைய அலைபேசியானது தொடர்பை துண்டிக்கிறது. இப்போது நான் பேசிக்கொண்டு இருக்கும் நபர் மிகவும் முக்கியமானவராகவோ, இல்லை வேண்டியவராகவோ அல்லது நம்மை தவறாக நினைக்க கூடிய ஆளாகவோ இருக்கும் நிலையில் நமது இணைப்பு தானாக துண்டிக்கபட்டால் எப்படி இருக்கும்? நாம் அவசரம் அவசரமாக மீண்டும் முயற்சித்து அந்த நபரிடம் வருத்தம் தெரிவித்து பேசுவதை தொடர்வோம். ஆனால் சென்னையிலே இருக்கும் வேளச்சேரியினுள் இப்படி என்றால் மற்ற இடங்களில் எப்படி என்று தெரியவில்லை. நண்பர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது தான்( ஏர்டெல்லின் தகவல்தொழில்நுட்ப பிரிவில் இருக்கிறார்) அவர் சொன்னார்." பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதற்கேற்ப தங்களின் தொலைதொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குறைந்தது தனது வாடிக்கையாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இத்தகைய தொலைதொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கை அல்லது அதன் வீச்சை உயர்த்த வேண்டும். ஆனால் இதை ஏர்டெல் பின்பற்றவில்லை. நாமும் தினமும் இந்த பிரச்சினைகளை கடந்து தான் போகின்றோம். இதை ஏன் நாம் கண்டு கொள்ளபோகிறோம் என்ற நினைப்பிலே ஏர்டெல் தொடர்ந்து இது மாதிரியாக வரும் புகார்களை கண்டுகொள்வது இல்லை."

லாபம் மட்டுமே குறிக்கோள் என்றால் கூட சேவை நன்றாக இருந்தால் கண்டு கொள்ளாமல் போகலாம். ஆனால் இது மட்டும் தான் பிரச்சினை என்றில்லை. முதலில் முதலிலே கட்டணம் செலுத்தி பெரும் சேவையில் இருந்தேன். ஏர்டெல்லில் இருந்து பேசினார்கள். உங்களின் அலவலகத்தில் இருக்கும் நண்பர்களுக்குள் பேசினால் கட்டணம் இல்லை என்றார்கள். அதற்காக பேசியபின் கட்டணம் செலுத்தும் சேவையை தேர்ந்தெடுத்தேன். முதலில் இது நல்ல விசயமாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறிக்கொண்டே இருந்தது. அது வரை முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி வந்த நான் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. சில நாட்கள் பேசியதற்கும் பல நாட்கள் பேசாதபோதும் கட்டணம் கட்டி இருந்தேன். நமக்கு தெரிந்த இதே தகவல் தொழில்நுட்ப நண்பர் மூலமே நான் பேசி இருந்த அழைப்புகளை சரிபார்த்தேன். அப்போது தான் நான் பேசாத அழைப்புகளும் அதில் இருந்தது கண்டுபிடித்து ஏர்டெல்லில் முதலில் கேட்டபோது கட்டி தான் ஆக வேண்டும் என்றார்கள். பின்னர் நாங்கள் வழக்கு பதிவோம் என்றவுடன் அவர்களே இறங்கிவந்து அந்த அழைப்புகளை கழித்து இனிமேல் இவ்வாறு நடக்காது என்று கூறினார்கள்.


ஏர்டெல் உபயோகபடுத்தும் முறையானது கொடுப்பது போல் கொடுத்து பின்னர் அதற்கும் பணம் பறிப்பது. இந்த முறையானது முதலிலே கண்டு கொள்பவர்கள் விலகி நிற்கிறார்கள். என்னை போன்றவர்கள் அதே நம்பர் வேண்டும் என்பதால் அமைதியுடன் அதே நம்பர் உடன் அடுத்த சேவைக்கு தாவுவதற்கு உள்ளோம். உங்களுக்கு தெரிந்த நல்ல சேவை அல்லது குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கும் நிறுவனம் இருந்தால் எனக்கு கூறுங்களேன்.

யார் அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள்

இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் துறையினர் உண்மையில் மென்பொருள்துறையினர் இல்லை. பலரும் மென்பொருள்துறையினர் தான் அதிகம் வாங்குவதாக நினைத்து கொண்டு இருக்கின்றனர். எல்லா துறையிலும் சம்பளம் என்பது அவர்களின் படிப்பை பொறுத்தே இருக்கிறது. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கலெக்டர் வேலை கேட்கும் மனப்பான்மை தான் இன்னும் இங்கே இருக்கிறது.
கொரியர்கள் கொண்டு போய் கொடுப்பவர்களின் சம்பளம் தான் இருப்பதிலே ரொம்ப குறைவாக உள்ளது. அவர்களுக்கு 3000 தருகிறார்கள். அடுத்தபடியாக ஓட்டுனர்கள் (4000).
எல்லா துறையிலும் படித்தவர்களுக்கு அதிகமாக சம்பளம் என்று ஆரம்பித்து பின்னர் அவர்களை வேலையில் முன் அனுபவம் உள்ளவர்கள் முந்துகிறார்கள். இவர்களிடையில் உள்ள வருடங்களின் வித்தியாசம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் உள்ள நெட்வொர்க் பொறியாளர்களின்(BE-இளங்கலை பொறியியல் படித்தவர்)  சம்பளமும் நான்கு ஆண்டுகள் முன் அனுபவம் உள்ள நெட்வொர்க் பொறியாளர்களின்(Diploma-பட்டயபடிப்பு  பொறியியல் படித்தவர்)  சம்பளமும் ஒன்று தான்.

முக்கியமான நிறுவனங்களில் வேலையில்  முதலில் சேரும்போதே ஆண்டுக்கான சம்பளம் இதுவென பேசி வாங்கினால் மட்டுமே மென்பொருள்துறையினருக்கு சம்பளம் அதிகரிக்கும். பின்னர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் எல்லாம் விரக்தியில் தான் இருக்கிறார்கள்.

மென்பொருள் துறையினரை விட பெட்ரோலியம்(ONGC), தனியார் தொழிற்சாலைகளில் வேலை புரியும் பொறியாளர்கள் (SAIPEM, Reliance energy, Vedanda etc) மற்றும் மத்திய அல்லது மாநில அரசுகளில் இருப்பவர்கள் தான் அதிகமான சம்பளம் வாங்குகின்றனர்.

