ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-5


இந்திரா காந்தி இறப்பிற்கு பின்னர் அடுத்து வந்த நான்கு நாட்களில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல். இந்திராகாந்தி கொல்லப்பட்ட விஷயம் கேள்விப்பட்டவுடன் காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்கள் கூடினர். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி விவாதம் நடந்தது. அதில் இருந்தவர்கள் சீக்கியர்களின் மேல் கோபமாக இருந்தனர். அங்கே என்ன முடிவு எடுத்தார்களோ ஆனால் இந்த கலவரங்களை இவர்கள் தான் முன்னின்று நடத்தினர்.
அதில் முக்கியமானவர்கள் கமல் நாத்தும், ஜகதீஷ் டைட்லர். இவர்களை நேரில் பார்த்து பின்னர் தப்பித்தவர்கள் அதிகம். இவர்கள் சீக்கியர்களை கண்டுபிடிக்க பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. டெல்லியில் இருந்தவர்களின் ஒட்டு மொத்தவர்களின் பட்டியல் காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்கள் வைத்திருந்தனர். அதில் உள்ள சீக்கியர்களை கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று சின்ன பிள்ளைக்கு கூட தெரியும், காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்களுக்கு தெரியாத என்ன?
நான் அங்கே சும்மா தான் நின்று கொண்டு இருந்தேன் என்று சொல்லுவதற்கு இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் அங்கே? கமிட்டி அங்கத்தவர்கள் சும்மா வேடிக்கை பார்க்க அங்கே என்ன பொருட்காட்சியா நடந்தது? இவர்களின் முதல் இலக்கு போலீசில் இருந்த சீக்கியர்கள் தான். மற்ற போலீஸ் அதிகாரிகள் இருக்கும்போது தான் அவர்கள் கொல்லப்பட்டனர். அடுத்து இந்த குண்டர்களின் படை வீடு வீடாக கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை நடத்தினர். இதில் அவர்கள் பாரபட்சம் எதுவும் பார்க்கவில்லை. எத்தனை பேர் எத்தனை கனவுகள் அத்தனையும் அங்கே எரிக்கபட்டது. ஒரு நாட்டின் தலைநகர் மட்டுமே எப்போதும் பாதுகாப்புக்கு பேர்போன இடமாக இருக்கும். அந்தளவுக்கு பாதுகாப்பு பலபடுத்தபட்டு இருக்கும். ஆனால் இங்கே தலைநகரில் தான் கற்பழிப்புகளும் கொள்ளைகளும் கொலைகளும் நடந்தது. அதை ஆட்சியில் இருந்தவர்களே முன்னின்று நடத்தியது கொடுமையிலும் கொடுமை. இந்த கொடுமைகளுக்கு பின்னர் இதை ராஜீவ் காந்தியிடம் சொன்னவர்களுக்கு ராஜீவ் சொன்னது " ஆலமரம் சாயும்போது புல் பூண்டுகள் எல்லாம் அழியத்தான் செய்யும்." எவ்வளவு திமிரான பதிலாக இருந்திருக்கும். புகாரை வாங்கி அதனை விசாரிக்கும் நிலையில் இருந்தவர்கள் மேல் எப்படி புகார் கொடுக்க முடியும். வழக்கம் போல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. பலன் ஒன்றும் இல்லை.
சீக்கியர்கள் கொல்லப்பட்டது தான் மிச்சம். வேறு ஒன்றும் நடக்கவில்லை. தலைநகரில் நடந்த இந்த கலவரம் சாதாரண விசயமா என்ன? கேட்பதற்கு யாரும் இல்லாமல் வீடில்லாமல் தவித்த சீக்கியர்கள் முற்பதாயிரம் பேர்.
இதில் கேட்பதற்கு எந்த கேள்விகளும் இல்லை. ஏனென்றால் எல்லாம் தெளிவாக இருந்தது .
அடுத்த பதிவில் இலங்கையில் இந்திய அமைதி படை நடத்திய கொடூரங்கள் .
மிகச்சிறந்த தொடர். நேரு குடும்பத்தையும் காங்கிரஸ் கட்சியையும் நாட்டுமக்கள் இன்னும் புரிந்துகொள்ள வில்லை. இந்தத் தொடர் முடிந்தவுடன் உடனடியாக புத்தமாக வெளியிட வேண்டுகிறேன்.
சீ.பிரபாகரன்,
நிச்சயம் முயற்சி செய்கிறேன். தங்களின் கருத்துக்கும் இங்கே வந்தமைக்கும் நன்றி
மிகச்சிறந்த தொடர்.. வாழ்த்துக்கள்.
நன்றி தர்சன்