அடுத்த ராஜினாமா நாடகம் தயார்

தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து விலக அழகிரி முடிவு செய்துள்ளதாகவும், மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் சொல்லுகின்றன. அடுத்த வாரம் நடக்க உள்ள கனிமொழி ஏற்பாடு செய்துவரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை தற்காலிகமாக தி.மு.க -விலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இது உண்மையில் நம்பும்படியாக இல்லை. ஏன் என்றால் மதுரையில் எந்தவொரு பத்திரபதிவும் அஞ்சாநெஞ்சனுக்கு தெரியாமல் நடக்காது. ஒவ்வொரு பத்திரபதிவு பதிவாளரும் அண்ணனிடம் ஒருவார்த்தை சொல்லியாச்சா என்று கேட்டுவிட்டே பத்திரங்கள் பதிவது வழக்கம். பத்திரபதிவில் வரும் கட்டிடம் அல்லது நிலத்தின் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக அந்த பகுதி பத்திர பதிவாளர் சொல்லும் ஒரே வார்த்தை" அண்ணன்கிட்ட சொல்லியாச்சா என்று தான்". இது தவிர முக்கிய இடங்களில் உள்ள நிலங்கள் அல்லது கட்டிடங்கள் சம்பந்தமான பத்திரபதிவிற்க்கும் இது பொருந்தும். அப்படி இருக்கும் அண்ணன் ஏற்கனவே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் ஒருபகுதியை பெற்று உள்ளதாக தெரிகிறது. அண்ணனிடம் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் பணம் வாங்குவதற்கு முன்னர் தான் அவர் எதிரியாக பார்ப்பார். பணம் வாங்கி விட்டார் என்றால் நீங்கள் அவரின் சொந்த தம்பி என்ற அளவுக்கு பார்த்து கொள்ளும் அளவிற்கு நன்றி பாராட்டுவார்.


அவரின் இயல்பு இப்படி இருக்க, அவர் சென்று ராஜினாமா பற்றி பேசியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் வந்த கதையானது அடுத்த நாடகமாகவே தெரிகிறது. நாங்க எல்லாம் நல்லவர்கள், அவர்கள் தான் ஊழல் செய்தார்கள் என்று சொல்வதற்கு இப்படி ஒரு நாடகம் நடத்தி உள்ளனர். எப்பவும் கருணாநிதி ஒரு பிரச்சினையோ இல்லை ஒரு சம்பவத்தையோ மறைக்க வேறு ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை நடத்துவது வழக்கம். அதில் ஒன்று தான் இது.


இதற்கு முன்னர் நடந்த நாடகங்கள் சிலவற்றை கீழே குறிப்பிட்டு உள்ளேன்.

