ஈழத்தமிழர் மக்கள்தொகை - ஒரு நெருடல் கணக்கெடுப்பு

ஈழத்தமிழர் மக்கள் தொகையை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ? அவ்வளவு தூரம் இலங்கை அரசு குறைப்பதற்காக முயற்சித்துள்ளது. இரண்டாயிரத்து எட்டு சூலை  மாதம் கணக்குப்படி 21,324,791.
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு கணக்குப்படி 20,238,000.
ஒரு வருடத்தில் மக்கள் கணக்கில் 1,086,791 குறைந்துள்ளனர்.

இத்தனைக்கும் 2008ம் ஆண்டு கிழக்கு மாவட்டங்கள் எல்லாம் அரசாங்கத்திடம் இருந்தன. அப்படி இருக்கும்போது அடுத்த ஒரு வருடத்தில்(2009) வடக்கு மாவட்டங்களும் இவர்கள் கட்டுபாட்டில் வந்திருந்தாலும் ஏற்கனவே இருந்த மக்கள் தொகையில் எப்படி இப்படி ஒரு பெரிய இடைவெளி வந்தது. அதாவது 1+ 1= 1. இது தான் என்னுடைய கேள்வி.

மக்கள்தொகை இவர்கள் கூட்டுகிறார்களா? இல்லை பத்து தமிழர்களை கொன்று ஒருத்தரை மட்டும் கணக்கில் காட்டுகிறார்களா?






இலங்கையில் இறந்தவர்களின் தொகை 2009

இருக்கின்ற மக்கள் தொகையில் தான் இப்படி என்றால் இறந்தவர்களின் எண்ணிக்கைகளையும் பெரிய குழப்பம் வந்துள்ளது. 2008 ஆண்டு 2009 ஆண்டுகளை பார்த்தீர்கள் என்றால் போர் நடந்த மாதங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைதீவுகளில் குறைவான எண்ணிக்கையே பதிவில் உள்ளது. ஆனால் போருக்கு பின்னரும் கொழும்பில் இறந்தவர்கள் மற்ற இடங்களை விட பல மடங்கு காட்டப்பட்டு உள்ளது. இதிலும் சந்தேகங்கள் உள்ளன. போரில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான தொகை எவ்வளவு? சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? போரில் பிடிபட்ட அந்த மீதி போராளிகள் அத்தனை பேரையும் இந்த கணக்கில் சேர்த்து உள்ளார்களா என்ன?


இதற்கு பதிலாக நாங்களே ஒரு எண்ணிக்கை சொல்கிறோம் அது தான் உங்களின் மக்கள்தொகை என்று அறிவித்து இருக்கலாம். பின்னர் இதனையே இந்தியாவும் பின்பற்ற கூடும்.

1 Response to "ஈழத்தமிழர் மக்கள்தொகை - ஒரு நெருடல் கணக்கெடுப்பு"

  1. sivakumar says:

    கொல்லப்பட்டவர்கள் கணக்கில் வரமாட்டார்கள், உயிருடன் இருப்பவர்களைக் கணக்கில் சேர்க்க மாட்டார்கள். அவர்களுக்கு வேலை மிச்சம் அனைவருக்கும் வசதிகள் செய்து தரப்பட்டுவிட்டது என்று சொல்லிவிடலாம்

Popular Posts