மென்பொருள்துறையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு சம்பளவிகிதம் உள்ளது. ஒரு நிறுவனம் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவருக்கு நான்கரை லட்சம் கொடுப்பதாக சொல்கிறது. அதே முன் அனுபவம் உள்ளவருக்கு ஆறு லட்சம் கொடுப்பதாக மற்றொரு நிறுவனம் சொல்கிறது. இப்படி வித்தியாசங்கள் இருந்தாலும் மத்திய அரசின் பணியாளர்களை விட இவர்கள் குறைவாகவே கையில் வாங்குகிறார்கள். எப்படி என்றால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த ஆண்டு சம்பளங்களில் கூறுவது போல் கொடுப்பது இல்லை. நிறுவனங்களை பொறுத்து அவர்கள் ஒரு தொகையை பிடித்தம் செய்கிறார்கள். கேட்டால் ஆண்டு இறுதியில் கொடுப்பதாக கூறுகின்றனர்.(நீங்கள் நூற்றி பத்து சதவிதம் உழைத்தால் மட்டுமே இந்த பிடித்தம் செய்த பணத்தில் தொண்ணூறு சதம் கிடைக்கும். இல்லையென்றால் அந்த பணம் நிறுவனத்திற்கு தான் சொந்தம்) இந்த நான்கரை லட்சத்தில் ஒரு லட்சம் அதில் போகிறது என்று கொள்வோம். மிச்சம் மூன்றரை லட்சம். இதுவும் முழுமையாக உங்கள் கைகளில் வந்து சேராது. மென்பொருள்துறையில் இருப்பதால் அவர்களின் வருமானவரியையும் நிறுவனங்களே பிடித்தம் செய்கின்றன. அதை தவிர்க்கும் பொருட்டு செய்யும் செலவுகள் தான் அதிகம். கையில் ஒன்றும் நிற்காது. 

இதே நிலையில் இருக்கும் ஒரு மத்திய அல்லது மாநில அரசு பொறியாளரை எடுத்து கொண்டால் அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அவர்களுக்கு கிடைக்கும் இதர படிகள் தான் அதிகம். கழுத்தில் பட்டை அணிந்து இருப்பவர்கள் எல்லாரும் மென்பொருள்துறையினர் என்ற தவறான எண்ணமும் அங்கே அங்கே இருக்கத்தான் செய்கிறது.
பெட்ரோலியம் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருக்கும் பொறியாளர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு, இலவச தங்கும் வசதி, இலவச போக்குவரத்து வசதி மென்பொருள்துறையினருக்கு கிடையாது.



2008-2009ஆண்டுகளின் சம்பளங்களின் தொகுப்பு
2010-2011ஆண்டுகளின் சம்பளங்களின் தொகுப்பு

மென்பொருள் நிறுவனங்கள் கொடுப்பது போல் கொடுத்தாலும் சேமிப்பு என்பது மற்ற துறையினருக்கு மட்டுமே சாத்தியமாகிறது.

தினமலர்,சுயமாக உழைத்து சம்பாரித்தல் தவறு என்கிறதா அல்லது தமிழர்கள் எல்லாம் அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிறதா?



தினமலர்- வாரமலரில் தற்போது வந்துள்ள செய்தி.(கருத்து என்றே கூறலாம்). அமெரிக்காவில் தற்போது இருக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை உயர்வதாகவும்(மக்கள் தொகையும் தான்.) அதனால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்துவருவதாகவும் சொல்லிவிட்டு அதற்காக இந்தியர்கள்  அரசியலில் அங்கீகாரம் கேட்கின்றார்கள் என்று புகார் கூறியுள்ளது. தினமலர் இந்தியர்கள் அங்கு வாழக்கூடாது என்கிறதா? இல்லை அங்கு இருக்கும் ஜனநாயகம் இவர்களுக்கு பிடிக்கவில்லையா? உண்மையான ஜனநாயகம் என்பது எல்லாருக்கும் ஆட்சியில் பங்களிப்பு கொடுப்பது என்பதே. இங்கே இருக்கும் பணநாயகம் போல் அங்கும் இருக்க வேண்டும் என சொல்லவருகிறதா?
அதை விட்டுவிட்டு எங்கே போனாலும் பேசகூடாது என்று சொல்லும் தினமலரை என்னவென்று சொல்லுவது?
சாமியே வரம் தந்தாலும் இவர்கள் தரக்கூடாது என்று சொல்வார்கள் போலிருக்கு. அங்கே குடியுரிமை பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபட முழுஉரிமை இருக்கிறது. இந்தியாவில் தான் அகதிகளை பிச்சைகாரர்களாக நடத்துகிறது. அமெரிக்காவில் அப்படி இல்லை. மற்றவர்களுக்கு வேண்டுமானால் அமெரிக்கா ஒரு மோசமான நாடாக இருக்கலாம். அந்த நாட்டு மக்களை சிறப்பாக நடத்துவது போல் வேறு எங்கும் நடத்துவதில்லை.  
தினமலருக்கு எப்பவும் ஆள்பவர்கள் ஆண்டு கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் தங்களுக்கு எப்பவும் பல்லக்கு தூக்கிகள் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்களோ

ஈழ இனபடுகொலையை தடுக்க தவறியது நாங்கள் தான் என்று கருணாநிதி ஒத்துகொள்வாரா?

தமிழக முதல்வர் தற்போது ஒரு பேட்டியில் கூறியிருக்கும் விஷயம் முக்கியமானது. ஏன் என்றால் இதையே அவர் பின்னர் மாற்றி கூறக்கூடும். தற்போது தி.மு.க அங்கம் வகிக்கும் காங்கிரெஸ் கூட்டணியில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படி பிரச்சினைகள் பல வந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களே திட்டினாலும் வாய் திறக்காது இருந்தார். ஆனால் அதையும் மீறி பேட்டி கொடுத்தே ஆக வேண்டிய நிலைக்கு நமது முதல்வர் தள்ளப்பட்டுள்ளார். இந்த பேட்டியில்  கூறியுள்ளதாவது
"மத்திய அரசு, மாநில அரசு என்று கருதாமல் இரண்டும் ஒரே அரசுதான் என்று சிந்தித்து ஒரே அரசாக கருதுகிறோம். நிர்வாக வசதிக்காக அவை பிரிக்கப்பட்டவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவை பேதம், பிளவுக்காக இல்லை. நீங்கள் படித்தவர்கள் உங்கள் சிந்தனைக்கு தீனி போட்டதை போல சில கருத்தை கூறினேன். உங்களுக்கு இது புலப்படுமானால், மாநில அரசு, மத்திய அரசை ஆளுபவர்களுக்கு, கட்சிகளுக்கு இது புலப்படாமல் போக முடியாது. "

இதன் உள் அர்த்தமானது நாங்கள் மத்திய அரசு, மாநில அரசு என்று பிரிந்து ஊழல்கள் செய்யவில்லை. அப்படி நாங்கள் செய்திருந்தாலும் அதில் கொடுக்கவேண்டிய பங்கை காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு ஏற்கனவே கொடுத்து உள்ளேன் என்பது தானே அர்த்தம். இது மட்டுமா? ஈழத்தில் நடந்த இனபடுகொலைகளை நாங்கள் இருவரும் சேர்ந்து தான் கண்டு கொள்ளாமல் இருந்தோம். இருப்போம். அதையும் ஆதரிப்போம். தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்தால் தி.மு.க,காங்கிரஸ் இரு கட்சிகளுமே தங்கள் தொகுதிகளின் எண்ணிக்கைகளை இழக்கும். தற்போதைய பீகார் அரசியலில் காங்கிரஸ் ஒரு தோல்வியின் சின்னம்.
அதே நேரத்தில்  அ.தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்தால் எவ்வளவு தொகுதிகளை  அ.தி.மு.க விட்டுகொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் கூட்டணி ஆட்சியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் அ.தி.மு.கவை யோசிக்க செய்யும். அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் என்றே எதிர்பார்க்கலாம். அப்படி உடைந்தால் அ.தி.மு.கவுடன் இருக்கும் கட்சிகள் எல்லாம் நட்ராற்றில் விடப்படும். அதையும் மீறி இப்பவும் கூட்டணியில்  இருக்கிறார்கள் என்றால் அது அ.தி.மு.க காங்கிரசை நட்ராற்றில் விடபோகிறது என்பதே உண்மையாக இருக்கலாம். ஆகவே காங்கிரஸ் தே.மு.தி.கவுடனும் பா.மா.கவுடனும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் இது தேர்தலுக்கு முன் உள்ள நிலைமை. 
கூட்டணி நிலவரங்கள் இப்படி இருக்க இப்போது திருவாய் மலர்ந்துள்ள கலைஞர் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வந்தால்  நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக தான் சேர்ந்து செய்தோம் என்றே சொல்லுவாரா என்ன? இல்லை வடிவேலு சொல்வது போல் அது வேற வாய் இது நாறவாய் என்பதை உறுதிபடுத்துவாரோ

