இந்தியா ஒளிர்கிறது

இந்தியா கடந்த பத்தாண்டுகளில் மிகபெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.

 1. இந்தியர்களிடமிருந்து முறைகேட்ட வழிகளில் சம்பாதித்த பணம் இருபது லட்சம் கோடி மிக சிறிய நாடான லீச்டெண்ச்டீன் வங்கிகளில் போடப்பட்டு உள்ளது. இந்த நாட்டில் போடப்படும் பணத்திற்கு அந்த நாட்டில் மட்டும் வரி கட்டினால் போதும். வேறு எந்த விவரமும் மற்ற நாட்டிற்கு கொடுக்கபடாது.
 2. ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டு இருந்த காவல்துறையினர் எல்லாம் இப்போது லட்சத்திற்கு மாறியுள்ளனர்.
 3. பத்து வருடங்களுக்கு முன்னர் இருவத்தைந்து பைசா ஏற்றினால் சாலையில் இறங்கி போராட்டம் நடத்திய பயணிகள் எல்லாம் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட வண்டிகளில் மட்டுமே பயணிக்கின்றனர்.
 4. இதுவரை ஐநூறு தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை விரைவில் ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது.

 5. இதுவரை எழுதி வந்த திரைக்கதை வசனங்களோடு இளைஞன் படத்திற்கும் தமிழக முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதி உள்ளார். மேலும் அதிகமாக பாராட்டுவிழா கண்ட முதல்வர் என்ற பெயரையும் பெறுகிறார்.
 6. மத்திய அரசில் மட்டுமே அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் கட்சி மாநிலத்திலும் தங்களின் கடமையை செய்ய வாய்ப்பு கேட்கும் நிலை தமிழகத்தில் வந்துள்ளது.
 7. வாங்குபவர் விற்பவர் இடையில் நடைபெறும் பேரத்திலும் பங்கு கேட்கலாம் என மத்திய அமைச்சர் அழகிரி நிருபித்துள்ளார்.
 8. இதுவரை தமிழக முதல்வர் ஈழத்தமிழர் விடயத்தில் நாற்பது முறையும் தமிழக மீனவர்கள் விடயத்தில் பத்து முறையும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
 9. சென்னை சங்கமம் என்ற பெயரில் கிராமிய கலைஞர்களின் கலைநிகழ்ச்சி சென்னையில் வருடம் ஒரு முறை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு சம்பளத்திலும் நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் கூட ஊழல்கள் செய்ய முடியும் என்று நிருபித்துள்ளனர்.
 10. இது வரை கேள்விபடாத அளவுக்கு ஊழல்கள் எல்லாம் இந்திய அளவில் நடைபெற்றன. அதில் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள், சத்யம் என்று இந்தியா மேலும் ஒளிர்கிறது.
 11. காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மட்டுமே மனித உரிமை மீறல்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் பரவி உள்ளன.
 12. இலங்கையில் புலிகள் இயக்கத்தினர் கிழக்கினை இழந்த பிறகு இதுவரை நூறு மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு உள்ளனர்.

இப்படி நான் எழுதி சென்றால் இந்த எண்ணிக்கையும் நூறினை தாண்டும் என்பதால் இதோடு இந்த எண்ணிக்கையை முடிக்கிறேன்.

10 Response to "இந்தியா ஒளிர்கிறது"

 1. good keep it up

  இன்னும் இந்த லிஸ்டில் நிறைய உள்ளது நண்பரே...........

  மக்கள் மாக்களாகிட்டாங்கன்னு சொல்லாம சொல்லிட்டீங்க

  இன்னும் இன்ட்லி சரியாகலியா...

  //ம.தி.சுதா says:
  இன்னும் இன்ட்லி சரியாகலியா...

  இன்னொருமொரு கணக்கு தொடங்கி அதில் பதிவு செய்துள்ளேன்

  //உங்களுள் ஒருவன் says:
  இன்னும் இந்த லிஸ்டில் நிறைய உள்ளது நண்பரே...........

  உங்களின் கருத்தையும் இதில் பதிவு செய்யுங்கள்

  //4.இதுவரை ஐநூறு தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை விரைவில் ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது//

  உணர்ச்சி கிலோ என்ன விலை.....?

  வெள்ளையர்களால் இந்தியச் சொத்து சூறையாடப் பட்டு இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப் படுகிறது என்று நாம் பணம், உழைப்பு , ஏன் உயிரையும் கொடுத்து சுதந்திரம் வாங்கினோம், ஐயகோ புலியிடமிருந்து தப்பித்து வேடன் கையில் ,மாட்டிய மானைப் போல நாம் அரசியல்வியாதித் திருடர்களிடம் மாட்டிக் கொண்டோமே? பணம் சுத்தமாக கொள்ளையடிக்கப் பட்டு வெளிநாட்டு வங்கிகளுக்குச் சென்று விட்டதே? வெள்ளைக்காரன் இருந்திருந்தால் கூட இந்த அளவுக்கு வழித்து நக்கி எடுத்திருக்க மாட்டானே, அவன் ஆட்சி கூட இதை விட நன்றாக இருந்திருக்கும் போல இருக்கிறது, காலத்தின் கொடுமையடா சாமி.

  3. பத்து வருடங்களுக்கு முன்னர்...குளிர்சாதனம் பொருத்தப்பட்ட வண்டி...
  குற்றத்த ஒத்துக்கிறேன்.

  Samudra says:

  அருமையான பதிவு..

Popular Posts