மீண்டும் ஏமாறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு,ஏமாறுவதற்கு வாரீர்

தினமலரில் தற்போது வந்துள்ள செய்தி. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது:இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, அரசுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளப்படுமென நம்புகிறேன்.தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்தும்படி தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, பெரும்பாலான தமிழர்கள் மறுகுடி யமர்த்தப்பட்டு விட்டனர். இன்னும் 17 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் பேர் வரை மட்டுமே முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரை வில் குடியமர்த்தப்படுவர். இந்த பிரச்னையை இலங்கை அரசு உணர்வுப்பூர்வமாக அணுகும் என நம்புகிறேன்.இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.
இதை படித்தவுடன் உங்களுக்கு தோன்றுவது போலவே எனக்கும்  தோன்றுகிறது. அந்த ஊழல் இந்த ஊழல் பற்றியெல்லாம் வந்த செய்திகள் இருக்கும்போது இதையேன் தினமலர் முன்னிலைபடுத்தி சொல்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அதே போல் அந்த ஊழல்களை எல்லாம் மறைக்க தான் இந்த பயணம் என்றும் நான் சொல்லவே இல்லை. இதில் ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. ஐ.நாவின் கூற்றுப்படி அங்கே இருந்தவர்கள் மூன்று லட்சம் பேர்( புலிகள் ஐந்து லட்சம் பேர் என்று கூறி இருந்தனர். ஒருவேளை இரண்டு லட்சம் பேர் புலிகளாகவே இருந்து இருக்கலாம்.) இப்போது குடியமர்த்த போவது பதினேழு முதல் இருபது ஆயிரம் பேர் என்று கூறுகிறார்கள்.மற்றவர்கள் என்னவானார்கள்? ஒரு முறை இவர்கள் சென்று வந்தால் மட்டுமே இப்படி குடியமர்த்தல் நடக்கிறது என்றால் இவர்கள் அடிக்கடி அங்கே செல்லலாமே.என்னை கேட்டால் இவர் அங்கேயே குடிசை போட்டு தங்கலாம். இதில் தமிழக முதல்வர் சொல்லியபடி தான் தான் நடந்து கொள்வதாக வேறு சொல்கிறார். அப்படியானால் இவருக்கு எப்ப எப்போ இப்படி தோன்றுகிறதோ அப்போது மட்டுமே குடியமர்வு நடக்குமா?


கேட்டால் தீவிரவாதம் என்கிறார்கள்.இறையாண்மை என்கிறார்கள். கேட்க வேண்டியவர்களும் சரியில்லாமல் வேடிக்கை பார்க்கும் நிலையில் ஐ.நாவில் இனபடுகொலைகளை செய்தவர்களுக்கு இடமும் கொடுத்து புண்ணியம் சேர்த்து வருகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒரு வயதான முதியவர் தான் இந்த உலகை ஆட்டுவிக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை இல்லையா? ஐ.நாவே நிறுத்த முடியாத போரினை நான்கு மணிநேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து தடுத்த பெருமையும், அமெரிக்கா மற்றும் மேற்குலகின் செயற்கைகோள்களையும் மீறி நடந்த எறிகணைவீச்சினை அறிக்கைகள் மூலம் அழித்ததையும் என்னவென்று பாராட்டுவது என்றே தெரியவில்லை.

0 Response to "மீண்டும் ஏமாறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு,ஏமாறுவதற்கு வாரீர்"

Popular Posts