ரோம் எரியும்போது பிடில் வாசித்து கொண்டு இருந்தவர்கள் தலைவர்கள் மட்டும் அல்ல, நாமும் தான்

ஈழ தமிழர்கள் இனபடுகொலை செய்யப்பட்டு கொண்டு இருந்தபோது நாம் சார்ந்து இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருந்தன என்றே தான் இன்னமும் நாம் பேசுகிறோம். ஆனால் நாம் என்ன செய்தோம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. இதுவே நமது வீட்டில் இருப்பவர்களில் ஒருத்தருக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்க்கிறோம் என்று வைத்து கொள்வோம். மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் பார்த்து கொள்வார் என்று வீட்டிலேயே இருக்கலாமே என்றா நாம் இருக்கின்றோம். மருத்துவமனையின் ஞாபகம் தூக்கத்தில் கூட வரும் அல்லவா?
அதே உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு வந்திருக்கும்? எதோ கூட்டாமாங்க, பேரணியாம். அவங்க நடத்துறாங்க. இவங்க நடத்துறாங்க. அவ்வளவு தான். அந்த பேரணியோ இல்லை உண்ணாவிரதமோ முடிந்தவுடன் வீட்டுக்கு போய் ஓய்வு எடுக்க சென்று விடுகிறோம். திரும்பவும் கேட்கிறேன். நம் வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால் எப்படி தூங்க முடிகிறது?  இதில் தமிழர்களின் சார்பாக என்று ஒரு போராட்டம் கூட நடந்தது இல்லை.



நான் இந்த கட்சியை சார்ந்தவன். அதனால் இந்த கட்சி நடத்தும் போராட்டத்தில் பங்கு கொள்கிறேன் என்று சொன்னார்கள். நான் அந்த கட்சி. அதனால் அந்த கட்சி என்றைக்கு போராட்டம் நடத்துகிறதோ? அன்று தான் நான் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார்கள்.
என்ன கொடுமை இது. ஒரு நாளாவது இந்தியாவில் இருக்கும் தமிழர்களின் சார்பாக என்று இந்த போராட்டம் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? யார் யார் இந்த இனபடுகொலைகளுக்கு காரணமோ அவர்கள் எல்லாருக்கும் பயம் வந்திருக்காதா?


இது பேரணி அல்லது உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களை பற்றியது. மற்றவர்களுக்கு என்றால் நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றே தான். உங்க வீட்ல இழவு விழுந்தா தான் வந்து கலந்து கொள்வீர்களா? பக்கத்து வீட்டுக்காரன் என்றால் கலந்துகொள்ள மாட்டீர்களா?

இதில் வேறு சிலகொடுமைகளும் உண்டு. அடுத்தவர்கள் நடத்தும் போராட்டத்தில் சென்று தங்களின் முகமும் கட்சியின் பெயரும் வர வேண்டும் என்பதற்காக மட்டும் கலந்து கொண்டு மறுநாள் செய்திதாள்களில் வந்தவர்களும் உண்டு. இவர்களை யாரும் அழைக்கவே வேண்டாம். அவர்களாகவே வந்து விழாவை சிறப்பித்து தாங்கள் வந்த நோக்கம் நிறைவேறியவுடன் சென்று விடுவார்கள்.( வேற என்ன புகைப்படங்கள் தான்).
இப்படி பட்டவர்கள் தான் பல மாணவர்களின் போராட்டங்களை குழப்பி கேடு விளைவித்தது. புலிகளின் தலைவரோடு புகைப்படங்கள் எல்லாம் எடுத்து கொண்டால் புலிகளை ஆதரிக்கிறார் என்று எந்த மடையர்கள் சொன்னாரோ தெரியவில்லை. (வெள்ளையாக இருப்பவன் எல்லாம் போய் சொல்ல மாட்டான் என்று சொல்வது போல்). இன்னமும் இந்த உலகம் அவரை நம்புகிறது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை எனக்கு. உண்மையில் இந்த இனபடுகொலைகளை தடுக்க முயற்சித்தவர்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் சிறைவாசத்தை அனுபவித்தார்கள். ஆனால் எதையுமே பார்க்காமல் இவர்கள் தான் ஏதோ இனபடுகொலைகளை தடுக்க முயற்சித்தவர்கள் என்பது போல் ஏன் இன்னும் நடிக்கிறார்கள்? ஒருவேளை அடுத்த வருடம் வரும் தேர்தலை முன்னிட்டோ?

என்னை கேட்டால் போராட்டம் நடத்த ஒரு எளிமையான வழி இருக்கிறது. நீங்கள் ஒன்றுமே செய்ய தேவை இல்லை. அது மட்டுமே தான் இதனை போன்ற மோசமான நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது. ஒன்றும் செய்யாமல் என்றால் வீட்டில் உட்காந்து தொலைக்காட்சி பார்ப்பது இல்லை. உங்கள் வீட்டில் தொலைகாட்சியே இல்லை என்றால் என்ன செய்வீர்கள்? வீட்டிற்கு வெளியே வந்து நிற்பீர்கள் அல்லவா? அது போல் ஒரு நாள் அனைவரும் வந்து நின்றாலே எல்லாம் நின்று போய்விடும். (தவறாக இருந்தால் மன்னிக்கவும்).

இதை ஏன் இப்பொழுது சொல்கிறேன் என்றால் இந்த ஈழத்தமிழர் போராட்டமானது முடிந்துவிட்டது என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். ஆனால் அது ஒரு தொடர்கதை. அதில் இருக்கும் காற்புள்ளியானது கண்ணுக்கு தெரியாமல் உள்ளது. அவ்வளவு தான். மீண்டும் இதே தப்பினை நமது ஆட்சியாளர்கள் திரும்ப செய்யாமல் இருக்க  நாம் திடமனதோடு தமிழர்களாகவோ அல்லது மனிதர்களாகவோ இருக்க வேண்டுகிறேன்

3 Response to "ரோம் எரியும்போது பிடில் வாசித்து கொண்டு இருந்தவர்கள் தலைவர்கள் மட்டும் அல்ல, நாமும் தான்"

  1. Unknown says:

    இந்த பன்னாடை கருங்காலிதமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பற்றி ஏதும் பேசாதீர்கள் பேசினால் எனக்கு வெறிதான் எனக்கு ஏறுகிறது. இவனுங்க செத்து ஒழிந்தால் தான் நல்லது நடக்கும்.

    நல்ல தொகுப்பு...

    எதாவது இலவசமா கொடுத்தா வாயை மூடியே பழகிட்டதுனால ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அரசின் நிலபாடு என்ன என்பதை தட்டிகேட்க மக்கள் மறந்துவிடுகின்றனர்.... எல்லாரும் ஒன்றுபட்டு இணைந்தால் தான் அரசும் பயம்கொள்ளும்

    ஒரு நாளாவது இந்தியாவில் இருக்கும் தமிழர்களின் சார்பாக என்று இந்த போராட்டம் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?//////////
    உண்மைதான் கொல்லப்படும் மீனவர்களுக்காக கூட நாம் யாரும் இனைந்து போராட்டம் நடத்தவில்லை.
    தமிழக மீனவர்கள் வேறு இந்திய மீனவர்கள் வேறு .
    பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு என் கடமை முடிந்தது.
    என்று சொல்லும் ஒருவரை நாம் தமிழ் இன தலைவர் என்று சொன்னால்.
    நம் இனத்தின் நிலைமை என்ன கதியில் இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

Popular Posts