மீண்டும் ஏமாறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு,ஏமாறுவதற்கு வாரீர்

தினமலரில் தற்போது வந்துள்ள செய்தி. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது:இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, அரசுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளப்படுமென நம்புகிறேன்.தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்தும்படி தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, பெரும்பாலான தமிழர்கள் மறுகுடி யமர்த்தப்பட்டு விட்டனர். இன்னும் 17 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் பேர் வரை மட்டுமே முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரை வில் குடியமர்த்தப்படுவர். இந்த பிரச்னையை இலங்கை அரசு உணர்வுப்பூர்வமாக அணுகும் என நம்புகிறேன்.இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.
இதை படித்தவுடன் உங்களுக்கு தோன்றுவது போலவே எனக்கும்  தோன்றுகிறது. அந்த ஊழல் இந்த ஊழல் பற்றியெல்லாம் வந்த செய்திகள் இருக்கும்போது இதையேன் தினமலர் முன்னிலைபடுத்தி சொல்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அதே போல் அந்த ஊழல்களை எல்லாம் மறைக்க தான் இந்த பயணம் என்றும் நான் சொல்லவே இல்லை. இதில் ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. ஐ.நாவின் கூற்றுப்படி அங்கே இருந்தவர்கள் மூன்று லட்சம் பேர்( புலிகள் ஐந்து லட்சம் பேர் என்று கூறி இருந்தனர். ஒருவேளை இரண்டு லட்சம் பேர் புலிகளாகவே இருந்து இருக்கலாம்.) இப்போது குடியமர்த்த போவது பதினேழு முதல் இருபது ஆயிரம் பேர் என்று கூறுகிறார்கள்.மற்றவர்கள் என்னவானார்கள்? ஒரு முறை இவர்கள் சென்று வந்தால் மட்டுமே இப்படி குடியமர்த்தல் நடக்கிறது என்றால் இவர்கள் அடிக்கடி அங்கே செல்லலாமே.என்னை கேட்டால் இவர் அங்கேயே குடிசை போட்டு தங்கலாம். இதில் தமிழக முதல்வர் சொல்லியபடி தான் தான் நடந்து கொள்வதாக வேறு சொல்கிறார். அப்படியானால் இவருக்கு எப்ப எப்போ இப்படி தோன்றுகிறதோ அப்போது மட்டுமே குடியமர்வு நடக்குமா?


கேட்டால் தீவிரவாதம் என்கிறார்கள்.இறையாண்மை என்கிறார்கள். கேட்க வேண்டியவர்களும் சரியில்லாமல் வேடிக்கை பார்க்கும் நிலையில் ஐ.நாவில் இனபடுகொலைகளை செய்தவர்களுக்கு இடமும் கொடுத்து புண்ணியம் சேர்த்து வருகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒரு வயதான முதியவர் தான் இந்த உலகை ஆட்டுவிக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை இல்லையா? ஐ.நாவே நிறுத்த முடியாத போரினை நான்கு மணிநேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து தடுத்த பெருமையும், அமெரிக்கா மற்றும் மேற்குலகின் செயற்கைகோள்களையும் மீறி நடந்த எறிகணைவீச்சினை அறிக்கைகள் மூலம் அழித்ததையும் என்னவென்று பாராட்டுவது என்றே தெரியவில்லை.

இந்தியா ஒரு ஈனபிறவிகளின் நாடு

என்னடா இந்தியாவினுள் இருந்துகொண்டு இப்படி எழுதி இருக்கிறானே என்று பார்க்கிறீர்களா? இந்தியாவில் இருந்து ஒழுங்காக வருமான வரிகள் செலுத்திவரும் அனைவரும் நாட்டை சாடுவதற்கு முழு உரிமை படைத்தவர்களே.அதிலும் நாம் தமிழர்கள் வேறு. ஈனபிறவிகள் எங்கு அதிகம் என்று கேட்டால் அதற்கு விடை தமிழ்நாடு என்று தான் வரும். யோசித்து பாருங்கள். நமக்கு வாய்த்த கட்சிகள் அப்படி. ஈனபிறவிகளை ஆட்சியில் வைத்து அழகு பார்ப்பதே நமது வேலையாக போயிற்று. இப்போது இருக்கும் மத்திய அரசு இரு வருடங்களுக்கு முன்னரே தோற்று இருந்தால் இப்போது வெளியே வந்து கொண்டிருக்கும் பல ஊழல்கள் அப்போதே வெளியே வந்திருக்கும்.

தாமதமாக கிடைக்கும் நீதியும் நிதியும் பயன் தராது. செத்தவன் கையில் கோடி ரூபாய் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன? நீதி இப்போது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை. அவர்களை காப்பாற்றி கொள்ளவே அவர்களுக்கு தெரியாதபோது எப்படி நம்மை எப்படி காப்பாற்றுவார்கள். நம் தமிழ்நாடு எல்லாவற்றிலும் ஒருபடி மேல். யார் யார் எதிரிகள், துரோகிகள்   என்றே நமக்கு தெரியாமல் ஈழ பிரச்சினைகளுக்கு போராடி பல ஆயிரம் இனஉயிர்களை காவு கொடுத்திருக்கிறோம். இன்னும் கொடுக்க இருக்கிறோம். எனக்கு தெரிந்து ஆளும்கட்சியுடன் தொடர்பில் இருந்த, இருக்கின்ற அனைவரும் துரோகிகளே.( பெயரை குறிப்பிட்டு வம்பில் மாட்டிக்கொள்ள நான் தயாரில்லை). இதில் இவர்களே நமக்கு முன்னர் ஈழத்திற்கு குரல் கொடுப்பர். நாமும் நம்பி இறங்கியபின்னர் அவர்கள் பைகளை நிரப்பிக்கொண்டு சென்று விடுகிறார்கள். இதை எழுதவேண்டிய பத்திரிக்கைகளும் ஒன்றாக தண்ணி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்.(தண்ணியை மட்டுமே இங்கே எழுதி இருக்கிறேன். இதன் மூலம் வந்த வருவாய் வைத்து வீடு கட்டியவர்கள் அதிகம். மிச்சம் சொச்சம் எல்லாம் நிறையா இருக்கு. எழுதினால் இந்த பதிவு அசைவமாகி விடும்).

