உள்ளம் 'தரிசாக' இருக்கும் அன்னைகளை பற்றி ஒரு ஈனபிறவியின் கருத்து

இவரெல்லாம் அன்னை தெரசா பற்றி பேசவில்லையென்று யார் அழுதது. அன்னை தெரசாவை பற்றி பேச சொன்னால் இவர் ஜெயலலிதாவை கிண்டல் செய்வதாக நினைத்து இவர் சொல்லிய வார்த்தைகள் தான் "அன்னை தெரசா என்று ஒருவர்தான் இருக்க முடியும். வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் "தரிசாக'' இருக்கும். "தரிசாக'' இருப்பதெல்லாம், தெரசா அல்ல."

அன்னை தெரசாவை பற்றி பேசுவதற்கு ஒரு யோக்யதை வேண்டும். அய்யா நீங்கள் சொல்லுவது போல் தரிசான அம்மாவாக ஜெயலலிதா இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருமி சொல்லக்கூடாது. ஒரு ஈனபிறவி எடுத்து இங்கே ஆட்சியில் இருக்கும் கலைஞர் சொல்லகூடாது. அரசியல் நாகரிகம் பற்றி அடிக்கடி சொல்லிவிட்டு அதை மீறும் ஒரு ஞாபகமறதி நோயாளி அதை சொல்லகூடாது. (வயசானால் ஞாபகமறதி எல்லாம் வரும் சரி தான் ஆனால் வயசானால் எல்லார் மேலும் இரக்கம் வரும். அது உங்களிடம் இதுவரை யாரும் பார்க்கவில்லையே. இரக்கமே உருவான தெரசாவை பற்றி ஈழதமிழர்கள் கொல்லப்படும்போது ஆட்சியில் இருந்து வேடிக்கை பார்த்த ஒரு இழிபிறவி சொல்லகூடாது.( அப்போது அவர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சேர்த்த பணத்தை எண்ணிக்கொண்டு இருந்ததாக சொல்கிறார்கள். இப்படி சேர்த்தும் இன்னமும் பணம் சேர்க்கும் வழி என்னவென்று தான் யோசித்து கொண்டு இருக்கிறார். மடியில் கணம் இல்லையென்றால் இவராக ஏன் இவரின் சொத்து கணக்கை தானாக சொல்ல வேண்டும்?)
மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்த மாநில தலைவர்கள் எல்லாம் மாநிலத்தில் இருக்கும் தேசிய பிரச்சினைகளுக்கும் பொது பிரச்சினைகளுக்கும் ஒன்றாக தான் போராடுகிறார்கள். ஆனால் இந்த ஈனபிறவிகள் எல்லாம் இருக்கும்வரை அப்படி ஒன்றும் நடவாது என்றே தான் தோன்றுகிறது. இவர் முதலில் ஆரம்பிப்பார்.பின்னர் அந்த அம்மா பதிலடி கொடுக்கும். இப்படி மாற்றி மாற்றி விளையாடும் இவர்களுக்கு மனித உயிர்கள் எல்லாம் என்றைக்கு முக்கியமாகபட்டு உள்ளது. அந்த அம்மா போர் என்றால் உயிர் இழப்பு சகஜம் என்று சொன்னாலும் பின்னர் தனிதமிழ் ஈழமே நிரந்திர தீர்வு என்று கூறி விட்டார். ஆனால் கடைசி வரை வோட்டுக்காக கெஞ்சினாரே தவிர தனிதமிழ் ஈழத்தை இவர் ஆதரிக்கவும் இல்லை. நிரந்திர தீர்வை கூட சொல்ல முடியாத இவர் முதல்வன் படத்தில் வரும் அந்த மோசமான முதல்வர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.(ரகுவரன் நடித்த வேடம்)அந்த அம்மா வேண்டுமானால் ஈழ தமிழர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஈழதமிழர்களுக்கு மட்டும் இல்லை தமிழினத்திற்க்கே துரோகி என்பதை மக்கள் அறிவார்கள்.

1 Response to "உள்ளம் 'தரிசாக' இருக்கும் அன்னைகளை பற்றி ஒரு ஈனபிறவியின் கருத்து"

  1. kuppusamy says:

    ஊழலின் பிறப்பிடத்து ஈனபிறவியின் கதை வெளிச்சத்திற்கு வந்து விட்டது. தொடருங்கள் மேலும். வாழ்த்துக்கள். நன்றி.

Popular Posts