தலைக்கு மேல் தொங்கும் கத்திகள்

நாம் எதிர்பார்த்தது போலவே கலைஞரின் ராஜினாமா மற்றும் கூட்டணி முறிவு நாடகங்கள் முடிவுற்று இன்று ஏழு வருட கூட்டணி மீண்டும் இணைகிறது. பலர் எதிர்பார்த்தது போல் இந்த தேர்தலில் காங்கிரஸ் கலைஞரையோ அல்லது கலைஞர் காங்கிரசையோ கை கழுவுவார்கள் என்று தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் காங்கிரஸ் ஏற்கனவே கிடைத்த உளவுத்துறையின் கணிப்பின் பேரிலே காய்களை நகர்த்துகிறது. காங்கிரஸ் தனித்து நின்றால் தற்போது பாமக கட்சி எந்த அளவில் இருக்கிறதோ அதே அளவில் தான் இருக்கும் என்று காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். அதன் கைகளில் சிக்கிய மானாக இருந்தாலும் திமுக ஒன்றும் சாதாரண கட்சி இல்லை. ஸ்பெக்ட்ரம் பணத்தில் குளித்தவர்கள் எல்லாம் திமுகவில் தான் அதிகம் இருக்கிறார்கள். இப்போது மத்திய அரசின் கையில் தான் அனைத்து மத்திய அரசின் துறைகளும் இருக்கிறது(நீதி, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு துறை  போன்றவை தனிப்பட்ட மற்றும் தன்னிச்சையாக இயங்ககூடிய நிறுவனங்கள் என்றாலும் உண்மையில் இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன)

அத்தனை துறைகளையுமே இந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களில் துஸ்பிரயோகம் செய்ய இருக்கிறது.தமிழ்நாட்டில் நடக்கும் இந்த தேர்தலில் என்ன தான் பணம் பட்டுவாடா செய்தாலும் மக்கள் திமுக கூட்டணிக்கு எதிராக தான் இருக்கிறார்கள். அந்த எதிர்ப்பு இன்னும் ஒரு மாதத்தில் ஆதரவு என்று மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை பெட்ரோல் விலையை ஒரே மாதத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் உள்ள விலைக்கு குறைத்தாலோ அல்லது கச்சதீவு ஒப்பந்தத்தை முறித்து காட்டினாலோ அல்லது விலைவாசியை ஒரே மாதத்தில் குறைத்து காட்டினாலோ அல்லது மின்வெட்டு இல்லாமல் ஒரு மாதத்தில் தமிழகம் இருந்தாலோ தான் இது நடக்கும். ஆனாலும் திமுக கூட்டணி ஜெயிக்க வேண்டுமே. அதற்கு தான் தேர்தல் முடிந்தவுடன் ஒரு மாத இடைவெளி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மின்னணு இயந்திரங்களில் ஓட்டுக்கள் மாற்றப்பட்டு திமுகவின் கூட்டணி ஜெயிக்கவைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.


ஒரே நாள் இரவிலே சென்ற பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் செய்ய தமிழகம் முழுவதும் மின்வேட்டினை ஏற்படுத்தி வெற்றி கண்டனர். அதே முறை இந்த தேர்தலிலும் வெற்றி பெற வழிவகுக்கலாம். அந்த வாய்ப்பு இல்லை என்றால் திமுக காங்கிரசிடம் இந்த அளவுக்கு ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டாம். எப்படி என்றாலும் திமுகவினருக்கு கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் வேண்டும். காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் கூட்டணி வேண்டும். கூட்டணி மட்டும் எதுவும் இல்லையென்றால் காங்கிரஸ் இருக்கும் இடம் காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமே தெரியும் ஒரு கட்சியாக மாறி விடும்.
 