ஆளும்கட்சி தான் இப்படி என்றால் முக்கிய எதிகட்சிக்கு இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. எம்.ஜி. ஆர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ? அந்த அளவு இல்லையென்றால் கூட கொஞ்சம் முயற்சி செய்து இருக்கலாம். கடைசி நேரத்தில் கூறப்படும் வாக்குறுதிகள் மக்களை குழப்பமடையவே செய்யும். தெளிவாக்காது.நானும் ஈழ மக்களுக்காக போராடுகிறேன். நீங்களும் ஈழ மக்களுக்காக போராடுகிறீர்கள். இப்படி எல்லாருமே போராடியும் ஒன்றுமே நடக்காததற்கு இந்த ஈனபிறவிகள் தான் காரணம்.


அந்த ஈனபிறவிகள் செய்த காரியங்கள் மிகவும் எளிதானது.
நீங்கள் போராட்டம் நடத்தும்போது உங்களுடன் உங்களைவிட அதிகமான உணர்ச்சி பெருக்கோடு அவர்கள் நடந்து கொள்வார்கள். ஆனால் யார் எதிரி என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அவர்களோடு  நடத்தும் போராட்டம் என்பது கட்டையால் பாம்பினை அடிக்கும்போது கம்பும் உடையகூடாது அதே நேரம் பாம்பும் சாக கூடாது என்று நினைப்பவர்களின் வழிகாட்டுதலுக்கு உள்ளாகும். உங்களுடைய கூட்டங்களில் உங்களின் அனுமதி இல்லாமல் ராஜபக்ஷேவை பற்றி பேசுவார்கள்.( பின்னர் அவரோடு கைகுலுக்குவது வேறு) நீங்களும் எவ்வளவு நல்லவர் என்றே நினைப்பீர்கள். உங்கள் கூட்டம் எப்பொழுது மக்களை நேரடியாக சந்திக்க செல்கிறதோ. அப்போது அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.( இதை தான் பொன்சேகா அரசியல் கோமாளிகள் என்றார்.) எங்கே மக்கள் கொந்தளித்து விடுவார்களோ என்று இவர்களே பலவிசயங்களை செய்வார்கள். உண்ணாவிரதம், மனித சங்கிலி, அடிதடி என இவர்கள் செய்தது அனைத்துமே மக்களை குழப்புவதற்காக மட்டுமே. இவர்களால் எந்த  பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கொடுக்க தெரியாது. முடியாது. ஆனால் பேச்சுக்கள் மட்டும் தெளிவாக இருக்கும். நம் நாட்டில் எல்லா மக்களுக்கும் உள்ள அதே ஞாபகமறதி  இங்கே தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது.

ஈழத்தில் இருந்த தலைவர் தான் தங்களின் நலத்திட்டங்களை செய்யவிடாமல் தடுத்தார் என்று கூறியவர்கள் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டார்கள்.இவர்கள் என்ன திட்டம் வைத்திருந்தார்கள்? மக்களை பன்னீரில் குளிப்பாட்டி சந்தனத்தை பூசி தினமும் விருந்துகள் கொடுத்து காப்பாற்றுவேன் என்று சொன்னவர்களிடம் ஒரே ஒரு கேள்வி.

அங்கே இன்னமும் உடுக்க உடையும் உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் இன்னமும் கிடைக்கலாம். என்ன செய்யலாம்? போராட்டம் நடத்தியவர்களும் ஓய்ந்து போய் நாட்கள் ஆகின்றன. நீங்கள் தானே சொன்னீர்கள் அதெப்படி அரசாங்கம் மக்களை கொல்லும் என்று. இராணுவ வீரர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் தமிழின பெண்களோடு விளையாடி பின்னர் கொல்கிறார்கலாம். என்ன செய்யலாம் சொல்லுங்கள்.


ஒரு காரியத்தை செய்ய சொன்னதாக கூறியதை நம்புவதற்கும், செய்ததாக சொல்வதை நம்புவதற்கும்  மிகபெரிய வித்தியாசம் இருக்கிறது.
உதாரணம் நமது ஆளும்கட்சியின் எம்பிக்கள் ராஜினாமா செய்வதாக கூறியதற்கும் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தியதாக சொல்லியதற்கும் உள்ள வித்தியாசம் தான். இரண்டுமே ஒரே மனிதரின் பித்தலாட்டங்களில் ஒன்று தான். ஆனால் நம்பாமல் இருந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது உண்மை தான். ஆனால் ஏமாறுபவர்கள் ஒரு நிலையில் ஏமாறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை வந்திருக்கும். அந்த நிலை தான் இப்போது. வளங்களும் உரிமைகளும் எப்படி இழந்து இருக்கிறோம் என்று அறிவதற்கு முன்னரே நமது கோமணங்கள் பிடுங்கப்பட்டு இருக்கும்.

அப்படி பிடுங்கியவரை கோமனபிடுங்கி என்றே அன்புடன் அழைக்கலாம். பறிகொடுத்தவரை என்னவென்று அழைப்பது?  களத்தில் போராடி தோற்றவர்களுக்கு வீரமரணம் கிடைக்கிறது. ஆனால் இங்கே போராட்டங்களில் ஏமாந்த நமக்கு என்ன பெயர் கொடுத்து அழைப்பது?

நம்மை ஈனபிறவிகள் என்று சொல்வதா இல்லை நம்மை ஏமாற்றியவர்களை ஈனபிறவிகள் என்று கூறுவதா?

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-5



இந்திரா காந்தி இறப்பிற்கு பின்னர் அடுத்து வந்த நான்கு நாட்களில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல். இந்திராகாந்தி  கொல்லப்பட்ட  விஷயம் கேள்விப்பட்டவுடன் காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்கள் கூடினர். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி விவாதம் நடந்தது. அதில் இருந்தவர்கள் சீக்கியர்களின் மேல் கோபமாக இருந்தனர். அங்கே என்ன முடிவு எடுத்தார்களோ ஆனால் இந்த கலவரங்களை இவர்கள் தான் முன்னின்று நடத்தினர்.




அதில் முக்கியமானவர்கள் கமல் நாத்தும், ஜகதீஷ் டைட்லர். இவர்களை நேரில் பார்த்து பின்னர் தப்பித்தவர்கள் அதிகம். இவர்கள் சீக்கியர்களை கண்டுபிடிக்க பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. டெல்லியில் இருந்தவர்களின் ஒட்டு மொத்தவர்களின் பட்டியல் காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்கள் வைத்திருந்தனர். அதில் உள்ள சீக்கியர்களை கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று சின்ன பிள்ளைக்கு கூட தெரியும், காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்களுக்கு தெரியாத என்ன?


