தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களும் அதை மதிக்க தவறும் அரசு இயந்திரங்களும்

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல.இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல.
நானும் விவரம் தெரிந்த நாளில் (அதாவது இன்டர்நெட் வசதிகள் வந்த பின்னர்) இருந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். கருத்துரிமை என்பது நமது தமிழ்நாட்டில் ஏட்டளவில் மட்டுமே தான் இருக்கின்றது. அதுவும் யாராவது வழக்கு தொடுத்தால் மட்டுமே அதனை ஏட்டில் வைத்து உள்ளார்கள் என்பது புலனாகிறது. பின்னர் மீண்டும் இதனை போன்ற ஒரு சம்பவத்தில் பழையபடி யாரோ ஒரு காவல்துறை அதிகாரி கருத்துரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை தடுக்கலாம், கைது செய்யலாம் ஏன் பொடாவில் கூட போடலாம்.ஒருவரை இப்படி கைது செய்து சிறையில் அடைத்து பின்னர் அவர் நிரபராதி என்று தீர்ப்பானால் அவரை கைது செய்த காவல்துறை அதிகாரிக்கு என்ன தண்டனை தர வேண்டும்/தரலாம். ஒரு வேளை அரசின் அழுத்தத்தின் பேரில் தான் அவர் செய்தார் என்று தீர்ப்பானால் அதற்கு சம்பந்தபட்டவரை என்ன செய்யலாம்/ செய்வார்கள்?

0 Response to "தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களும் அதை மதிக்க தவறும் அரசு இயந்திரங்களும்"

Popular Posts