ஆம்புலன்சினால் உயிரை காப்பாற்ற முடியுமா?

இந்த திங்கள்(22.11.2010) அதிகாலையில் என் நண்பன் ஒருவனின் தகப்பனார் மாரடைப்பால் ஜெயங்கொண்டத்தில் இறந்து போனார். அவரின் இறுதி சடங்கு நேற்று(23.11.2010) ஜெயங்கொண்டத்தில் நடந்தது. அங்கே சென்ற பின்னர் தான் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். அதிகாலை ஐந்து மணி அளவில் நண்பரின் தந்தை வேறு ஓரிடம் செல்லுவதற்கு கிளம்பி இருக்கிறார். நண்பரின் தாயார் தயாரித்த காப்பியை அவசரமாக குடிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் அங்கு வலியால் துடிப்பதை கண்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்களை நண்பரின் தாயார் அழைத்து உள்ளார். அவர்கள் நிலைமையை புரிந்து அவசர ஆம்புலன்சை(108ஐ)அழைத்து உள்ளனர்.அவர்கள் அழைத்து இருபது நிமிடங்கள் கழித்து வந்தவர்கள் ஒன்றும் செய்ய இயலாது. எல்லாம் முடிந்து போயிற்று என்று கூறியுள்ளனர்.அதிகாலை ஐந்து மணிக்கு ஜெயங்கொண்டத்தில் டிராபிக் அதிகமாக இருக்கிறதா? இல்லை ஒருத்தர் அவசரத்தில் அழைத்தால் இவ்வளவு நேரம் கழித்து தான் வருவார்களா? ஒரு கிலோமீட்டருக்குள் இருக்கும் ஒரு இடத்தை அடைய இருபது நிமிடங்கள் என்றால் மற்ற இடங்களுக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

இதற்கு பெயர் தான் மருத்துவ சேவையா? இது ஒரு சேவை. அதற்கு ஒரு பெயர் வேறு?


தயவு செய்து அவசர உதவிகள் தேவைபடுவோர் அருகில் இருக்கும் மருத்துவமனைகளின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள். அரசின் சேவையை நம்பாதீர்கள். ஏமாந்து யாருடைய உயிரையும் இழக்காதீர்கள்.

0 Response to "ஆம்புலன்சினால் உயிரை காப்பாற்ற முடியுமா?"

Popular Posts