நான் அங்கே சும்மா தான் நின்று கொண்டு இருந்தேன் என்று சொல்லுவதற்கு இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் அங்கே? கமிட்டி அங்கத்தவர்கள் சும்மா வேடிக்கை பார்க்க அங்கே என்ன பொருட்காட்சியா நடந்தது? இவர்களின் முதல் இலக்கு போலீசில் இருந்த சீக்கியர்கள் தான். மற்ற போலீஸ் அதிகாரிகள் இருக்கும்போது தான் அவர்கள் கொல்லப்பட்டனர். அடுத்து இந்த குண்டர்களின் படை வீடு வீடாக கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை நடத்தினர். இதில் அவர்கள் பாரபட்சம் எதுவும் பார்க்கவில்லை. எத்தனை பேர் எத்தனை கனவுகள் அத்தனையும் அங்கே எரிக்கபட்டது. ஒரு நாட்டின் தலைநகர் மட்டுமே எப்போதும் பாதுகாப்புக்கு பேர்போன இடமாக இருக்கும். அந்தளவுக்கு பாதுகாப்பு பலபடுத்தபட்டு இருக்கும். ஆனால் இங்கே தலைநகரில் தான் கற்பழிப்புகளும் கொள்ளைகளும் கொலைகளும் நடந்தது. அதை ஆட்சியில் இருந்தவர்களே முன்னின்று நடத்தியது கொடுமையிலும் கொடுமை. இந்த கொடுமைகளுக்கு பின்னர் இதை ராஜீவ் காந்தியிடம் சொன்னவர்களுக்கு ராஜீவ் சொன்னது " ஆலமரம் சாயும்போது புல் பூண்டுகள் எல்லாம் அழியத்தான் செய்யும்." எவ்வளவு திமிரான பதிலாக இருந்திருக்கும். புகாரை வாங்கி அதனை விசாரிக்கும் நிலையில் இருந்தவர்கள் மேல் எப்படி புகார் கொடுக்க முடியும். வழக்கம் போல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. பலன் ஒன்றும் இல்லை. 

சீக்கியர்கள் கொல்லப்பட்டது தான் மிச்சம். வேறு ஒன்றும் நடக்கவில்லை. தலைநகரில் நடந்த இந்த கலவரம் சாதாரண விசயமா என்ன? கேட்பதற்கு யாரும் இல்லாமல் வீடில்லாமல் தவித்த சீக்கியர்கள் முற்பதாயிரம் பேர்.
 இதில் கேட்பதற்கு எந்த கேள்விகளும் இல்லை. ஏனென்றால் எல்லாம் தெளிவாக இருந்தது .

அடுத்த பதிவில் இலங்கையில் இந்திய அமைதி படை நடத்திய கொடூரங்கள் .

லிவிங் டூகெதர்:மென்பொருள் துறையினர் படும்பாடு

 அதென்னமோ தெரியல. மென்பொருள் துறையினர் தான் பலரின் கண்களுக்கு உறுத்தலாக தெரிகின்றனர். நான் இங்கே தமிழ்நாட்டை சேர்ந்த   மென்பொருள் துறையினரை மற்ற மாநில மென்பொருள்துறையினரிடம் தனித்து தான் பார்க்கின்றேன். எந்த மென்பொருள் கார்பொரேட் கம்பெனியாக இருந்தாலும் அங்கே தமிழ்நாட்டை சேர்ந்த மென்பொருள்துறையினர் தனித்து தான் தெரிவார்கள். எப்படி என்றால் ஒரு ப்ரொஜெக்டில் நானூறு பேர் வேலை செய்கிறார்கள் என்று வைத்தால் அதில் பாதி பேர் தமிழர்கள் தான் இருப்பார்கள். மிச்சம் இருப்பவர்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். இந்த மிச்சம் இருப்பவர்கள் அவர்களுக்குள் குழுக்களாக இருக்க வாய்ப்பு
இல்லை. ஆனால் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இருந்ததாக நினைவில்லை.அப்படி ஒரு ஒற்றுமை. இந்த தனி தனி குழுக்களாக இருக்கும்  தமிழர்களால் சத்தியமாக எந்தவொரு பிரச்சினையும் இல்லைங்க. இவர்களால் லிவிங் டூகெதர் எல்லாம் வாய்ப்பு இல்லைங்க.ஏன் என்றால் நம் தமிழ்நாட்டை சேர்ந்த மென்பொருள்துறையினருக்கு (சென்னையினை சேர்ந்தவர்களை சேர்க்காமல்)எப்பவும் கூச்ச சுபாவம் அதிகம். இவர்களாக யாரிடமும் தானாக சென்று பேசுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அப்படியே யாராவது தங்களிடம் பேசினாலும் அவர்களிடம் தொடர்ந்து பேசுவதற்கும் தெரியாது. இது தான் தமிழ்நாட்டினை சேர்ந்த மென்பொருள்துறையினரின் உண்மை நிலை. இந்த மிச்சம் சொச்சம் எல்லாம் ஆந்திர, கர்நாடக, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தான் நீங்கள் சொல்லும் அந்த லிவிங் டூகெதர் எல்லாம் செய்து புண்ணியம் கட்டி கொள்பவர்கள். நான் இதுவரை விளக்கியது மென்பொருள்துறையை மட்டுமே(IT field).

மென்பொருள்துறையினர் என்று மற்றவர்களால் கருதப்படும் BPO, Call centers பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ஏன் என்றால் இந்த BPO, call centers வந்த பிறகு தான் நம் தமிழ்நாட்டில் இந்த லிவிங் டூகெதர் வந்துள்ளது. BPOவுக்கும் மென்பொருள்துறைக்கும் வித்தியாசங்கள் பலருக்கு தெரிவதில்லை. (அதென்னப்பா சும்மா உட்காந்து பேசுறதெல்லாம் ஒரு வேலையா அப்படின்னு கேட்கிறவர்கள் ஒரு நாள் அப்படி உட்காந்து முயற்சி செய்து பாருங்கள். அப்போது தெரியும் அது எப்படின்னு.)


இந்த வித்தியாசங்கள் அவர்களின் வாழ்க்கை முறையிலும் உள்ளது. மென்பொருள்துறையினர் எப்பவும் மற்றவர்கள் வேலைக்கு செல்வது போல் சென்று மற்றவர்கள் திரும்பும் நேரத்தில் வருகிறார்கள்(வேலை இருந்தால் இந்த நேரம் அதிகம் ஆகும்). இதுவே BPO மற்றும் கால் சென்டர் என்றால் பெரும்பாலும் இரவு நேரத்தில் வேலை பார்ப்பார்கள் அல்லது நேரங்கெட்ட நேரத்தில் வேலை பார்ப்பார்கள்.  இப்படி பலவிஷயங்கள்  இருக்கும்போது எப்படி தான் இவர்களாக எதோ தமிழ்நாட்டை சேர்ந்த மென் பொருள் துறையினரால் தான் கலாச்சாரம் எல்லாம் கெடுகிறது என்று சொல்கிறார்களோ?

இதில் கொடுமை என்னவென்றால் எங்கே என்ன சொல்வது என்றே பலருக்கு தோணுவது இல்லை. இரண்டாயிரத்து எட்டாம் வருடம் மென்பொருள் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தினை வாழ்த்தி பேச வந்தவர்களுள் ஒருவர் சொன்னார். "மென்பொருள் துறையினர் என்றால் பீச் பார்க் என்று மட்டுமே சுத்துபவர்கள் என்றே நினைத்திருந்தேன். நீங்கள் தான் மாற்றி விட்டீர்கள் " என்று.

