பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஜெயலலிதா
ஹசன் அலி விவகாரத்தை மத்திய அரசு அதன் பிரம்மாஸ்திரமாக வைத்து காரியங்களை சாதிக்க உள்ளது. திமுக உடன் காங்கிரஸின் கூட்டணி உறுதியான உடனே ஹசன் அலி விவகாரத்தினை மத்திய அரசு சரியாக கையாளுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. ஹசன் அலியின் மொத்த சொத்தின் மதிப்பு ஒன்பது பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று உள்ளது. இவர் குதிரைகளை வாங்கி விற்கும் தொழிலில் இருந்து உடைந்த இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழிலில் கோடி கட்டியுள்ளார். இதற்காக இவர் யாரிடமிருந்து கடன் பெற்றார் என்ற விவரம் தெரியவில்லை. அதன் பின்னர் இவர் தொடங்கியுள்ள பத்து சுவிஸ் வங்கி கணக்குகளில் யாருடைய பணம் உள்ளது என்றும் தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் பணம் சத்தியமாக இவரிடம் போய் முடங்கவில்லை என்பது கலைஞர் தொலைகாட்சியிலும் மலேசியாவிலும் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து தெரிகிறது.
இவரிடம் பணம் கொடுத்தவர்களில் ரெட்டி சகோதரர்கள், அந்திராவினை சேர்ந்த ஒரு கட்சித்தலைவரின் மகன், தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆகியோர் முக்கியமானவர்கள் என்று செய்தி கசிகிறது. இந்த விவகாரம் முன்னரே தெரிந்து இருந்தாலும் மேலே சொல்லப்பட்ட நபர்களை நோக்கி மட்டும் இப்போதைக்கு மத்திய புலனாய்வு துறையின் கைகள் நீளுகிறது. ஒரு வேளை தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கைது செய்யப்படும் நிலையும் வரலாம்.
தேர்தல்கள் வரும்போது மட்டும் நீதிமன்றங்களும் மத்திய புலனாய்வு துறையும் சிறப்பாக இயங்க காரணம் என்ன?

என்னமோ நடக்குது?
தமிழ் மணத்துல இனச்சிட்டேன்....
என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்...
//தமிழ் மணத்துல இனச்சிட்டேன்....
நன்றி நண்பா