ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-3

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் முகலாய சாம்ராஜ்யம் மூலமாகவும் கிறிஸ்துவர்கள் ஆங்கிலேய ஆட்சி மூலமாகவும் 12ம் நூற்றாண்டு முதல் சுதந்திரம் பெறும் வரையில் இங்கே குடியேறினர். அவர்கள் இங்கே குடியேறிய வகையில் அந்நியர்களே. அப்போது இருந்த அரசாங்கங்களை கலைத்து அழித்து அவர்கள் குடியேறினர். இவ்வாறு குடியேறியவர்களில் கிருஷ்துவர்களை தவிர மற்ற அனைவரும் இந்த மண்ணிற்கு சொந்தம் கொண்டாடினர்.

சீக்கியர்கள் முகலாயர்களுக்கு எதிராக போர்களை நடத்திருந்தாலும் முகலாயர்கள் தங்க கோவில் அல்லது ஹர்மந்தர் சாஹிப்கிற்கு எதிராக எந்த ஒரு விதத்திலும் அழிவுகளை ஏற்படுத்தவில்லை. ஆங்கிலேய ஆட்சியில் கூட அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடத்தினர்.(3 போர்கள் சீக்கிய அரசுகளால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது)


ஆனால் இந்து மதத்தை சேர்ந்ததாக கூறப்படுபவர்கள் இருந்த அன்றைய காங்கிரஸ் அரசு தங்க கோவிலின் மேல் போர் தொடுத்தது. யுத்தத்தில் மட்டுமே உபயோகபடுத்தபடும் அனைத்து ஆயுதங்களும் சீக்கியர்களின் புனித கோவிலான அகால் தக்த் அழிப்பதற்கு அப்போதைய அரசால் உபயோகபடுத்தபட்டது. ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது.

ஜூன் 3,1984: குரு அர்ஜனின் தியாக நாளன்று தான் தாக்குதல் நடத்த வேண்டும் இந்திரா காந்தியால் தேர்ந்தெடுக்கபட்டதுக்கு இரு வேறு காரணங்கள் இருந்தன(சீக்கியர்களின் சார்பாக சொல்லப்பட்ட காரணங்கள்).
 1. அன்று சீக்கியர்கள் கூடும் நேரம், அவர்களின் மத நம்பிக்கைகளையும் சீக்கிய பிரிவினைவாதிகளையும் ஒன்றாக கேவலபடுத்துதல்.
 2.  இரண்டாவது அங்கே கூடும் சீக்கியர்கள் எல்லாரும் பிரிவினைவாதிகள் என்று கொன்று இனபடுகொலை ஒன்றை
   நடத்துதல்.(ஈழ தமிழர்கள் கூட்டமாக கொல்லப்பட்டதை நினைவில் கொள்க)
என்ன தான் தீவிரவாதிகள் என்று கூறப்பட்ட பிரிவினைவாதிகள் புனித பொற்கோவிலின் உள்ளே இருந்தாலும் ஒரு ராணுவ நடவடிக்கை என்பது அன்றைய சூழலில் தேவை அற்றது. அப்பாவி மக்கள் பலர் உள்ளே இருப்பார்களே என்று கொஞ்சம் கூட யோசிக்காதது சந்தேகங்களை கிளப்பியது.(இந்த பிரிவினைவாதிகள் ஜூன் நான்காம் நாள் அருகில் இருந்த இந்துக்களின் மீது தாக்குதல் நடத்த இருந்தனர் என்று ஜூலையில் வெள்ளை அறிக்கை சமர்பிக்கப்பட்டது.)

ஜூன் முதலாம் நாள் 1984:


பிருந்தன்வலே(வெள்ளை உடையில்) மற்றும் அவரது பாதுகாவலர்கள்
 புனித பொற்கோவிலின் சுற்றுபகுதியில் உள்ள கட்டிடங்களில் இருந்த மக்கள் துணை ராணுவப்படையின் மூலம் அப்புறபடுத்தபட்டு அங்கு ராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினர் அங்கு நிலை நிறுத்தப்பட்டனர். அவர்களின் முதல் நோக்கம் அங்கே இருந்த பிரிவினைவாதிகளின் தலைவன் என்று சொல்லப்படும் பிருந்தல்வாலேவை கொல்லுவது அங்கே குவித்து வைத்திருந்ததாக சொல்லப்படும் ஆயுதங்களை அழிப்பது. இதில் பிருந்தன்வாலே மற்றும் அவரின் பாதுகாவலர்கள் அங்கே இருந்த குரு ராம் தாஸ் லங்கர் கட்டிடத்தில் இருந்தனர். பால்கனியில் இருந்த பிருந்தன்வாலேவை கொல்லமுயற்சித்து பின்னர் அருகே அருகே தாக்குதல் நடத்தினர். நாம் தாக்கினால் பதிலுக்கு தாக்குவார்கள் என்பதே துணை ராணுவப்படையின்