 
(மறு நாள் காலையில் உண்ணாவிரதத்தில் இருந்ததால் தண்ணீர் குடிக்க சென்றேன். தொடர்ந்து தண்ணீர் குடிக்கவில்லை என்றால் கிட்னி பாதிக்கப்படும் மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்த மென்பொருள் துறையினர் ஏராளம். ஒரு நாள் மட்டும் இல்லை இரு நாட்களும் அவ்வாறு தான் இருந்தார்கள். சும்மா உண்ணாவிரதம் இருப்பது போல் இருந்து நடிக்க அவர்களுக்கு தெரியவில்லை. பலருக்கு உண்ணாவிரதம் இருந்த திலீபன் தான் முன்னுதாரணம். அவரும் தண்ணீர் குடிக்கவில்லை. மறுநாள் காலையில் அங்கே சென்ற ஒரு வழிபோக்கர் சொன்னது தான் கொடுமையிலும் கொடுமை. அந்த கழுத்து முழுவதிலும் தங்கத்தினால் செய்யப்பட்ட ஆபரணங்கள் அணிந்த பிச்சைகாரர் சொன்னார். "ரொம்ப ஆடினீர்கள் தானே. உண்ணாவிரதம் இரண்டு நாள் இருந்தால் ஒன்றும் குறைந்து போவதில்லை. " எப்படி இருக்கிறது. அவரின் தனிப்பட்ட கோபத்தை காட்டிய நேரத்தை பாருங்கள். எவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள். இதில் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் தங்களுக்கு மென்பொருள் துறையில் வேலை கிடைக்காத கோபத்தில் தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று.)


சென்னையில் ஐந்து நட்சத்திர டீலக்ஸ் அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை ஐந்து.
சென்னையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை ஆறு.
சென்னையில் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை பதினொன்று.
சென்னையில் மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை பத்து + ஒன்பது.

ஒரு சின்ன சர்வே. யாரால் லிவிங் டூகெதர் வளர்கிறது என்று.

நள்ளிரவுக்கு மேல் இந்த ஹோடேல்களில் தண்ணி அடித்துவிட்டு ஒன்றாக கூத்து அடிப்பவர்களில் பலர். அரசியல்வாதிகளின் பிள்ளைகளில் பலர் அங்கே தான் இருக்கிறார்கள்.பெருத்த பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் இருக்கிறார்கள்,மென்பொருள் துறையினரும் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களை விட அங்கே அதிக நேரம் அல்லது அதிக நாட்கள் அங்கே குடித்தனம் நடத்துபவர்கள் சினிமா துறையினர் மட்டுமே. மற்றவர்களுக்கு அங்கே இருப்பது பொழுதுபோக்கு மட்டுமே. சினிமாதுறையில் இருக்கும் அந்த நண்பர்கள் அதற்கு அடிமையாக மாறி ரொம்ப நாட்கள் ஆகின்றன. கல்யாணம் செய்யாமல் குடித்தனம் நடத்தும் துணை நடிகர்கள் எண்ணிக்கையும் ஏராளம். இப்படி இருக்கும்போது விவரம் தெரியாமல் பேசினால் மட்டும் லிவிங் டூகெதர் ஒழிக்கப்படுமா என்ன?


அதென்னமோ லிவிங் டூகெதர் என்பது மென்பொருள்துறையினர் மட்டுமே கொண்டு வந்த கலாச்சாரம் போல பல பதிவுகள் வந்து கொண்டு இருக்கின்றன. வெளியே இருந்து சொல்பவர்கள் இருக்கட்டும். உள்ளே இருந்து ஒரு குரலாவது எதிர்த்து வர வேண்டுமே என்பதற்காகவே இந்த பதிவு. மற்றபடி நான் இந்த லிவிங் டூகெதர் கலாச்சாரத்தை கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.

ஆம்புலன்சினால் உயிரை காப்பாற்ற முடியுமா?

இந்த திங்கள்(22.11.2010) அதிகாலையில் என் நண்பன் ஒருவனின் தகப்பனார் மாரடைப்பால் ஜெயங்கொண்டத்தில் இறந்து போனார். அவரின் இறுதி சடங்கு நேற்று(23.11.2010) ஜெயங்கொண்டத்தில் நடந்தது. அங்கே சென்ற பின்னர் தான் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். அதிகாலை ஐந்து மணி அளவில் நண்பரின் தந்தை வேறு ஓரிடம் செல்லுவதற்கு கிளம்பி இருக்கிறார். நண்பரின் தாயார் தயாரித்த காப்பியை அவசரமாக குடிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் அங்கு வலியால் துடிப்பதை கண்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்களை நண்பரின் தாயார் அழைத்து உள்ளார். அவர்கள் நிலைமையை புரிந்து அவசர ஆம்புலன்சை(108ஐ)அழைத்து உள்ளனர்.அவர்கள் அழைத்து இருபது நிமிடங்கள் கழித்து வந்தவர்கள் ஒன்றும் செய்ய இயலாது. எல்லாம் முடிந்து போயிற்று என்று கூறியுள்ளனர்.அதிகாலை ஐந்து மணிக்கு ஜெயங்கொண்டத்தில் டிராபிக் அதிகமாக இருக்கிறதா? இல்லை ஒருத்தர் அவசரத்தில் அழைத்தால் இவ்வளவு நேரம் கழித்து தான் வருவார்களா? ஒரு கிலோமீட்டருக்குள் இருக்கும் ஒரு இடத்தை அடைய இருபது நிமிடங்கள் என்றால் மற்ற இடங்களுக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

இதற்கு பெயர் தான் மருத்துவ சேவையா? இது ஒரு சேவை. அதற்கு ஒரு பெயர் வேறு?


தயவு செய்து அவசர உதவிகள் தேவைபடுவோர் அருகில் இருக்கும் மருத்துவமனைகளின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள். அரசின் சேவையை நம்பாதீர்கள். ஏமாந்து யாருடைய உயிரையும் இழக்காதீர்கள்.

உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் நாற்பதாயிரம் ஒரு ஓட்டு

தினமலரில் ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு சம்பந்தமாக வந்த ஒரு கட்டுரையில் இந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று கூறியுள்ளனர்.
இதில் எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை சொல்லியிருந்தனர். அது சத்தியமா தமிழ்நாட்டை திருத்துவதற்க்கோ இல்லை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்க்கோ இல்லை. இருந்தாலும் அது தமிழ்நாட்டின் சொத்தான ஓட்டுக்கு பணமே. அவர்கள் சொல்லிருந்த விஷயமாவது
"தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை."
இந்த விஷயம் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது எப்படினாலும் நாம் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்த போவதில்லை. அதனால் நான் உங்களை பணம் வாங்காதிங்கனு சொல்ல போறதில்லை. கம்மியா வாங்கிடாதிங்கனு தான் சொல்றேன். உங்களுடைய ஒரு ஓட்டுக்கு நாற்பத்திரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்பு இருக்கிறது.( அது நம்ம பணம்ங்க. அப்புறம் நாம தானே இன்கம் டாக்ஸ் எல்லாம் செலுத்துறோம். அரசியல்வாதிகளா ஒழுங்கா செலுத்துரானுங்க?) இந்த பணத்தை அடித்தது நம் தமிழ்நாட்டில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்களே என்று சொல்லபடுகிறது. அப்படியானால் நமக்கு தானே முதலுரிமை. நம்ம ஊர்காரங்க பணம் அடிச்சதெல்லாம் எதுக்காக? நாம பாட்டுக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம்னு ஆரம்பிச்சு திருமங்கலத்துல இருபத்தி ஐந்தாயிரம் வரைன்னு போயிட்டோம். யாருக்காக இருந்தாலும் நமக்கு ஓட்டுக்கு பணம் குடுக்கனும்னா கண்டிப்பாக இப்படி மாபெரும் ஊழல் செஞ்சு தானே ஆகணும்.இல்லையா இப்பவெல்லாம் இருபத்தி ஐந்தாயிரத்துக்கு கம்மியா எங்க தொகுதியில நாங்க வாங்குரதில்லைங்க ( நானும் திருமங்கலத்திருக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவன்).