 1. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா
 2. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க முன்னுதாரனமாக கனிமொழி ராஜினாமா
 3. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க கருணாநிதியின் நான்கு மணிநேர உண்ணாவிரதம். 
 4. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க கருணாநிதியின் மனித சங்கிலி போராட்டம். 
 5. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க தந்திகள் அனுப்பும் போராட்டம் 
 6. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க ஈழம் கூட வாங்கி தர தயார் என்று ஒரு முறை கூறி மறுநாளே மறுப்பு தெரிவித்தார். இதே போல் பிரபாகரன் நண்பர் என்று சொல்லி மறுநாள் பல்டி அடித்தார். பிரபாகரன் தீவிரவாதி அல்ல அவர் சார்ந்த இயக்கம் சரியில்லை என்று கூறி உள்ளார். 
 7. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, அவர் ( மட்டும்) அறிவித்த போர் நிறுத்தத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக செய்தி வந்த போது அவர் என்ன சொன்னார் ? மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார். அதே பேட்டியின் இறுதியில் இப்போது என்ன செய்யலாம் என்றிருக்கிறீர்கள் ( இலங்கை தொடர்பில்) என வினவியபோது நக்கலாக நாம் போய் டீ குடிக்கலாம் என்றார். ஒரு இன மக்களின் பேரழிவிற்கு பிறகு சுமுக நிலை நிலவுவதாக சொன்னார். இதன் பொருள் தான் (அல்லது தாம் ) விரும்பிய சூழல் வந்துவிட்டது என்பதுதான். எம்பிக்களின் பயணத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் கேள்விக்கு பதிலளிக்கும் அறிக்கையொன்றில் நாங்கள் செலவு செய்து போய்வந்தோம். நீயும் முடிந்தால் போய் வா.. யார் தடுத்தது என்றார். 
 8. உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர்கள் காவல்துறையினர் அடிதடியெல்லாம் இவரின் நாடகத்தில் சிறந்த காட்சிகள்.  
 9. பிரபாகரனின் தாயாருக்கு மருத்துவ சிகிச்சை என்று ஒரு நாடகம். அவரின் சார்பாக வந்த கடிதமே ஒரு நாடகம் தான்.
 10. கட்ச தீவு பிரச்சினையிலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் இன்னும் கண்டனங்களையும் கடிதங்களையும் மட்டுமே அனுப்பி நாடகம் நடத்துகிறார்.
 11. செம்மொழி மாநாட்டிற்காக புலிகள் தரப்பில் வந்த ஆதரவு கடிதமும் இவரின் நாடகங்களில் ஒன்று தான்.  
 12. உலகதமிழ் மாநாடு நடத்தும் அமைப்பு உலகத்தமிழ் மாநாடு இப்போது நடத்துவது சரியில்லை என்று சொன்னதும் அந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமலே நடத்த முயன்று பின்னர் அதையே உலகத்தமிழர் செம்மொழி மாநாடு என்று நாடகம் நடத்தினார். 
 13. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பேசுவதை தவிர்க்க மோகன்ராஜ் என்கௌன்டர். 
 14. முதுகுவலி என்கிறார்கள் இருந்தாலும் கலைநிகழ்ச்சிகள் என்றால் முதல் வரிசையில் இருக்கும் இவர் உடல்நிலை சம்பந்தமாகவும் நாடகம் தான் நடத்துகிறாரோ?

5 Response to "அடுத்த ராஜினாமா நாடகம் தயார்"

 1. அதெல்லாம் சரிதான். உங்க பதிவு பக்கம் வந்து படித்துவிட்டு கருத்து எழுதவே தயக்கமாக உள்ளது.
  உங்க வலைப்பூவின் பேரை மாத்துங்க. இப்படி பேரு வெச்சா உள்ள வராம எல்லாரும் ஓடிப்போறாங்க .

  கக்கு - மாணிக்கம்,
  நீங்க முன்னரையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். மானங்கெட்ட தமிழன் என்னை நானே தான் கூறி உள்ளேன்.:-) இதில் வரும் மானங்கெட்ட தமிழன் வேறு யாரும் என்று நினைக்க வேண்டாம்.


  எது எப்படியாகினும் நீங்கள் என்ன பயந்து போயா பின்னூட்டம் போட்டு இருக்கீங்க? :-)

  நாடகமே உலகம்!நாளை நடப்பதை யாரறிவார்?

  தலைவர், இந்த வயசிலும், இப்படி உழைப்பதைப்பார்த்தால்,
  என் 9 ஓட்டையிலும், தண்ணியா கொட்டுதுண்ணே..
  :-)

  அண்ணே.... நம்ம தலைவர்....... அயராத எழுது பணிகளுக்கு இடையில் தான்.... அவர் அரசியல் பண்ணுகிறார்.....

  பாருங்கள்..... எதற்கு எடுத்தாலும் கடிதம் எழுதுகிறார்....... ஒன்று பிரதமர் க்கு..... இல்லியல் நமிதாவை வைத்து இளைஞன் பட திற்கு கதை எழுத வேண்டும்...... அவரை குறை சொல்ல வேண்டாம்....... அவருக்கு கலை உலக பணி நிறைய இருக்கிறது போலும்....... அவர் அரசியல்கு ஒய்யு எடுத்துக்க வேண்டும்..... இல்லையல் நாம் அவருக்கு ஒய்யு குடுக்க வேண்டும்....

  பின்பு தான் தமிழர்கள் பிழைக்க முடியும்..........

Popular Posts