எண்ணமாக இருந்தது. ஆனால் பதில் தாக்குதல் பிருந்தன்வாலேவின் ஆதரவாளர்களால் நடத்தப்படவில்லை. மதியம் 12 .45கு ஆரம்பித்த இந்த தாக்குதல் இரவு ஏழு மணிக்கு முடிவுற்றது. பிருந்தன்வாலேவினால் எந்த ஒரு பதில் தாக்குதல்களும் இதில் நடத்தப்படவில்லை. 30 குண்டுகள் புனித பொற்கோவிலை தாக்கிருந்தன. இவர்கள் பதில் தாக்குதல் நடத்தாதால் அங்கே சீக்கியர்களின் ஆயுதங்களின் தோட்டாக்கள் அப்படியே இருந்தன.

(இந்திய ராணுவத்தின் முன்னர் அவர்களின் ஆயுதங்கள் எல்லாம் துரும்புகள் மட்டுமே என்பது என் கருத்து).

அப்பாவிகள் பலர் இதில் கொல்லப்பட்டு இருந்தனர்.


ஜூன் இரண்டாம் நாள், 1984:


இந்திய ராணுவத்தினர் சர்வதேச எல்லையுடன் (பாக்கிஸ்தானுடன்) இணைக்கும் எல்லைகளை அடைத்தனர்.(கங்கா நகர் முதல் ஜம்மு காஷ்மீர் வரை). அதே நேரத்தில் ஏழு கம்பனி படைகள் பஞ்சாபில் உள்ள அனைத்து கிராமங்களையும் தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவந்தனர். ஏதேனும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று முன் எச்சரிக்கைக்காக டாங்குகள், அர்டிலேரிகள் மற்றும் கனரக ராணுவ வாகனங்கள் அங்கே நிறுத்தப்பட்டன. மாநிலத்தை மற்ற மாநிலங்களோடு இணைக்கும் அனைத்து போக்குவரத்துகளும் அடியோடு நிறுத்தப்பட்டன. செய்திகள் தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டன.


( நமக்கு பக்கத்துல குண்டு விழுந்தாலே கண்டுக்க மாட்டோம். தணிக்கை செய்யப்பட்ட செய்திகள்னா நமக்கு வருவதற்கு அல்லது குற்றம் நடந்தது என்ன என்று சொல்வதற்கு குறைந்தது ஒரு மாதம் தேவை. அந்த ஒரு மாதத்தில் அங்கே பல அப்பாவிகள் கொல்லப்பட்டு இறந்தனர் அப்படின்னு மட்டும் தெரியும். அப்போ நாம என்ன செஞ்சிட்டு இருந்தோம்னு ஞாபகம் இருக்காது.)

 
ராணுவ நடவடிக்கைகளுக்காக அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு அங்கு ஜெனரல் கெளரி சங்கர் பஞ்சாப் கவர்னரின் பாதுகாப்புக்கான ஆலோசகராக நியமிக்கபட்டார்.அன்றைய இரவிலே துணை ராணுவபடைகள் விலக்கப்பட்டு இராணுவம் அந்த நிலைகளை ஏற்றது.

ஜூன் மூன்றாம் நாள், 1984:

