அடுத்த நாடகம் தயார்

 தற்போதைக்கு முடிவிற்கு வந்துள்ளதாக நினைக்கப்படும் திமுக காங்கிரஸ் கூட்டணி, மீண்டும் இணையும் என்றே தெரிகிறது.
கூட்டணிகட்சியான காங்கிரஸ் முரண்டு பிடித்து கொண்டே அதிமுகவிடம் பேரம் பேசினாலும் அதிமுகவின் பிடி ஒன்றை வைத்தே இந்த பேச்சுவார்த்தையை காங்கிரஸ் செய்தது. அந்த பிடி என்னவென்றால் ஹசன் அலிக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள நிதித்துறை சம்பந்தப்பட்ட விவகாரம் என்றே தெரிகிறது. இதுவரை ஏமாளியாக இருந்த காங்கிரஸ் இப்போது திமுக மற்றும் அதிமுகாவை சமாளிக்கும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. திமுகவை சமாளிக்க ஸ்பெக்ட்ரம் என்றும் அதிமுகவை சமாளிக்க ஹசன் அலி என்றும் காங்கிரஸின் நிலைப்பாடு உள்ளது. இதில் யார் காங்கிரஸின் இழுப்பிற்கு ஒத்து வருகிறார்களோ அவர்களுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க இருக்கும் நிலையில் ஈழத்தமிழர்களை கொல்வதற்கு உதவிய  கருணாநிதி கூட்டணி முறிவு நாடகத்தை கொண்டு வந்தார். ஒருவேளை அந்த நாடகம் ஒரு முடிவிற்கு வந்து மீண்டும்
இந்திராவின் மருமகளே என்று கருணாநிதி சொல்லும் காலம் தொலைவில் இல்லை.
பின் குறிப்பு: யார் கொள்ளை அடிக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. கொள்ளை அடிக்கின்றவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கவும் ஒரு திறமை வேண்டும்.

3 Response to "அடுத்த நாடகம் தயார்"

  1. சோனியாவின் மருமகள் யார் எனக்கு புரியவில்லை

    தேர்தல் முடியும் வரை நாடகங்கள் நடந்து கொண்டுதானிருக்கும்

    Just now DMK frauds[azhakiri, maran]meet chief fraud sonia.

Popular Posts