மீண்டும் தகவல் சொல்ல வந்துவிட்டார்கள்

ஐநா சபையின் ஈழத்தமிழர்களின் படுகொலை சம்பந்தமான அறிக்கை வந்துவிட்டது.எல்லாருக்கும் தெரிந்த ஐநாவுக்கு தெரியாத அந்த படுகொலைகளை பற்றி ஐநா கடின முயற்சிகளுக்கு பின்னர் வெளி கொணர்ந்துள்ளது.(?) இந்த அறிக்கையின்படி இலங்கை போர்குற்றம் செய்துள்ளது உறுதியாகிறது. சரி ஒரு வழியாக அறிக்கை வந்து விட்டது அடுத்தது என்ன? அது தான் அறிக்கை கொடுத்து விட்டோம்ல வேறு என்ன உங்களுக்கு வேணும். கொல்லப்பட்டது உண்மை.(அப்படி தான் கொல்லுவாங்க-இந்தியா) அதற்காக பஞ்சாயத்து எல்லாம் செய்ய சொல்லக்கூடாது.
இந்தியாவிலே இந்திய குடிமக்கள் கொல்லபட்டதையே நாங்கள் கணக்கில் கொண்டு வரவில்லை. அப்புறம் எப்படி இந்தியாவை பஞ்சயாத்துக்கு அழைக்கிறார்கள் இந்திய அரசியல்வியாதிகள்( நானும் இந்திய குடிமகன் தான்.) ஒரு வேளை வேடிக்கை பார்த்த பிராந்திய வல்லரசு என்கின்ற முறையில் தலையிட சொல்கிறார்களோ? அதுவும் கிடையாது. காந்திய நாடு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட காரணத்தால் அழைக்கிறார்களோ? அதுவும் கிடையாது.(திலீபனின் அகிம்சை உண்ணாவிரத போராட்டம் அவரின் உயிரை குடிக்கும் அளவுக்கு சென்றும் இந்தியாவின் கல்மனம் இறங்கவில்லையே.) இலங்கை இனபடுகொலைகளில் இந்தியாவின் பங்கு இல்லாமல் இருந்திருந்தால் கூட பஞ்சாயத்து செய்யும் அருகதை இருந்திருக்கலாம். அருகதையே இல்லாத ஒரு நாட்டின் தலைமையிடம் முறையிட்டால் என்ன நடக்கும்? என்ன தான் எதிர்பார்க்கிறார்கள்? இந்தியா களத்தில் இறங்கி ராஜபக்ஷேவை கைது செய்து இந்தியாவிலேயே அதுவும் தமிழ்நாட்டில் வேலூர் சிறைச்சாலையில் அடைத்து விடுவார்களா  என்ன?
வேறு என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள் மக்களே?
சரி அடுத்த நாட்டின் பிரச்சினைகளில் நடுநிலையுள்ள எந்த நாடும் தலையிடாது(அந்த நடுநிலையான நாடு இந்தியா இல்லை). நம் நாட்டுக்குள் இருக்கும் பிரச்சினைகளை பார்க்கலாம் என்றால் ஊழல் தான் முதலில் வருகிறது. ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீட்டில் ஊழல் இருப்பது பாமரர்களுக்கும் தெரியும். அதை விசாரிக்க தணிக்கை குழு ஒன்று அறிவித்து அதன் அறிக்கை கூட வந்துள்ளது மன்னிக்கவும் கசிந்துள்ளது. ஊழல் நடந்தது உண்மை தான் ஆனால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே குழுவின் உண்மையான பரிந்துரை. உண்மையிலே மடியில் கணம் இல்லையென்றால் ஏன் இப்படி ஓடி ஒளிய வேண்டும்? நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியது தானே.





உண்மையில் மேல் சொல்லப்பட்ட இரண்டிலும் காங்கிரெஸ் திமுகவின் பங்கு இருக்கிறது. எல்லாருக்கும் தெரியும். ஆனால் தெரியாத விஷயம் ஒன்றே ஒன்று தான்.

ராஜபக்ஷேவையையும் கருணாநிதி குடும்பத்தையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி செய்வதற்கு ஒரே ஒருவருக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. அந்த நபர் சோனியா காந்தி. அவருக்கும் இது தெரியும். அதனால் தான் இருவரும் ஈழத்தமிழர்களின் போரில் சோனியா காந்திக்கு இருக்கும் அந்த சந்தற்பத்தை அவருக்கு எடுத்து கூறி களத்தில் இறக்கினர். அவரும் விடுவாரா என்ன? களத்தில் இறங்கி கொன்று குவிக்க ஒப்புதல் அளித்தார். புலிகளிடம் சிக்கியிருக்கும் மக்களை காப்பாற்ற மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினர். சுதந்திரமாக புலிகளின் நாட்டினுள் வாழ்ந்த ஐந்து லட்சம் மக்களில் மூன்று லட்சம் மக்களை கொன்று விட்டு மற்றவர்களை முகாம் என்ற பெயரில் அடைப்பதற்கு பெயர் தான் மனிதாபிமான நடவடிக்கை.



இந்த நடவடிக்கை இப்போது அண்டை நாட்டில் நடந்துள்ளது. சரி. நம் நாட்டில் ஊழல்வாதிகளை தடுக்க முடியாத அதே அரசு இந்திய அளவில் மட்டும் அல்ல உலக அளவிலும் ஊழல்களை வளர்த்து வருகிறது. ஐநா நினைத்து இருந்தால் இந்த படுகொலைகளை தடுத்து இருக்க முடியும் என்பது ஐநாவின் முன்னாள் அதிகாரி கூறியிருக்கிறார். சரி இதை தவிர்த்து இருக்க முடியும் என்றால் தடுக்காமல் இருக்க யார் என்ன செய்தார்கள் எவ்வளவு கொடுத்தார்கள். ஐநாவின் பொது செயலாளர் பாகி மூன் அப்பாவி என்கிறார்கள்.(?) அடுத்த நிலையில் நம்பியார் இருக்கிறார். இவர் தான் வெள்ளை கொடியுடன் புலிகளின் தலைவர்களை சரணடைய கூறியவர். இவர் அப்பாவி என்றால் நம்புவதற்கு யார் இருக்கிறார்கள்? ஆக குற்றம் செய்தவர்களும் குற்றம் நடப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து குற்றத்தை விசாரிக்க இருக்கிறார்களாம். அதை வலியுறுத்தியவர்கள் யார் என்றால் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களும் வேறொரு பிரச்சினையை சமாளிக்க மற்றொரு பிரச்சினையை கிளப்பும் கேடுகட்ட இந்த நடைமுறை எப்போது மாறுமோ?

என்னை பொறுத்தவரையில் ஊழலுக்கு மரண தண்டனையே சரியான தீர்வாக அமையும். இல்லையென்றால் இந்த நாடும் மக்களும் புரையோடி போயிருக்கும் ஊழலில் திளைத்து ஒரு நிலையில் வெறுத்து ஆயுதம் எடுக்க நேரிடும்.

0 Response to "மீண்டும் தகவல் சொல்ல வந்துவிட்டார்கள்"

Popular Posts