33 சதவிதம் கொடுப்பது இருக்கட்டும்

இந்த பதிவு பெண்களை பழித்து எழுதப்பட்ட பதிவு அல்ல. இன்றைய பெண்களின் நிலை பற்றிய பதிவு.

இன்றைய பெண்களில் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களில் பலருக்கு மகளிர் இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியவில்லை. இட ஒதுக்கீடு என்றால் அவர்களை பொறுத்த வரையில் ஆண்களின் இடத்தை பிடித்தல் என்ற அர்த்தத்தில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். (தொண்ணூறு சதம் அப்படி தான். மற்றவர்கள் என்னை மன்னிக்கவும்) . அவர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி தான் தெரியவில்லை என்றால் நாட்டின் அரசியலும் தெரியவில்லை. நாட்டில் என்ன நடக்கின்றது என்றும் தெரியவில்லை. விடுதலை போராட்டத்திற்கும் தீவிரவாததிற்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. (ஆயுதம் ஏந்தியவர்கள் எல்லாரும் போராளிகள் அல்லர்; போராளிகள் எல்லாரும் ஆயுதம் தரிப்பதில்லை)
 
சே குவேராவை டி- சர்ட்டில் அணிந்து செல்லும் பெண்களுக்கு அவர் யார் என்ற கேள்வி எழுவது இல்லை. விசாரித்து பார்த்தால் அவர் ஒரு பாப் சிங்கர் என்று சொல்கிறார்கள். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பெண்களுக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை கேட்பதற்கு கூட விருப்பம் இல்லை  ஆனால் மற்றவர்களின் பாலியல் சம்பந்தப்பட்ட அந்தரங்க விஷயங்களில் அவர்களின் ஆர்வம் அளவிட முடியவில்லை. ஒருத்தருக்கு சாப்பாட்டு பொட்டணம் வாங்கி தந்ததை பெருமையாக சொல்லும் பெண்களுக்கு தங்கள் அருகிலே ஒருவர் முதியோர் இல்லம் வைத்து நடத்தினாலும் தெரிவதில்லை.
 
ஒரு வேலை தங்களுக்கு ஆக வேண்டுமானால் யாரையும் சந்திக்கும் அதே நேரம் வேலை ஆனவுடன் அவர்களின் இருப்பிடம் கூட உதவி செய்தவருக்கு தெரிவதில்லை.
வேலை செய்யும் ஆண் பெண் இருவரில் வேலை தெரியவில்லை என்றால் இரவென்றாலும் ஆண் வேலை செய்ய கட்டாய படுத்தபடுகிறான். அதே நேரத்தில் பெண் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தாலும் குறிப்பிட்ட நேரம் அதாவது வேலை நேரத்தை விட அதிகமாக வேலை செய்ய கட்டாயபடுத்தபட்டால் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் விடுவதில்லை. ஒரே வேலைக்கு ஒரே நிலையில் இருக்கும் இருவரில் யார் நன்றாக வேலை செய்கிறார்களோ அவர்களுக்கு தானே அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். சரியாக வேலை செய்யாத பெண்களும் வேலை செய்யும் ஆண்களும் ஒரே சம்பளம் கேட்பது சரியா? வேலை செய்ய சொல்லும்போது  நான் பெண் என்று கூறும் பலர் சம்பள உயர்வு கேட்கும்போது அதை ஞாபக படுத்துவதில்லையே. அது ஏன்?
 
இது இப்படியென்றால் பேருந்தில் பயணம் செய்யும்போதும் ஆண்கள் உட்கார்ந்து இருப்பது பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் இருக்கைகளாக இல்லாமல் இருந்தாலும் ஆண்களை எழ வைத்து அந்த இடங்களை பிடிப்பது வழக்கமாகின்றது.( முதியோராக இருந்தால் இடம் அளிப்பது ஆண்களே).ஆக பொது விடயங்களில் தொடங்கி அரசியல் வரை அவர்கள் இன்னும் வளர வேண்டிய சூழல் இருக்கின்றது. எதையும் நேர்மையாக சாதிப்பதற்கு பதில் கண்ணீரால் சாதிப்பதை தவிர்த்து மேற்கண்ட விடயங்களில் ஆண்களுக்கு நிகராக அவர்களும் வர வாழ்த்துகிறேன். (அப்பாடா தப்பிச்சேன்).

2 Response to "33 சதவிதம் கொடுப்பது இருக்கட்டும்"

  1. Anonymous says:

    neengal eluthiyadee pilai

    நீங்கள் சொல்லுவது உண்மை தான்.. நான் ஒத்து கொள்ளுகிறேன்.... சே குவரோ பற்றி பல ஆண்கள்கே தெரிவது இல்லை

Popular Posts