லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் இவர் நெருப்பு மாதிரியாம் அவரே சொல்லிகொள்கிறார்

இந்தா பார்த்துக்கோ நானும் ரௌடி நானும் ரௌடி.
இது தான் தினமலரில் வந்துள்ள புது செய்தி.
அதே மாதிரி தான் இதுவும் கை சுத்தம் அப்படியென்றால் எதையும் நேரடியாக எதிர்கொள்ள வேண்டியது தானே. அதென்ன தன் பெயரில் ஏதும் இல்லையென்று இவரே பத்த்ரிக்கைகளுக்கு கொடுப்பது. முன்பு தான் தன் பெயரில் சொத்துக்களை வாங்கி பின்னர் ஊழல் குற்றசாட்டில் சிக்கிக்கொண்டு அவர்களே வெட்கப்பட்டு பதவியை ராஜினாமா செய்தார்கள் என்று கேள்விபட்டேன்.
இவர் என்னவென்றால் தன்பெயரில் எதுவும் இல்லை என்பதை இவரே ஒத்துகொள்கிறார். இதில் இவர் வங்கிக்கணக்கில், வைப்பு தொகையாக ரூ. 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134ம்ல சேமிப்பு தொகையாக ரூ. 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ம் மட்டுமே உள்ளது.(கூட்டினால் என்ன வரும் என்று எனக்கு தெரியாது. கணக்கில் நான் கொஞ்சம் வீக். இது இரண்டையும் கூட்டினால் ஒரு லட்சத்து ஐந்பதாயிரம் கோடி எல்லாம் வராது என்று சொல்ல வருகிறாரோ? நான் தான் கணக்கில் வீக் என்றால் இவருமா?)
பாவம் மஞ்சப்பையோடு கிளம்பியவருக்கு மாதம் உதவித்தொகையாக ஒரு லட்சம் கொடுத்தார்களோ என்னமோ?( கட்சி தொடங்கிய வருடத்தில் இருந்து) இவரும் சாதாரணமாக சொல்கிறார். அவருடைய மொத்த சொத்தும் ஏழு கோடிக்கு உள்ளே என்று. காமராசர் எல்லாம் இருந்தார் என்றால் தூக்கில் தொங்கணும். அப்படி ஒரு வளமான  கட்சியாக திமுக வளர்ந்திருக்கிறது. அவர் இருந்திருந்தால் அவரும் ஒரு பெரிய தொகையை தன்னுடைய சொத்தாக சொல்லிருப்பார். திமுகவை விட காங்கிரஸ் தான் மிக வளமையான கட்சியாக இருக்கிறது. திமுக ஆட்சியில் இருந்து பெரிதாக கொள்ளை அடிப்பதற்கு முன்னரே காங்கிரஸ் தான் கொள்ளை அடிப்பது எப்படி என்று போபர்ஸ் பீரங்கி ஊழலில் மற்றவர்களுக்கு பாடம் நடத்தியது. இப்போது மாணவர்கள்  எல்லாம் வாத்தியாருக்கு பாடம் எடுக்கிறார்கள்.(ஒருவேளை இதை தான் தாய் எட்டு அடி என்றால் குட்டி பதினாறு அடி பாயும் என்று கூறினாரோ?)
என்னமோ போங்க. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி வைத்து இருப்பவர்களும் நாங்களும்  ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி தான் வைத்து உள்ளோம் அவ்வளவு தான் என்று சொன்னால் என்ன செய்வது?

3 Response to "லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் இவர் நெருப்பு மாதிரியாம் அவரே சொல்லிகொள்கிறார்"

  1. இந்த கொசு தொல்ல தாங்க முடியல

    நெருப்பா?....இவரா?...இல்லை இவரது வாரிசா?

    பிடிபடாமல் ஊழல் செய்வது எப்படி என்று இவர் அவருடைய சகாக்களுக்கு பாடம் நடத்தினால் நலம்.

Popular Posts