உதாரணத்திற்கு காங்கிரஸ் கட்சியில் செத்து சுடுகாடு சென்ற பலர் இன்னமும் தொண்டர்களாக இருக்கின்றனர். இதை காங்கிரஸில் இருக்கும் சிதம்பரம் ஒரு முறை கண்டே பிடித்து விட்டார். அப்படி இருக்கும் கட்சிக்கு என்ன பலம் இருக்க முடியும்? ஒட்டுண்ணியின் பலமே அது எங்கு ஒட்டி கொண்டு இருக்கின்றது என்பதில் தானே.
இப்படி ஒரு கூட்டணி தான் நம்மை அடுத்த ஐந்து வருடங்கள் ஆள போகின்றது என்றால் நம் நிலை எப்படி இருக்கும். இப்போது இருக்கும் விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் பொருளாதார முன்னேற்றம் தான் என்று கருத்து சொல்கின்ற ஆட்களும் இருக்கிறார்கள். இவர்கள் தான் உலகிலே மிக்க படித்தவர்கள்.(எட்டாவது பாஸ்). பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு விலைவாசியை கட்டுபாட்டில் வைக்கும் காரணிகளை கட்டுபடுத்த தவறியவர்கள் மத்திய அரசு மட்டுமே. உண்மையில் பெட்ரோல் விலை ஏற்றத்தை அரசினால் கட்டுபடுத்த முடியும். அதன் மூலம் விலைவாசியையும் கட்டுபடுத்த முடியும். எப்படி என்றால் மத்திய அரசு தன் கையிருப்பில் சில ஆயிரம் கோடிகளை வைத்து உள்ளது. இது எதற்காக என்றால் எப்போது எல்லாம் கச்சா எண்ணையின் விலை ஏறுகிறதோ அப்போது எல்லாம் மத்திய அரசு அதில் இருந்து எடுத்து சமாளிக்கும். பின்னர் பீப்பாயின் விலை குறையும்போது அதன் கையிருப்பில் பணம் சேரும்.( பீப்பாயின் விலை ஏறும்போது பெட்ரோல் விலை ஏற்றி பின்னர் குறையும்போது பெட்ரோல் விலையை குறைக்க வேண்டுமே. ஆனால் அப்படி நாம் செய்வதில்லை) இப்படி பலவழிகளில் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அப்படி விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று இருக்கும்போது மத்திய அரசு ஏன் அப்படி செய்வது இல்லை என்பது தெரியுமா? அதற்கும் நாம் தான் காரணம். ஒவ்வொரு மாநிலமும் தங்களின் தேவைக்கு என்று சில ஆயிரம் கோடிகளை மானியமாகவும் கடனாகவும் மத்திய அரசிடம் இருந்து பெறுகின்றன. இந்த தொகை எப்படியும் லட்சம் கோடியில் இப்போது இருக்கும். அந்த தொகையினை ஒழுங்காக செலவு செய்தால் அதன் பின்னர் அதே தேவைக்கு இதே போல் மானியமாகவும் கடனாகவும் கேட்க தேவையில்லை.( பேரிடர் நிவாரண நிதி இதில் வரவில்லை). அந்தந்த தொகுதிகளில் இருக்கும் வேலைகளுக்கு என்று ஆரம்பித்து ஒவ்வொரு முறையும் லஞ்சம் வழங்கப்பட்டு செய்யும் வேலைகளின் செலவு தொகையை விட பல இடங்களில் லஞ்சம் அதிகம் என்றாகின்றது. (உதாரணத்திற்கு லஞ்சம் அதிகமாகி விட்டது இப்போது என்று பாலம் கட்டாமல் இருக்க முடியாது என்பதால் அதில் கலக்கும் பொருட்களின் தரமும் குறைகிறது. தரம் சரி இல்லையென்பதால் இதே பாலம் அடுத்த மழையில் பல்லை இளிக்கிறது).

