எப்படியெல்லாம் சிண்டு முடியுறாங்க

சென்னையில் புத்த பிட்சுகளின் சேவை மையத்தில் நடந்த தாக்குதலை கண்டிக்க வேண்டியது ஒரு பத்திரிக்கையின் கடமையாக இருக்கலாம். ஆனால் வேறு யாரை காரணம் சொல்லலாம் என்பதில் கூட அரசியல் நடத்துகிறது தினமலர்.நேற்று காலை வரை  இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

தினமலர் இதனை போன்று செய்தி வெளியிட்ட பின்னர் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஒரு பயம் வந்துள்ளது. விடுதலை  புலிகள் நடமாட்டம்  தமிழ்நாட்டில் இருக்கிறது என்று யாரேனும் குற்றம் சாட்டி விடுவார்கள் என்று பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.என்னுடைய கேள்வி அவர்கள் தான் உண்மையில் இந்த தாக்குதல்களை நடத்தியவர்களா? இல்லை யாரையாவது இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கைது செய்துள்ளார்களா?
அப்போ இந்த சம்பவத்திற்கும் பழ.கருப்பயாவை தாக்கியவர்களுக்கும் சம்பந்தம் இல்லையா?

1 Response to "எப்படியெல்லாம் சிண்டு முடியுறாங்க"

  1. அட நாதாரிகளா எதை கொண்டு போயி எது கூட சிண்டு முடியுரதுன்குற விவஸ்தையே இல்லையா....!!!

Popular Posts