ஆனால் இது இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த விஷயம். இப்போ வருடங்களும் அதிகமாகிடுச்சு. ஊழலும் அதிகமாகிடுச்சு. நம்ம விலையும் அதிகமாகிடுச்சு. நாம தான் அதை ஒழுங்கா வசூல் செய்யணும். பொருள் நம்முடையது. அவங்களால எவ்வளவு கொடுக்க முடியும்னு தினமலர் சொல்லிருச்சு.( ப்ரோக்கர் கமிசன் கிடையாதுங்க ) இனி நாம என்ன செய்யனும்னா ஒழுங்கா உட்காந்து யோசிச்சு நல்ல விலையா பேசணும்.

என்னை கேட்டால் ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் கேட்கலாம்னு சொல்லுவேன். அவங்களால நாற்பத்திரண்டு கொடுக்க முடிந்தாலும் அங்கே பணம் பட்டுவாடா செய்பவருக்கும் ஒரு நல்ல தொகை கிடைக்க வேண்டுமே.( அது தனி பதிவாக போடுறேன். பணம் பட்டுவாடா செய்பவர்கள் தயவு செய்து பின்னர் என்னை சந்திக்கவும்.) அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கும் வேணாம் அவர்களுக்கும் வேணாம். நாற்பதாயிரம் ரூபாய் கேளுங்கள் என்கிறேன். ஆனால் பணம் வாங்குவதற்கு கொடுக்கப்படும் பணத்திற்கு நான் ஜவாப்தாரி இல்லை. நல்ல ப்ரோக்கர்களை தேடி கேளுங்கள். நாற்பதாயிரம் ரூபாய் ஓட்டு உங்களுக்கு இல்லையென்றால் எதிர்கட்சிக்கு என்று கூறிவிடுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன். ஏமாந்து விடாதிர்கள். ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் ரூபாய் என்றால் நான்கு பேருக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் லட்சாதிபதியாவதற்க்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு இது. ஏமாறுபவர்கள் பின்னர் யாரிடமும் கேட்க முடியாது. இது ஒரு முறையே கிடைக்கும் வாய்ப்பு.

( அய்யா நான் யாரையும் குறை சொல்ல வரலைங்க. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் கொடுத்திருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. அவர் வாங்கிய வீடு பத்து வருஷங்களுக்கு முன்னர் ஒரு கோடி என்றால் இப்போதும் அதே விலையிலே அவர் விற்பார். தயவு செய்து வீடு வாங்க ராசாவை அணுகவும்)




ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-4

ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்கு பிறகு சீக்கியர்களின் கோபம் அப்போது ஆட்சியில் இருந்த இந்திராவின் மீது விழுந்தது. பலர் அரசு வேலைகளில் இருந்து ராஜினாமா செய்தனர். ராணுவத்திலும் ஒரு சீக்கிய கிளர்ச்சி ஏற்படும் அபாயம் இருந்தது. இந்த விஷயங்கள் உளவுத்துறை மூலம் ஆட்சியில் இருந்தவர்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை.இதில் வேறு அங்கே இந்திரா காந்தியிடம் இருந்த பாதுகாவலர்கள் பலர் சீக்கியர்களாகவே இருந்தனர். இதை எப்படி அனுமதித்தனர் என்றே பலருக்கு தெரியவில்லை. ஒரு வேளை பிற்காலத்தில் உண்மைகள் வரக்கூடும் என்றே வேண்டுமென்றே விட்டுவிட்டார்களா?
31 அக்டோபர் 1984 காலை மணி 9:08:
வீட்டில் இருந்த அலுவலகத்தில் இருந்த இந்திரா காந்தியை இரு பாதுகாவலர்கள் வணக்கம் கூறினர். அதற்கு நமஸ்தே என்று பதிலுக்கு வணக்கம் கூறினார் இந்திரா காந்தி.சஞ்சய் காந்தி கொல்லப்பட்ட அன்று எப்படி ராஜீவ் காந்தி டெல்லியில் இல்லையோ அதே போல் இம்முறையும் அவர் டெல்லியில் இல்லை. அவர் மேற்கு வங்கத்தில் அரசியல் சுற்று பயணத்தில் இருந்தார். எப்பவும் போல் சோனியா காந்தி வீட்டில் இருந்தார். அப்போது அவர் மேற்பார்வையில் தான் அங்கே பிரதமரின் வீட்டில் எல்லாம் நடைபெற்றது.(இதுவும்)

இந்திரா காந்தி அன்று தனக்காக பேட்டியெடுக்க காத்திருந்த பிரிட்டிஷ் நடிகர் பீட்டர் உஸ்தினோவ்வை பார்க்க அந்த பங்களாவில் இருந்த நடைபாதையில் சென்று கொண்டு இருந்தார். அவரின் பின்னர் ஐந்து பாதுகாவலர்கள் நடந்து வந்தனர். வழியில் எதிர் நோக்கி நின்று கொண்டு இருந்த பாதுகாவலர்கள் வணக்கம் செய்து செலுத்தி கொண்டு இருந்தனர். அங்கே அடுத்தடுத்து காத்திருந்த இரண்டு பாதுகாவலர்கள் தங்கள் உடையில் காக்கியையும் உருவத்தில் சீக்கியர்களாகவும் இருந்தனர். அதில் பியாந்த்சிங் (சப்-இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) இருந்தனர்.
 

இதில் பியாந்த்சிங் பத்து வருடங்களுக்கும் மேலாக அங்கே வேலை பார்த்து வந்தார். இந்திரா காந்தியிடம் நம்பிக்கை பாத்திரமாக இருந்தார். புதிதாக சேர்ந்த சத்வந்த் சிங்கிற்கு இருவத்தொரு வயது மட்டுமே. ஆனால் சிறப்பு பயிற்சிகளின் மூலம் பிரதமரின் பாதுகாவலராக அங்கே நியமிக்கபட்டிருந்தார். இது நடந்து ஐந்து மாதங்களே ஆகியிருந்தன.


இப்போது நடப்பு உலகத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்திரா காந்தியிடம் வருவோம். அங்கே அவர்கள் இருவரும் வணக்கம் செலுத்துவது போல் நின்றனர். பியாந்த்சிங் தன்னிடம் இருந்த .38 பிஸ்டல் மூலம் இந்திரா காந்தியின் வயிற்றில் சுட்டார். (ஐந்து ரவுண்டுகள்). பின்னாடி இருந்த சத்வந்த் சிங்கிற்கு முப்பது ரவுண்டுகள் சுடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னால் இருந்த பாதுகாவலர்கள் தங்கள் பிரதமர் தங்கள் கண்முன் சுடப்பட்டது தெரிவதற்கு சில வினாடிகளே ஆகின.



