இந்தியாவின் தேசிய அடையாளம்

எதையும் பணத்தினால் வாங்கி விடலாம் என்கின்ற மனப்பான்மை இப்பொழுது அதிகமாகிவிட்டது. ஊழல்களும் ஆயிரம், லட்சம், கோடி எல்லாம் தாண்டி நூறு கோடி என்றாகிவிட்டது. சமிபத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு லட்சம் கோடி என்றாகி விட்டது. ஒரு வேளை ஊழல் என்பது நமது தேசிய அடையாளமா என்ன? ஊழல் செய்யாதவரை காட்டுங்கள் என்று தான் எல்லாரும் கேட்கிறார்கள். இதன் மூலம் தாங்களும் ஊழலில் திளைத்தவர்கள் என்பதை காட்டுகிறார்கள்.

நமது நாட்டில் எந்தளவு வெளிபடையான செயல்முறை திட்டங்கள் இருக்கின்றன என்பதற்கு ட்ரான்ஸ்பெரன்சி இன்டெர்நேஷனல் என்னும் அமைப்பு எடுத்த கணக்கெடுப்பில் தெரிகிறது. ஒரு வெளிபடையான செயல்முறை திட்டம் இல்லாதவரை ஊழல்களும் சரி ஊழல்வாதிகளும் சரி திருந்த போவதில்லை. நம் தலைமுறையில் இந்த மாற்றம் கொண்டு வந்தால் நமக்கு அடுத்த தலைமுறைகள் நன்றாக இருப்பார்கள். கணினி மயமாக்கல் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகிறார்கள் ஆனால் இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதையே சொல்லி நம்மை ஏமாற்றுவார்கள் என்று தெரியவில்லை.


ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் அத்தனை கருப்பு பணத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதாக சொல்லி தான் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. இப்போ அந்த பணம் கொண்டு வரும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? ஒரு வேளை உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டால் மட்டுமே மத்திய அரசு பதில் அளிக்குமோ?
 
 உச்ச நீதிமன்றம் தலையிட்டும் பல இடங்களில் ஒன்றும் நடக்காமல் உள்ளது. அதில் ஒரு விஷயம் உயர்நீதி மன்றத்தினுள் வக்கீல்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை இடமாற்றம் செய்ய சொல்லி உத்தரவு வந்தது. அதில் என்ன நடந்தது என்று இன்றும் எனக்கு புரியவில்லை. அதற்கு உச்ச நீதிமன்றத்தின் பதில் நடவடிக்கை என்னவென்று தெரியவில்லை?


இப்படி பகிரங்கமாக தெரியும் பல விசயங்களையே இந்த நீதிமன்றங்கள் கண்டு கொள்வதில்லையே அப்புறம் எப்படி இந்த நீதி, நியாயம் எல்லாம் இங்கே இருக்கும்? ஒரு வேளை நீதிபதிகளும் மனிதர்கள் தானே அவர்களும் இந்தியர்கள் தானே இந்தியாவின் தேசிய அடையாளத்தை அவர்களும் பின்பற்றுகிறார்களோ?




தயவு செய்து விவரம்  தெரிந்தவர்கள் சொல்லவும்.
 
நான் சொல்லியதில் எதுவும் தவறு இருப்பின் மன்னிக்க.

2 Response to "இந்தியாவின் தேசிய அடையாளம்"

  1. Anonymous says:

    Absolutely true. There is many to critic.But the theme you are moving withis fantastic.

    Unknown says:

    உலக அளவில் ஊழலில் நம்மை மிஞ்சிய நாடுகளும் இருக்கின்றன என்றாலும், இந்த ஊழல் மட்டும் இல்லாவிட்டால் நாம் வல்லரசவதில் தாமதம் இருந்திருக்காது.

Popular Posts