திமுகவின் வெற்றி உறுதி

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் எல்லா இடங்களிலும் சோதனை  நடத்தி கருப்பு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை   தடுத்து வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் பொதுமக்கள் இதில் பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.இதுவரை சிக்கிய கணக்கில் வராத பணத்தின் மதிப்பு இருபது கோடிகள் என்றால் இன்னும் இருபது நாட்களில் எவ்வளவு கோடிகள் கைப்பற்றப்படும். இது வரை சிக்கிய பணம் எல்லாம் சாதாரணம். அண்ணன் அஞ்சா நெஞ்சனின் கோட்டையில் பதுக்கப்பட்டு இருக்கும் பணத்தின் மதிப்பில் இதெல்லாம் தூசு.

தேர்தலில் பணம் பட்டுவாடவை தடுக்க தேர்தல் ஆணையம் எடுக்கும் இந்த முயற்ச்சியை பற்றி வேறு யாருமே இதுவரை கண்டனக்குரல் எழுப்பவில்லை. ஆனால் கலைஞர் மட்டும் இதனை எழுப்பி அதனை தடுத்தும் விட்டார். இனிமேல் பயணிகள் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் கோடிகளை துணிமணி பைகளில் கொண்டு செல்லலாம்.
 
பட்டுவாடாவிற்கு ஏற்பாடு செய்துவிட்டது. அடுத்து இருப்பது வாக்காளர்களை கவர்வது அல்லது பயமுறுத்துவது. வாக்காளர்களை கவர இலவசங்களை அள்ளி கொடுத்து விட்டன இரு பிரதான கட்சிகளும். ( சும்மா இருக்கும் பெண்களுக்கு குழந்தைகள் தான் இன்னும் இந்த கட்சிகள் கொடுப்பதாக சொல்லவில்லை.) இந்த இலவசங்கள் ஆட்சிக்கு வந்தால் தரப்படும். வருவதற்கு முன்னால் என்ன தருவீர்கள் என்று கேட்கும் வாக்காளர் பெருமக்களுக்கு, வெள்ளி கொலுசு, ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை தரப்படுகிறது. இந்த பட்டியல் கொஞ்சம் நீளம் என்பதால் இவற்றை மட்டுமே போட்டு உள்ளேன். கவரும் விஷயங்கள் செய்து விட்ட பின்னர் மிச்சம் இருப்பது பயமுறுத்துவது. அதனையும் சிறப்பாக செய்யத்தான் நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே. கழக உடன்பிறப்புகள் அந்த அந்த தொகுதிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களை குப்பிட்டு பேசி உள்ளனர். வாக்காளர்களிடம் வெப் கேமரா இருப்பதால் எளிதாக நீங்கள் யாருக்கு போடுகிறீர்கள் என்று பார்த்து விடுவோம் இது தான் அவர்களின் முதல் தாக்குதல். நாங்கள் ஜெயித்து வந்த பின்னர் உங்களுக்கு மாநகராட்சியில் இருந்து எதுவும் வரவிடாமல் செய்வோம். (திமுக தான் இப்போது மதுரையில் உள்ளது.) இப்படி பல நல்ல காரணங்களை கூறி ஒட்டு கேட்கின்றனர்.

இது தவிர சன் தொலைகாட்சியில் வரும் புது செய்திகளையும் கவனியுங்கள். வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள செலவுகள் இடத்தை பொறுத்து வேறுபடுகிறதாம். எப்படிஎன்றால் கிருஷ்ணகிரியில் வேட்பாளர் சாப்பிடும் வடையின் விலை ஏழு ரூபாய் என்றால் சென்னையில் பத்து ரூபாய்யாம். வெஜ் பிரியாணிக்கு தொண்ணூறு என்றும் நான்-வெஜ் பிரியாணிக்கு நூற்றிபத்து ரூபாயும் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளதை கிண்டல் செய்துள்ள சன் தொலைக்காட்சி, இன்னொரு வகையில் ஒரு நன்மை செய்துள்ளது. அது என்னவென்றால் வேட்பாளர் பிரியாணிக்கு தொண்ணூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய எதிர்பார்க்கிறார் என்றால் இவர் தொகுதி பயன்பாட்டு நிதியில் எவ்வளவு பணத்தை தனக்கு பிரியாணி வாங்க செலவு செய்வார் என்பதை காட்டியுள்ளது. மேலும் பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தினால் கஷ்டபடுகின்றனர் என்று செய்திகள் வெளியிட்டதே தவிர மக்கள் பணத்துடன் வெளியே செல்லும்போது அந்த பணம் எங்கே இருந்து கொண்டு செல்லப்படுகிறது என்பதை விவரிக்க ஆதாரங்களை எடுத்து செல்ல பணிக்கவில்லை.( வங்கியில் இருந்து எடுத்திருந்தால் இதெல்லாம் தேவையே இல்லையே.).
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் இதில் பாதிக்கபடுகின்றனர் என்பது அடுத்த புகாராம். கணக்கில் வராத பணம் எதில் முதலிடு செய்தாலும் அது கருப்பு பணம் தானே. இதில் என்ன ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை.(ஒரு வேளை அந்தந்த மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தான் தேர்தலில் பணத்தை செலவு செய்ய போகிறார்களா?)

தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் எதற்கு  என்று கூட கேட்கும் காலம் வரும் என்றே தான் நினைக்கிறேன்.கடந்த மாநகராட்சி தேர்தலில் வாக்குபெட்டிகள் ரோட்டில் கிடந்தபோது இந்த நீதிமன்றங்கள் என்ன செய்தன என்று தெரியவில்லை. வழக்கம் போல நடப்பதை தடுக்கும் நீதிமன்றங்களும் நடந்த பின்னர் அதனை மறுக்கும் அரசியல்வாதிகளும் அவர்களின் சொற்பேச்சு நடக்கும் அதிகாரிகளும் இருக்கும் வரையில் திமுக ஜெயிக்க தான் செய்யும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு இலவசமும் எங்களின் வரிப்பணம் என்பதை உணருங்கள்.

3 Response to "திமுகவின் வெற்றி உறுதி"

  1. தேர்தல் கமிஷன் கொஞ்சம் ஓவரா தான் போகுது.. சுவர் விளம்பரம் கூட செய்யா கூடதுணா என்னைய தேர்தல் அது.. அளவுக்கு மிறீனால் அமிர்தம் நஞ்சு .. கமிஷனுக்கு கடிவாளம் போடத்தான் வேணும்

    Anonymous says:

    திரு ராஜேஷ் ... தேர்தல் கமிஷன்னு ஒண்ணு இல்லன்னு வச்சிகங்க உங்க அய்யா அம்மா.. எல்லாரும்.. அவங்க குடும்பத்த வச்சி ஒட்ட போட்டுட்டு... தமிழ்நாட்டு ஜனங்கள கேனையனா... ஆக்கிடமாட்டங்க....

    ராஜேஷ், திருச்சி,

    மக்கள் யாரும் இது சம்பந்தமாக இதுவரை எதுவும் வழக்கு தொடுக்கவில்லை. வழக்கு தொடுத்தவரும் திமுகவிற்கு வேண்டியவரே

Popular Posts