அவர்களும் அந்த இருவரை நோக்கி துப்பாக்கிகளினால் சுட்டு வீழ்த்தினர். அங்கேயே பியாந்த் சிங் இந்திராவோடு விழுந்து  மரணித்தார். சத்வந்த் சிங் படுகாயமுற்றார்.ஆர்.கே தவான் அலறி அடித்து கொண்டு அங்கே வந்தார். அங்கே விழுது கிடந்த இந்திரா காந்தியை தூக்கி கொண்டு சோனியாவையும் கூட்டி கொண்டு சென்றனர். சோனியாவின் மடியில் இந்திரா காந்தி படுத்திருந்தார்.


இங்கேயும் ஒரு சந்தேகம் எப்பவும் அவசர சிகிச்சைகள் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தான் எல்லாருமே செல்வார்கள். ஆனால் இங்கே அவ்வாறு நடக்கவில்லை. அருகிலே இருந்த ராம் மோகன் லோஹியா மருத்துவமனைக்கு ஒருவேளை கொண்டு சென்றால் இந்திரா பிழைத்து இருப்பாரோ என்னமோ தெரியவில்லை ஆனால் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அப்படி கூட்டி செல்ல கூறியது சோனியா காந்தி தான் என்று ஆர்.கே தவான் கூறியுள்ளார்.

அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்குள்ளே பாய்ந்த தோட்டாக்களில் ஏழினை எடுத்தனர்.எட்டாவதை எடுக்கும்முன் அவர் இறந்தார். பகல் 2.25க்கு அவர் மரணித்தார். ஆனாலும் மாலை ஆறு மணியளவிலே இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்திரா காந்தி இந்த சீக்கியர்களினால் கொல்லப்பட்டு இருந்தாலும் இதில் சில கேள்விகள் உள்ளன.


  1.  சீக்கியர்களினால் இந்திராவுக்கு ஆபத்து உள்ளது என்று தெரிந்தும் அவர்களை பாதுகாவலர்களாக இருக்க அனுமதித்தது யார்?
  2. வீட்டுக்குள் நடக்கும்போது கூட குண்டு துளைக்காத உடை அணிந்து செல்வது தான் இந்திராவுக்கு வழக்கம். அன்று அவர் அவசரத்தில் அதை அணியவில்லை. ஆனால் அதை அவர் அணியவில்லை என்பதை யார் பியாந்த் சிங்கிடம் சொன்னது?
  3. அவசரமாக தான் அவர் நடந்து சென்றார் என்றால் அங்கே நின்று இருந்த பியாந்த் சிங்கிடம் எவ்வளவு நேரம் நின்று இருந்திருக்க முடியும்? அப்படி நின்று இருக்கும்போது பியாந்த் சிங் தன்னுடைய பிஸ்டல் எடுக்க எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்? சப் இன்ஸ்பெக்டர் நிலையில் இருக்கும் ஒருத்தர் தன்னுடைய துப்பாக்கியை என்ன தொங்கவா போட்டு இருந்தார் உடனே எடுத்து சுடுவதற்கு? உறையில் தானே இருந்திருக்கும். அப்படி எடுக்கும்போது பின்னால் இருப்பவர்களுக்கு தெரியாதா?
  4. ஒரு பிஸ்டலில் இருக்க கூடிய குண்டுகள் எத்தனை ? ஒரு ஸ்டன் கன்னில் இருக்க கூடியது எத்தனை? அதெப்படி சரியாக பியாந்த் சிங்கை மட்டும் கொன்றார்கள். பியாந்த் சிங்கை கொன்றால் யாருக்கு லாபம்? சுட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. இருவரில் ஒருவரை மட்டும் சரியாக சுட்டு கொல்லவேண்டும் என்று அங்கே கட்டளையிட்டது யார்?
  5. அடுத்தது சுட்டவுடன் சோனியா காந்தி அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவமனைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியது ஏன்?
விடை தெரிந்தவர்கள் சொல்லவும்.




அடுத்த பதிவில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றியது.

இந்தியாவின் தேசிய அடையாளம்

எதையும் பணத்தினால் வாங்கி விடலாம் என்கின்ற மனப்பான்மை இப்பொழுது அதிகமாகிவிட்டது. ஊழல்களும் ஆயிரம், லட்சம், கோடி எல்லாம் தாண்டி நூறு கோடி என்றாகிவிட்டது. சமிபத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு லட்சம் கோடி என்றாகி விட்டது. ஒரு வேளை ஊழல் என்பது நமது தேசிய அடையாளமா என்ன? ஊழல் செய்யாதவரை காட்டுங்கள் என்று தான் எல்லாரும் கேட்கிறார்கள். இதன் மூலம் தாங்களும் ஊழலில் திளைத்தவர்கள் என்பதை காட்டுகிறார்கள்.

நமது நாட்டில் எந்தளவு வெளிபடையான செயல்முறை திட்டங்கள் இருக்கின்றன என்பதற்கு ட்ரான்ஸ்பெரன்சி இன்டெர்நேஷனல் என்னும் அமைப்பு எடுத்த கணக்கெடுப்பில் தெரிகிறது. ஒரு வெளிபடையான செயல்முறை திட்டம் இல்லாதவரை ஊழல்களும் சரி ஊழல்வாதிகளும் சரி திருந்த போவதில்லை. நம் தலைமுறையில் இந்த மாற்றம் கொண்டு வந்தால் நமக்கு அடுத்த தலைமுறைகள் நன்றாக இருப்பார்கள். கணினி மயமாக்கல் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகிறார்கள் ஆனால் இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதையே சொல்லி நம்மை ஏமாற்றுவார்கள் என்று தெரியவில்லை.


ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் அத்தனை கருப்பு பணத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதாக சொல்லி தான் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. இப்போ அந்த பணம் கொண்டு வரும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? ஒரு வேளை உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டால் மட்டுமே மத்திய அரசு பதில் அளிக்குமோ?
 
 உச்ச நீதிமன்றம் தலையிட்டும் பல இடங்களில் ஒன்றும் நடக்காமல் உள்ளது. அதில் ஒரு விஷயம் உயர்நீதி மன்றத்தினுள் வக்கீல்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை இடமாற்றம் செய்ய சொல்லி உத்தரவு வந்தது. அதில் என்ன நடந்தது என்று இன்றும் எனக்கு புரியவில்லை. அதற்கு உச்ச நீதிமன்றத்தின் பதில் நடவடிக்கை என்னவென்று தெரியவில்லை?


இப்படி பகிரங்கமாக தெரியும் பல விசயங்களையே இந்த நீதிமன்றங்கள் கண்டு கொள்வதில்லையே அப்புறம் எப்படி இந்த நீதி, நியாயம் எல்லாம் இங்கே இருக்கும்? ஒரு வேளை நீதிபதிகளும் மனிதர்கள் தானே அவர்களும் இந்தியர்கள் தானே இந்தியாவின் தேசிய அடையாளத்தை அவர்களும் பின்பற்றுகிறார்களோ?




தயவு செய்து விவரம்  தெரிந்தவர்கள் சொல்லவும்.
 
நான் சொல்லியதில் எதுவும் தவறு இருப்பின் மன்னிக்க.

Popular Posts