ஜனநாயகம் VS முடியாட்சி
நம் நாடு ஏன் முடியாட்சியிலிருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதை பற்றி யோசிக்க வேண்டிய தருணங்கள் சிலவற்றை நமது நாட்டின் ஜனநாயகம் மற்ற முடியாட்சி நாடுகளுக்கு இந்நேரம் தந்திருக்கும்.எல்லா முடியாட்சி மன்னர்களும் கொள்ளையர்கள் தான். ஆனால் அவர்களுக்கென்று சில வரையறை வைத்து இருந்தனர். அதனால் அவ்வபோது மட்டுமே பிரச்சினைகள் இருந்து வந்தன. இப்போது ஜனநாயகம் என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த கொள்ளையர்களின் கழிப்பிடமாகவே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம். மாட்டிகொண்டாலும் பிரச்சினை இல்லை. நம்மிடம் அப்படி ஒரு கடினமான இறுக்கமான எந்த ஒரு அமைப்பும் இல்லை. மத்திய புலனாய்வு துறை என்பது ஆட்சியாளர்களின் துறையாக மாறி வருடங்கள் பல கடந்துள்ளன. காவல்துறையை பற்றி நாம் கேட்கவே வேண்டாம். கறைபடியாத துறைகள் என்று எதுவும் யாருக்கும் நினைவு இருப்பதாக தோணவே இல்லை.
- மன்னர்கள் தங்கள் வருங்கால சந்ததிகளும் இருந்து கொள்ளை அடிக்கட்டும் என்பதற்காக கொஞ்சமாவது விட்டு வைத்தார்கள் இல்லையென்றால் எதையாவது உருவாக்கி வைத்தனர். இங்கே ஆந்திர கர்னாடக எல்லையில் ரெட்டி சகோதரர்கள் பல வருடங்கள் இருந்து எடுக்கக வேண்டிய தாதுக்களை சில வருடங்களில் சுருட்டி உள்ளனர். இது ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பிரச்சினை அல்ல. ஒரு இடத்தில் மிக அதிகமாக தோண்டும்போது ஏற்படும் பள்ளங்கள் பூமியின் மேல் அடுக்குகளில் மாற்றங்களை உண்டு செய்யும் வல்லமை உள்ளது. நாம் இதனால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
- மன்னர்கள் எப்போதும் நீதியை நிலை நாட்டினர் என்று சொல்ல முடியாது ஆனால் முடிந்த அளவில் நீதியை செயல்படுத்த முயற்சி செய்தனர். இங்கே நீதிமன்றங்களுக்கே பாதுகாப்பு இல்லை. நீதிமன்றங்களுக்குள் நடைபெற்ற தாக்குதல்களுக்கே நீதி கேட்டு நீதிபதிகள் கெஞ்சித்து கொண்டு இருக்கிறார்கள். இதில் நமக்கு எங்கே போய் இவர்கள் நீதி வழங்குவார்கள்.நேற்று என் வீட்டின் மாடியில் தூங்கி கொண்டு இருந்த என் நண்பர்கள் மற்றும் தம்பிகளின் செல்பேசிகள் யாரோ புண்ணியவான் நிறுத்தி நிதானமாக திருடி சென்று உள்ளார். இதில் நிறுத்தி நிதானம் என்பது அவர் மொட்டை மாடியில் இருந்து பீர் குடித்து அதன்பின் திருடியதை குறிக்கிறது. வேறு ஒன்றும் இல்லை.ஒரு வேளை திருடர்களிடம் வீடுகளை பாதுகாக்க சொல்லலாமா? உங்களுக்கு தெரிந்த சிறு திருடர்கள் இருந்தால் சொல்லுங்கள். பெரும் திருடர்கள் வேண்டாம். அவர்கள் அரசியலில் இருக்கட்டும்.