இதே சங்கிலி தொடர் பின்னரும் நடக்கிறது. அது சரி இந்த சங்கிலி தொடர் எப்போதும் இருப்பது போல் தானே இப்போதும் இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள். அது தான் இல்லை. எப்போதுமே லஞ்சம் எல்லா மட்டங்களிலும் ஒரே அளவில் பரவும்போது விலைவாசியை பற்றி கவலை படத்தேவையே இல்லை. ஆனால் இப்போது அதி மிஞ்சிய அளவில் இருக்கும் லஞ்சப்பணம் கருப்பு பணமாக மாறுகிறது.அந்த பணம் வெளிநாடுகளில் தேங்கி விட்டால் இங்கே அந்த லஞ்சம் கொடுத்த நிறுவனங்கள் அந்த லஞ்ச பணத்தையும் தங்களின் முதலீடுகளில் ஒன்றாக தான் கருதுவார்கள். அந்த முதலீட்டை எப்படி திரும்ப பெறுவது என்று யோசிக்கும்போது நம்மை போன்ற சாமானியர்களுக்கே தெரியும் பொருட்களின் விலையேற்றம் மூலம் லாபத்தை அதிகரிக்கலாம் என்று அவர்கள் எல்லாம் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு தெரியாதா என்ன?
விலையை ஏற்ற வேண்டும் அதே நேரத்தில் அது தெரியவும் கூடாது அல்லது மத்திய அரசின் மூலம் தங்களுக்கு தேவையான துறையில் ஒதுக்கீடு பெற வேண்டும். இதில் முதலில் சொன்னது உடனடியாக லாபம் பார்க்கும் விடயம். மற்றதில் உங்களின் கருப்பு பணம் அனைத்தையும் முதலீடு என்ற பெயரில் நுழைக்கும் வசதியும் இருக்கிறது. உங்கள் ஊரில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ஒரு லட்ச ரூபாய் என்று வைத்து கொள்ளுங்கள். உங்கள் ஊரினை சுற்றி 400 ஏக்கர் நிலம் இருக்கின்றது என்று வைத்து கொள்வோம். இந்த நிலம் பலரிடம் பரவி இருக்கிறது. அதாவது சிறு சிறு விவசாயிகள் பலரின் நிலமாக அது இருக்கிறது. நீங்கள் இப்போது அமைச்சருக்கு வேண்டிய ஒருத்தர், அந்த அமைச்சர் 40 கோடி ரூபாய் உங்களிடம் கொடுக்கிறார் என்று வைத்து கொள்வோம். எப்போதுமே நமக்கு சொந்த ஊரின் மேல் ஒரு கண் இருக்கும். வழக்கமாக எல்லாரும் செய்வது போல் நீங்களும் சாலையின் இருமங்கிலும் உள்ள நிலத்தினை ஏக்கர் ஒரு லட்சத்தி ஐந்பதாயிரம் என்று வாங்குகிறீர்கள்.( இப்போதெல்லாம் ஏக்கர் ஒரு லட்சம் என்றால் ஆளும்கட்சியினர் எழுபத்தி ஐந்து லட்சத்திற்கு தான் வாங்குகின்றனர்). விருப்பபட்டு கொடுப்பவர்கள் பலர் எனும்போது அவர்களின் நிலங்களின் இடையில் சிக்கி கொள்ளும் நிலத்தின் உரிமையாளர் கண்டிப்பாக நிலத்தை விற்றே ஆக வேண்டிய நிலைக்கு ஆகின்றார். காலங்காலமாக விவசாயம் செய்தவர்களை திடீர் என்று வேறு தொழில் பார்க்க வைத்தால் என்ன நடக்கும். நிலத்தை விற்று கிடைத்த பணத்தை கண்டிப்பாக புதிதாக தொடங்கும் தொழிலில் தான் முதலீடு செய்வர். ஒரே ஊரில் பலர் நிலத்தை விற்று ஒருவர் ஏற்கனவே இருக்கும் தொழிலில் போட்டியாக தொழில் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றார்.அந்த தொழிலில் பற்றாக்குறை அதிகம் இருந்தால் அவரால் தொடர்ந்து அதே தொழிலில் நடத்த முடியும். ஆனால் அப்படி ஒரு தொழிலிலும் பலர் இருந்தால் பற்றாக்குறை குறைந்து பொருளின் விலையும் குறைந்து தொழில் செய்பவர் நட்டம் அடைகிறார்.( இது MRF நிறுவனம் அரியலூர் அருகே விவசாயிகளிடம் நிலத்தை வாங்கியதால் வந்த நிலைமை. விருப்பபட்டு கொடுத்தவர்கள் சிலர் மட்டுமே.)உண்மையை சொல்லப்போனால் விலைவாசியை பாதிக்கும் காரணிகள் என்று சொல்லப்படும் அனைத்திற்கும் இப்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு என்று செய்திருக்கும் அனைத்தும் தான் இப்போது நம்மை பாதிக்கின்றது.( சிமெண்ட் தொழிலில் ஆதிக்கம் செலுத்துவது தற்போது உள்ள திமுக கட்சியினரே.சிமெண்ட் விலை அதன் மூலபோருட்களின் விலை அதே நிலையில் இருக்கும்போதும் ஏறுகின்றது அல்லது எற்றபடுகின்றது.)

