இந்தியா ஒரு ஈனபிறவிகளின் நாடு

என்னடா இந்தியாவினுள் இருந்துகொண்டு இப்படி எழுதி இருக்கிறானே என்று பார்க்கிறீர்களா? இந்தியாவில் இருந்து ஒழுங்காக வருமான வரிகள் செலுத்திவரும் அனைவரும் நாட்டை சாடுவதற்கு முழு உரிமை படைத்தவர்களே.அதிலும் நாம் தமிழர்கள் வேறு. ஈனபிறவிகள் எங்கு அதிகம் என்று கேட்டால் அதற்கு விடை தமிழ்நாடு என்று தான் வரும். யோசித்து பாருங்கள். நமக்கு வாய்த்த கட்சிகள் அப்படி. ஈனபிறவிகளை ஆட்சியில் வைத்து அழகு பார்ப்பதே நமது வேலையாக போயிற்று. இப்போது இருக்கும் மத்திய அரசு இரு வருடங்களுக்கு முன்னரே தோற்று இருந்தால் இப்போது வெளியே வந்து கொண்டிருக்கும் பல ஊழல்கள் அப்போதே வெளியே வந்திருக்கும்.

தாமதமாக கிடைக்கும் நீதியும் நிதியும் பயன் தராது. செத்தவன் கையில் கோடி ரூபாய் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன? நீதி இப்போது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை. அவர்களை காப்பாற்றி கொள்ளவே அவர்களுக்கு தெரியாதபோது எப்படி நம்மை எப்படி காப்பாற்றுவார்கள். நம் தமிழ்நாடு எல்லாவற்றிலும் ஒருபடி மேல். யார் யார் எதிரிகள், துரோகிகள்   என்றே நமக்கு தெரியாமல் ஈழ பிரச்சினைகளுக்கு போராடி பல ஆயிரம் இனஉயிர்களை காவு கொடுத்திருக்கிறோம். இன்னும் கொடுக்க இருக்கிறோம். எனக்கு தெரிந்து ஆளும்கட்சியுடன் தொடர்பில் இருந்த, இருக்கின்ற அனைவரும் துரோகிகளே.( பெயரை குறிப்பிட்டு வம்பில் மாட்டிக்கொள்ள நான் தயாரில்லை). இதில் இவர்களே நமக்கு முன்னர் ஈழத்திற்கு குரல் கொடுப்பர். நாமும் நம்பி இறங்கியபின்னர் அவர்கள் பைகளை நிரப்பிக்கொண்டு சென்று விடுகிறார்கள். இதை எழுதவேண்டிய பத்திரிக்கைகளும் ஒன்றாக தண்ணி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்.(தண்ணியை மட்டுமே இங்கே எழுதி இருக்கிறேன். இதன் மூலம் வந்த வருவாய் வைத்து வீடு கட்டியவர்கள் அதிகம். மிச்சம் சொச்சம் எல்லாம் நிறையா இருக்கு. எழுதினால் இந்த பதிவு அசைவமாகி விடும்).

ஆளும்கட்சி தான் இப்படி என்றால் முக்கிய எதிகட்சிக்கு இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. எம்.ஜி. ஆர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ? அந்த அளவு இல்லையென்றால் கூட கொஞ்சம் முயற்சி செய்து இருக்கலாம். கடைசி நேரத்தில் கூறப்படும் வாக்குறுதிகள் மக்களை குழப்பமடையவே செய்யும். தெளிவாக்காது.நானும் ஈழ மக்களுக்காக போராடுகிறேன். நீங்களும் ஈழ மக்களுக்காக போராடுகிறீர்கள். இப்படி எல்லாருமே போராடியும் ஒன்றுமே நடக்காததற்கு இந்த ஈனபிறவிகள் தான் காரணம்.