பஞ்சாபில் இருக்கும் அனைத்து தெருக்களும் வெறிச்சோடி இருந்தன. அங்கு ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் மட்டுமே உலாவிக்கொண்டு இருந்தன. யாரும் அங்கே நடமாடாதபடி தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.லெப்டினன்ட் ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி(General Officer Commander-in-Chief, Western Command) என்னும் ராணுவ அதிகாரியின் தலைமையில் நடத்த முடிவு செய்து அவரிடம் ஒப்படைக்கபட்டது. அவருக்கு அடுத்த இடத்தில் ரஞ்சித் சிங் தயாள் என்பவர் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து தயாரித்த திட்டத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்யபட்டது.அதே நேரத்தில் டெல்லியில் ஒரு கட்டுப்பட்டு அறை ராஜீவ் காந்தியின் தலைமையில் இருந்தது. அவருக்கு துணையாக அர்ஜுன் சிங் ,கே.பி.சிங் டியோ(பாதுகாப்புக்கான காபினெட் அமைச்சர்) இருந்தனர்.இதில் ரஞ்சித் சிங் தயாள் ஒரு சீக்கியராக இருந்தாலும் அவருக்கு பிந்தரன்வாலேயின் அமைப்பினை பிடிக்காது.பாண்டஸி பிரியரான ராஜீவ் காந்திக்கு ராணுவ விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். உயிரின் மதிப்பு தெரியாதவர்.(தமிழர்கள் மட்டும் தான் ஒற்றுமைக்கு பேர்போனவர்கள் இல்லை, சீக்கியர்களும் தான். ஆளுக்கு ஒரு அமைப்பு, கொடி என்று இருந்தார்கள்).
 
ஐந்து கம்பனி படைகள்(the 10th. the 11th the 2nd, the 1st and 15th) புனித பொற்கோவிலின் மேல் தாக்குதல் நடத்த காத்து இருந்தனர்.இதுமட்டும் அல்லாமல் இரண்டு பட்டாலியன் வீரர்கள் தனியாக தேர்ந்தெடுத்திருந்தனர். இவர்கள் அனைவரும் கமாண்டோ பயிற்சி முடித்தவர்கள். முகங்களை ஹெல்மேட்டாலும் உடலை குண்டு துளைக்காத உடையாலும் நிரப்பிய இந்த படை தாக்குதலுக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்தது.
 
இம்முறை தாக்குதலை ராணுவம் கனரக ஆயுதங்களில் தொடங்கியது. அதற்கு பதிலடியும் எதிர்புறம் கிடைத்தது. மறு நாள் காலை வரை நீடித்த சண்டை வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. பிந்தரன்வாலேயின் ஆதரவாளர்கள்  உள்ளே  இருந்து  தாக்குதல்களை  தொடுத்திருந்தாலும் புனித பொற்கோவிலின் பக்கம் செல்லாமல் தவிர்த்தனர். ஒரு சிலர் தங்கள் உயிரை கொடுத்து அங்கு நடக்கும் தாக்குதல்களை வேறு பக்கம் திருப்பினர்.( தானாக முன்வந்து சாதல்).
(பின்னாளில் இவர்களுக்கும் சேர்த்து சீக்கியர்கள் நினைவு அனுசரிக்கின்றனர். இன்னும் அவர்களிடம் அதே பிரிவினைவாதம் இருக்கிறது. ஒரு சிலர் இந்த விசயங்களை மறந்தும் இறந்தவர்களை பழித்தும் வருகின்றனர்.(கல்சா அமைப்பு). நம்மை போலவே இவர்களுக்குள்ளும் துரோகிகளும் இருக்கின்றனர்.)ஜூன் நான்காம் நாள், 1984:

வெளியே இருந்த ராணுவம் இம்முறை தன் நிலைகளை மாற்றி அமைத்தது. முன்பு போல் இல்லாமல் யுத்தத்தில் ஈடுபடும் டாங்கிகளை பயன்படுத்த முடிவு செய்தது. மறுபக்கம் சோறு தண்ணி இல்லாமல் கிடந்த சீக்கியர்களின் கையில் கார்பைன், செமி ஆட்டோமாடிக்  மற்றும் இலகுரக  துப்பாக்கிகள் இருந்தன.( தாக்குதல் நடத்தாமல் சும்மா சோறு தண்ணி அனுப்பாமல் இருந்தாலே பாதி பேர் அங்கே செத்திருப்பாங்க. அப்புறம் எதுக்கு தாக்குதல்?)ராணுவம் அங்கே இருந்த தண்ணீர் தொட்டியை நோக்கி தாக்குதல் நடத்தியது. அதன் அருகில் விழுந்த குண்டுகள் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த கட்டிடத்தையும் சேர்த்து தாக்கின. ஷெல்களும் அடிக்கப்பட்டன.( கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சொல்லும் அதே ஷெல் தான் இது. ஒவ்வொன்றும் உள்ளங்கை அகலமும் முழங்கை நீளமும் கொண்டவை. உள்ளே இருக்கும் மருந்து வெடிக்கும்போது ஏற்படும் வீரிய தாக்குதலில் உடல்கள் கிழிந்து தொங்கும்.)