இப்படி விலைவாசியை ஏற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணியினர் ஸ்பெக்ட்ரம் பணத்தில் சில புதிய முதலீடுகள் வந்திருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர்.( தொழில்கள் புதிதாக தொடங்குகின்றனர் என்று பார்த்தால் அடுத்தவரிடம் இருந்து அந்த தொழிலை பிடுங்கி கொள்கின்றனர்.)
சென்ற தேர்தலில் எப்படி சிதம்பரம் ஜெயித்து வந்தாரோ அதே போல் இந்த முறையும் பலர் ஜெயித்து வர முடியும். (அதே பணம் தானே இப்போதும் வேலை செய்ய போகிறது.அப்புறம் என்ன?) இந்த ஸ்பெக்ட்ரம் பணம் வெளிநாட்டில் அதிக அளவில் இருக்கின்றது என்கிறார்கள். இதுவரை இந்தியாவிற்குள் வந்த ஸ்பெக்ட்ரம் பணமே இவ்வளவு விலைவாசியை ஏற்றுகிறது என்றால் முழுபணமும் உள்ளே நுழைந்தால் அப்போது என்ன நிலையில் நாம் இருக்க போகிறோம் என்று தெரியவில்லை.காஷ்மீரில் தீவிரவாதம் தொண்ணூறுகளுக்கு பின்னர் தான் நுழைந்தது. ஏன் நுழைந்தது? அதற்கு முன்னர் பிரிவினைவாதம் பற்றி அவர்கள் ஏன் பேசவில்லை? நமது தேர்தலின் லட்சணம் அப்படி. தேர்தலில் 1987 இல் நடந்த சம்பவங்கள் தான் இன்றைய காஷ்மீரின் நிலைக்கு காரணம். தேர்தலில் தில்லுமுல்லுக்கள் ஒரு அளவிற்கு மேல் செல்லும்போது மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேர்தல்களில் நம்பிக்கை இருப்பது இல்லை. விளைவு ஆயுதங்கள் ஏந்தும் கலாச்சாரம். அதே நிலைக்கு தமிழகம் செல்லாமல் இருப்பதற்காக இம்முறை தேர்தல் முறைகேடுகள் பெரிய அளவில் இருக்க வேண்டும். அப்படி ஒரு வேளை முறைகேடுகள் தேர்தலில் நடந்தால் விலைவாசியை மட்டும் இந்த அரசு நம் மீது திணிக்காது. அது தீவிரவாதத்தையும் நம் மீது விதைத்து விருட்சமாக வளர்த்து விடும்

1 Response to "தலைக்கு மேல் தொங்கும் கத்திகள்"

  1. Very very very true friend. . . By www.kingraja.co.nr

Popular Posts