ஈழ இனபடுகொலையை தடுக்க தவறியது நாங்கள் தான் என்று கருணாநிதி ஒத்துகொள்வாரா?

தமிழக முதல்வர் தற்போது ஒரு பேட்டியில் கூறியிருக்கும் விஷயம் முக்கியமானது. ஏன் என்றால் இதையே அவர் பின்னர் மாற்றி கூறக்கூடும். தற்போது தி.மு.க அங்கம் வகிக்கும் காங்கிரெஸ் கூட்டணியில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படி பிரச்சினைகள் பல வந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களே திட்டினாலும் வாய் திறக்காது இருந்தார். ஆனால் அதையும் மீறி பேட்டி கொடுத்தே ஆக வேண்டிய நிலைக்கு நமது முதல்வர் தள்ளப்பட்டுள்ளார். இந்த பேட்டியில்  கூறியுள்ளதாவது
"மத்திய அரசு, மாநில அரசு என்று கருதாமல் இரண்டும் ஒரே அரசுதான் என்று சிந்தித்து ஒரே அரசாக கருதுகிறோம். நிர்வாக வசதிக்காக அவை பிரிக்கப்பட்டவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவை பேதம், பிளவுக்காக இல்லை. நீங்கள் படித்தவர்கள் உங்கள் சிந்தனைக்கு தீனி போட்டதை போல சில கருத்தை கூறினேன். உங்களுக்கு இது புலப்படுமானால், மாநில அரசு, மத்திய அரசை ஆளுபவர்களுக்கு, கட்சிகளுக்கு இது புலப்படாமல் போக முடியாது. "

இதன் உள் அர்த்தமானது நாங்கள் மத்திய அரசு, மாநில அரசு என்று பிரிந்து ஊழல்கள் செய்யவில்லை. அப்படி நாங்கள் செய்திருந்தாலும் அதில் கொடுக்கவேண்டிய பங்கை காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு ஏற்கனவே கொடுத்து உள்ளேன் என்பது தானே அர்த்தம். இது மட்டுமா? ஈழத்தில் நடந்த இனபடுகொலைகளை நாங்கள் இருவரும் சேர்ந்து தான் கண்டு கொள்ளாமல் இருந்தோம். இருப்போம். அதையும் ஆதரிப்போம். தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்தால் தி.மு.க,காங்கிரஸ் இரு கட்சிகளுமே தங்கள் தொகுதிகளின் எண்ணிக்கைகளை இழக்கும். தற்போதைய பீகார் அரசியலில் காங்கிரஸ் ஒரு தோல்வியின் சின்னம்.
அதே நேரத்தில்  அ.தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்தால் எவ்வளவு தொகுதிகளை  அ.தி.மு.க விட்டுகொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் கூட்டணி ஆட்சியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் அ.தி.மு.கவை யோசிக்க செய்யும். அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் என்றே எதிர்பார்க்கலாம். அப்படி உடைந்தால் அ.தி.மு.கவுடன் இருக்கும் கட்சிகள் எல்லாம் நட்ராற்றில் விடப்படும். அதையும் மீறி இப்பவும் கூட்டணியில்  இருக்கிறார்கள் என்றால் அது அ.தி.மு.க காங்கிரசை நட்ராற்றில் விடபோகிறது என்பதே உண்மையாக இருக்கலாம். ஆகவே காங்கிரஸ் தே.மு.தி.கவுடனும் பா.மா.கவுடனும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் இது தேர்தலுக்கு முன் உள்ள நிலைமை. 
கூட்டணி நிலவரங்கள் இப்படி இருக்க இப்போது திருவாய் மலர்ந்துள்ள கலைஞர் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வந்தால்  நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக தான் சேர்ந்து செய்தோம் என்றே சொல்லுவாரா என்ன? இல்லை வடிவேலு சொல்வது போல் அது வேற வாய் இது நாறவாய் என்பதை உறுதிபடுத்துவாரோ

6 Response to "ஈழ இனபடுகொலையை தடுக்க தவறியது நாங்கள் தான் என்று கருணாநிதி ஒத்துகொள்வாரா?"

  1. :))...

    Unknown says:

    வயதாகிவிட்டதனால் ஏதேதோ பேசுகிறார் என்றாலும் ராசாவின் விஷயத்தில் ரொம்பவே சொதப்புகிறார். பொதுவாகவே அவருடைய எந்த கருத்தும் முட்டாள் தனமாகவே இருக்கின்றன. கழக கண்மணிகள்தான் அதை புகழவேண்டும்.

    இனியவன்,புகழ்வதற்கு தான் தனியே ஒரு அமைச்சரும் அமைச்சரவையே வைத்துள்ளாரே.

    அது வேற வாய் இது நாறவாய் //சூப்பர் பாஸ்..தொடர்ந்து போட்டுதாக்குங்க...

    ஹரிஸ்,

    தங்களின் வருகைக்கும் தங்களின் கருத்தினை பகிர்ந்தமைக்கும் நன்றி.

    அரை மணிநேர உண்ணாவிரதத்தால் எங்கள் யுத்தத்தை நிறுத்திய பெருந்தகை அல்லவோ அவர்.
    வாழ்க நின் கொற்றம்.

Popular Posts