உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் நாற்பதாயிரம் ஒரு ஓட்டு

தினமலரில் ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு சம்பந்தமாக வந்த ஒரு கட்டுரையில் இந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று கூறியுள்ளனர்.
இதில் எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை சொல்லியிருந்தனர். அது சத்தியமா தமிழ்நாட்டை திருத்துவதற்க்கோ இல்லை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்க்கோ இல்லை. இருந்தாலும் அது தமிழ்நாட்டின் சொத்தான ஓட்டுக்கு பணமே. அவர்கள் சொல்லிருந்த விஷயமாவது
"தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை."
இந்த விஷயம் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது எப்படினாலும் நாம் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்த போவதில்லை. அதனால் நான் உங்களை பணம் வாங்காதிங்கனு சொல்ல போறதில்லை. கம்மியா வாங்கிடாதிங்கனு தான் சொல்றேன். உங்களுடைய ஒரு ஓட்டுக்கு நாற்பத்திரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்பு இருக்கிறது.( அது நம்ம பணம்ங்க. அப்புறம் நாம தானே இன்கம் டாக்ஸ் எல்லாம் செலுத்துறோம். அரசியல்வாதிகளா ஒழுங்கா செலுத்துரானுங்க?) இந்த பணத்தை அடித்தது நம் தமிழ்நாட்டில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்களே என்று சொல்லபடுகிறது. அப்படியானால் நமக்கு தானே முதலுரிமை. நம்ம ஊர்காரங்க பணம் அடிச்சதெல்லாம் எதுக்காக? நாம பாட்டுக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம்னு ஆரம்பிச்சு திருமங்கலத்துல இருபத்தி ஐந்தாயிரம் வரைன்னு போயிட்டோம். யாருக்காக இருந்தாலும் நமக்கு ஓட்டுக்கு பணம் குடுக்கனும்னா கண்டிப்பாக இப்படி மாபெரும் ஊழல் செஞ்சு தானே ஆகணும்.இல்லையா இப்பவெல்லாம் இருபத்தி ஐந்தாயிரத்துக்கு கம்மியா எங்க தொகுதியில நாங்க வாங்குரதில்லைங்க ( நானும் திருமங்கலத்திருக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவன்).


ஆனால் இது இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த விஷயம். இப்போ வருடங்களும் அதிகமாகிடுச்சு. ஊழலும் அதிகமாகிடுச்சு. நம்ம விலையும் அதிகமாகிடுச்சு. நாம தான் அதை ஒழுங்கா வசூல் செய்யணும். பொருள் நம்முடையது. அவங்களால எவ்வளவு கொடுக்க முடியும்னு தினமலர் சொல்லிருச்சு.( ப்ரோக்கர் கமிசன் கிடையாதுங்க ) இனி நாம என்ன செய்யனும்னா ஒழுங்கா உட்காந்து யோசிச்சு நல்ல விலையா பேசணும்.

என்னை கேட்டால் ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் கேட்கலாம்னு சொல்லுவேன். அவங்களால நாற்பத்திரண்டு கொடுக்க முடிந்தாலும் அங்கே பணம் பட்டுவாடா செய்பவருக்கும் ஒரு நல்ல தொகை கிடைக்க வேண்டுமே.( அது தனி பதிவாக போடுறேன். பணம் பட்டுவாடா செய்பவர்கள் தயவு செய்து பின்னர் என்னை சந்திக்கவும்.) அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கும் வேணாம் அவர்களுக்கும் வேணாம். நாற்பதாயிரம் ரூபாய் கேளுங்கள் என்கிறேன். ஆனால் பணம் வாங்குவதற்கு கொடுக்கப்படும் பணத்திற்கு நான் ஜவாப்தாரி இல்லை. நல்ல ப்ரோக்கர்களை தேடி கேளுங்கள். நாற்பதாயிரம் ரூபாய் ஓட்டு உங்களுக்கு இல்லையென்றால் எதிர்கட்சிக்கு என்று கூறிவிடுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன். ஏமாந்து விடாதிர்கள். ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் ரூபாய் என்றால் நான்கு பேருக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் லட்சாதிபதியாவதற்க்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு இது. ஏமாறுபவர்கள் பின்னர் யாரிடமும் கேட்க முடியாது. இது ஒரு முறையே கிடைக்கும் வாய்ப்பு.

( அய்யா நான் யாரையும் குறை சொல்ல வரலைங்க. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் கொடுத்திருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. அவர் வாங்கிய வீடு பத்து வருஷங்களுக்கு முன்னர் ஒரு கோடி என்றால் இப்போதும் அதே விலையிலே அவர் விற்பார். தயவு செய்து வீடு வாங்க ராசாவை அணுகவும்)




4 Response to "உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் நாற்பதாயிரம் ஒரு ஓட்டு"

  1. Anonymous says:

    இருக்கிறவன் குடுப்பான் .. எதிர்க்கட்சி.. புதுசா முளைச்சது நண்டு பொண்டு கட்சி - லாம் என்ன பண்ணும் பாவம்... :P

    ஓட்டுக்கு தானே கொடுக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் 5 வருடங்களில் சம்பாதித்த பணத்தை தானே செலவு செய்கிறார்கள். நீங்கள் ஏற்கனவே போட்ட ஓட்டுக்கு இந்த பணம் என்று நினைத்து கொண்டு உங்கள் விருப்பதிருக்கேற்ப ஓட்டு போடுங்கள்.

    Unknown says:

    ஐயா பணம் வாங்குங்கள் தப்பில்லை அது அவர்களை தவறாக தேர்ந்தெடுத்ததற்க்கு அவர்கள் தருகின்ற நஷ்டஈடு. ஆனால் மறுபடியும் ஊழல்வாதிகளுக்கு ஓட்டு போடாதீர்கள்.

    Unknown says:

    enga en panam???? enga en panam??????

Popular Posts