புலி பயம் காட்டி ஊழலில் இருந்து தப்பித்து கொள்ள கருணாநிதி முயற்சி

ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை எப்படியெல்லாம் திசை திருப்பலாம் என்பதற்கு நேற்று தான் ஒரு பதிவு போட்டேன். அந்த பூச்சாண்டி எல்லாம் ஒத்து வராததால் சோனியா குடும்பம் எதற்கு பயப்படும் என்று பார்த்து கொண்டிருந்த கலைஞர் இப்போது புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று கிலி வேறு கிளப்பியுள்ளார்.

லத்திகா சரண் ஒரு தேர்ந்த போலிஸ் அதிகாரி என்ற தரத்தினை எப்போதோ இழந்து விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழீழ ஆதரவாளர்களை நோக்கி இவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்ச்சைகளில் கொண்டு போய் தான் முடிந்துள்ளன.

ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து அந்த வழியாக செல்லும் ரயில்களை தகர்க்க முயற்சி செய்ததாக காவல்துறை அந்த ஒரு வாரத்திலே பல கதைகள் சொன்னது. அதை சொன்னதும் நமது லத்திகா சரண் தான்.
அதே போல் சென்னையிலும் தண்டவாளத்தில் கற்களை வைத்து சமூக விரோதிகள் முயற்சி செய்தனர் என்றனர். ஒரே நேரத்தில் ஒரு மனிதர் இரு இடங்களில் இருந்து இரு வேறு செயல்களை செய்ய முடியாது என்பதால் அதற்கு காரணம் என்று இவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் நமது உளவுத்துறை எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு தமீழத்தில் இருந்து இங்கே தங்கிருக்கும் பெண்களிடம் தங்களது காம லீலைகளை அரங்கேற்றி உள்ளனர் தமிழக உளவுத்துறையினர்.

இவர்கள் எப்போதுமே புது கதைகளை சோடிக்கவும் ஒரு பிரச்சினையை திசை திருப்ப மற்றொரு பிரச்சினையை செய்வதற்குமே பயன்பட்டு இருக்கின்றனர்.


இவரே தான் சொல்வதாக ஒரு செய்தியும், மத்திய உளவுத்துறையும் ராவும் சொல்வதாகவும் ஒரு செய்தியும் பரப்பபட்டது.   எது எப்படி இருந்தாலும் ஊழல்களில் இருந்து தப்பிக்க இப்படியெல்லாமா சொல்லுவது.

அப்படி ஒருவேளை உளவுத்துறை என்று ஒன்று இருந்தால் இங்கே நடக்கும் அசம்பாவிதங்களை முன்னரே தடுத்திருக்க முடியாதா என்ன?

1 Response to "புலி பயம் காட்டி ஊழலில் இருந்து தப்பித்து கொள்ள கருணாநிதி முயற்சி"

  1. " புலி பசித்தாலும் புல்லை திண்காது.அது போல புலி எப்போதும் கிழட்டு நரிகளை கொல்லாது"

Popular Posts