இப்படி விழுந்த ஷேல்களினால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் அங்கே குழுமிருந்த பக்தர்களே. மற்றவர்களுக்கு அது வீர மரணம். அப்பாவிகளுக்கு?

இப்போது பிந்திரன்வலேவின் ஆட்கள் சிலர் அங்கே இருந்து அமிர்தசரசினுள் நுழையமுற்பட்டனர். அவ்வாறு முயற்சித்தவர்கள் அனைவரும் கனரக ஆயுதங்களால் கொல்லப்பட்டனர். மற்றவர்களையும் அங்கே இருந்து பிரிக்க உள்ளே டாங்கிகள் அனுப்பப்பட்டது. உள்ளே இருந்த பிந்திரன்வலேவின் நெருங்கிய சகாக்களில் சிலர் கனரக ஆயுதங்களுக்கு எதிராக போர் செய்வது அபத்தம் என்று கூறி சரணடைய முற்பட்டனர். அதே நேரத்தில் பக்கத்து கிராமங்களில் இருந்து வாள்களோடு மக்கள்( ஐம்பதாயிரம் பேர்) அமிர்தசரசினுள் வர முயற்சி செய்தனர். உள்ளே இருந்தவர்களில் ஒரு சிலர் போர் செய்தனர் வேறு சிலர் சரணடைய முற்பட்டனர். வேறு சிலரோ அங்கேயே ஒளிந்து கொண்டனர். என்ன தான் டாங்கிகள் உள்ளே நுழைந்தாலும் பிந்திரன்வலேவின் ஆட்கள் மேற்கொண்டு உள்ளே ராணுவம் நுழைவதை தடுத்து அனுப்பினர்.

ஜூன் ஐந்தாம் நாள், 1984:
பிந்திரன்வலேவின் ஆட்கள் மீது தாக்குதல் நடத்த அனுப்பப்பட்ட படையில் தமிழர்கள், பீகாரிகள், டோக்ராக்கள் மற்றும் ராஜபுத்திரர்கள் அதிகம் இருந்தனர். இதில் தமிழர்கள் அதிகம். (இங்கு ஒரு விஷயம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிபடையில் சீக்கியர்கள் அதிகம், தமிழர்கள் குறைவு. பொற்கோவிலுக்கு விழுந்த அடிக்கு பதிலடி கொடுக்க கிடைத்த சந்தர்ப்பமாகவே அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரினை நடத்திருக்க கூடும்.)

உள்ளே இருந்தவர்களின் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்த நமது ராணுவம் கீழ்க்கண்டவற்றை பயன்படுத்தியது.
 1. விஜயாந்த டாங்கிகள் (அர்ஜுன் டாங்கிகளின் தாத்தா அல்லது பாட்டி). எடை 38 டன்
 2. கனரக ஆயுதங்கள்.
       

 
<><><><><><><><><> 
25 பவுண்டர் பீரங்கிகள் 

ஹோடிசர்ஸ்
இவ்வளவு இருந்தும் உள்ளே இருந்தவர்களின் தீரமான எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் ராணுவம் திணறியது.முடிவில் ரசாயன குண்டுகள் பிரயோகிக்கப்பட்டுள்ளது( ஒருவேளை கண்ணீர் புகைக்குண்டுகளை அவர்கள் அவ்வாறு சொல்லிருக்கலாம். டெல்லி மேலிடம் கூறியதை அடுத்தே ரசாயன குண்டுகள் உபயோகபடுதபட்டுள்ளன. உறுதி செய்ய உள்ளே இருந்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை ). அதில் மயங்கிய சீக்கியர்களை தலையில் சுட்டு கொன்றுள்ளனர். இவ்வாறு நுழைவதற்கு வழி செய்த ராணுவம் தொடர்ந்து முன்னேறுவதற்கு என்னவேண்டுமானாலும் செய்து கொள்ள டெல்லி மேலிடம் அதிகாரம் அளித்தது. (சும்மா விட்டாலே சித்ரவதை தான். முழு சுதந்திரம்னா எப்படி இருக்கும்? உள்ளே புகுந்த ராணுவம் தன் மனம் போல் விளையாடியது). பொற்கோவிலின் உள்ளே டெல்லி மேலிடத்தின் அனுமதி கிடைக்கும் முன்னரே ஏழு விசயந்தா டாங்கிகள் இருந்தன. ஆனால் இப்போது முழு அனுமதிக்கு பின்னர் அவற்றின் உபயோகம் அதிகரித்தது. கன்னாபின்னாவென்று பொற்கோவிலின் மேல் தாக்குதல் செய்தனர். அங்கே ஒளிந்து கொண்டு இருந்தவர்களில் லோங்கோவலே,ரஞ்சித் சிங் தயாள் இருக்கும் அதே பிரிவினை சேர்ந்தவர். அதனால் லோங்கோவலேவை பத்திரமாக மீட்க உள்ளே ராணுவம் நுழைந்து அழைத்து வந்தது. அதுவரை அவரை பின்பற்றியவர்கள் நொந்து போயினர். மற்றரோருவரான தோக்ரா சரணடைந்தார். இவ்விருவரும் அங்கே இருந்து வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.எங்கெங்கு காணினும் ரத்தமும் சதையும் தான் காணகிடைத்துள்ளது.