அந்த ஈனபிறவிகள் செய்த காரியங்கள் மிகவும் எளிதானது.
நீங்கள் போராட்டம் நடத்தும்போது உங்களுடன் உங்களைவிட அதிகமான உணர்ச்சி பெருக்கோடு அவர்கள் நடந்து கொள்வார்கள். ஆனால் யார் எதிரி என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அவர்களோடு  நடத்தும் போராட்டம் என்பது கட்டையால் பாம்பினை அடிக்கும்போது கம்பும் உடையகூடாது அதே நேரம் பாம்பும் சாக கூடாது என்று நினைப்பவர்களின் வழிகாட்டுதலுக்கு உள்ளாகும். உங்களுடைய கூட்டங்களில் உங்களின் அனுமதி இல்லாமல் ராஜபக்ஷேவை பற்றி பேசுவார்கள்.( பின்னர் அவரோடு கைகுலுக்குவது வேறு) நீங்களும் எவ்வளவு நல்லவர் என்றே நினைப்பீர்கள். உங்கள் கூட்டம் எப்பொழுது மக்களை நேரடியாக சந்திக்க செல்கிறதோ. அப்போது அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.( இதை தான் பொன்சேகா அரசியல் கோமாளிகள் என்றார்.) எங்கே மக்கள் கொந்தளித்து விடுவார்களோ என்று இவர்களே பலவிசயங்களை செய்வார்கள். உண்ணாவிரதம், மனித சங்கிலி, அடிதடி என இவர்கள் செய்தது அனைத்துமே மக்களை குழப்புவதற்காக மட்டுமே. இவர்களால் எந்த  பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கொடுக்க தெரியாது. முடியாது. ஆனால் பேச்சுக்கள் மட்டும் தெளிவாக இருக்கும். நம் நாட்டில் எல்லா மக்களுக்கும் உள்ள அதே ஞாபகமறதி  இங்கே தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது.

ஈழத்தில் இருந்த தலைவர் தான் தங்களின் நலத்திட்டங்களை செய்யவிடாமல் தடுத்தார் என்று கூறியவர்கள் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டார்கள்.இவர்கள் என்ன திட்டம் வைத்திருந்தார்கள்? மக்களை பன்னீரில் குளிப்பாட்டி சந்தனத்தை பூசி தினமும் விருந்துகள் கொடுத்து காப்பாற்றுவேன் என்று சொன்னவர்களிடம் ஒரே ஒரு கேள்வி.

அங்கே இன்னமும் உடுக்க உடையும் உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் இன்னமும் கிடைக்கலாம். என்ன செய்யலாம்? போராட்டம் நடத்தியவர்களும் ஓய்ந்து போய் நாட்கள் ஆகின்றன. நீங்கள் தானே சொன்னீர்கள் அதெப்படி அரசாங்கம் மக்களை கொல்லும் என்று. இராணுவ வீரர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் தமிழின பெண்களோடு விளையாடி பின்னர் கொல்கிறார்கலாம். என்ன செய்யலாம் சொல்லுங்கள்.


ஒரு காரியத்தை செய்ய சொன்னதாக கூறியதை நம்புவதற்கும், செய்ததாக சொல்வதை நம்புவதற்கும்  மிகபெரிய வித்தியாசம் இருக்கிறது.
உதாரணம் நமது ஆளும்கட்சியின் எம்பிக்கள் ராஜினாமா செய்வதாக கூறியதற்கும் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தியதாக சொல்லியதற்கும் உள்ள வித்தியாசம் தான். இரண்டுமே ஒரே மனிதரின் பித்தலாட்டங்களில் ஒன்று தான். ஆனால் நம்பாமல் இருந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது உண்மை தான். ஆனால் ஏமாறுபவர்கள் ஒரு நிலையில் ஏமாறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை வந்திருக்கும். அந்த நிலை தான் இப்போது. வளங்களும் உரிமைகளும் எப்படி இழந்து இருக்கிறோம் என்று அறிவதற்கு முன்னரே நமது கோமணங்கள் பிடுங்கப்பட்டு இருக்கும்.

அப்படி பிடுங்கியவரை கோமனபிடுங்கி என்றே அன்புடன் அழைக்கலாம். பறிகொடுத்தவரை என்னவென்று அழைப்பது?  களத்தில் போராடி தோற்றவர்களுக்கு வீரமரணம் கிடைக்கிறது. ஆனால் இங்கே போராட்டங்களில் ஏமாந்த நமக்கு என்ன பெயர் கொடுத்து அழைப்பது?

நம்மை ஈனபிறவிகள் என்று சொல்வதா இல்லை நம்மை ஏமாற்றியவர்களை ஈனபிறவிகள் என்று கூறுவதா?

0 Response to "இந்தியா ஒரு ஈனபிறவிகளின் நாடு"

Popular Posts