போலி முகங்கள்-3
எல்லா சோசியல் நெட்வொர்கிங் தளங்களுமே மில்லியன் கணக்கில் பயனாளிகளை கொண்டு இருக்கின்றன. அதில் முக்கியமானவை பேஸ் புக்(Facebook), ஆர்குட்(Orkut) மற்றும் ஹாய்பைவ்(Hi5). இதில் இருக்கும் பயனாளிகளில் நூறு சதம் உண்மையானவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களின் பயன்பாட்டு முறைகளும் பயன்பாடுகளும் தான் அவர்களை நிர்ணயம் செய்கின்றன. போலிகளை கீழ்க்கண்ட முறைகள் மூலம் கண்டறியலாம். ஆனால் அவர்கள் போலிகள் என்று முழுவதுமாக முத்திரை குத்த முடியாது.
- தன்னுடைய படத்தை தவிர மற்றவர்களின் படத்தை ஒருவர் போட்டு இருந்தால் அந்த கணக்கு உடையவரை கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு குழந்தையை படத்தை போட்டு இருந்தால் நாம் அவரை சந்தேக பட வேண்டியது இல்லை. அதற்கு பதில் அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் பெண்ணின் படமோ அல்லது ஆணின் படமோ இருந்தால் யோசிக்க வேண்டும். அதுவே ஆடைகளற்ற உடலின் படம் என்றால் கண்டிப்பாக அந்த கணக்கினை வைத்திருப்பவர் கண்டிப்பாக ஒரு போலி தான்.
- பல ஆண்களின் கணக்கில் ஆண்கள் மட்டுமே இருந்தால் அதை வைத்து அவர்களை போலி என்று கூற இயலாது. அது அவரின் தலை எழுத்து.
- அடுத்த முக்கியமான விடயம் அந்த கணக்கினை அவர்கள் தொடங்கியது எப்போது என்பது. நேற்று தொடங்கிய கணக்கில் இன்றைக்கு பத்து பேர் என்றால் ஏற்று கொள்ளலாம் ஐம்பது பேர் என்றால் யோசிக்க வேண்டும்.
- ஒருவரின் கணக்கில் இருக்கும் படங்களை விட அவருடைய கணக்கின் பெயர் பல கார்டூன் படங்களுடன் சேர்க்கபட்டிருக்கும்.(tagged)
- ஒரு சிலர் தங்களின் கணக்கினை தொடங்குவது அந்த கணக்கில் இணைக்கப்பட்டு இருக்கும் இணையதள விளையாட்டுக்களில் விளையாடும்போது உங்களின் நட்பு வட்டத்தை விரிவாக்க சொல்லி அழைக்க வேண்டும்.( இல்லையென்றால் கோடி ரூபாய் உங்களின் கணக்கில் இருந்து சென்று விடும்!). அப்படி அழைப்பு விடுத்தும் நம்முடைய விளையாட்டுக்கு தோழர்கள் கிடைக்கவில்லை என்றால் தனியாக ஒரு சில போலி கணக்குகள் தொடங்கி அவர்களின் நட்பு வட்டத்தை விளையாட்டில் காட்டி மகிழ்கிறார்கள். ஒரு அளவுக்கு மேல் பல கணக்குகளில் இருந்து விளையாட முடியாது என்பதால் அவர்கள் உங்களை தொந்தரவு செய்ய கூடும்.
- பெரும்பாலும் போலி கணக்கினை வைத்துள்ளவர்கள் தங்களின் கணக்கில் இருக்கும் படங்களை எல்லாரும் பார்க்கும் வகையில் வைத்திருப்பார்கள். அதாவது நீங்கள் அவருக்கு அன்னியமாக இருந்தாலும் கூட அவரின் கணக்கில் இருக்கும் தனிப்பட்ட படங்களை பார்க்கலாம். உண்மையில் எந்த ஒருவரும் தன்னுடைய அந்தரங்க படங்களை இப்படி பொதுவில் விட்டுவைக்க மாட்டார்கள்.
- ஒருவரின் கணக்கில் இருக்கும் தகவல்கள் முழுமையாக இல்லாமல் sggdgdgdgdgdfg என்றோ அல்லது xxxx என்றோ அல்லது கிறுக்கியோ இருந்தால் நிச்சயம் அது போலி தான்.
- முழுமையான கணக்கினை தொடங்க போலிகள் காத்திருப்பது இல்லை. அதற்காக எல்லா போலிகளும் அப்படி இருப்பதில்லை. ஒரு சிலர் நிறுத்தி நிதானமாக தங்களின் கணக்கினை மற்றவர் கவரும் வகையில் அல்லது சந்தேகபடாதவகையில் நிரப்பி இருப்பார்கள்.
- போலிகள் தங்களுடைய கணக்கில் இடும் ஒரே வாசகம் இங்கே வந்து பாருங்கள் சொர்க்கம் தெரியும் என்பது போல் தான் இருக்கும். ஆக அவர்களின் முகப்பு பக்கத்தில் இடப்படும் வாசகங்களில் அது தெரிந்து விடும்.
- ஒருவரின் கணக்கில் ஓராயிரம் பெண்கள் தினம் சேர்கிறார்கள் என்றால் நிச்சயம் அந்த கணக்கினை உடையவர் புகழ் பெற்ற ஒரு நபராக இருக்க வேண்டும். அல்லது அவர் போலி தான்.
- பெண்கள் பெரும்பாலும் தெரியாத ஆண்களை தனது நண்பர்களாக ஏற்று கொள்வது இல்லை. அப்படி இல்லாமல் ஒரு அழகான பெண்ணிடம் இருந்து உங்களுக்கு நண்பராக அழைப்பு(Friend Request) வந்தால் முதலில் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் யார் என்று. உங்களிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரிந்து விடும். நீங்கள் ஓமகுச்சி போல் உங்களின் புகைப்படத்தை போட்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு ஐஸ்வர்யா ராயின் தங்கையிடம் இருந்து நண்பர் அழைப்பு(Friend Request) வந்தால் யோசிக்க வேண்டும் அல்லவா.
- இதே கதை தான் பெண்களுக்கும். பெரும்பாலும் ஆண்கள் பெண்களுக்கு தான் நண்பர் அழைப்பு விடுகின்றனர். அதை விடுத்து ஒரு அழகு பெண் உங்களுக்கு நண்பராக இருக்க அழைத்தால் யோசியுங்கள்.
- மேற்கண்டவை எல்லாமே உங்களுக்கு அவர்களை யார் என்றே தெரியவில்லை என்றால் நீங்கள் செய்ய வேண்டியது.
Tamilmanam problem panuthu boss
// "என் ராஜபாட்டை"- ராஜா said...
Tamilmanam problem panuthu boss//
நானும் கவனித்தேன் நண்பா.
Good post
Your writing style super
முதல் வருகை நண்பரே..
ஒவ்வொருவரும் உணர வேண்டிய பதிவு..
பகிர்ந்தமைக்கு நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
நன்றி சம்பத்குமார்
இன்றைய காலக்கட்டதிர்க்கு இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டிய தகவல்களை கொடுத்துள்ளீர்கள். தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். நன்றி.
நன்றி ஹேமா