ஸ்பெக்ட்ரம் விசாரணை என்னும் கண்துடைப்பு

ராசாவின் வீடுகளில் எல்லாம் நேற்று மத்திய புலனாய்வு துறையினர் சோதனைகள் செய்தனர். இந்த செய்திகளை படித்தவுடன் ஏதோ ராசாவின் வண்டவாளங்கள் எல்லாம் உடனே தண்டவாளம் ஏறியதாக நினைக்கும் ஏமாளிகளுக்காக இந்த பதிவு. ராசாவின் ஊழல் நடந்து பல மாதங்கள் ஆகின்றன. விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்கள் நாம் தான் என அவர்கள் ஏற்கனவே நிருபித்து உள்ளனர். அப்படி இருக்கும்போது ஊழல் சம்பந்தமாக எந்த ஆவணங்கள் கிடைத்து இருக்கும். அப்படி கிடைக்கும் ஆவணங்கள் எல்லாம் நிதிமன்றத்தில் சமர்பித்து எப்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்? அந்த ஆவணங்கள் எல்லாம் நாங்களும் சோதனை செய்து கண்டுபிடித்தோம் என்று சொல்வதற்கு மட்டுமே மற்றபடி அதில் ஒன்றும் இருக்காது.( எய்தவர்களை விட்டுவிட்டு அம்பை போய் நோவதேன்? ஏதோ கருணாநிதியின் குடும்பத்தினரின் வீடுகளில் சோதனை செய்து இருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. பணம் இருக்கின்ற இடத்தில் சோதனை செய்தால் தானே எதாவது கிடைக்கும். )
இதுவரை எத்தனை ஊழல்களை கண்டுபிடித்திருக்கிறார்கள் இந்தியாவில்? அதில் எத்தனை ஊழல்களில் பணத்தை திரும்ப வாங்கி இருக்கிறார்கள்? ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் கையூட்டு வாங்கியவர்களை எல்லாம் உடனே பிடித்து கைது செய்து விட்டு அவர்கள் வாங்கிய பணத்தை வசூலிக்க முடியும். ஆனால் இது போல் உள்ள ஊழல்களில் எல்லாம் எங்கே இருந்து பணத்தை திரும்ப பெற முடியும்.

சுவிஸ் பங்கில் இருந்தா இந்த பணத்தை வசூலிக்க முடியும்.

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஏற்கனவே ஊழல் குற்ற சாட்டில் இருக்கும் ஒருத்தர் மத்திய புளாய்வு துறையின் தலைவராக நீடித்து கொண்டு இருக்கும்போது மத்தியிலும் மாநிலத்திலும் திமுகவின் கூட்டணி இருக்கும்போதும் ஒரு கண்துடைப்புக்காக என்றாவது இந்த சோதனை நடந்துள்ளதே என்று ஏற்று கொள்ள வேண்டும்.அதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது :-(

2 Response to "ஸ்பெக்ட்ரம் விசாரணை என்னும் கண்துடைப்பு"

  1. நல்ல சொன்னிங்க.. முகத்தில் அறைஞ்ச மாதிரி...

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையே. ஜெயலலிதா மீது எந்த குற்றமாவது நிரூபணம் ஆகியுள்ளதா? லாலு பிரசாத் யாதவ் எதிலாவது மாட்டியுள்ளாரா? என்ன நடந்தாலும் ராசா ராசாவாகவே இருப்பார். இந்த மஞ்சள் துண்டு இன்னொரு கபட நாடகம் ஆடுது. ராசா மீது தவறு என்று நிரூபித்தால் நடவடிக்கையாம். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பன் தான் ஆவான், ஆனால் முளைக்குமா? தவறு நிரூபணமானால் சட்டமே வேண்டிய நடவடிக்கை எடுக்குமே, நீ ஒன்னும் புடுங்க வேண்டாமே! அவனை எல்லாம் பண்ணச் சொல்லி பணத்தை வாங்கி சுவிஸ் வங்கியில் போட்டு விட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி என்னா உடான்ஸ் உடுது பாருங்க!

Popular Posts