- என் வீட்டின் பக்கத்தில் நேற்று ஆளும்கட்சியின் எதோ கூட்டம் நடந்தது. எங்கள் தெருவில் எப்பவும் மின்சாரம் எப்பவும் தட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும். Low voltage Problem. இதற்கு பலமுறை எங்கள் வீட்டின் சொந்தகாரர் மின்சார வாரியத்தில் புகார் அளித்து உள்ளார். ஒருவேளை இதற்கு உடனடி தீர்வு காண அவர் ஆளும்கட்சியில் சேர வேண்டுமோ? மன்னர் ஆட்சியில் மட்டுமே ஒரு சமயத்தில் இருந்து அடுத்த சமயத்திற்கு மாற சொல்லி கட்டாய படுத்துவார்கள். இப்பவும் அப்படி தானா?
- மன்னராட்சியில் மட்டுமே மன்னரின் கருத்துக்களுக்கு எதிர்த்து கருத்து சொல்வது பெருங்குற்றமாக கருதப்பட்டது. ஜனநாயகத்தில் இந்த பிரச்சினை இல்லை. கருத்துரிமை, எழுத்துரிமை மற்றும் பேச்சுரிமை என்று இருப்பதாக சொன்னார்கள். (சமுக அறிவியல் புத்தகத்தில் படித்தது ). இவை எல்லாம் இன்னும் தொடர்வதாக நான் நினைத்தது சற்று முன்னர் தான் இல்லாமல் போனது. ஆளும்கட்சியினரின் சுய விருப்பங்களுக்கு ஏற்ப சட்டங்கள் மாறுகின்றன.வைகோ, பழநெடுமாறன் மற்றும் சிலர் விசயத்தில் விசாரித்த ஆணையம் எந்த ஒரு தீவிரவாத அமைப்பையும் ஆதரித்து பேசுவது தவறாகாது என்றார்கள். பின்னர் அதையே காட்டி சீமானை கைது செய்தார்கள். ஒருவேளை ஆணையம் கொடுத்த அந்த தீர்ப்பு புறாக்களில் கட்டி அனுப்பபட்டதால் ஆட்சியில் உள்ளவர்களுக்கு வந்து சேர்வது இல்லையோ? இதெல்லாம் பார்க்கும்போது ஜனநாயகத்தின் அடிப்படைகள் ஒன்று ஒன்றாக நமது ஜனநாயகத்தில் இருந்து கழன்று கொண்டு முடிவில் ஒற்றை ஆட்சி முறைக்கே வந்து கடேசியில் முடிசூட்டு விழா அழைப்பு நமக்கு வருமோ?
- மன்னராட்சியில் ஊழல் இருந்ததா? இருந்திருந்தால் எப்படி இருந்து இருக்கும்? ஆனால் ஜனநாயகத்தில் இருந்தால் எப்படி இருக்கும் இப்படி இருக்கும். நீதிமன்றங்களே ஊழல்களை அங்கீகரிக்கலாமா என்று கேட்டு உள்ளன.
ஒவ்வொரு புரட்சியின்போதும் முடியாட்சில் இருந்து மக்கள் ஆட்சி வந்ததாக சொல்வார்கள். மக்கள் ஆட்சியின் முடிவில் இருந்து என்ன வர போகிறது?
உங்களுக்கு அவசர கடனுதவி தேவை? தொடர்பு: (richardcosmos5@gmail.com) கடன் பற்றிய மேலும் தகவலுக்கு.
அவசர கடன் வழங்குதல்.
Are you looking for urgent loan? Email for more information via: (richardcosmos5@gmail.com)
Urgent loan offer.
உங்களுக்கு அவசர கடனுதவி வேண்டுமா? நாங்கள் வணிக கடன்கள், தனிப்பட்ட கடன்கள், மாணவர் கடன்கள், கார் கடன்கள் போன்றவற்றையும் கொடுக்கிறோம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: (dakany.endre@gmail.com)
அவசர கடன் வழங்குதல்.