ராசாவின் கொண்டையில் மேலுமொரு மாணிக்கம்

ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் எதாவது ஒரு வகையில் தங்களின் செல்வாக்கினை மற்றவர்களிடம் காட்ட முயல்வது இந்திய ஜனஞாயகத்தில் எதார்த்தமான விஷயம். ஊழல் செய்பவர்கள் தான் ஊழலை ஊக்குவிக்கிறார்கள் என்பது உண்மை என்பது போல் ராசா தன்னுடைய அதிகாரத்தை நீதிபதியிடமே காட்ட முயற்சித்துள்ளது திமுகவின் மற்ற செயல்பாடுகள் எப்படி என்பதை காட்டுகிறது. இன்று தான் savukku.net (சவுக்கின் வாசகன் நான்) இல் வந்த "ஜாபர் சேட் டவுசரை கழற்றிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி" செய்தியை படித்து கொண்டிருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் அடுத்த செய்தி ராசாவின் பெருமைகளாக வந்து விட்டது. இப்படியே போனால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் மாரடைப்பில் சாவது நிச்சயம். அத்தனை புது புது ஊழல்களை செய்துள்ளார்கள்.இனிமேல் யாராவது புது ஊழல்களை பற்றி அறிவிப்பதென்றால் தயவு செய்து ஒரு நாளைக்கு ஒரு ஊழலுக்கு மேல் அறிவிக்க வேண்டாம். மாத கடைசியில் ஆயிரம் ரூபாய் சேமிப்பதே அரிதாக இருக்கும்போது இப்படியெல்லாம் அறிவித்து கொண்டே போனீர்கள் என்றால் நானும் திமுகவில் இணைந்து மக்கள் தொன்றாற்ற கிளம்பிவிடுவேன். (மக்கள் சேவையே மகேசன் சேவை. அவர் கொண்டுவந்த பையின் நிறம் மஞ்சள் அதனால் தான் இன்னமும் மஞ்சள் துண்டு அணிந்திருப்பதாக கேள்விபட்டேன்.)
எது எதற்கெல்லாம் காரணம் சொல்கிறார்கள் பாருங்கள். இனிமேல் ராசா பதில் மனு தாக்கல் செய்யும்போது சொல்லுவார்." நீதிபதியை நலம் விசாரிக்கவே நான் அலைபேசியில் அழைத்தேன். அப்போது நீதிபதியும் தமிழ்நாடு பார் கவுன்சிலின் தலைவரா சந்திரமோகன் அவர்களும் ஒரு நல்ல விஷயத்தை பேசிக்கொண்டு இருந்தார்கள். நான் என்னவென்று மட்டுமே கேட்டேன். அதற்காக நீதிபதி நான் மிரட்டினேன் என்று எல்லாம் எடுத்துகொண்டால் நாங்கள் என்ன செய்வது".

ரூம் போட்டு யோசித்திருப்பான்களோ

5 Response to "ராசாவின் கொண்டையில் மேலுமொரு மாணிக்கம்"

 1. எதுவும் நடக்கும் இந்த நாட்டில்;அதுதான் நம் தலை விதியோ?
  காத்திருப்போம்,காலம் ஒரு நாள் மாறும்.
  வாழ்த்துகள்

  Anonymous says:

  இப்போது வாழம் வள்ளுவர், நீதிபதி ரெகுபதியின் குலம், கோத்திரம், அவர் முன்னோர்களில் எவராவது தாழ்த்தப்பட்டவர்க்கு ஏதேனும் நல்லதோ/கேட்டதோ செய்து இருக்கிறார்களா என்று ஆராய்ந்து முரசொலியில் தம்பிக்கு மடல் வரைவார்.

  குவைத் தமிழன் says:

  ’சவுக்கின் வாசகன் நான்’ என்ற உங்களது துணிவு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

  சென்னை பித்தன்,thumbi,குவைத் தமிழன்

  நன்றி தோழர்களே

  மிக அருமை வாழ்த்துகள்...


  //இப்படியெல்லாம் அறிவித்து கொண்டே போனீர்கள் என்றால் நானும் திமுகவில் இணைந்து மக்கள் தொன்றாற்ற கிளம்பிவிடுவேன்.//

  வேண்டாம் சாமீமீ...பூமி தாங்காது...

Popular Posts