இன துரோகிகளாக ஆவது எப்படி?

 ஆரம்பத்தில் நல்லவர்களாக தங்களை மக்கள் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் பலர் இப்போது நல்லவர்களாக இல்லை. அவர்களில் சிலர் மிரட்டப்பட்டு (இறையாண்மை சட்டத்திற்காக) ஆளும் அரசுடன் இணைக்கப்பட்டனர். பலர் பணம் கொழிக்கும் தொழில் தான் இது என்று கண்டுபிடித்து அதிலே முழுவீச்சாக இறங்கியுள்ளனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது வெகு சுலபம்.
கீ.வீரமணியுடன் சேர்ந்து இயங்கும் கூட்டம் இதற்கு நல்ல உதாரணம். பெரியார் தொடங்கிய கட்சியை தனது குடும்ப சொத்தாக கொண்டு வளர்ந்து பெரியாரின் கொள்கைகளை குழிதோண்டி புதைக்கும் இந்த நல்ல மனிதர் இதுவரை தானாக எதையும் செய்தது இல்லை. இவருக்கு எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த அடிமையின் பல்லக்கு எப்போதும் தயாராகவே இருக்கும். தற்போது இந்த பல்லக்கு கருணாநிதியின் சேவைக்காக சென்றுள்ளது.
பல்லக்கு என்றால் தூக்க நான்கு பேர்களுக்கு மேல் வேண்டுமே. அதற்காக முதலில் சேர்ந்தவர் தான் சுப.வீரபாண்டியன். இவரின் பேச்சில் மயங்காதவர் எவரும் இல்லை என்று இருந்தது. இப்போது இவர் பேச்சை கேட்டால் எரிச்சல் தான் வருகிறது. எல்லாருக்கும் சிறை பல மாற்றங்களை தந்திருக்கலாம். இவருக்கு எப்படி காலில் விழுந்து கிடப்பது என்று சொல்லி தந்திருக்கிறது. சுயமரியாதை பற்றி சொல்லிதர வேண்டிய பேராசிரியர் மரியாதை கேட்டு அலைகிறார். 
பல்லக்கினை தூக்கி செல்ல இருக்கும் இன்னொரு கலியுக சிற்பி ஜகத்ரட்சகனை பற்றி என்னவென்று சொல்வது. இவருக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டு விழாவே வைக்கும் அளவுக்கு கவிதைகளில் தேறி வருகிறார். எப்படியெல்லாம் யோசிக்குரானுங்க? அந்த நான்கு பல்லக்கு தூக்கிகளில் நான்காவது இடமே ரொம்ப முக்கியமான இடம். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அந்த இடத்தை பிடித்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் அனைவரும் பணத்தின் அருமை தெரிந்தவராகவே இருக்கவேண்டும். இல்லையென்றால் பல சூழ்நிலைகளில் கோபமோ இல்லை; இன உணர்வோ வந்து விடும். அந்த சமயங்களில் மது, மாது என இறங்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.  இப்படி பல நல்லவர்களை தான் அப்போதைய இலங்கை துணை கமிஷனர் அம்சா வளைத்து போட்டார்.
பணம் தான் என்றால் பணத்தால் அடிப்பார். பணம் அவர்களுக்கு தேவையில்லை தொழில் தொடங்க அம்சாவே ஏற்பாடு செய்துள்ளார். என்ன ஒரு கரிசனம். பல நட்சத்திர தாங்கும் விடுதிகளில் விபச்சாரம் செய்து பிடிபட்ட நடிகை மூலம் மாது வேண்டும் என கேட்கும் அந்த இன உணர்வாளர்களை சரி செய்து விடுவார் அம்சா. அதையும் மீறி எழுதுபவர்களை கவனிக்க காவல்துறை இருக்கிறது. போதாதென்றால் அண்ணன் திருமா இருக்கிறார். இல்லை என்றால் எல்லாரையும் குழப்பி விடும் ஜகத் இருக்கிறார். இப்படி அனைத்து வளங்கள் தளங்களையும் கையாண்டு மானம் ரோசம் இல்லாதவர்கள் அனைவரையும் தனக்காக பேசவைத்துள்ளார் அம்சா. 