ஜூன் ஆறாம் மற்றும் ஏழாம் நாட்கள் , 1984:
சரணடைந்தவர்களை துரோகிகள் என்று சீக்கியர்கள் இன்றும் கூறுகின்றனர். அவர்கள் சரணடைந்தவுடன் எதுவும் முடிவுக்கு வரவில்லை. பிந்திரன்வலேவின் ஆட்கள் கடைசி முறை தொழுது பின்னர் அவர்கள் மத்தியில் பிந்திரன்வலே பேசுகிறார். அவர்களில் யாரெல்லாம் புனித மரணத்தை விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் தன்னுடன் வரலாம் என்று கூறுகிறார். அதன் பின்னரும் வந்த நாற்பது வீரர்கள் மீண்டும் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். இதில் கோபம் அடைந்த ராணுவம் அந்த இடங்களில் கனரக ஆயுதங்களை உபயோகபடுத்தி கட்டிடங்களை நொறுக்கியது.அதில் அந்த நாற்பது பேரும் கொல்லபடுகின்றனர். உள்ளே நுழைந்த ராணுவம் இதை முதலில் உறுதி படுத்தியது. பின்னர் பிந்திரன்வலேவை தேடியது, அவரை கண்டுபிடிக்க முடியாமல் அங்கே பக்கத்து கட்டிடங்களில் இருந்த மக்களை கொன்றது. பெண்களின் கற்பினை சூறையாடி உள்ளது. முதலில்  ஜூன் ஆறாம் நாள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட பிந்திரன்வலே  பின்னர் ஜூன் ஏழாம் நாள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. இதில் எது  உண்மை  என்பது  யாருக்கு  தெரியுமோ?

 எப்போதும் ராணுவம் கடமையை செய்யும் பின்னர் அவர்களின் வேலையை காட்டி விடுவார்கள். சண்டை முடிந்தஉடனே அங்கே இருந்த பொற்கோவிலில் இருந்த தங்கத்திலான பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர்.( இன்றும் ராணுவத்தில் இருந்த தமிழர்கள் செய்தது தான் அது என்று சீக்கியர்கள் கூறுகிறார்கள்). அங்கே சிக்கியவர்களை சித்திரவதை செய்து கொன்று இருக்கின்றனர்.  பெண்கள் யாரும் இதில் தப்பவில்லை.

ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாயிரம் பேர். கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை 84. கொல்லப்பட்ட சீக்கிய போராளிகளின் எண்ணிக்கை 492. மற்றவர்கள்?சீக்கியர்கள் பின்னர்  கோபப்பட்டு  ரஞ்சித் சிங் தயாள்ளை சுட்டு கொன்றனர். ஒரு சிலரை தேடி அழித்தனர். இந்திரா காந்தியை சுட்டு கொன்றனர். ஆனால் இதற்க்கெல்லாம் சூத்திரதாரியான ராஜீவ் காந்தியை விட்டுவிட்டனர்.விட்டுவிட்டதன் பிரதிபலனை இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று அனுபவித்தனர்.


அடுத்த பதிவில் இந்திரா காந்தி படுகொலை

5 Response to "ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-3"

 1. Anonymous says:

  இதெல்லாம் எங்கே இருந்துப்பா கிடைச்சது.

  பல்வேறு நூல்கள் (குஷ்வந்த் சிங்,A .R தர்சி, தனவோ)

  Anonymous says:

  Excellent News and a Reeal EYE-OPENER

  Anonymous says:

  Excellent News and a EYE-OPENER for indians

  peer says:

  muslim's &chiristians they r all indian citizen's only change the religian ok

Popular Posts