என்ன பாவம் செய்தார்கள் ஜப்பானியர்?

வெள்ளிகிழமை காலை மணி பதினொன்றுக்கு ஆரம்பித்த இயற்கையின் ருத்ர தாண்டவம் இன்னும் முடியவில்லை ஜப்பானில். அப்படி என்ன பாவங்கள் செய்தார்கள் நம்மை விட? சிறந்த தொழிலதிபர்கள், சிறந்த மக்கள், சிறந்த அரசியல்வாதிகள் இருந்தும் இந்த இயற்கை பேரழிவு மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே தடைகல். நட்பில் மட்டும் அல்ல அரசியல் நாகரிகத்திலும் கூட ஜப்பானியர்களின் கால் தூசிக்கு கூட நமது அரசியல்வாதிகள் ஈடாக மாட்டார்கள்.

நேற்று இரவு முதல் நமது தொலைகாட்சிகளில் நமது அணு உலைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும் அவற்றை ஒன்றும் செய்ய முடியாது என்றும் தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கின்றனர். இதில் நம்மை பார்த்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும் என்று வேறு சொல்லி வருகின்றனர். ஒருவேளை நமது உலைகள் பாதுகாப்பானவையாகவே இருக்கட்டுமே அதை ஏன் இந்த நேரத்தில் சொல்ல வேண்டும். மக்கள் ஒன்றும் இங்கே உலைகளின் பாதுக்காப்பினை பற்றி பேசவில்லையே. கல்பாக்கத்தில் ஒரு முறை உலைகள் பற்றிய பீதி ஏற்பட்டபோது இப்படியா சொல்லிக்கொண்டு இருந்தனர். அரசின் கடை நிலை ஊழியர்கள் மட்டுமே அந்த நேரத்தில் அங்கே இருந்து விளக்கி கொண்டு இருந்தனர். இப்போது என்ன வென்றால் தொலைகாட்சியில் சொல்லி கொண்டே இருக்கின்றனர். நாம் ஜப்பானுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறோம் என்று வேறு அவர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக நினைத்து இங்கே கதை சொல்லி கொண்டு திரிகின்றனர்.




சுனாமியும் அனுகதிர்வீச்சும் ஏற்படுத்திய பிரச்சினைகளில் இருந்து ஜப்பான் மீள மற்ற நாடுகள் போர்க்கப்பல்களில் நிவாரணங்களை அனுப்பும்போது நம் பிரதமர் நிவாரணம் அனுப்பட்டுமா என்று கேட்டதாக செய்திகள் வந்தன. என்ன கொடுமை சார் இது.

1 Response to "என்ன பாவம் செய்தார்கள் ஜப்பானியர்?"

  1. unmai..

Popular Posts