அதே வாயால் முதல் நாள் புகழ்ந்து விட்டு மறுநாள் நான் அடிப்பது போல் அடிக்குறேன் நீ அழுவது போல் அழு என்று இவர்கள் நடித்த நாடகங்கள் நூறு நாட்களை தாண்டும். யாராலும் மறுத்து அறிக்கை விடமுடியாதபடி இவர்களே புலிகளின் சார்பில் அறிக்கைகளை விட்டார்கள்.( பார்வதி அம்மாள் மற்றும் புலிகளை நேரில் சந்தித்தது போல் வந்த கட்டுரைகள்). இந்தியாவில் தான் இவர்கள் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றால் இலங்கையில் சென்று உங்களை என் தாயார் போல் கவனித்து கொள்வேன் என்று அங்கேயும் வாக்குறுதி கொடுத்து நாங்கள் எல்லாரும் இன்னும் திருந்தவில்லை என்பதை பறை சாற்றினார் திருமா.
புலிகளின் மீதான தடை நீங்க விசாரணை கமிசன் முன் தானாக பேச வாராத திருமா வீதியெங்கும் சுவரொட்டிகளில்  பிரபாகரனோடு  கைகோர்த்து நிற்கிறார்.  இந்த கை தானே ராஜபக்ஷேவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. மக்கள் இன்னும் சுவரொட்டிகளை நம்பி தான் செய்திகளின் உண்மை நிலைமையை பரிசோதிப்பது இல்லை. அதுவே தமிழ்மக்களின் சாபகேடும். இந்த கூட்டணியில் மது மாது என்று போய் ஐட்ஸ் வாங்கி வந்த ஞான சேகரன் காங்கிரஸ் கட்சிக்காரரும் இருக்கிறார். அதையே முதலாக கொண்டு முன்னேறி வந்த ராம்நாடு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹுசைன் அலி இருக்கிறார்.ஹுசைன் அலி  தான் முதலில் இந்த தொழிலை ( இனதுரோகியாக மாறும் தொழில்) தொடங்கி வைத்து ராஜபக்ஷேவின் ஆதரவோடு மற்றவர்களையும் குப்பிட்டு சென்று அறிமுகம் செய்கிறார்.
இதில் வைகோவை இவர்கள் சேர்த்து கொள்ள மாட்டார்கள். அவர் பணத்தையும் வாங்கி கொண்டு பின்னர் இவர்கள் தான் பணம் கொடுத்து பேச சொன்னவர்கள் என்று சொல்வார் என்பதால் தான் அப்படி.  

2 Response to "இன துரோகிகளாக ஆவது எப்படி?"

  1. உண்மைல்யிலேயே.....அண்ணன் திருமா அவர்களின் மீது எனக்கு தனி பாசம் உண்டு. ஆனால் நீங்கள் சொல்வது போல் சில சட்டமன்ற உறுப்பினர்களுக்காக, விடுதலை புலிகளை தடை செய்யும் கோர்ட் விவகாரங்களில் தலையிடவில்லை. ஆனால் அவ்வளவு எளிதில் சோரம் போகும் ஆள் இல்லை. யாரை தான் நம்புவது.......

    Dhanaperiyar,

    ஆரம்பத்தில் எனக்கும் இருந்த அந்த நம்பிக்கை ஒரு சிலவிடயங்களில் தகர்ந்தது. நம்முடைய பல கேள்விகள் அவரின் நேர்மையை சோதிக்கின்றது. அந்த சோதனைகளை நேர்மையாக எதிர்கொள்ள அவர் தயாராக இல்லை என்றும் தெரிகிறது

Popular Posts