இந்திய மீனவர்கள் தற்கொலை

இலங்கை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த இந்திய மன்னிக்கவும் தமிழக மீனவர்கள் இருவர் பத்து நாட்கள் இடைவெளியில் தற்கொலை செய்து கொண்டனர். தமிழக மீனவர்களான இவர்கள் ஏன் இலங்கை அருகே சென்று தற்கொலை செய்து கொண்டனர் என்று இலங்கை அரசு விசாரித்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இதை பற்றி பேசுகையில் தமிழக மீனவர்கள் கடலில் தற்கொலை செய்து கொண்ட விவரம் கேட்டு வருத்தமுற்றதாக கூறியுள்ளார். ஒருவேளை தற்கொலை செய்வதாக இருந்தால் இலங்கையில் உள்ள முகாம்களில் பதிவு செய்துவிட்டு வரும்படியும் கேட்டுக்கொண்டு உள்ளார். இப்படி பதிவு செய்து கொண்டு வரும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு முன்னுரிமை கொடுத்து மேலே அனுப்பிவைக்கும் எனவும் தெரிவித்தார். இந்த சலுகையை பற்றி உலக தமிழின தலைவரான கருணாநிதியை கேட்டபோது தமிழக மீனவர்களின் மேல் இலங்கை அரசு காட்டும் பாசம் தன்னை மெய் சிலிர்க்க செய்வதாக கூறியுள்ளார். இலங்கையில் ஏற்கனவே முகாம்களில் இருக்கும் ஈழ தமிழர்களை விட தமிழக மீனவர்களுக்கு முன்னுரிமை என்று கூறியபோது தான் மிகவும் களிப்படைந்ததாக கூறியுள்ளார்.

2 Response to "இந்திய மீனவர்கள் தற்கொலை"

  1. //உலக தமிழின தலைவரான கருணாநிதியை கேட்டபோது தமிழக மீனவர்களின் மேல் இலங்கை அரசு காட்டும் பாசம் தன்னை மெய் சிலிர்க்க செய்வதாக கூறியுள்ளார்.///

    ENNATTHAI SOLLA.....

    இந்த முறை முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி.. பிரதமற்கு கழுதையில் கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார்......... (புறாவில் அனுபினால் குட கொஞ்கம் வேகமாய் செல்லுமாம்)

Popular Posts