மில்லியன் டாலர் கேள்வி

தேர்தல் முடிந்து விட்டது. ஜெயலலிதாவும் பதவி ஏற்று விட்டார். இனி அடுத்தது என்ன? ஜெயலலிதா காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பாரா இல்லையா? இந்த கேள்வி தான் இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி.
காங்கிரஸ் கட்சியின் தலைவியும் உடனே ஜெயலலிதாவிற்கு தேநீர் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து வருகிறார். வழக்கமாக தேநீர் விருந்து எல்லாம் ஜெயலலிதாவே ஏற்பாடு செய்ய சொல்லுவார். ஆனால் இம்முறை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. ஆக காங்கிரஸ் கட்சிக்கு திமுகவை கழட்டிவிடும் எண்ணம் இன்னும் மெருகேறி இருக்கிறது என்பது தெரிகிறது. கழட்டிவிடுவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்ட ஒன்று என்றால் ஏன் தேர்தலுக்கு முன்னரே கழட்டி விடவில்லை. காங்கிரஸ் கட்சியோடு இதுவரை அதிமுக கூட்டணி பற்றி பேசவே இல்லை என்பது மற்றொரு உண்மை. காங்கிரஸ் கூட்டணி அமைக்க விரும்பியது தேமுதிகவுடன் மட்டுமே. அப்படியென்றால் இந்த தேநீர் விருந்து உண்மையில் அதிமுகவை கூட்டணிக்கு அழைக்கும் விருந்தா? இல்லை வேறு எதற்கும் வழிவகை செய்யபடுகிறதா?

தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து என்னவென்றால் காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டணி அமைக்க வேண்டும்.அப்படி அமைக்கப்படும்போது தான் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கழட்டி விடப்படும். திருடர்கள் இருவரும் பிரியும்போது ஒரு சூழ்நிலையில் இதுவரை பாதுகாத்து வந்த ரகசியங்கள் எல்லாம் வெளி வரும். திமுக மீண்டும் தனது செல்வாக்கினை உயர்த்தவேண்டுமானால் காங்கிரஸ் மற்றும் அதிமுகவை எதிர்க்க வேண்டும். தேமுதிகவெல்லாம் ஒரு கட்சி என்று அதனை எதிர்த்து அரசியல் செய்ததால் தான் திமுக இந்த நிலையில் இருக்கிறது. காங்கிரஸ் அதிமுகவை ஒன்றாக எதிர்க்க இருவரும் ஒரே கூட்டணியில் இருந்தால் தானே நன்றாக இருக்கும். அந்த வாய்ப்பு திமுகவிற்கு இந்த கூட்டணி மாற்றத்தால் தான் கிடைக்கும். காங்கிரஸ் எடுக்கும் ஒவ்வொரு அடியும் திமுகவை சீண்டி பார்க்கும் நிலையில் இருக்கும்போது ஈழத்தமிழர்களுக்கு இருவரும் சேர்ந்து(காங்கிரஸ் + திமுக) இருக்கும்போது செய்த பல துரோகங்களை திமுக வெளிக்கொணரும்.


இது அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் நான் ஒன்றும் தீர்க்கதரிசி இல்லையே இதுவெல்லாம் நடக்க.


உண்மையில் என்ன நடக்க போகின்றது என்றால் திமுகவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஒழிய காங்கிரஸ் திமுகவை இப்போதைக்கு வெளியே அனுப்பாது. ஒரு வேளை அதிமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் அதையும் செய்யும். ஆனால் அது தான் நடக்காதே. அதிமுக இந்த முறை தெளிவாக உள்ளது. காங்கிரஸ் உடன் கூட்டணி கிடையாது என்று. காங்கிரஸ் இன்னும் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை கூட்டணியை மாற்றி கொள்ளாது.

இந்த நிகழ்வெல்லாம் நடக்காமல் இருக்கும் திமுக என்றொரு கட்சி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை இருந்தால்.

6 Response to "மில்லியன் டாலர் கேள்வி"

  1. Last punch super

    நன்றி ராஜா

    ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! நன்றி.

    Anonymous says:

    அப்போ திமுகவிற்கு ஆப்பா?

    //அப்போ திமுகவிற்கு ஆப்பா?

    வேறு வழி இல்லை அவர்களுக்கு. கட்சியை கலைத்து விடலாம்.

    காங்கிரஸ் உடன் யாரு கூட்டணி வச்சாலும்... ஆப்பு ஆப்புதான்..... ஆனால் இந்த முறை பாவம் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து குட திமுக விற்கு கிடக்கவில்லை

Popular Posts