இலவசம் வேண்டுவோர் கவனிக்க

இன்று விஜய் டிவியில் நீயா நானா பார்க்கும்போது கவனித்த விஷயங்கள். இலவசம் வேண்டும் என்று கேட்கும் நபர்களுக்கு நான் கேட்க நினைத்த கேள்விகள் பின்வருமாறு


  1. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிகணினி(Laptop) தேவையா? அவர்கள் அதில் படிப்பு சம்பந்தமாக என்ன செய்ய முடியும்? படம் பார்க்க முடியுமே (Except computer science students) என்று கூறுகிறார்களோ?
  2. மின்சாரமே இல்லாத வீட்டில் தொலைகாட்சிபெட்டியால் என்ன பயன்?
  3. படிப்பதற்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது சரியாக இருக்கலாம். அனைத்து சமுதாயமும் கல்வியில் பங்கேற்க வேண்டும் என்பதும் சரியே. ஆனால் வேலையில் இட ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம்? இட ஒதுக்கீடு என்பதற்கு பதில் எல்லாருக்கும் கட்டாய கல்வி கொண்டு வரலாமே. சரியாக படிக்காதவர்களை அரசு வேலையில் கொண்டு போய் உட்கார செய்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?
  4. இந்தியாவில் மானியத்தில் தான் பெட்ரோல், டீஸல் விற்கிறார்கள் என்கிறார்கள்? இது உண்மையா? பிறகு ஏன் விலையேற்றம் எல்லாம்? பக்கத்து நாடுகளில் இப்படி தான் விலை ஏறுகிறதா?
  5. தொலைகாட்சிபெட்டிகள் இல்லாதவர்கள் ஒரு கோடி பேர் என்றால் இவர்கள் ஏன் ஏற்கனவே தொலைகாட்சிபெட்டி இருப்பவர்களுக்கும் சேர்த்து தொலைகாட்சிபெட்டிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றனவே அதற்கு என்ன செய்ய போகிறார்கள்?
  6. இலவசம் கொடுப்பதற்கு பதில் கல்வியை மேன்படுத்தலாமே. அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தையும் அரசுடமை ஆக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை.
  7. இலவச எரிவாயு இணைப்பு கொடுத்தல் தவறு இல்லை. அதற்கு ஏற்றவாறு தட்டுபாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா? அடுப்பு எரித்து சமைக்கும் குடும்பங்கள் இந்த எரிவாயு இணைப்பினை எப்படி உபயோக படுத்த முடியும். சிலிண்டர் வாங்கும் அளவுக்கு பணம் அவர்களுக்கு எங்கே இருந்து கிடைக்கும்? அதற்கு பதில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு எற்படுத்திருக்கிறார்களா?
  8. அடிப்படை உரிமைகளே இன்னும் சரி செய்யாதபடாதபோது தற்போது அறிவித்துள்ள இலவசங்கள் மக்களின் மேல் வரிச்சுமையை  எற்றாதோ?
  9. வெளிநாடுகளில் சென்று படிக்கும் நம் மாணவர்கள் படிக்கும்போதே வேலை பார்க்கிறார்கள். உங்களால் படிப்புக்கு முழுதொகையும் செலுத்த முடியாது என்பதால் அந்த அந்த மாநிலங்களில் அவர்களுக்கு பகுதி நேர வேலைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதையே இங்கேயும் செய்யலாமே.
  10. அரசின் இலவசங்களால் படித்து விட்டு மேலை நாடுகளில் சென்று குடியேறிவர்களுக்காக தான்  IITs, IIMsஅமைக்கபட்டனவோ?
  11.  உண்மையிலே இட ஒதுக்கீட்டின்படி தான் அந்தந்த சமுதாயத்தின் பொருளாதாரம் இருக்கிறதா? தாழ்த்தபட்டவர்களிலும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அய்யர் அய்யங்கார்களிலும் ஒரு வேளை உணவிற்கு கஷ்டபடுபவர்கள் இருக்கிறார்களே? ( நாங்கள் அப்போது கஷ்டப்பட்டோம் இப்போது அவர்கள் கஷ்டப்படட்டும் என்று சொல்லுவது மனித நேயம் இல்லையே)
  12. இலவச மானியங்கள் எல்லாம் எத்தனை ஏக்கர் நிலம் வைத்து இருப்பவர்களுக்கு கொடுக்கபடுகின்றன? ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து இருப்போர் தான் ஏழை விவசாயியா? உண்மையில் ஏழை விவசாயியை எப்படி இந்த அரசு கண்டுபிடிக்கிறது? வருமான வரி சான்றிதல் வைத்தா?  நில உச்சவரம்பு சட்டம் இன்னும் அமலில் இருக்கிறதா?
  13. வட்டிக்கு விட்டு சம்பாதிப்பவர்களும் வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் தான் சம்பாதிப்பதாக கணக்கில் காட்டுகிறார்கள். அவர்கள் பிள்ளைகளும் மானியங்களை(Scholorship) தானே வாங்குகிறார்கள்.
    எதன் அடிப்படையில் மானியங்கள் கொடுக்கபடுகின்றன. வருடத்திற்கு இவ்வளவு தொகையை செலவு கணக்கில் காட்ட வேண்டும் என்பதற்காகவா?
  14. வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் ஏன் தனியார்துறையில் அதை கட்டாயபடுத்தவில்லை?
  15. வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் அவர்களின் நிறுவனங்களில் முதலில் கொண்டுவரலாமே. முதலில் சதம் பெண்களுக்கு கொடுத்து இதனை ஆரம்பிக்கலாமே. (வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் தங்களின் நிறுவனங்களில் தங்களின் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை என்றோ அல்லது திறமையின் அடிப்படையிலோ தானே வேளை கொடுக்கிறார்கள்)
  16. தனியார் நிறுவனங்கள் எல்லாம் மென்பொருள் நிறுவனங்கள் அமைக்கும்போது ஏன் அரசு அந்த தொழில் இறங்கவில்லை?

1 Response to "இலவசம் வேண்டுவோர் கவனிக்க"

  1. Anonymous says:

    கேள்விகள் கேட்பது எளிது. பதில்கள் தான் கடினம்.

Popular Posts