மீனவர் படுகொலைகளும் நடக்க போகும் அதிசயங்களும்

தமிழ் நாட்டின்  தேர்தல் பலரை முழிக்க செய்கிறது. நாடுகளையே பேச செய்யலாம் .உதாரணங்கள் கீழே உள்ளன .
  • சமீபத்தில் இலங்கை கடற்படைக் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. மேலும், ஜெயக்குமாரின் குழந்தைகளின் படிப்புச் செலவையும் அதிமுக ஏற்கும் என்று அவர் அறிவித்தார்.
  • சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வந்தாலும் கூட அவர்களை சுட மாட்டோம், தாக்க மாட்டோம் என்று இலங்கை கூறியுள்ளது.மகாபோதி சங்கத்திற்குள் புகுந்த சிலர் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் புத்த பிக்குகள் சிலர் காயமடைந்தனர். அலுவலகமும் சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தால் இலங்கை அதிர்ச்சி அடைந்துள்ளது. சிங்களர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த நாடு இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுவரை ஜெயலலிதா ஒன்றும் பேசவில்லை என்றவர்களுக்கு பதிலடியாக அவர் மீனவர் குடும்பங்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஆனால் என் கேள்வி இது தான். இந்த பிரச்சினையில் உங்களின் கருத்து நான் கேட்கவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் இதற்காக. நீங்களும் மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கிறார்கள் என்பீர்களா? இல்லை கட்சதீவை மீட்க முயல்வேன் என்பீர்களா? அவர்கள் உங்கள் பார்வையிலும் பேராசைக்காரர்களா என்ன?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு சம்பவம் நடக்கும்போதும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர்களை நோக்கி ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்படும். அல்லது புனைவு கதை ஒன்று எல்லாருக்கும் முன்னர் வெளிவரும். ஆனால் தற்போது அத்தி பூத்தாற்போல இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது தாக்குதல் நடந்தும் ஒருத்தரை நோக்கியும் காவல்துறையின் கை நீளவில்லை. ஒருவேளை பாரதிராசா, பழ. கருப்பையா ஆகியோரின் மீது தாக்குதல் நடத்திய அதே குழு தான் இந்த தாக்குதலையும் நடத்தியதோ? அரசின் செயல்கள் ஒன்றை மறைக்க மற்றொரு தவறை செய்யும் அணுகுமுறையாகவே உள்ளன. இந்த தாக்குதல் நடத்தியவர்கள் ஈழத்தமிழர் ஆதரவு பெற்ற அல்லது ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் யாரும் செய்யவில்லை. அப்புறம் யார் செய்தார்கள்? முதல்வருக்கு தான் வெளிச்சம் 

எந்த ஒரு விடயமும்(சம்பவம் அல்லது அசம்பாவிதம் ) வரும்போது ஒவ்வொரு கட்சியினரும் அதை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதில் தான் அவர்களின் சாமர்த்தியம் இருக்கிறது. ஜெயலலிதாவினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல்கள் வேண்டுமானால் கூறலாம். ஆட்சியில் இருப்பவர்களால் மட்டுமே ஒரு தாக்குதலையும் நடத்தி காவல்துறை பதில் சொல்லாதவாறு செய்து பிரச்சினைகளை ஊற அல்லது ஆற போட முடியும். ஒருவேளை இந்த பிரச்சினை தொடர்ந்து ஆளும்கட்சிக்கு தலைவலியாக இருந்தால் யாரும் நினைக்காத அதிசயங்களும் இதில் நடக்கலாம். யார் கண்டது ராஜபக்ஷேவே நேரில் கதை சொல்ல வரலாம் நண்பர்களை காப்பாற்ற. 

3 Response to "மீனவர் படுகொலைகளும் நடக்க போகும் அதிசயங்களும்"

  1. ஐயா, நம்மவர்கள் பற்றி உங்களுகு தெரியாதா.......... நாலு அரை ஆண்டுகள்.... வனவாசம் இருந்து விட்டு........ தேர்தல் என்று வந்த உடன்........ தமிழக மக்களின் நலன் பற்றி விசாரிக்கவும்......... சொந்தம் கொண்டாடவும்............. இந்த மானகெட்ட அரசியல்வாதிகளால் மட்டுமே முடியும்.........

    யார் நல்லவர்கள், யார் ஆட்ச்சிக்கு வந்தால் நல்லது, என்று யோசித்து முடிவ செய்ய மாட்டோமே........... யார் பணம் அதிகமாக குடுகிரன்கா.......... என்று பார்த்து அவர்களுக்கு வோட்டு போடும் மானக்கேட தமிழர்கள் இருப்பது வரைக்கும்.......... இந்த தமிழ் நாடு உருபட்டாது.......

    என் இன்னும் சில வருடங்கள் போனால் ராஜபக்ஹ்ச உடன் தேர்தல் கூட்டணி வைத்து கொண்டாலும் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை...........
    நாம் தான் நியாபக மறதி உள்ளவர்கள் தானே........

    நல்லதே நடக்கட்டும்...

    அதிசயங்களும் இதில் நடக்கலாம். யார் கண்டது ராஜபக்ஷேவே நேரில் கதை சொல்ல வரலாம் நண்பர்களை காப்பாற்ற.
    என் இன்னும் சில வருடங்கள் போனால் ராஜபக்ஹ்ச உடன் தேர்தல் கூட்டணி வைத்து கொண்டாலும் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை...........
    நாம் தான் நியாபக மறதி உள்ளவர்கள் தானே........

Popular Posts